கடவுளை மற..மனிதனை நினை..

19 July 2010

முற்றிலும் அரசியலாகிய இரயில்வேத் துறை

11:22:00 PM Posted by புலவன் புலிகேசி , , 5 comments

ராம் விலாஸ் பாஸ்வான்: ரயில்வே துறை தொடர்பான எதிலுமே அக்கறை காட்டாமல் தொடர்ந்து மெத்தனமாக செயல்படுகிறார் மமதா பானர்ஜி. ஒன்று அவர் ரயில்வே அமைச்சராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை விட்டு விட்டு மேற்கு வங்கத்தோடு இருந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பதவி உங்களுக்கு வேண்டும் அப்படித்தானே?

ராம் விலாஸ் பாஸ்வான்: இது மாவோயிஸ்ட் தாக்குதல் எல்லாம் இல்லை. அப்படி மமதா கூறினால் அவர் மக்களை திசை திருப்புகிறார் என்றுதான் அர்த்தம். ரயில்வே துறையின் அலட்சியப் போக்கும், கவனக்குறைவுமே இந்த விபத்துக்குக் காரணம்

அடச்சே! த்ண்டவாள்ம் டேமேஜ் ஆயிருந்தா நேரடியா அந்த நக்சலைட்டுகள் மேலப் பழியைப் போட்டிருக்கலாமே. இப்ப நம்ம எடத்தப் புடிக்க வர்றவங்களுக்கு என்ன ப்தில் சொல்றது?

இவ்வளவு நாள் ஆதாரமே இல்லாமல் அந்த நக்சல்கள் மீது பழி போட்டு இன்று அவர்களை அழிக்கும் அளவிற்கு வந்து விட்டீர்கள். ஏன் இதை மட்டும் அவர்கள் மீது போடவில்லை. உங்களுக்கு அரசியல் நடத்த ஒரு ஆதாயம் தேவை இல்லையா?

லல்லு: முன்னாள் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், தொடர்ந்து இப்படிப்பட்ட கோர விபத்துக்கள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது. ரயில்வே அமைச்சர் இதுகுறித்து கவனக்குறைவுடன் செயல்படுவதை ஏற்க முடியாது.

மக்களின் உயிர்களை மயிர்களாக நினைக்கும் இந்த அரசியல்வியாதிகளுக்குக் கருத்துத் தெரிவிக்க என்னத் தகுதி இருக்கிறது. இந்தக் கருத்துக்கள் எல்லாம் மக்கள் உயிர்கள் மீதுள்ள அக்கரையால் வருபவை இல்லை. "அண்ணன் எப்பக் கெளம்புவான் திண்ணை எப்ப காலியாகும்"-னு ஒரு பழமொழி இருக்கு அந்தக் கதைதான்.

மம்தா: விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் கூறுகையில்; இந்த சம்பவம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

என்ன விசாரனை? என்ன சந்தேகம்? எப்படியாவது ஒரு போலி ஆதரத்தைத் தயார் செய்து நக்சல்கள் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ள வேண்டும். அதானே! ஆமாம் ஒரு வேளை அந்த ரயில்வே அதிகாரிகளை நக்சல்கள்-னு சொல்லுவாங்களோ!

செய்தி: கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நின்றிருந்த ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 60 பேர் பலியாயினர். இன்று அதிகாலையில் நடந்த விபத்தில் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது

நிவாரணத் தொகையைக் குறைத்து சுருட்டிக்கிறதுக்காகப் பொய்க் கணக்கு சொன்னாலும் சொல்லுவாங்க.

முற்றிலும் கவனக் குறைவு மட்டுமல்லாமல் அரசியல் தந்திரங்களும். மக்களின் உயிர்களை வைத்து அரசியல் நடத்தும் மிருகங்கள். தாங்கள்த் தப்பிக்க நக்சல்கள் மீது திசைத் திருப்பல். இதெல்லாம் தெரிந்திருந்தும், புரிந்திருந்தும் மக்கள் அடுத்த தேர்தலிலும் இவர்கள் அல்லது இன்னொரு கொள்ளைக் கும்பலை ஆட்சியிலமர்த்தத் தவறப் போவதில்லை.

வாழ்க ஜ(பண)ன நாயகம்!

5 விவாதங்கள்:

க ரா said...

பன்னாடைங்க எதுலெல்லாம் விளையாடுறதுன்னு ஒரு விவஸ்தயே இல்லாம போச்சு. எல்லாம் நம்ம சனங்களே சொல்லனும் இவனுங்க மாதிரி ஆளுங்களேயே தேர்ந்தெடுக்கிறதுக்கு.

க.பாலாசி said...

நடந்த விபத்தை நேற்று மாலைதான் அறிந்தேன்... மிகவும் வருத்தப்படவேண்டிய நிகழ்வு. பணியாளார்களின் கடமையற்ற செயலும் இதற்கு காரணம்... ஆதிகாரத்தில் உள்ளவர்கள் வழக்கம்போல் பிதற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்கென்ன வெறும்வாய்க்கு அவல்கிடைத்த கதையாக ஒருவரையொருவர் குற்றம்கூறிக்கொண்டு...

சசிகுமார் said...

சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை சாக்கடை

'பரிவை' சே.குமார் said...

மிகவும் வருத்தப்படவேண்டிய நிகழ்வு.

அவர்களுக்கென்ன வெறும்வாய்க்கு அவல்கிடைத்த கதையாக ஒருவரையொருவர் குற்றம்கூறிக்கொண்டு... சாக்கடைகள்

திவ்யாஹரி said...

//இதெல்லாம் தெரிந்திருந்தும், புரிந்திருந்தும் மக்கள் அடுத்த தேர்தலிலும் இவர்கள் அல்லது இன்னொரு கொள்ளைக் கும்பலை ஆட்சியிலமர்த்தத் தவறப் போவதில்லை//

வேற என்ன செய்யப் போறாங்க.. அதே தான்.. யாரும் மாறப் போவதில்லை..