கடவுளை மற..மனிதனை நினை..

10 July 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?

12:48:00 PM Posted by புலவன் புலிகேசி , 22 comments
நண்பர் தமிழ் மகன் என்னை இந்தத் தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறார். தொடர்பதிவுகள் எழுதும் விருப்பமில்லை என்பதை நான் கடைசியாக எழுதியத் தொடர்பதிவில் கூறியிருந்தேன். இருந்தாலும் இந்தத் தொடர் பதிவில் உள்ளக் கேள்விகள் என்னை எழுதத் தூண்டின. அதனால் எழுதுகிறேன்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

புலவன் புலிகேசி

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. என் பெயர் முருகவேல். இந்தப் பெயருக்குப் பெரிதாய் ஒன்றும் காரணமில்லை. நான் பதிவெழுத வந்த காலத்தில் நடுத்தர வர்க்க சிந்தனையோடுத் தொடங்கினேன். அப்போது வெளி வந்திருந்த 23ம் புலிகேசிப் படம் எனக்குப் பிடிக்கும் அதனால் வைக்கப் பட்டதுதான் இப்பெயர்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

எனக்கு வலையுலகம் இப்ப்டிப் போய்க் கொண்டிருப்பது தெரியாத காலம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நான் மற்றும் வெண்ணிற இரவுகள் கார்த்தி ஆகிய இருவரும் நண்பன் ஊடகன் இம்ரானைப் பார்த்து ஆரம்பித்ததுதான் இந்த வலைப்பூ. ஆரம்பித்த காலத்தில் நான் பார்த்த என்னை பாதித்த விடயங்களை எழுத ஆரம்பித்து கதை, கட்டுரைக் கவிதை எனப் போய்க் கொண்டிருந்தேன். ஆனால் சமீபக் காலங்களில் சில பதிவுலகக் கட்டுரைகளையும் மற்ற சில நிகழ்வுகளின் வாயிலாகவும் அரசியல் பற்றி எதுவும் எழுதாத நான் அது பற்றி அதிகம் தெரியாத நான் அது பற்றிப் புரிதலுக்கு வர ஆரம்பித்தப் பின்னர் நம் மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்த அரசியலின் நிலைத் தெரிய வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு அரசியல் பார்வை ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நம் நாட்டின் அரசியலின் நிலைப் பாட்டையும் அவர்களின் தந்திர அரசியலையும், அமெரிக்க அரசியலுக்கு நம்மைத் தாரை வார்த்துக் கொடுத்துக் கொண்டிருப்பதயும் நான் அறிந்த வரை என் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு எடுத்து சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். இது வெறும் ஆரம்பம் தான் இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதெல்லாம் தேவையா? என என்னை சிலர் தொடர்பு கொண்டு கேட்டனர். ஆனால் இதெல்லாம் தேவை என அனைவருக்கும் தோன்றினால் அப்போது தான் இந்த அரசியல் சாக்கடை சுத்தம் செய்யப் படும். திரைப் படங்களில் காண்பிப்பது போல் இந்தியனோ, அந்நியனோ, ரமணாவோ வர மாட்டான். அப்படியே வந்தாலும் முழுத் தீர்வுக் கிடைக்காது. கொலை ஒரு விடயத்தை நிர்ணயிக்காது. மக்களுக்கு ஒரு புரிதல் இது ஏன் இப்ப்டி ஆகியிருக்கிறது? என ஏற்பட வேண்டும். எல்லாவற்றையும் வெறும் செய்தியாக மட்டும் பாவிக்கும் இந்த நடுத்தர வர்க்கம் மாற்றப் பட வேண்டும். எல்லாவற்றிலும் அக்கரை எடுத்துக் கொண்டு மக்கள் அரசியல் வாதிகளை பார்க்கத் தொடங்கினால் இந்த அரசியல் இங்கு இருக்காது என்பதே என் நோக்கம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

நான் பதிவுலகிற்கு வந்த காலத்தில் எனக்கு நீ ஓட்டுப் போட்டியா? உனக்கும் நான் போடுறேன். அது தரமோ தரமற்றதோ என ஆரம்பித்ததுதான் இந்த பிரபல ஃபார்முலா. அதே ஃபார்முலாவில் துவங்கியவன் தான் நான். ஓடிச் சென்று பல பதிவுகளைப் ஃபாலோ செய்து பின்னூட்டமிட்டு வளர்த்து வந்த எனக்குள் ஏற்பட்ட எண்ணம் தான் நாமும் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். இனி இப்ப்டி இருக்கக் கூடாது. நிறைய மாற்றங்களை இந்த வலைப்பூ மூலம் நிகழ்த்த வேண்டும் என மாறியிருக்கிறேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் பதின்மக் குறிப்பும், என்னைப் பற்றிய ஒருத் தொடர்பதிவும் பகிர்ந்திருக்கிறேன். விளைவு என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்கிற்காக எழுதியவன் தான். இப்போது அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம் என யோசித்து சில உப்யோகமான விவாதங்களை முன் வைத்து எழுதி வருகிறேன். இதை வைத்து காசு பார்க்கும் எண்ணம் எனக்குத் துளியும் இல்லை.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

எனக்கு செம்மொழிப் பிடிக்கும் ஆனால் சமீபத்தில் நடந்த செம்மொழி மாநாடுப் பிடிக்கவில்லை. வலைப் பதிவு என்று பார்த்தால் இது ஒன்று மட்டுமே. அதுவும் தமிழில் இருக்கிறதா? என்பது சந்தேகமே. பெரும்பாலும் அரைகுறை தமிழில் தான் இருக்கிறது. அப்பறம் என் கல்லூரி நண்பர்களுக்காக ஒரு வலைப்பூ 2008-ல் ஆரம்பித்தேன். அது எங்கள் நண்பர்களின் த்கவல்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கப் பட்டது. அவ்வளவே.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை என்பதை விட பலப் பதிவர்களைப் பார்த்து வியப்படைந்திருக்கிறேன். ஒருவர் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் குறிப்பாக பாலாசி மற்றும் கதிரை சொல்லியாகனும். இவர்களின் எழுத்துக்களில் தமிழ் பழகிக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம். கோபம் என்பது வெண்ணிற இரவுகள் கார்த்தியுடன் அடிக்கடி வந்திருக்கிறது. அப்போதெல்லம் சண்டையிட்டிருக்கிறேன். பார்ப்பனீய ஆதரவாளர்கள் அனைவர் மீது அடிக்கடி வரும்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நண்பர் பாலாசி மற்றும் வெண்ணிற இரவுகள் கார்த்தி. அப்புறம் வானம்பாடிகள் ஐயா. இவர்கள் எனக்குத் தொடர்ந்து ஊக்கம் தருபவர்கள். இது சரி இதுத் தவறு என என்னுடன் விவாதிப்பவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் கார்த்தியும், வானம்பாடிகள் ஐயாவும். அவர்களுக்கு என் நன்றி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றி முன்னமே ஒரு தொடர்பதிவில் சொல்லியிருக்கிறேன். இதோ அதின் இணைப்பு... நானும் தீபாவளியும்...!!!...இதை எழுத நான் அழைப்பது நண்பர் பாலாசி மற்றும் வானம்பாடிகள் ஐயா.

22 விவாதங்கள்:

thenammailakshmanan said...

சுய பகிர்வு அருமை புலவரே..

க.பாலாசி said...

மூன்றாவது கேள்விக்கு தாங்கள் அளித்திருக்கும் பதில் உங்களைப்பற்றி நிறைய சொல்கிறது. நல்லது நண்பா...

//திரைப் படங்களில் காண்பிப்பது போல் இந்தியனோ, அந்நியனோ, ரமணாவோ வர மாட்டான்.//

ம்ம்ம்... சரிதான்...

என்னையும் அழைத்தமைக்கு நன்றிகள்..

//இவர்களின் எழுத்துக்களில் தமிழ் பழகிக் கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம்.//

இந்த வரிகளுக்கு என் பெயரை குறிப்பிடுவது மிகையாகவே தெரிகிறது.

நன்றி நண்பரே... நல்ல பகிர்வு...

புலவன் புலிகேசி said...

//இந்த வரிகளுக்கு என் பெயரை குறிப்பிடுவது மிகையாகவே தெரிகிறது. // நான் உங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. உண்மையில் நான் வலையுலகில் அறிமுகமான போது நீங்கள் எழுதியதற்கும் இப்போது உங்கள் எழுத்துக்களுக்கும் நிறைய வித்யாசங்கள் காண்கிறேன். குறிப்பாக நீங்கள் உபயோகிக்கும் தமிழ் சொற்கள்.

க.பாலாசி said...

//உங்கள் எழுத்துக்களுக்கும் நிறைய வித்யாசங்கள் காண்கிறேன். குறிப்பாக நீங்கள் உபயோகிக்கும் தமிழ் சொற்கள்.//

ம்ம்ம்... நன்றி நண்பரே..

தமிழ் வெங்கட் said...

நண்பா...நானும் தீபாவளியும் இப்போதுதான் படித்தேன்...
கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்கள் எதன் அடிப்படையில் தீபாவளி கொண்டாடுகிறீகள்..?

தமிழ் வெங்கட் said...

//கொண்டாடுகிறீர்கள்..?//
எழுத்து பிழை

சே.குமார் said...

சுய பகிர்வு அருமை புலவரே..!

ஜோதிஜி said...

