கடவுளை மற..மனிதனை நினை..

11 July 2010

மனிதம் இருந்தால் படியுங்கள் - 1

12:57:00 PM Posted by புலவன் புலிகேசி , 24 comments

1984-ம் ஆண்டு திசம்பர் 2ம் நாள். அப்போது நான் பிறந்து 1 மாதம் 13 நாட்கள் ஆகியிருந்தது. ஒரு வேலை நான் போபாலில் பிறந்திருந்தால் அந்த 43வது நாளே என் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்னைப் போல் பிறந்த குழந்தைகளுடன் சேர்த்து 22,146 பேர் மரணமும் வெறும் விபத்தாகப் பார்க்கப் படுவது அபத்தமான ஒன்று.

இவையெல்லாம் முதலாளிகளின் இலாப வெறிக்கு நடத்தப் பட்ட படுகொலைகள். இவற்றை விபத்தாகப் பார்க்கும் எண்ணம் நம் மக்களிடம் பரவியிருப்பது கொடுமையான விடயம். விளம்பர ஊடகங்களை வைத்து மக்கள் உணர்வுகள் அனைத்தும் வெறும் செய்திகளாக மாற்றப் பட்டிருப்பது எவ்வளவு கொடூரமான செயல்?

தான் ஏன் இப்படி இறந்து போகிறோம்? என்பதைக் கூட உணர முடியாமல் நடு ரோட்டிலும், இரயில் நிலையங்களிலும் பிணமாகிப் போனவர்கள் விபத்தால் இறந்தவர்கள் என்று சொல்வது மனிதம் மறைக்கும் பாதக செயல். இந்த விபத்துக்கெல்லாம் முக்கியக் காரணம் கவன்க் குறைவோ அல்லது சாதாரண விபத்தோ அல்ல.

முதலாளிகளின் வெறி கொண்ட இலாப நோக்கு. இது மட்டுமேக் காரணம். போபால் ஆலையில் கார்பரில் என்ற பூச்சி மருந்து தயாரிக்கப் பட்டு "செவின்" எனப் பெயரிடப் பட்டு விர்பனைக்கு வெளிவந்திருக்கிறது. இந்த மருந்தைத் தயாரிக்க மாற்று வழிகள் நிறைய இருந்தும் "மெத்தில் ஐசோ சயனைடு" என்ற நச்சுப் பொருளை விலை மலிவு என்ற ஒரே காரணத்தை மனதில் கொண்டு இலாப நோக்கில் பயன்படுத்தியது இந்த முதலாளிகளின் குற்றமா? அல்லது விபத்தா?

ஆனால் இந்த மருந்து விவசாயிகளிடம் ஆதரவு பெறவில்லை. அதைத் தொடர்ந்து 1980-களில் நிலவிய வறட்சியின் காரணமாகவும் இந்த மருந்து தோல்வியைத் தழுவியது. இதனால் இலாபக் குறைவைத் தடுக்க அந்த முதலாளிகளால் முடிவெடுக்கப் பட்டு அங்கு உள்ள எந்திரங்களின் பராமறிப்பு செலவுகள் நிறுத்தப் பட்டன.

மேலும் சம்பவம் நடந்த அன்று இந்த ஆலையில் இந்த "மெத்தில் ஐசோ சயனைடு" வாயுவை மூன்று பெரிய கலன்களில் சேமித்து வைத்திருந்திருக்கிறார்கள். இந்த நச்சுத் திரவம் குளிரூட்டப் பட்ட இடத்திலோ அல்லது உறை நிலையிலோ பாதுகாக்கப் பட வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் "காஸ்ட் கட்டிங்" (செலவைக் குறைத்து இலாபத்தை அதிகரிப்பது) என்று சொல்லி குளிர் காலம் என சொல்லி குளிர் சாதனத்தை அணைத்து வைத்திருந்திருக்கிறது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த கலன்களின் அழுத்தம் சோதிக்கப் பட வேண்டும். ஆனால் இங்கு 8 மணி நேரத்திற்கு ஒரு முறை சோதிக்கப் பட்டிருக்கிறது. 10:12 மணிக்கு சோதனை செய்த போது சரியாக இருந்த அழுத்தம் 11.30 மணிக்கு குளிர் சாதனம் இயக்கப் படாததால் 0 டிகிரியில் இருக்க வேண்டிய வெப்ப நிலை 250 டிகிரியைத் தொட்டு வெடித்து சிதறி 22,146உயிர்களை கொன்று, 500000 க்கும் மேற்பட்டவர்களை முடமாக்கியதுடன் இன்றும் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறை பாடுகளுடன் பிறந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் விபத்து என சொல்லி மிகக் குறைந்த அளவு நஷ்ட ஈட்டை 25 வருடங்களுக்குப் பிறகு வழங்குவதற்கு உத்தரவிட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பை என்னவென்று சொல்வது? முதலாளிகளுக்கு கொடி பிடித்து மக்களை கொன்று குவிக்கும் பணி சிறப்பாக நடந்து வருவது என்ன கொடுமை?

