முதல் பகுதியைப் படிக்க: மனிதம் இருந்தால் படியுங்கள் - 1
சாதாரணமாக ஒரு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படித் தப்பிக்க வேண்டும் எனப் பெயரளவிலாவது பயிற்சி அளிக்கப் படும். ஆனால் இந்த போபாலில் வசிக்கும் மக்களுக்கு நச்சு வாயு வெளியேற்றத்தை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான எந்தப் பயிற்சியும் அளிக்கப் படவில்லை.
இது போன்று நச்சு வயுக்கள் வெளியேறும் போது முகத்தில் ஈரத் துணியைக் கடிக் கொண்டு தரையில் தவழ்ந்து வாயு வெளியேறும் திசைக்கு எதிர்த் திசையில் நகர்ந்தாலே போதும், மரணத்திலிருந்து காத்துக் கொள்ளலாம் என்கிற சிறிய பயிற்சியைக் கூட அளிப்பதில் ஈடுபாடு காட்டாத இந்தக் கொடியவர்களால் செய்வதறியாது இறந்து போனவை உயிர்கள் இல்லையா? அதற்கு பெயர் கொலை இல்லையா?
இந்த மெத்தில் ஐசோ சயனைடு வாயு காற்றை விட இரு மடங்கு அடர்த்தி கொண்டது. அப்படியென்றால் அதை சுவாசிப்பது எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும். அதோடில்லாமல் இந்த வாயுவிற்கு எந்த ஒரு வாசனையும் கிடையாது. இதை நுகர்ந்தவர்கள் மிளகாய்ப் பொடியை நுகர்ந்தது போன்ற எரிச்சலை உணர்ந்திருக்கிறார்கள்.
அந்த எரிச்சலால் கண்கள் பிதுங்கி வெளியே வந்து விடுவது போல் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. பின்னர் நுரையீரலில் நெருப்பைக் கொட்டியது போல் மக்கள் வலியில் துடிதுடித்தனர்.
பலர் செய்வதறியாது தப்பிக்கும் எண்ணம் மட்டும் கொண்டு வேகமாக ஓடியிருக்கின்றனர். எந்த அளவு வேகமாக ஓடினார்களோ அதற்கு ஏற்றார் போல் இந்த மெத்தில் ஐசோ சயனைடு வாயுவை அதிகமாக சுவாசித்து துடிதுடித்து இறந்தவர்கள் தான் இங்கு அதிகம். சாலையோரங்களில் குழந்தைகளுடன் குளிரில் நடுங்கியவாறு உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அப்படியே இறந்து போயினர்.
விஷம் தாக்கியக் குளத்தில் மீன்கள் மிதப்பது போல் போபால் முழுவதும் பிணக் குவியல்கள். ஆனால் காவல்த்துறையோ மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். கதவுகளை அடைத்து உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி வீட்டோடு சமாதியாக்கியது. என்ன செய்ய வேண்டும்? எப்ப்படித் தப்பிக்க வேண்டும்? என்ற முறைகள் அங்கு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
காரணம் அரசோ, அல்லது யூனியன் கார்பைடு நிறுவனமோ இது குறித்துப் ப்யிற்சி அளிப்பதை ஒரு பொருட்டாகவேக் கருதவில்லை. இதை வெறும் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்து என முதலாளிகளைக் காப்பாற்றி பொது மக்களின் உயிர்களைக் கேவலப் படுத்துவது எவ்வளவு கொடூரமான ஒரு செயல்?
மரணம் அவர்களை ஒன்றும் உடனே கவ்விக் கொள்ளவில்லை. இவ்வளவு சித்திரவதைகளுக்குப் பின்னர்தான் அவர்களின் உயிர் பிரிந்திருக்கிறது.
எந்தத் தவறும் செய்யாமல் மரண தண்டணையை விடக் கொடுமையான தண்டணையை அனுபவித்த இவர்களின் மரணத்திற்கு காரணமானவன் அமெரிக்காவில் சுக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதை விபத்து என்று சொல்லி அவனையும் தப்பிக்க வைத்து வழக்குகளைத் திரும்பப் பெற்ற நம் அரசியல் வியாதிகளுக்கு மனிதம் என்பதேக் கிடையாதா?
ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது இந்தியா ஜனநாயக நாடுதான். ஆனால் பொதுமக்களுக்கு அல்ல. பணம் படைத்த முதலாளிகளுக்கு மட்டும்.
1984 முதல் இப்போது வழங்கப் பட்ட தீர்ப்பு வரை இந்த வழக்கு எப்படி கையாளப் பட்டிருக்கிறது? என்பதை அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.

17 விவாதங்கள்:
ippadi oru bibathu chennaila nadantha eppadi veliyeranumnu chennai makkaluku terhiuma??