பகிர்வு அருமை

ஹேமா said...

மிகத் தெளிவான புலவரின் மனம்தான் பதிவாகியிருக்கு !

மயில்ராவணன் said...

//பார்ப்பனீய ஆதரவாளர்கள் அனைவர் மீது அடிக்கடி வரும்.//

அது இன்னா அது? வெளக்குனா இன்னும் கொஞ்சம் தன்யனாவேன்.

வானம்பாடிகள் said...

நன்றி புலிகேசி.

rk guru said...

நல்ல பதிவு.........வாழ்த்துகள்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

தங்களை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் :)

நன்றி

புலவன் புலிகேசி said...

//தமிழ் வெங்கட் says:
July 10, 2010 3:42 PM
நண்பா...நானும் தீபாவளியும் இப்போதுதான் படித்தேன்...
கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்கள் எதன் அடிப்படையில் தீபாவளி கொண்டாடுகிறீகள்..//

நண்பரே நான் மதங்களையோ அல்லது கடவுள்களையோ முன்வைத்து எந்தப் பண்டிகைகளிலும் ஈடு படுவதில்லை. அந்தப் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன் அது என் சொந்த பந்தங்களையும், நட்பையும் சந்திக்கும் ஒரு விழா அவ்வளவே...

புலவன் புலிகேசி said...

//மயில்ராவணன் says:
July 10, 2010 6:12 PM
//பார்ப்பனீய ஆதரவாளர்கள் அனைவர் மீது அடிக்கடி வரும்.//

அது இன்னா அது? வெளக்குனா இன்னும் கொஞ்சம் தன்யனாவேன்//

பார்ப்பனீயக் கொள்கைகளுக்கு குடைப் பிடிப்பவர்கள். அதாவது ஜாதி, மதங்களை வைத்துக் கொண்டு நான் உயர்ந்தவன், நீத் தாழ்ந்தவன் என எண்ணுபவர்கள். தனக்கு கீழானவர்களாக மக்களை எண்ணுபவர்கள்.

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு புலிகேசி . அரசியல் புரிதல் என்பது அவசியம் ....நல்ல பதிவு ..நல்ல பகிர்வு

ஸ்ரீராம். said...

நல்ல சுய விவரங்கள்... தெளிவாய் இருக்கிறீர்கள்.

தமிழ் வெங்கட் said...

விளக்கத்திற்கு நன்றி நண்பா..

smart said...

//நான் பதிவுலகிற்கு வந்த காலத்தில் எனக்கு நீ ஓட்டுப் போட்டியா? உனக்கும் நான் போடுறேன். அது தரமோ தரமற்றதோ என ஆரம்பித்ததுதான் இந்த பிரபல ஃபார்முலா. //

மிகவும் கீழ்த்தரமான பார்ப்பனப் புத்தி.இன்னும் அப்படித் தான் ஊருக்குள்ளே நடக்கிறது ஆனால் உண்மையை கூறியதற்கு பாராட்டுக்கள்.
இனியாவது புதியவர்களை பிரதிபலன் பார்க்காமல் ஆதரியுங்கள்.

லதானந்த் said...

இட வேண்டிய இடங்களில் ஒற்றிடாமல் எழுதுவது கழிவறை இல்லாத வீட்டுக்கு ஒப்பாகும்.

இடக் கூடாத இடங்களில் ஒற்றிடுவது சமையலறையில் கழிப்பதற்குச் சமம்.

தாங்கள் ஒற்றுப் பிழை நீக்கி எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் தேவையற்ற இடங்களில் ஒற்றிடுகிறீர்கள் என எண்ணுகிறேன்.

தங்களது இடுகையில் இருந்தே சில சான்றுகளைச் சுட்டி இருக்கிறேன்.
1) எழுதியத் தொடர் பதிவில்
2)பதிவுகளைப் ஃபாலோ
3)செம்மொழிப் பிடிக்கும்
4)பலப் பதிவர்களை

இவையேயன்றி 20க்கும் மேற்பட்ட இதர பிழைகளும் மலிந்து காணப்படுகின்றன.

முயற்சியும் பயிற்சியும் இருந்தால் விரைவில் பிழையின்றி எழுதிட இயலும்.

மற்றபடி இடுகை நன்கு அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

இப்பின்னூட்டத்தை விருப்பம் இருப்பின் வெளியிடலாம்.

புலவன் புலிகேசி said...

நன்றி லதானந்த்

Rathi said...

உங்களிடம் கேட்க நினைத்து விடுபட்டு போனது, நீங்கள் ஏன் ஈழம் பற்றி எழுத உங்களுக்கு தகுதி இல்லை என்று சொல்கிறீர்கள்? சரி, சொல்லுங்கள் ஈழம் பற்றி எழுத என்ன தகுதி வேண்டும்?