இந்த மனித ஆழிப்பு நிகழ்வுகள் எல்லாம் வெறும் செய்தியாக பார்த்து தலைப்புடன் நிறுத்தி விட்டு சினிமா செய்திப் படித்துக் கொண்டிருந்தவன் தான் நான். புதிய ஜனநாயகம் புத்தகத்தில் இது பற்றிய செய்திகளைப் படித்ததும் அதிர்ந்து போனேன். அதை என் பதிவைப் படிப்பவர்களுக்காவது புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த போபால் தொடரைத் துவக்கியுள்ளேன். இன்னும் அங்கு நடந்துள்ள நடந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் அக்கிரம ஆட்டத்தை அடுத்தடுத்தப் பதிவுகளில் விவாதிக்க விரும்புகிறேன்.

வாருங்கள் விவாதிக்கலாம்.
நன்றி: புதிய ஜனநாயகம்

24 விவாதங்கள்:

Jey said...

aஅரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதற்கு துனைபோயிருக்கிறார்கள். வெட்கக்கேடு.

அத்திரி said...

புலம்பிக்கொண்டிருப்பதுதான் நம் தலையெழுத்து..........

Ramesh said...

மனிதம்???? மனசுக்குள் மட்டும்
இல்ல எழுத்துகளில் மட்டும்
விவாதங்களால் நிறைவேற்றலாமா என்பதும் ??

Unknown said...

மேலை நாடுகளில் அனுமதி மறுக்கப்படும் பல தொழிற்சாலைகள் வெகு எளிதாய் இந்தியாவில் துவக்கப்படுகிறது. அந்நியர்கள் இந்தியாவை மலிவான குப்பைத் தொட்டியாகப் பயன்டுதிக்கொள்வதனால் ஏற்படும் விளைவுகள் தான் இவையெல்லாம்.

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு புலிகேசி .புதிய ஜனநாயகம் புத்தகத்தை நானும் படித்தேன் அதிர்ந்தேன். METHYL ISOSYNATE அந்த காலத்திலேயே
பழைய தொழில் நுட்பமாம் , இதே விடயத்தை தயாரிக்க இதே நிறுவனம் வேறு அமெரிக்காவிலே பாதுகாப்பான முறையில் செய்கிறது
ஆனால் போபால் விடயத்தில் அந்த பாதுகாப்பு இல்லாமல் போனது ஏன் , அனைவரும் கேட்கிறார்களே வாகன ஓட்டி தவறு
செய்தால் எப்படி ..............என்று நடுத்தர வர்க்கம் கூட andersonai காப்பாற்றுகிறது . என்ன செய்வது ???????

வெண்ணிற இரவுகள்....! said...

நானும் இதே விடயத்தை எழுத விரும்புகிறேன் சேர்ந்து சொல்வோம் ....... புலிகேசி .

புலவன் புலிகேசி said...

//றமேஸ்-Ramesh says:
July 11, 2010 2:16 PM
மனிதம்???? மனசுக்குள் மட்டும்
இல்ல எழுத்துகளில் மட்டும்
விவாதங்களால் நிறைவேற்றலாமா என்பதும் ??//

நண்பரே விவாதங்கள் மூலமே மக்களுக்கு புரிய வைக்க முடியும். இல்லையென்றால் வெறும் செய்தியாகி விடும்.

சந்தனமுல்லை said...

ஏழர-யின் ட்வீட் வழி வந்தேன்! நல்ல இடுகை.

அன்புடன் அருணா said...

நல்ல பதிவு.

tamilofun said...

நம் மக்கள் பணத்தை பார்பார்களே தவிர உயிரை அல்ல . ! !
நமக்கு தெரிந்தது எல்லாம் சுயநலம்.
கண்களில் கண்ணீர் வடிப்பார்கள் ! அனால் வாயை திறந்து பேசமட்டர்ககள்
தனக்கு நடந்தாலும் சரி மற்றவருக்கு நடந்தாலும் சரி...!!!

