கடவுளை மற..மனிதனை நினை..

20 July 2010

இந்திய மக்கள் உயிர்களின் மொத்த விலை 2300 கோடி


காங்கிரஸ் அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருக்கும் "அணுசக்தி கடப்பாட்டு மசோதா" (Civil Nuclear Liability Bill) பற்றி நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்? நமக்குத் தெரிந்ததெல்லாம் மதராசப்பட்டினமும், நடிகர், நடிகையரின் குத்தாட்டங்களூம் தான். இந்த மசோதாவால் பாதிக்கப் படப் போவது யாரோ நமக்கு வேண்டப் படாதவர்கள் அல்ல. முற்றிலும் நாமாகிய ஒட்டு மொத்த இந்தியர்களும் தான்.

போபால் கொடுமைக்கு கால் நூற்றாண்டுக்குப் பின் வழங்கப் பட்ட (அ)நீதி அனைவரின் நெசையும் உலுக்கிய ஒன்று. ஒரு வேலை இவர்கள் உண்மையில் மக்களுக்கான அரசாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? இனி இம்மாதிரி நம் மக்களுக்கு நிகழக் கூடாது. இது போன்றவற்றைத் தடுக்க என்ன செய்யலாம்? என யோசித்து அதற்கான செயல்பாடுகளில் இறங்கியிருக்க வேண்டும்.

ஆனால் நடந்து கொண்டிருப்பது முற்றிலும் நேரெதிரான ஒன்று. இந்த மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசுத் தயாரித்திருக்கும் "அணுசக்தி கடப்பாட்டு மசோதா" நிர்ணயித்திருக்கும் ஒட்டு மொத்த இந்தியர்களின் உயிர்களின் விலை 2300 கோடி ரூபாய். சென்ற நவம்பரில் மன்மோகன் அரசால் ஒப்புதல் தெரிவிக்கப் பட்ட இம்மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுடன் காதும் காதும் வைத்தாற்போல் நிறைவேற்ற முயற்சித்து தோற்றுப் போனது அந்த அரசு.

சரி இந்த மசோதாவின் நோக்கங்கள் என்ன?

1) போபால் வழக்கு யூனியன் கார்பைடுக்கு ஏற்படுத்தியத் தொந்தரவுகள் இனி வேறெந்த அமெரிக்க நிறுவனங்களுக்கும் வந்து விடக் கூடாது. இந்திய மக்கள் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? அமெரிக்க முதலாளிகளுக்கு குடைப் பிடிக்கதான் நாங்கள் ஆட்சியமைத்திருக்கிறோம் என்பது போல் உள்ளது இச்செயல்.

2) இம்மசோதா சட்டமாக்கப் பட வில்லையென்றால் வெளி நாடுகளிலிருந்து அணு உலைகளோ, யுரேனியமோ நம்மால் வாங்க முடியாது என ஒரு பொய்த் தகவல் வேறு பரப்புகிறார்கள். இப்படி ஒரு சட்டம் இயற்றப் பட வேண்டுமென யுரேனியம் விற்பனை செய்யும் நாடுகள் (Nuclear suppliers group) கோரவில்லை. இச்சட்டமில்லாமலே ரஷ்யாவும், பிரன்சும் நமக்கு அணு உலைகளை விற்பனை செய்துள்ளன.

3) ஜெனரல் எலக்ட்ரிக், வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அமெரிக்க அணு உலைத் தயாரிப்பு நிறுவனங்கள் போபால் போல ஒரு பிரச்சினை தங்களுக்கு வந்து விடக்கூடாது என கொடுத்து வரும் நிர்பந்தங்கள் தான் இம்மசோதாவின் மூலக் காரணம்.