//LK says:
July 13, 2010 8:47 AM
ippadi oru bibathu chennaila nadantha eppadi veliyeranumnu chennai makkaluku terhiuma??//
நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்ற தொழிற்சாலைகள் அமைக்கப் படும் போது சுற்றியுள்ளப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதை பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால் இந்தியப் பங்கு சந்தையில் முதலீடு இருந்தால் போதும். இது தான் அவர்களின் கொள்கை.
உண்மை புலிகேசி
விபத்து ஏற்ப்பட்டால் உயிரை காப்பாற்ற கூடிய பயிற்சிகள் தேவை புலிகேசி
என்னால் முழுவதுமாக படிக்கக்கூடமுடியவில்லை :(
மிகவும் கொடிய வரலாறு .........
இதை இனிவ்ரும் சந்ததியனாருக்கு ஒரு நல்ல பாடம்
நான் மட்டும் அங்கு இருந்தால் அப்போது அவர்களை சுட்டு நானும் இறந்து இருப்பேன்
உண்மை புலிகேசி.
உண்மை புலிகேசி.
மிக வேதனை..
கொடுமை தீர்ப்பு.
தொடருகிறேன்.........
புலவன் புலிகேசி,
இந்தியா ஜனநாயகப் போர்வை போர்த்திய
பணநாயக, அதிகாரவாரிசுகள் ஆட்சி.
'பசுத்தோல் போர்த்திய புலி' போல.
மக்கள் தான் ஆட்டு மந்தைகளாய்,
இலவச புற்களால் ஈர்க்கப்பட்டு,
கசாப்பு கடைகாரர்களின் பின்னால்.
நானும் போபால் பற்றி சில பதிவுகள்
போட்டிருக்கிறேன்.
வாக்குச்சீட்டின் வலிமையறியா
வக்கத்த வாக்காளர்கள்.
வாக்குச் சீட்டை வைத்து நாக்கைத்தான் வழிக்க முடியும்.
//ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது இந்தியா ஜனநாயக நாடுதான். ஆனால் பொதுமக்களுக்கு அல்ல. பணம் படைத்த முதலாளிகளுக்கு மட்டும்.//
இது தான் நிதர்சனம் வேல்.
எனக்கு தெரியல இதுபோன்ற அபாயமான தொழிற்சாலைகள் மக்கள் வாழும் பகுதிக்கு அருகில் இருக்கலாமா ?
பணம் எனும் காகிதத்தால்.. அப்பாவி தொழிலாளர்களின் ஆத்மா அநியாயமாய்.. எரிக்கப்பட்டிருக்கிறது..!
மிகவும் கொடுமையானது.!
//vasan says:
July 13, 2010 5:07 PM
புலவன் புலிகேசி,
இந்தியா ஜனநாயகப் போர்வை போர்த்திய
பணநாயக, அதிகாரவாரிசுகள் ஆட்சி.
'பசுத்தோல் போர்த்திய புலி' போல.
மக்கள் தான் ஆட்டு மந்தைகளாய்,
இலவச புற்களால் ஈர்க்கப்பட்டு,
கசாப்பு கடைகாரர்களின் பின்னால்.
நானும் போபால் பற்றி சில பதிவுகள்
போட்டிருக்கிறேன்.
வாக்குச்சீட்டின் வலிமையறியா
வக்கத்த வாக்காளர்கள்.//
அது போல் மக்களை சிந்திக்க விடாமல் செய்து வைத்திருக்கிறார்கள் இந்தப் பண முதலைகள். இதை முதலில் சரி செய்ய வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
//ஜில்தண்ணி - யோகேஷ் says:
July 13, 2010 8:59 PM
எனக்கு தெரியல இதுபோன்ற அபாயமான தொழிற்சாலைகள் மக்கள் வாழும் பகுதிக்கு அருகில் இருக்கலாமா //
நிச்சயம் இருக்கக் கூடாது. ஏழை நாடுகளில் வாழும் மக்களைதான் அந்த அமெரிக்காவிற்கு மக்களாகவே எண்ணத் தோன்றாதே. முதலாளிகளுக்கு கொடி பிடித்து வரவேற்று இந்தியாவில் உங்கள் குப்பைகளைக் கொட்டி மக்களை அழியுங்கள் என நம் நாட்டு அரசியல் வியாதிகள் அழைக்கின்றனவே.
இவர்களின் பதவி மற்றும் பணத்தின் அதிகாரத்தால் உயிருள்ள மக்களையே பிணங்கலாகதானே பார்கிறார்கள் .
இவர்களைப் போன்ற மனித தோற்றம் கொண்ட அரக்கர்களுக்கு எப்படி தெரியபோகிறது ஒவ்வொரு உயிரின் மதிப்பும் !
Post a Comment