கடவுளை மற..மனிதனை நினை..

26 June 2010

செம்மொழி மாநாடும், தலைவர் குடும்ப ஆங்கிலமும்


எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்பதற்கான நோக்கம் மட்டுமே இந்த மாநாட்டின் அடித்தளமாக இருந்திருந்தால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவில் இந்த மாநாடு நடந்திருக்கும். ஆனால் ஒரு தனி மனிதனின் சுய விருப்பத்திற்காக நடக்கும் இதை எப்படி செம்மொழியான நம் தமிழ் மொழியின் மாநாடு என சொல்ல முடியும்?

இந்த மாநாடு ஒரு கேளிக்கைக் கூத்துப் போன்றதே. இதற்கும் ஐஃபா-வுக்கும் ஒன்றும் பெரிய வித்யாசமில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும், நிறுவனங்களும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும். சட்டசபை, அரசு அலுவலகங்களில் "தமிழ் வாழ்க" என்ற பலகை, தமிழில் திரைப் படங்களுக்குப் பெயர் வைத்தால் வரி விலக்கு எனக் கூறும் இந்தத் தலைவனின் குடும்பத்தாரிடம் தமிழின் நிலை என்ன?

சில சிறிய சான்றுகள் மட்டுமேத் தருகிறேன்.

*** இவரது பேரன்களால் துவக்கப் பட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர் தமிழில் இல்லை.

"க்ளவுட் நைன் மூவீஸ்(Cloud Nine Movies)"
"ரெட் ஜியாந்த் மூவீஸ்(Red Giant Movies)" மற்றும்
"சன் பிக்சர்ஸ்(Sun Pictures)".

ஏன் பேரப் பிள்ளைகளிடம் சொல்லவில்லையா தமிழில் பெயர் வையுங்கள் என்று. பேரப் பிள்ளைகள் எடுக்கும் படங்களை பாராட்டும் இவர் ஏன் தமிழில் பெயர் வைக்க சொல்லவில்லை?

**** இவற்றை விட கொடுமையான கூத்து ஒன்று சமீபத்தில் நடந்த விஜய் விருதுகள் வழங்கும் விழாவில் அரங்கேறியது. இவரின் மகள் கவிஞர் கனிமொழி மந்திரி அவர்கள் செம்மொழியாம் தமிழ்மொழி மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து பேசுகையில் ஆங்கிலம் கலக்காமல் பேசவில்லை.

"நிறைய எதிர் பார்ப்புகளோரடும், படபடப்போடும் தான் அந்த ப்ராஜக்ட்டை(Project) ஆரம்பிச்சோம்."

"It could bring everything inside of it inclusive"

"It was great pleasure watching Rahman and Goutham Menon"


மேற் சொன்ன வரிகள் வேறொன்றும் இல்லை. தமிழ்மொழி மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து, தமிழ்த் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கனிமொழி பேசியவை. மாநாட்டுக் காட்சிகளைப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஐஃபா-வை போலவே புறக்கணித்திருக்கிறேன். ஒரு வேலைப் பார்த்தால் இன்னும் எத்தனைக் கூத்துக்கள் வெளிப் பட்டிருக்குமோ? இன்னும் எவ்வளவு இருக்கிறதோ? தெரிஞ்சா சொல்லுங்க.

22 விவாதங்கள்:

ஜோதிஜி said...

மிக பக்கத்தில் வாழ்ந்து கொண்டுருக்கும் நாங்கள் படக்கூடிய அவஸ்த்தைகள் தனியாக எழுதலாம். அதனால் என்ன? மொழி என்பது மக்கள் உணரக்கூடிய என்று என்பதில் இருந்து குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய பொருட்காட்சி போல் ஆனது மிகப் பெரிய சிறப்பு தானே,

என்னவொன்று கோவையில் கொட்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடிகளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் இதெல்லாம் தெருக்கோடிக்கு வந்து கொண்டுருக்கும் அடித்தட்டு மக்களுக்கு புரியாத ஒன்று.

புலவன் புலிகேசி said...

@ஜோதிஜி தமிழ் என்று வேசம் போடும் அவர்களுக்கு எங்கேப் புரியப் போகிறது தமிழர் உணர்வும், மனித உணர்வும்? யார் செத்தாலும் என் பரம்பரைப் பிழைக்கும் என்பதுதான் நோக்கம்.

ஷர்புதீன் said...

i will post one article against your article...wait :)

♥ ℛŐℳΣŐ ♥ said...

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் சரி .. அதற்காக எல்லா இடத்திலும் தமிழ் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தால் விளங்கிடும்.. உங்க விஷயத்துக்கே வரேன், அந்த நிகழ்ச்சியில் விருது வாங்கியதில் எத்தனை பேர் தமிழ்நாட்டை சேராதவர்கள் என்று தெரியுமா ?? தமிழ் தெரியாதவர்கள் எத்தனை பேரு இருப்பார்கள் அவர்களுக்கு புரியும் படியுமாக கூட அவர் பேசி இருக்கலாம் அல்லவா !!! உங்களிடம் இருக்கும் திறமை வேறு திசையில் பயணித்து கொண்டு இருக்கிறது, டரியல் பக்கங்கள் காணோம் !!! சிறுகதை காணோம் !! கவிதைகள் காணோம்!!! மற்றவர்கள் செய்யும் தவறுகள் சுட்டி காட்டுவதால் ஒன்று நடந்து விட போவதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் புலவரே ..

வவ்வால் said...

Intha maanaadu mela perusa mathippu illai.

Vijay awardsla gopinath thamizhla thaan thoguthu vazhanginar,
vanthavangalukku puriyaamala pochu.kelviyum thamizhil thaan kettaar,appuram yen englishla pesanum?

வவ்வால் said...

Intha maanaadu mela perusa mathippu illai.

Vijay awardsla gopinath thamizhla thaan thoguthu vazhanginar,
vanthavangalukku puriyaamala pochu.kelviyum thamizhil thaan kettaar,appuram yen englishla pesanum?

புலவன் புலிகேசி said...

@♥ ℛŐℳΣŐ ♥ வவ்வால் கேட்ட அதே கேள்விதான் ரோமியோ...நிகழ்ச்சியில் அனைவரும் பேசிய தமிழ் வார்த்தைகள் புரியும் போது இது புரியாதா? தமிழில் நடிக்கும் பல மொழிக் கலைஞர்களுக்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் தமிழ்ப் புரியும் முதல் படத்தில் வேண்டுமானால் புரியாமலிருக்கலாம். அப்பறம் டரியலில் விவாதிக்க வேண்டிய விடயங்களான இவற்றைத்தான் இப்போது பதிவாக இட்டு வருகிறேன். மற்றபடி கதைகளும், கவிதைகளும் நிறைய எழுதி வைத்திருக்கிறென். அவ்வப்போது வரும். இப்போது இந்த சமூக அவலங்களுக்கு பயன்படாத எழுத்து கதை, கவிதைகளுக்கு மட்டும் பயன்படுவதில் உடன் பாடில்லை எனக்கு. நன்றி ரோமியோ.

Rajamanickam senthil said...

Correct Mvel

velumani1 said...

good ...well said.

velumani1 said...

எந்த முயற்சியும் இல்லாமல், சொந்த முயற்சியும் இல்லாமல், என்று வாழும் தமிழா.............நீ உருப்படும் நாள் எந்நாளோ??/?/

கஷ்டம்......

க.பாலாசி said...

//இவரின் மகள் கவிஞர் கனிமொழி மந்திரி அவர்கள்//

எந்த மொழியில இவங்க கவிஞர் நண்பா... இதெல்லாம் ஒரு கவிஞர்...அதுக்கு ஒரு மந்திரி பதவி.. கேடுகெட்ட அரசியலுங்க...

வானம்பாடிகள் said...

ரெட் ஜயண்ட் விஷயங்கள் சரி. ஆங்கிலம் கலக்காமல்னு அவங்கள மட்டும் சொல்றது சரியில்லை. பெங்காலி ஹிந்தி பேசினாலும் பெங்காலியிலதான் பதில் சொல்லுவான். நாம தலைமுறையா இப்படித்தான் பழகிட்டோம். என்ன செய்ய?

புலவன் புலிகேசி said...

@வானம்பாடிகள் ஐயா நான் யாரையும் எப்பவும் தமிழ்லதான் பேசனும்னு சொல்லலை. ஒரு விழா மேடையில் "செம்மொழி மாநாடு குறித்து ஒரிரு வார்த்தைகள் பேசும் போது கூட அந்த கவிஞரால்(?) ஆங்கிலம் கலக்காமல் பேச முடியாதா?"

ஈரோடு கதிர் said...

|| இவர் ஏன் தமிழில் பெயர் வைக்க சொல்லவில்லை?||

நியாயமான கேள்வி

அஹோரி said...

ஊருக்கு தான் உபதேசம். அவர் குடும்பங்களுக்கு இல்லை.