4) இவர்களிடமிருந்து இறக்குமதி செய்யப் படும் அணு உலைகளை இயக்கப் போவது நம் இந்திய அணுசக்தி கழகமே. ஒரு வேளை எந்திரத்தின் கோளாறு அல்லது வடிவமைப்பின் கரணமாக விபத்து நேர்ந்தால் பொது மக்கள் அந்நிறுவனங்களீன் மீது வழக்கு போட முடியாது. இந்திய அணுசக்தி கழகம் மட்டுமே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும். ஏன் விபத்தின் காரணம் எந்திரம் தான் என நிரூபிக்கப் பட்டாலும் இந்திய அணுசக்தி கழகம் கூட அவர்களிடம் இழப்பீடு கேட்க முடியாது. விற்பனை ஒப்பந்தப் படி என்ன இழப்பீடோ அது மட்டுமேக் கிடைக்கும். இதைக்கூட நீர்த்து போக வைக்கும் திருட்டுத் தனமானத் திருத்தங்களும் இச்சட்டத்தில் செய்யப் பட்டிருக்கின்றன.

5) அணு உலை விபத்து ஏற்பட்டு அதனால் நாம் பாதிக்கப் பட்டால் நம்மில் யாரும் அமெரிக்க நீதி மன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியாது. இவையனைத்தும் இந்திய நீதி மன்றத்தால் மட்டுமே விசாரிக்கப் பட வேண்டும் என்கிறது இம்மசோதா.

6) இதையும் மீறி யாராவது வழக்குத் தொடுத்தால் என்ன செய்வது? என யோசித்து அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் திட்டமாக சர்வதேச அணுசக்தி முகமையின் ஈட்டுத்தொகை தொடர்பான ஒப்பந்தத்திலும்(IAEA's Convention on Supplementary Compensation) இந்திய அரசு கையொப்பமிட முடிவெடுத்திருக்கிறது. இதில் கையொப்பமிடும் நாடுகளுக்கு விபத்து ஒன்றுக்கு சுமார் 30கோடி டாலரை வழங்குவார்கள் என்பதால் அந்நாட்டு மக்கள் வேறு எங்கும் வழக்குத் தொடுக்கும் உரிமையை இழக்க வேண்டும்.

7) விபத்துக்கான ஈட்டுத் தொகையை மதிப்பிடுகின்ற அதிகாரத்தை சுற்றுச்சூழல், சுகாதாரத் துறைகளிடமிருந்து பிடுங்குகிறது இம்மசோதா. இனி அம்மதிப்பீடுகள் முழுதும் "அணுசக்தி பாதிப்பு இழப்பீட்டு ஆணையர்" என்பவரால் நிர்ணயிக்கப்படும். அந்த ஆணையரின் முடிவை எதிர்த்து வழக்குப் போட யாருக்கும் உரிமை கிடையாது.

8) கதிர்வீச்சினால் விபத்து நேரிட்டால் அதிலிருந்து 30 ஆண்டுகளுக்கு அங்கு நடக்கும் அனைத்து பாதிப்புகளுக்கும் அந்நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பது வியன்னா மற்றும் பாரிஸ் கன்வென்சன்களின் முடிவு செய்யப் பட்ட சர்வதேச நெறிமுறை. ஆனால் இம்மசோதா சொல்வது என்னவென்றால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் பாதிப்புகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கப் பட மாட்டாது.

9) ஒரு வேளை போர், உள்நாட்டு போர், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப் பட்டு அதனால் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டு மக்கள் பாதிக்கப் பட்டால் அதற்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப் பட மாட்டாது.

10) அணு உலை விபத்து ஏற்பட்டு எத்தனை லட்சம் உயிர்கள் போனாலும் அதிக பட்ச இழப்பீட்டுத் தொகை 45 கோடி டாலர் மட்டுமே. அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி 2300 கோடி ரூபாய். ஆனால் அமெரிக்காவில் இத்தகைய விபத்து ஏற்பட்டால் அங்கு இழப்பீட்டுத் தொகை 10 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 50ஆயிரம் கோடி ரூபாய். இதிலிருந்து 20 இந்தியனின் உயிர் 1 அமெரிக்க உயிருக்கு சமம் என்கிறது இம்மசோதா.

இது போன்றொரு சட்ட மசோதா உலகின் எந்த ஒரு நாட்டிலும் இயற்றப் படவில்லை. இதன் மூலம் இவர்கள் இந்திய மக்களின் உயிர்களுக்கு உச்சவரம்பு விதிக்கின்றனர். அமெரிக்க முதலாளிகளுக்கு சொறிந்து விட்டுக் கொண்டு இந்திய மக்களை புதை குழியில் தள்ளி கொன்று குவிக்கும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படலாமா? இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியவர்கள் பொது மக்களாகிய நாம்தான்.

பி.கு: இங்கு நான் நிறைய விவாதங்களை எதிர் பார்க்கிறேன். படிக்கும் அனைவரும் விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு கோருகிறேன்.

நன்றி: புதிய ஜனநாயகம்

17 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

உயிருக்கு மயிரை போன்ற சொற்ப காசு தருகிறான் அதற்க்கு சோம்பு தூக்குறது
அதிகார் வர்க்கம்

புலவன் புலிகேசி said...

ஆம் கார்த்தி இதுத் தெரியாமல் மக்கள் இன்னும் மதராசப்பட்டினம், கிரிக்கெட் போன்ற சினிமா போதையில்தான் மூழ்கியிருக்கிறார்கள்........

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வீட்ல தீபட்டிய காணும்னு ........... சிலின்டர தொறந்து வச்சிக்கிட்டு இருக்குற கதைதான்................

வாழ்க இந்தியா ............... வாழ்க உலகமயமாக்கல் ............

புலவன் புலிகேசி said...

//வாழ்க இந்தியா ............... வாழ்க உலகமயமாக்கல் ............//

உலகமயமாக்கல் என்ற பெயரில் ஏழை நாடுகளை மயானங்களாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு உள்ளூர் களவானிகளும் கூட்டு.

சிவா said...

By this we can know what is the value of indians' life as valued by our esteemed politicians...

Anonymous said...

நம்ம இப்படி கூப்பாடு போட்டா ஏதாவது நடக்குமா....இருக்கிற இந்த பிராடு அரசியல்வாதி நாயிக அவனுகளோட பொண்டாட்டிக்கு/வப்பாட்டிக்கு தங்க்கத்துல சோப்பு வாங்கலாமா இல்ல வைரத்துல சோப்பு வாங்கலாமான்னு நினைச்சுகிட்டு இருக்கானுக...
கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்ப இருக்கிற அரசு கவுரரமாதிரி இருக்கும் போது,ஒரு சாவுகிர்ராக்கி அமெரிக்கா போயிட்டு அவனோட பைய நிரப்பிகிட்டு வந்துட்டான்.. அப்புறம் இந்த அரசு கவுரல...
இந்த நாட்டுல இருக்குற மக்கள் எப்படி இருந்தா என்ன இந்த சாவு கிராக்கி அரசியல்வியாதி நாயிகளுக்கு....அவனுகளோட நினைப்பே எவனுக்காவது "... "விட்டு அவனோட பைய நிரப்பிக்கணும்...
BBC ரிப்போர்ட்(இந்தியாவில் வறுமை அதிகம் உள்ள 6 மாநிலங்கள்) வந்தும் அத பத்தி எவனாவது ஒரு அறிக்கை விட்டானா....??
யோவ் வெண்ணைகளா....அப்படி டெல்லில உக்காந்துகிட்டு என்னத்த தாண்டா புடுங்குரீங்க...
இந்தியாவுல IT துறைய தவிர வேற எதாவது வளர்ச்சி இருக்கா.....
ஒவ்வொரு budgetum -ve ல வருது.... negative ல budget போடுறதுக்கு நீங்க எதுக்குடா வெண்ணைகளா....

அட போங்க புலிகேசி.....பத்திகிட்டு வருது...

புலவன் புலிகேசி said...

//நல்லவன் கருப்பு... says:
July 21, 2010 9:25 AM
நம்ம இப்படி கூப்பாடு போட்டா ஏதாவது நடக்குமா.//

நண்பரே நாம் இதை அனைத்து மக்களுக்கும் நம்மால் முடிந்த அளவு எடுத்துச் சொல்லி புரிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

இன்றைய இந்தியாவில் மக்கள் உயிரின் விலை மயிரின் விலையை விட குறைவு..

ஆட்சியில் அமர்ந்திருக்கும் "மண் மோகன் சிங்க்"ஒரு மண் பொம்மை தான் ..

ஜோதிஜி said...

முருகவேல் முதலில் சில விசயங்களைப் பார்ப்போம்.

இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க ஏகாதிபத்யம், அடிமைசாசனம் போன்ற வார்த்தைகளை அந்த பக்கமாக
ஒதுக்கி வைத்து விடலாம்?

வளர்ந்து வரும் மின்சாரத்தேவைக்கு இது போன்றவைகள் இல்லாவிட்டால் நம்மால் தன்னிறைவு அடையமுடியுமா?

தேசிய நதி நீர் இணைப்பு என்று ஒரு வார்த்தை இப்போது எங்கே போய் கலந்தது?

தமிழ்நாட்டுக்கு வந்த போது எதிர்கால நட்சத்திரம் சொன்ன அற்புத அறிவுரைகள் ஞாபகத்திற்கு வருகிறதா?
நதி நீர் இணைப்பு வாய்ப்பும் இல்லாதது. அவர் தான் எதிர்கால பிரதமா? என்ன செய்ய முடியும் உங்களால்?

சுயபாதுகாப்பு அம்சங்கள் என்ற நம் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அத்தனை ஷரத்துக்களும் இதில் இருக்கிறதா என்று
இந்த நிமிடம் வரைக்கும் வெள்ளை அறிக்கை எவராவது கேட்டு இருக்கீறீர்களா?

செந்தில் சொன்னது போல் மீனவர்களுக்காகத் தான் குரல் எழுப்பினார் சீமான்? என்ன செய்தார்கள் மீனவர்கள்?

இந்த ஒப்பந்தத்திற்கு பின்னால் உழைத்தவர்கள், வேண்டும் என்று விரும்பியவர்கள், வந்து தான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திக்
கொண்டுருந்தவர்கள் போன்றவர்களைத் தான் நாம் சுட்டிக் காட்ட முடியும்?

அமெரிக்கா என்பது அடுத்த ஐந்து ஆண்டுகள் பத்து ஆண்டுகள் ஏன் கால் நூற்றாண்டு காலம் எப்படி ஆளுமையை
உருவாக்கி வைக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துபவர்கள். அரசியல், தொழில், எதிர்கால நலத்திட்டம் மூன்றும் ஒன்றுக்கொன்று
எவர் தலையீடும் இல்லாமல் ஓரே கூரையின் கீழ் இறுதியாக இணைக்கிறது? அதை தான் காலம் காலமாக செயல்படுத்தவும்
செய்கிறார்கள்.

நான் குனியத் தயாராய் இருக்கின்றேன் என்கிறவர்கள் இருக்கும் வரையிலும் ஏற விரும்புவன் வேடிக்கை பார்த்துக் கொண்டா
இருப்பான்?

புரட்சியாவது புடலங்காயவது? வந்து பாருங்கள்? உழவர் சந்தையில் கூட புடலங்காய் விலை ஏறிவிட்டது.
இப்படித்தான் வாழ வேண்டும் யோசிக்க வேண்டும் பழக வேண்டும் என்ற சமூக கட்டமைப்பு உருவாகி பல ஆண்டுகள் ஆகி
விட்டது. மக்களும் சரி என்று ஒத்துக் கொண்டு வாழ பழகிவிட்டார்கள். திருடினால் என்ன? எதிர்காலத் திண்டாட்டமா? அப்போது வேறொரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பார்த்து மறந்து போய் விடலாம்?

'பரிவை' சே.குமார் said...

//இன்றைய இந்தியாவில் மக்கள் உயிரின் விலை மயிரின் விலையை விட குறைவு..//

unmai...

repeatuuuu verumbaya...

திவ்யாஹரி said...

பதிவர்களாகிய எங்களுக்கு உங்களால் தெரிய வந்த இந்த செய்தி போல.. மீதி உள்ள நடுத்தர மக்களுக்கும் புரிய வைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு பதிவில் குறிப்பிடுங்கள் நண்பா.. குஷ்பு பேசுறதை எதிர்க்கும் நீதிபதிகள் இதை ஏன் எதிர்க்கவில்லை.. இது பற்றி ஏதும் தெரியாமல் இருக்கிறார்களா? இல்லைதெரியாதவர்கள் போல இருக்கிறார்களா?

வால்பையன் said...

இதுமட்டுமில்லாமல் அமெரிக்க அரசு அவர்களது ராணுவத்தை இங்கே கேம்ப் போட்டு உட்காரவைக்குமாம்!

நாம அணு சோதனை செய்ய அவர்களிடம் அனுமதி வாங்கனும்! மொத்தமா நம்மை எல்லாம் விலை பேசி கிட்டு இருக்கானுங்க!

புலவன் புலிகேசி said...

//இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க ஏகாதிபத்யம், அடிமைசாசனம் போன்ற வார்த்தைகளை அந்த பக்கமாக
ஒதுக்கி வைத்து விடலாம்?//

அப்படி ஒதுக்கி வைத்து விட்டால் மின்சாரம் வேண்டுமானால் இருக்கும் மனிதர்கள் இருக்க மாட்டார்கள். அதன் பின் மின்சரம் சுடுகாடுகளில் எரியூட்ட மட்டுமே பயன்படும்.

புலவன் புலிகேசி said...

//புரட்சியாவது புடலங்காயவது? வந்து பாருங்கள்? உழவர் சந்தையில் கூட புடலங்காய் விலை ஏறிவிட்டது.
இப்படித்தான் வாழ வேண்டும் யோசிக்க வேண்டும் பழக வேண்டும் என்ற சமூக கட்டமைப்பு உருவாகி பல ஆண்டுகள் ஆகி
விட்டது. மக்களும் சரி என்று ஒத்துக் கொண்டு வாழ பழகிவிட்டார்கள். திருடினால் என்ன? எதிர்காலத் திண்டாட்டமா? அப்போது வேறொரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பார்த்து மறந்து போய் விடலாம்?

புரட்சியை புடலங்காயோடு ஒப்பிட்டிருக்கிறீர்கள். நலம். அது ஒன்றும் வீணாகிப் போகும் பொருள் இல்லையே மக்களுக்கு பயன்படப் போகும் ஒரு பொருள் தானே? புரட்சியும் அது போலத்தான். மக்களுக்காக மட்டுமே உருவாக்கப் பட வேண்டும். எது நடந்தால் என்ன? என்ற மன நிலையிலிருந்து மக்கள் மாற்றப் படும் போது அந்தப் புரட்சி தானாக வெடிக்கும். அதற்கான முயற்சியை மேற் கொள்வோம்.

புலவன் புலிகேசி said...

//திவ்யாஹரி says:
July 21, 2010 12:21 PM
பதிவர்களாகிய எங்களுக்கு உங்களால் தெரிய வந்த இந்த செய்தி போல.. மீதி உள்ள நடுத்தர மக்களுக்கும் புரிய வைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு பதிவில் குறிப்பிடுங்கள் நண்பா.. குஷ்பு பேசுறதை எதிர்க்கும் நீதிபதிகள் இதை ஏன் எதிர்க்கவில்லை.. இது பற்றி ஏதும் தெரியாமல் இருக்கிறார்களா? இல்லைதெரியாதவர்கள் போல இருக்கிறார்களா?//


திவ்யா நீங்கள் இது போன்ற விடயங்கள் பற்றி நிறையப் படித்து ஒரு புரிதலுக்கு வந்து பின்னர் அதை உங்கள் சுற்றத்தாரிடம் எடுத்துக் கூறுங்கள். அதற்கு என்ன உதவி வேண்டுமோ நான் செய்கிறேன். போபால் குறித்து நீங்கள் பதிவெழுதினால் நன்றாக இருக்கும். அதற்கான புத்தகங்களையும், விளக்கங்களையும் அடுத்த முறை ஊர் வரும் போது உங்களுக்கு கொடுக்கிறேன். புரிந்து எழுதுங்கள். அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

பனித்துளி சங்கர் said...

தொடர்ச்சியான சமூக அக்கறை உள்ள உங்களின் விழிப்புணர்வு பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே .

walajabalaji said...

ஹும்,பதிவு மிக அற்புதம்.இது போன்ற எதிர் விவாத்ம் மிக அவசியம்.
ஆனால் ஒரு விஷயத்தை எதிர்பது மிக எளிது ?
விடை சொல்லும் திறமை வேன்டும்.
மன்னிக்கவும்.