கடவுளை மற..மனிதனை நினை..

08 July 2010

மதம் வளர்க்கும் பொருள்!

8:13:00 AM Posted by புலவன் புலிகேசி , 9 comments

மக்களை ஜாதி எனும்
போதைக்குள் மூழ்கடித்த
போதைப் பொருள்

மக்களை மடையர்களாக்கி
வைத்திருக்கும் பழமை நிறைந்த
அரசியல்வியாதி

லஞ்சப் பேர்வழிகளிடமே
லஞ்சம் பெற்று வளரும்
முதலாளி.

மொத்தத்தில்.............

மனிதம் அழித்து மதம்
வளர்க்கப் படைக்கப் பட்ட
ஒரு பொருள்

கடவுள்!

9 விவாதங்கள்:

சசிகுமார் said...

கவிதை சாதி வெறி பிடித்தவர்களுக்கு சவுக்கடி கொடுத்த போலுளுள்ளது.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.....

மங்குனி அமைச்சர் said...

மனிதம் அழித்து மதம்
வளர்க்கப் படைக்கப் பட்ட
ஒரு பொருள்///

இததான் தனக்கு தானே சூனியம் வச்சுகிர்ரதுன்னு சொல்றாங்களோ ???

வால்பையன் said...

என்னைக்கு தான் புரியப்போகுதோ தெரியல!

விஜய் said...

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

ஹேமா said...

கத்திட்டே இருக்கீங்க.இருக்கோம்.யார் காதில விழுது புலவரே !

NO said...

புரட்சிகள் வளர்க்கும் பொருள்
---------------------------

மக்களை, சொர்க்கம் எங்களிடத்தில் எனும் போதை வார்த்தைகளால் மூழ்கடித்த போதைபொருள்

மக்களை மடையர்கள் என்று நினைத்ததால் உலகில் பல இடங்களில் இருந்தும் அடித்து விரட்டப்பட்ட பழைய அரசியல்வியாதி

வஞ்சகத்தை மட்டும் வைத்து அண்டத்தை ஆளப்பார்த்த சீன ரஷ்ய ஆட்க்கொல்லிகளிடமே லஞ்சம் வாங்கிய அடிமை தொழிலாளி

மொத்தத்தில்

மனிதம் அழித்து புரட்சி மட்டும் செய்ய தொடுக்கப்பட்ட ஒரு புரட்டுப்பொருள்

பகுத்தறிவுவாதி!

புலவன் புலிகேசி said...

//NO says:
July 8, 2010 6:01 PM
புரட்சிகள் வளர்க்கும் பொருள் // நண்பரே புரட்சி வேணாம் இருக்குற வரைக்கும் நான் நல்லா இருந்தாப் போதும்னு நெனைக்கிற உங்கள மாதிரி ஆளுங்களால தான் அரசியல் சாக்கடையில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம். உங்கள் சந்ததிகள் வளரும் போது அந்த சாக்கடைக்குள் மூச்சு முட்டி இறந்து போக நேரிடும். அப்போ தெரியும் புரட்சி பற்றி. தனக்கு வராத வரைக்கும் எல்லாத்தையும் செய்தியாகப் பார்க்கும் மனபாவத்தை விட்டொழியுங்கள்.

வைகறை said...

உண்மை தான்!
பாவம் கடவுள் மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறார்!
கவிதை அருமை!