Anonymous said...

manadhai thaitha padhivu nanbare.enakku onru mattum puriyavaeyillai.why our country is like this.vetkamayirukkiradhu.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

இந்தியா ஒரு பரிசோதனைக்கூடம் என்று
எங்கோ படித்த நினைவு...

புலவன் புலிகேசி said...

//Anonymous says:
July 11, 2010 8:03 PM
manadhai thaitha padhivu nanbare.enakku onru mattum puriyavaeyillai.why our country is like this.vetkamayirukkiradhu.// நடுத்தர வர்க்க சிந்தனையாலும், நம் நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடகு வைத்து வருவதாலும், நம் மக்கள் விளம்பர ஊடகங்களால் மயக்கப் பட்டு மடையர்களாக மாற்றப் படுவதாலும் தான்.

ஹேமா said...

மனிதன் வாழ்வு வளர வளர
மனிதம் தொலைந்துகொண்டுதான் புலவரே.மனதைச் சங்கடமாக்கிய பதிவு.

Anonymous said...

=( Do not know what to say. We, Sri Lankan Tamils are already helpless. Do not know how to help you guys out. I can only say if there anything let us know. Right now, we can only lean our shoulders to you all. Sometimes I hate myself for being a helpless person. Damn it.

புலவன் புலிகேசி said...

//அனாமிகா துவாரகன் says:
July 12, 2010 2:58 AM
=( Do not know what to say. We, Sri Lankan Tamils are already helpless. Do not know how to help you guys out. I can only say if there anything let us know. Right now, we can only lean our shoulders to you all. Sometimes I hate myself for being a helpless person. Damn it.//

அனாமிகா, இங்கு கையாலாகாத்தனத்தைப் பற்றியோ அல்லது உதவுவது குறித்தோ கவலைப் படத் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியது மக்களுக்கு இது குறித்தப் புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். போபாலில் நடந்தது என்ன? எனத் தெரியாதப் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது குறித்து புரிதல்கள் ஏற்படுத்த வேண்டும். அமெரிக்க்கா இந்தியாவை ஒரு குப்பைமேடாகப் பார்ப்பதும் அதற்கு இங்கு இருப்பவர்கள் கொடிப் பிடிப்பதும் உணர்த்தப் பட வேண்டும்.

http://rkguru.blogspot.com/ said...

சோகமான சுமைகளை சுமக்கிறோம் நாம்...

KUTTI said...

மிக அருமையான பதிவு.

மனோ

க.பாலாசி said...

நல்ல பகிர்வு. இதுபற்றின புரிதல் அனைத்து மக்களுக்கும் சென்றடையவேண்டும். அரசாங்கத்தின் பாசாங்கு நிலை அவிழ்த்தெரியப்படவேண்டும். துரோகியும் சரி, அதற்கு துணையானவனும் சரி நிச்சயமாக தண்டனைக்கு உட்படவேண்டியவர்களே.

ஏழர said...

க.பாலாசி சொல்வதை வழிமொழிகிறேன்

'பரிவை' சே.குமார் said...

சோகமான சுமைகளை சுமக்கிறோம் நாம்.

.பாலாசி சொல்வதை வழிமொழிகிறேன்

மா.குருபரன் said...

நல்ல பதிவு புலிகேசி.

அடிப்படையில் நான் இந்திய வல்லாதிக்க, ஜனநாயகம் என்ற பேரில் நடாத்தப்படும் சர்வாதிகார அரசியலை முற்றிலும் எதிர்ப்பவன் என்பதற்கப்பால் முற்றிலும் வெறுப்பவன். தென்கிழக்காசியாவில் சாக்கடை அரசியலை உருவாக்கிய பெருமை இந்திய அரசியலுக்கே உள்ளது. சிறுபான்மையினரின், கிரமப்புற மக்களின்,தொழிலாழிகளின் உரிமைகளையும் உடமைகளையும் உயிர்களையும் பறித்து, அடகுவைத்து முதலாளிவர்க்கங்களின் நலனை காக்கும் இந்த அரசியலை எப்படி சொல்வது. பிராந்திய வல்லாதிக்கம் என்ற போர்வையில் முதலாளித்துவ அராஜகம் செய்யும் போக்கை இந்த இந்திய அரசியல்தான் கற்பித்து கொடுத்தது. அயலில் உள்ள சிறு நாடுககளிலும் இந்த சாக்கடையை தெளித்து அங்கும் வர்க்க பேதங்களை உருவாக்கியது இந்த இந்திய அரசியல். தென்கிழக்காசியாவில் வர்க்க நிலையற்ற மனித நேயம் மிக்க ஒரு சமுதாயம் உருவாக வேண்டுமெனில் இந்த இந்திய அரசியல் மாறவேண்டும்.