ஜானகிராமன் said...

கவலை படாதீங்க தலைவா. நீங்க சொல்லிட்டீங்கல்ல... கலைஞர் அவங்க பேரன்களோட சினிமா கம்பெனிகளுக்கு தமிழில் பேர் வைக்கச்சொல்லி கடிதம் எழுத ஆரம்பிச்சிடுவார். இன்னுமா அவங்கள நம்பிட்டிருக்கோம்...

ஜானகிராமன் said...
This comment has been removed by the author.
ஜானகிராமன் said...
This comment has been removed by the author.
Jey said...

இவங்க குடும்பதோட கொடி மாநாடு நடத்தி கூடி கும்மி அடிக்கிறதுக்கு எங்க வரிப்பணத்தை ஏன்யா செலவழிக்கிறாங்க?. இன்னிக்கு தேதிக்கு இது தேவையா?. தமிழுக்கும், தமிழனுக்கும் எதிராக செயல்படுரவங்கள பத்தி ரொம்ப கவலைப் படத்தேவை இல்லை அவர்களை எதிர்கொள்வது எளிது, தமிழ் தமிழ்னு சொல்லிகிட்டு எல்லோரயும் இளிச்சவயனாகுரவங்கள அந்த அந்த நேரத்தில் கண்டிக்க வேண்டும்.
இந்த பதிவு சரியான நேரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிரது. நன்றி சார்.( எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும்)

moulefrite said...

என்ன செய்வது சார்,இந்த சனியன்களை தூக்கி ஆட்சி பிடத்தில் வைத்துவிட்டார்கள்,,பெட்ரோல் விலை எகிறுகிறது,,கெஸ் விலை விண்ணை முட்டுகிறது,ஆனால் இந்த குள்ளநரிகள்
மாநாடு என்கிற பெயரில் மக்களின் வரிபணத்தை விரயம் செய்து கொண்டிருக்கிறது,,தமிழ் என்கிற ஒற்றைவார்த்தையில் மக்களை
மயக்கி தமிழ்நாட்டை கொள்ளை அடித்துகொண்டிருக்கும் இந்த
கொள்ளைகூட்டத்தை கவருக்கும்
சாராயத்துக்கும் ஆட்சியில் ஏற்றும்
ஆட்டுகூட்டத்துக்கு என்ன சொல்லி
புரியவைப்பது,,

இன்றைய கவிதை said...

என் வீட்டருகில் ஒரு பொதுக்கூட்டத்திற்க்கு தலைவராகப்பட்டவர் வருகிறார் என்றும் குஷ்புவும் தளபதியும் வருகிறார் எனவும் பத்து நாளுக்கு மேல் சுமார் ஒரு 5 கிலோமீட்டருக்கு வாகனப்போக்குவரத்தை தடை செய்திருந்தார்கள், பள்ளிக்கு செல்லும் சிறார்களிலிருந்து கோவிலுக்கு செல்லும் வயோதிகர்கள், காய் கனி வாங்க செல்லும் பெண்மனிகள் என பாரபட்சமில்லாமல் எல்லாருக்கும் கஷ்டங்களை கொடுத்தார்கள் , கடற்கரை சாலை முழுதும் கொடிகளும் விளக்குகளும் ஆர்பரித்தன ஆனாலும் யாராலும் கேள்வி கூட எழுப்ப முடியவில்லை வெறும் ஒரு ஊர் கோடி கூட்டத்திற்க்கு இவ்வளவு செய்தவர்கள் செம்மொழி உலக மாநாடு என்றால் கோவை மக்களின் நிலமை ரொம்பவே மோசமாகத்தான் இருக்கும் , எனினும் இது எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி (எதிர்க்க முடியாத, இயலாத எதிர்க்கட்சி என கொள்ளலாம்) மக்களும் வேடிக்கைத்தான் பார்க்க இயலும். கடவுள் நம்பிக்கை இருந்தால் வேண்டிக்கொள்ளுங்கள் இல்லாவிடில் இயற்கை இந்த சூழலை அடுத்த தேர்தலில் மாற்றும் என் நம்புவோம். நம்பிக்கைத்தானே வாழ்க்கை...

நன்றி புலவன் புலிகேசி அவர்களே

ஜேகே

புலவன் புலிகேசி said...

@இன்றைய கவிதை இயற்கையால் ஆட்சியை மாற்ற முடியாது. மக்கள் முதலில் மாற வேண்டும். அபோதுதான் அது நடக்கும்.