கடவுளை மற..மனிதனை நினை..

07 July 2010

இது தேவையா? - தமிழக மேம்பாட்டுக்கு 1903 கோடி கடனாம்

ஏற்கனவே ஒவ்வொரு இந்தியக் குடி மகனும், பிறக்கும் குழந்தைகளும் 30,000 ரூ கடனோடுதான் பிறக்கிறது என்பது மக்கள் அறிந்ததே. இந்நிலையில் தமிழகத்தின் சுகாதாரம் மற்றும் சாலை மேம்பாட்டிற்காக உலக வங்கியிடம் ரூ. 1903 கோடி கடனாகப் பெறப் போகிறோம். இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கருணாநிதி தலைமையில் கையொப்பமிடப் பட்டிருக்கிறது.

இது போன்ற திட்டங்களுக்கு நாம் நிச்சயம் உலக வங்கியிடம் கையேந்த வேண்டுமா? இந்த ஒப்பந்தமானது மூன்றாண்டுகளுக்கானத் திட்டங்களுக்காக கையெழுத்தாகி இருக்கிறது.

யோசித்துப் பார்த்தால் இந்த அரசு ஆட்சியமைத்த இத்தனை ஆண்டுகளில் தனக்குத் தானே நடத்திக் கொண்ட பாராட்டு விழாக்கள், புதிய பாலம் திறப்பு விழாக்கள், சட்ட சபை திறப்பு விழா, செட் போட்ட செலவு, திரையுலகை வளர்க்கிறேன் என்ற பெயரில் செய்த செலவுகள், செம்மொழி மாநாட்டு 400கோடி ரூபாய் எல்லாம் சேர்த்தால் இந்த கடன் வாங்க அவசியம் ஏற்பட்டிருக்குமா?

இதில் பெரும்பாலான விழாக்களும், அதற்கான செலவுகளும் ஒரு தனிமனிதனின் சுயநலத்திற்காக செலவிடப் பட்டிருக்கின்றன. புதிய சட்ட சபை கட்டிடம் அவசரமாக திறப்பதற்காக அமைக்கப் பட்ட அரங்கத்தின் செலவு எத்தனை கோடிகள்? இப்போது அது பிரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் திறப்பு விழாவிற்கு சோனியா, மன்மோகன் வருவதற்காக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பாதுகாப்புக்கு ஆன செலவுகள் எவ்வளவு?

இந்த ஆட்சியில் இதுவரை அவருக்கு நடத்தப் பட்ட பாராட்டு விழாக்கள் தோராயமாக பத்துக்கு மேற்பட்டவை. இவற்றிற்கு ஆன செலவுகளும் நிச்சயம் கோடியில் இருக்கும். அதோடில்லாமல் லட்சங்களில் செலவு செய்து அமைக்கப் பட்ட பாலங்களின் திறப்பு விழாவிற்கு மட்டும் செய்யப் பட்ட செலவுகளும் லட்சங்களில் தான்.

இதையெல்லாம் விடக் கொடுமை சமீபத்தில் நடத்தப் பட்ட செம்மொழி மாநாடு விழா. இதுவும் தன் பெருமையை மட்டுமே பரை சாற்றுபவர்களுக்காக நடத்தப் பட்டது என்பது உலகறிந்ததே. இங்கு தமிழ் பற்றிப் பேசியவர்களை விட கருணாநிதியைப் பற்றிப் பெருமைப் பேசியவர்களே அதிகம்.

வாலி, வைரமுத்து என்ற இரண்டு சொம்புகள் இவரைப் புகழ்ந்து தள்ளி விட்டு நாங்கள் தமிழ்க் கவிஞர்கள் என சொல்லிக் கொள்கின்றன. இவைகள் தமிழ்க் கவிஞர்கள் அல்லர். கருணாக் கவிஞர்கள்.

இந்த விழாவிற்காக செய்யப் பட்ட பசுமைக் கொலைகள் எத்தனை? இதற்கு செலவிடப் பட்டத் தொகை 398 கோடி ரூபாய் என சொல்லப் படுகிறது. இத்தகைய செலவுகள் எல்லாம் செய்யப் படாமலிருந்தால் நாம் எதற்காக உலக வங்கியிடம் கையேந்த வேண்டும்? தன் குடும்பத்திற்கும், த்ற்பெருமைக்காகவும் நம் பணத்தை செலவு செய்து விட்டு இன்று உலக வங்கியிடம் கையேந்தி நிற்கின்றனர்.

இவர்களால் கடனாளியாக்கப் பட்ட இந்தியா மேலும் மேலும் கடனாளியாகவே மாறி வருகிறது. பிறக்கும் குழந்தைக்கு 30 ஆயிரம் கடன் என்பது எவ்வளவு கேவலமான ஒன்று.

8 விவாதங்கள்:

வானம்பாடிகள் said...

தலைப்பு தேவையா என்பதால், எதற்காக என வரும்போது தேவைதான் எனச் சொல்ல முடிகிறது. கடனுக்கு காரணம் என வரும்போது, ஆளும் கட்சிமட்டுமே காரணமில்லை அல்லவா? நேற்றைய பந்தினால் நஷ்டம் எவ்வளவு. போராட்டங்களில் சிதைக்கப்படும் பொதுச் சொத்துக்களை மீள் கட்டமைக்க ஆகும் செலவு எவ்வளவு? இவையெல்லவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும் அல்லவா. இந்தியக் குழந்தை கடனாளியாக காரணம் அரசியல் மட்டுமே. அதில் ஆளும், எதிர் என்ற வித்தியாசமேயில்லாமல் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//இத்தகைய செலவுகள் எல்லாம் செய்யப் படாமலிருந்தால் நாம் எதற்காக உலக வங்கியிடம் கையேந்த வேண்டும்? தன் குடும்பத்திற்கும், த்ற்பெருமைக்காகவும் நம் பணத்தை செலவு செய்து விட்டு இன்று உலக வங்கியிடம் கையேந்தி நிற்கின்றனர்.//
இந்த செலவுகளேலாம் கடன் வாங்காமல் செய்திருப்பார்கள் என்பது என்ன நிச்சியம்....

Elamurugan said...

100% உண்மை.

இளமுருகன் said...

வெட்டி செலவு செய்துவிட்டு கடனுக்கு கையேந்தி நிற்பானேன்?

kees said...

Confessions of an Economic Hit Man is a book written by John Perkins and published in 2004.

According to his book, Perkins' function was to convince the political and financial leadership of underdeveloped countries to accept enormous development loans from institutions like the World Bank and USAID.

Saddled with debts they could not hope to pay, those countries were forced to acquiesce to political pressure from the United States on a variety of issues.

Perkins argues in his book that developing nations were effectively neutralized politically, had their wealth gaps driven wider and economies crippled in the long run.


You may check following link for further reading :

http://en.wikipedia.org/wiki/Confessions_of_an_Economic_Hit_Man


Regards,
nandy

சே.குமார் said...

வெட்டி செலவு செய்துவிட்டு கடனுக்கு கையேந்தி நிற்பானேன்?

நிகழ்காலத்தில்... said...

கடன் வாங்கறதோட சரி, அத திருப்பிக் கட்டுகிற அக்கறை இல்லாதாதால் வாங்கிக்குவிக்க வேண்டியதுதான் :))

ஆட்காட்டி said...

yoosikka weendiyawanga yoosikka maaddengkuraangkalee