கடவுளை மற..மனிதனை நினை..

27 June 2010

பதிவர்களின் பதிவுகளை சுடும் "நாம் தமிழர்" இணையம்

7:11:00 PM Posted by புலவன் புலிகேசி , 18 comments
நேற்று நான் எழுதியிருந்த "செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்" என்ற அதே தலைப்பு "நாம் தமிழர்" இணைய தளத்தில் காணப் பட்டது. என்னவென்று உள் சென்று பார்த்தேன். நான் எழுதிய அதே பதிவு அச்சு பிசுங்காமல் அப்படியே பதிவிட்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக எழுதிய எனது பதிவின் தொடுப்புகள் எதுவும் கொடுக்கப் படவில்லை.

அது மட்டுமல்ல இது சம்பந்தமாக எனக்கு எந்த மின்னஞ்சலும் அனுப்பி அனுமதி பெற வில்லை. அந்தப் பதிவுகள் அனைத்தும் அந்த நாம் தமிழர் இயக்கத்தால் எழுதப் பட்டது போலவே பதிவிடப் பட்டிருந்தது. என்னுடையப் பதிவு மட்டுமல்ல வினவில் வெளி வந்த "செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!" பதிவின் கெலிச் சித்திரங்களும் அதே தலைப்பில் அப்படியே வெளியிடப் பட்டிருக்கிறது.

அதற்கும் அனுமதி வாங்கினார்களா எனத் தெரியவில்லை. அந்த பதிவின் மூலத் தொடுப்பும் அங்குக் கொடுக்கப் படவில்லை. அதற்கு பதில் இறுதியில் சிறியதாக நன்றி: வினவு எனப் போட்டிருக்கிறார்கள்.

இது நேற்றைய என் பதிவின் தொடுப்பு: "செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்"

இது இதே பதிவு நாம் தமிழர் இணையத்தில்: "செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்"

இது வினவின் பதிவு: "செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!"

இது அதே பதிவு நாம் தமிழர் இணையத்தில்: "செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!"

இதை சுட்டுப் போட்டவர்கள், என்னுடைய சூர்யா குறித்தப் பதிவையும் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்க நாம் தமிழர் அரசியல் கட்சி. என்னத்த சொல்றது இவுங்களையெல்லாம்???

பி.கு: நாம் தமிழர் இயக்கத்திலிருந்து இந்த விடயம் சம்பந்தமாக இந்தப் பதிவுக்கு பின் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது "தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.தங்களின் பக்கத்திற்கு இணைப்பு கொடுக்கப்படும்." என்பதாக.


18 விவாதங்கள்:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//...இதை சுட்டுப் போட்டவர்கள், என்னுடைய சூர்யா குறித்தப் பதிவையும் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்....//
பதிவிடும் போது டிஸ்கில இந்த பதிவை சுட்டுபோடலாம்னு சொல்லிடுங்க

அத்திரி said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா ஹிஹிஹி....

புலவன் புலிகேசி said...

மணி அவர்களே நீங்கள் கூகுல் பஸ்ஸில் வெளியிட்ட குழலியின் "தமிழை வாழ வைத்தவர்களை அழித்த பின் மறைக்க நடத்தப்படும் செம்மொழி மாநாட்டு படங்கள்..." பதிவும் அங்கு வெளிளியிடப் பட்டிருக்கிறது. அங்கும் அதற்கான மூலத் தொடுப்பு இல்லை. இதோ அந்த தொடுப்பு: http://www.naamtamilar.org/textnews_detail.php?id=1862

அஹமது இர்ஷாத் said...

புரியவில்லை உங்களுக்கு இன்னும் "நாம் தமிழர்கள்"

கலாநேசன் said...

//பதிவிடும் போது டிஸ்கில இந்த பதிவை சுட்டுபோடலாம்னு சொல்லிடுங்க//

இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு

புலவன் புலிகேசி said...

நாம் தமிழர் இயக்கத்திலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. இவ்வாறு "தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.தங்களின் பக்கத்திற்கு இணைப்பு கொடுக்கப்படும்."

smart said...

உண்மையில் அந்த பதிவை மக்கள் சிந்திக்கப் போடிருந்தால் இந்த பதிவைப் போட்டு சிரிக்க வைத்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
எது எப்படியோ நல்ல விஷயம் சொல்ல உங்கள் விளம்பரம் வேண்டும் தானே!

றமேஸ்-Ramesh said...

பெரும கொள்க.... தங்கள் பதிவு பலபேரை சென்றடைகிறதல்லவா...
மன்னிப்புக்கேட்டு ஏதும் மடல் அனுப்பிஇருக்காங்களா ???

புலவன் புலிகேசி said...

@smart நண்பரே நான் விளம்பரத்திற்காக இப்பதிவை இட வில்லை. இயக்கங்கள் செய்யும் தவறை சுட்டிக் காட்டியிருக்கிறேன் அவ்வளவே!

புலவன் புலிகேசி said...

@றமேஸ்-Ramesh ரமேஷ் மன்னிப்பு மாதிரியெல்லாம் பதிலில்லை. ஆனால் தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி என்றவாறு வந்திருந்தது.

Anonymous said...

மன்னிகவும்… இவ்வாறான ஒரு பதிவை எழுத கூடாது என்றுதான் நினைத்தேன் .. ஆனால் உங்களின் பதிவுகளும் செயல்களுமே இதை எழுத வைத்தது,,, இனிமேலாவது எங்களை காயபடுத்தாதீர்கள்

http://ilangaiunmaithamilan.blogspot.com/2010/06/blog-post.html

புலவன் புலிகேசி said...

@unmaithamilan

உங்களுக்கான பதிலை உங்கள் பதிவில் சொல்லியிருக்கிறேன் நண்பரே.

Anonymous said...

மிக்க நன்றி நண்பர் புலவர் புலிகேசி அவர்களே .... என்னுடைய பதிவில் , உங்களுக்கான பதில் உள்ளது... தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.....

பிரபா said...

222..............!!!!!! followers. congrts.

அன்புடன் அருணா said...

இப்படி ரெண்டு மூணு இடத்தில் நானும் என் பதிவைப் பார்த்திருக்கிறேன்.அனுமதியும் கேட்டதில்லை லிங்கும் கிடையாது!:(

முனைவர்.இரா.குணசீலன் said...

இது போல நிறைய நடக்கிறது நண்பா..

சே.குமார் said...

இது போல நிறைய நடக்கிறது நண்பா..!

ஜெகதீஸ்வரன். said...

இவர்களை இன்ம் காண்பது மிகவும் முக்கியம். நமது கட்டுரை பதிவை திருத்தி தவறாக வெளியிடும் பாதிப்பும் இருக்கிறது
- ஜெகதீஸ்வரன்

http://sagotharan.wordpress.com/