கடவுளை மற..மனிதனை நினை..

28 June 2010

பெண் என்ற அடிமைச்சொல்

11:38:00 PM Posted by புலவன் புலிகேசி , , 20 comments

பெண்ணை
மலராக
காற்றாக
மேகமாக
உவகைப் படுத்தாதே!

அது அவளை
முள்ளாக
புயலாக
அடை மழையாக
மாற்றி விடும்!

பெண் என்ற அடிமைச் சொல்லையும்
ஆண் என்ற ஆதிக்கச் சொல்லையும்
விட்டொழி!

பெண் என்பவள் ஆளுமைக்குட்
பட்டவள் அல்ல இதை
முதலில் பெண்ணே நீ
புரிந்து கொள்!

உன் மனதில் பதியப்பட்ட
அடிமைத் தனங்களின்
ஆணி வேரைப் பிடுங்கி எறிந்து
விட்டு வா!

உலகம் உனக்கும் சொந்தம் தான்!

20 விவாதங்கள்:

கார்க்கி said...

நல்ல கவிதை.வாழ்த்துகள்

புலவன் புலிகேசி said...

@கார்க்கி

அதை நீங்கள் சொல்வது கொஞ்சம் வருத்தமளிக்கிறது..

கார்க்கி said...

:(((

டெலீட் செஞ்சிடுவா???

அழகிய அனானி said...

/////@கார்க்கி

அதை நீங்கள் சொல்வது கொஞ்சம் வருத்தமளிக்கிறது.////

சபாஷ்டா கண்ணா... வீரன்யா நீ!
அந்த பின்னூட்டம் இருக்கட்டும் டெலீட் செய்ய வேணாம்... அப்பத்தான் ஹிபோக்கிரசிக்கு நல்ல எச்சாம்பிள் கிடைக்கும்

கார்க்கி said...

அழகிய அனானி,

நன்றி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////பெண் என்ற அடிமைச் சொல்லையும்
ஆண் என்ற ஆதிக்கச் சொல்லையும்
விட்டொழி!
////////

நான் விரும்புவதும் இதுவே . அருமையான சிந்தனை . பகிர்வுக்கு நன்றி நண்பரே

புலவன் புலிகேசி said...

//அழகிய அனானி said... 4
/////@கார்க்கி

அதை நீங்கள் சொல்வது கொஞ்சம் வருத்தமளிக்கிறது.////

சபாஷ்டா கண்ணா... வீரன்யா நீ!
அந்த பின்னூட்டம் இருக்கட்டும் டெலீட் செய்ய வேணாம்... அப்பத்தான் ஹிபோக்கிரசிக்கு நல்ல எச்சாம்பிள் கிடைக்கும்
June 29, 2010 12:10 AM //

அதுக்காகத்தான் டெலீட் பண்ணாம விட்டாச்சு..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான கவிதை.
பகிர்வுக்கு நன்றி
புலவன் புலிகேசி

கலாநேசன் said...

//பெண் என்ற அடிமைச் சொல்லையும்
ஆண் என்ற ஆதிக்கச் சொல்லையும்
விட்டொழி!//

சொல்லில் எந்தப் பிழையும் இல்லை. அது just வேறுபடுத்திக் காட்டவே. பிரச்சனை செயலில் தான் உள்ளது. நல்பதிவு.

புன்னகை தேசம். said...

படமும் கவிதையும் நல்லா இருக்குதுங்க..

ஆனா இது அதை தகர்த்துவிட்டது..
---------------------------------------------------------------------------------------------
//அழகிய அனானி said... 4
/////@கார்க்கி

அதை நீங்கள் சொல்வது கொஞ்சம் வருத்தமளிக்கிறது.////

சபாஷ்டா கண்ணா... வீரன்யா நீ!
அந்த பின்னூட்டம் இருக்கட்டும் டெலீட் செய்ய வேணாம்... அப்பத்தான்
ஹிபோக்கிரசிக்கு நல்ல எச்சாம்பிள் கிடைக்கும்
June 29, 2010 12:10 AM //

அதுக்காகத்தான் டெலீட் பண்ணாம விட்டாச்சு...

------------------------------------------------------------------------------------------------------


மீண்டும் சொல்கிறேன் , மனிதாபிமானம் அற்றவர்கள் பெண்ணுக்காக போராட முடியாது..

மன்னிப்பு கேட்டவர்களை எத்தனை வருடம் அடிப்பீர்கள் சொல்லால்.?.

:((

அடுத்த முறை கவனம் கொள்வீர்கள் என நம்புகிறேன்

Anonymous said...

avan mannipputhaan kettaan. innum thirunthalai

மதார் said...

//உன் மனதில் பதியப்பட்ட
அடிமைத் தனங்களின்
ஆணி வேரைப் பிடுங்கி எரிந்து
விட்டு வா!//
இப்படி இருந்தாதான் திமிர் பிடிச்சவனு பெயர் வைக்குறது யாருங்க ?

Anonymous said...

//உவகைப் படுத்தா/

அது உவமை.உவகை அல்ல.

/ பிடுங்கி எரிந்து//

யார்? பொண்ண எரிய சொல்றீங்களா? அது "எறிந்து விட்டு வா"

//உலகம் உனக்கும் சொந்தம் தான்/

ஏதோ நீங்களா பார்த்து விட்டு கொடுத்திங்களே. கோடி நன்றிகள்.

நாராயணா. இந்த கொசுத்தொல்லை தாங்கலடா

Anonymous said...

அதுக்காகத்தான் டெலீட் பண்ணாம விட்டாச்சு

avar ungala ootraru. athu puriyaama irukkeengale. be careful.

Anbu said...

என்னங்க...சூர்யா என்ன ஆனார்...அரசியலுக்கு வருவாரா..இல்லை வரமாட்டாரா..சீக்கிரம் விசாரித்து சொல்லுங்க..அந்த விஷயத்தை அப்படியே விட்டுடீங்க...அந்த மாதிரி நிறைய காமெடியா எழுதுங்க..

முனைவர்.இரா.குணசீலன் said...

முதலில் பெண்ணே நீ
புரிந்து கொள்!//


சரியாச் சொன்னீங்க நண்பா.

வால்பையன் said...

பெண் என்பது அடையாளச்சொல் தான் தோழரே, அது அடிமை சின்னமல்ல, பெண்ணியம் என்பது பெண்னை முன்னிலை படுத்துவது அல்ல, சமமாக நிற்பது!

ஆணாதிக்கம் பார்பனீயத்தில் சேரும்!

புழவன் புளிகேசி said...

தமிளு எலுதிநாவே இத்தென தப்பு வறுதே, அத செறி ’பன்னி’ட்டு வா புழவரே

தமிழ் வெங்கட் said...

//பெண்ணை
மலராக
காற்றாக
மேகமாக
உவகைப் படுத்தாதே!//

இதெல்லாம் கவிஞன் கற்பனைதானே..
பெண்ணுக்கு ஆணோ....ஆணுக்கு பெண்ணோ அடிமையில்லை ...எல்லோரும் சரி சமம்தானே..?

சே.குமார் said...

அருமையான சிந்தனை.