இன்றைய இளைஞர்கள்:- கிராமப்புறங்களில் இருந்து விழிப்புணர்வு கூடிய மனிதநேயமிக்க அரசியலை உருவாக்க வேண்டும். இது தான் எதிர்காலத்தில் எல்லா இனங்களும் மனித உரிமைகளோடு வாழக்கூடிய ஒர் அரசை, அரசியலை உருவாக்கும்.

தமிழ் நாடன் said...

புலிகேசி! நம்மை போன்ற சாமானிய மக்களின் உயிர்கள் பற்றி இந்த அரசியல்வாதிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஹிட்லருக்கும் இவர்களுக்கும் ஒன்றும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. போபால் விபத்தைவிட பல நூறு மடங்கு ஆபத்தை விளைவிக்கும் அனு உலைகள் விடயத்தில் இவர்கள் கொண்டுவந்துள்ள மசோதாவே இதற்குச்சான்று.

சமிபத்தில் மன்மோகன் சிங் அரசுஅணு​சக்தி குடி​மைக் கடப்​பாடு மசோதா ஒன்றை நாடா​ளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்துள்ளது. அதுவும் எந்த விவாதமும் இன்றி புறக்கடை வழியாக. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இது பற்றி தெரியுமா என்று தெரியவில்லை.(தெரிந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை எனபது வேறு)இந்த மசோ​தா​வில்,​​ இந்​தி​யா​வில் அமை​ய​வுள்ள அணு​மின் கூடங்​க​ளில் விபத்து ஏதே​னும் நேரிட்​டால்,​​ அது தொடர்​பான நிவா​ர​ணம்,​​ இழப்​பீடு அனைத்​தை​யும் ஏற்​றுக்​கொள்ள வேண்​டிய கடப்​பாடு,​​ மத்​திய அர​சின் அணு​மின் துறை​யின் கீழ் இயங்​கும்,​​ இந்​திய அணு​மின் வாரி​யத்​துக்கு மட்​டுமே என்று விதிக்​கப்​ப​டும்.​ அணு​ உ​லை​க​ளையோ,​​ இதர சாத​னங்​க​ளையோ,​​ அணு​எ​ரி​பொ​ரு​ளையோ,​​ அது​தொ​டர்​பான தொழில் நுணுக்​கச் சேவை​க​ளையோ,​​ விற்​பனை செய்​யும் அமெ​ரிக்க நிறு​வ​னங்​க​ளுக்கு எந்​த​வி​தக் கடப்​பா​டும் இருக்​காது என்​ப​து​தான் இதன் சாராம்​சம்.​ அணு உலை​க​ளின் உற்​பத்​திக் கோளாறு கார​ண​மா​கவே விபத்து ஏற்​பட்​டா​லும்,​​ அவற்றை விற்​பனை செய்த வெளி​நாட்டு நிறு​வ​னத்​துக்கு எந்​தப் பொறுப்​பும் கிடை​யாது.​அதைவிடக் கொடுமை அவ்வாறு ஒரு விபத்து நேரிட்டால் வழங்கப்படும் இழப்பீடுக்கு உச்ச வரம்பு வெறும் 2300 கோடி மட்டுமே. போபால் விழ வாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களே முப்பதாயிரத்திற்கும் மேல். விழ வாயுக்கே இப்படி என்றால் ஒரு அனு உலை வெடித்தால் எத்தனை பேர் பாதிக்கப்ப்டுவார்கள் என்று நினைத்துப்பாருங்கள். இதன் மூலம் ஒரு உயிரிழப்புக்கு ஒரு லட்சம் கூட கிடைக்காத நிலையே ஏற்படும்.

ஆனால் வளர்ந்த நாடுகளில் இத்தகைய விபத்துகளுக்கு உச்சவரம்பே கிடையாது அல்லது நமது நாட்டில் நிச்சயிக்கப்பட்டிருக்கும் தொகையை விட பல நூறு மடங்கு அதிகம்.

நீங்கள் நடந்து முடிந்த சோகத்தைப்பற்றி கவலைப்படுகிறீர்கள். வரப்போகும் ஆபத்துக்கு என்ன செய்வது??!!!

ரோஸ்விக் said...

விழிப்புணர்வு வரட்டும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே!