கடவுளை மற..மனிதனை நினை..

22 July 2010

சுதந்திரமாம்(?)

7:37:00 AM Posted by புலவன் புலிகேசி , 12 comments

அமெரிக்க நிறுவனங்கள்
உன் மீது விடம்
கக்கும்

எதிர்த்து வழக்காட உனக்கு
உரிமை இல்லை

அவனால் உன் உயிர்
போனால் கால் நூற்றாண்டு
கடந்து 23ரூ கொடுக்கும்
இந்திய அரசாங்கம்

அதில் 10ரூ லஞ்சம்
போக 13ரூ மட்டும்
உனக்கு மிஞ்சும்

ஆங்கிலேயனிடம் பெற்ற
சுதந்திரத்தை அமெரிக்கனுக்கு
அடிமை சாசனமாய் எழுதிக்
கொடுத்து விட்ட பின்

இன்னும் என்னடா
சுதந்திர நாட்டில் வாழ்கிறோம்?12 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல கவிதை அப்பொழுது காலனி நாடாய் இருந்தது இப்பொழுது மறுகாலனி
நாடாய் இருக்கிறது . இந்தியா என்பது உயிர்கள் வாழும் தேசமா இல்லை sandhai

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//ஆங்கிலேயனிடம் பெற்ற
சுதந்திரத்தை அமெரிக்கனுக்கு
அடிமை சாசனமாய் எழுதிக்
கொடுத்து விட்ட பின்

இன்னும் என்னடா
சுதந்திர நாட்டில் வாழ்கிறோம்?//

அரசியல்வாதிகளின் ஆடம்பரவாழ்க்கைக்கு
அன்றாடகாய்ச்சிகளை அடிமையாக்கும் அவலம்...

சசிகுமார் said...

காங்கிரஸ் நம் நாட்டை விலை பேசி விற்று விட்டார்கள்.

புலவன் புலிகேசி said...

//சசிகுமார் says:
July 22, 2010 9:37 AM
காங்கிரஸ் நம் நாட்டை விலை பேசி விற்று விட்டார்கள்//

காங்கிரஸ் மட்டுமல்ல பா.ஜ.க வும் தான்..........

இன்றைய கவிதை said...

சுதந்திரம் வெவ்வேறு இடத்தில் விலை மலிவாக விற்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறது

நில சுரங்கமாய் ஆந்திராவில், எம் எல் ஏகலால் பீகாரில் , டில்லியிலும் கோவாவிலும் கற்பழிப்புகளாய், மும்பாயில் தண்ணீராய், அரசியலாய் தமிழ் நாட்டில், எல்லைகளை விரயம் செய்யும் காஷ்மீரிலும், அருணாசலபிரதேசத்திலும், இப்படி சுதந்திரத்தை கூறுப்போட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்,

இதில் மக்களுக்கு சுவாசத்தையும் பெருமூச்சையும் தவிர சுதந்திரமாக ஏதுமில்லை

நன்றி புலிகேசி அவர்களே

ஜேகே

NO said...

புரட்சி பேசும் பொய்யர்கள் உன்மீது விடம் கக்கும்
அந்நிய கைகூலிகள் உன்னை பார்த்து எள்ளி நகையாடும்

எதிர்த்து பேசினால் நீ பிற்போக்கு என்று
சொம்பு தூக்கினால் நீ முர்போக்கென்று

குண்டு வைத்து ரயில் கவிழ்ந்தால்
அதன் பெயர் புரட்சி
குண்டு வைத்தவனை பிடித்தால்
அதன் பெயர் மனித உரிமை மீறல்

ஆங்கிலேயரிடம் பெற்ற சுதந்திரத்தை
மாவோவிடம் அடகு வைத்த ஒரு கூட்டம்
வெட்கமின்றி சொல்லுகிறது
நம்மைப்பார்த்து அடிமை என்று

அந்நிய சித்தாந்தங்களை ஆராதிக்கும் கூட்டம்
ஆர்ப்பரித்து கூறுகிறது, அடிமைத்தனமே அருமை என்று

இந்த விடங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் எல்லோரும் கேட்கலாம்
சுதந்திர நாட்டிலா வாழ்கிறோம் என்று

அதுவரை தயங்காமல் சொல்லலாம்,
சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என்று!

அஹமது இர்ஷாத் said...

என்னா சுதந்திரம் கிடைச்சிருச்சா!!!!!!!!

கமலேஷ் said...

நியாயம்தான்.

ஹேமா said...

வீட்டுக்கு வீடு
வாசல்படிதான் புலவரே !

வெறும்பய said...

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சிருமில்ல,,,

புலவன் புலிகேசி said...

//ஆங்கிலேயரிடம் பெற்ற சுதந்திரத்தை
மாவோவிடம் அடகு வைத்த ஒரு கூட்டம்
வெட்கமின்றி சொல்லுகிறது
நம்மைப்பார்த்து அடிமை என்று

அந்நிய சித்தாந்தங்களை ஆராதிக்கும் கூட்டம்
ஆர்ப்பரித்து கூறுகிறது, அடிமைத்தனமே அருமை என்று

இந்த விடங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் எல்லோரும் கேட்கலாம்
சுதந்திர நாட்டிலா வாழ்கிறோம் என்று

அதுவரை தயங்காமல் சொல்லலாம்,
சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என்று// இப்படி உங்களைப் போன்றவர்கள் மக்களை சிந்திக்க விடாமல் இது போதும் இப்புடி இருந்தா நாம சுதந்திரமா இருக்கோமுன்னு சொல்லி சொல்லி அடிமையாத்தானய்யா வச்சிருக்கீங்க

சே.குமார் said...

நிதர்சனம் நிரம்பிய கவிதை....

வாழ்த்துக்கள்.