கடவுளை மற..மனிதனை நினை..

24 June 2010

நடிகரே சூர்யா-நீங்க அரசியலுக்கு வரலாம்

11:25:00 PM Posted by புலவன் புலிகேசி , , , 41 comments

முன்னர் ஒரு முறை இதே சூர்யாவுக்கு பரிந்து பேசியவர்களே இதுக்கும் வந்து பதில சொல்லுங்க. அட இவுரு உதவி செய்யறேன், படிக்க வைகிறேன் அப்புடிங்கறதெல்லம் ஒரு பெரிய அரசியல் தந்திரமப்பா. இவருக்கு எதிர்காலத்தில் அரசியலில் ஒரு இடம் உண்டு. "யாரு எக்கேடு கெட்டா எனக்கென்ன என் பொழப்பு நடக்கனும்" - இதையே தனது கொள்கையாக வகுத்து வைத்திருப்பவர்தான் இந்த சூர்யா.

"மிர்ரர்"-னு ஒரு பெங்களூரு பத்திரிகையில இவுரு ஒரு பேட்டிக் குடுத்துருக்காரு.

"ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே"

அப்ப இலங்கைப் பிரச்சினையும் செத்துப் போன ஒன்றா? ஆமாம் ராவணன் படத்தை எதுக்காகத் தடை செஞ்சிருக்கனும்? வேணும்னா மணியோட முதலாளித்துவக் கூட்டனிப் புத்தி அங்கத் தெரியுது. அதுக்காகத் தடை செஞ்சிருக்கலாம்.


"ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன்.
நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சனை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?"

ஓ அப்புடிங்களா! அப்புடி அந்த விவேக் ஓபராய் அங்குள்ளத் தமிழர்களுக்கு உதவச் சென்றவராக இருந்தால் ஐ.பா விழாவில்தான் செல்ல வேண்டுமா? இல்லையின்னா அங்க உள்ள உட மாட்டாங்களா? நல்லா இருக்குதய்யா உங்க கூத்து. உதவி செய்யும் மனமுள்ள ஒருவன் நிச்சயம் இது போன்று செய்திருக்க மாட்டான். விழாவைப் புறக்கணித்து விட்டு பின்னரோ அல்லது முன்னரோ சென்றிருப்பான்.

அந்த விவேக் ஓபராயும் உங்களைப் போலவே மக்களை ஏமாற்றும் ராஜ தந்திரம் கற்றவராக இருக்கிறார். இந்தப் பேட்டியில் கூட கவனித்தீர்களேயானால் ஐ.பா விழா எதிர்ப்பை அசிங்கப் படுத்தி விட்டு இறுதியில் நல்லவர் போல் "அந்தப் பள்ளி சம்பந்தமாக எல்லா உதவிகளும் செய்வேன்" என ஒரு ராஜ தந்திர வார்த்தை.

இந்த வார்த்தைகளை நம்பும் மக்கள் நிறைய இங்கு இருப்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அப்படி நம்பித்தானே அரசியல் கட்சிகள் அட்டூழியம் செய்தாலும் ஆட்சி அமைக்கிறார்கள். இந்தத் தந்திரம் தெரிந்த நீங்கள் ஏன் உங்கள் அண்ணன் சீமானுடன் சேர்ந்து அரசியலில் குதிக்கக் கூடாது?

இந்த சீமான் இருக்கிறாரே இவர் உண்மையில் தமிழர் உணர்வாளன் தானா? என்றால் நான் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன். இந்த இலங்கைப் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்த முயல்பவர் போல் தெரிகிறார். உண்மையில் இவர் கொள்கை வீரனாக இருந்திருந்தால் இந்த ரத்த சரித்திரம் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பார்.

ஆனால் அதை விடுத்து "சூர்யா என் தம்பி. அவரது படத்தை மட்டும் மன்னிக்கலாம். அவர் ஒரு தமிழ் உணர்வாளன்" அதனால் அவரது படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்று சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு கொள்கை வீரன் இப்படி செய்ய மாட்டான். இது எப்படி இருக்கிறது என்றால் ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்காக ப்ருத்வியை மன்னிக்கும் விக்ரம் போல் முட்டாள் தனமாய் இருக்கிறது.

இப்படி இப்போது திமிர்த் தணமாகப் பேசும் இந்த சூர்யா ஐ.பா விழா அழைப்பின் போதே இதைப் பேசியிருக்க வேண்டியதுதானே. அப்போதுப் பேசியிருந்தால் இன்று காணாமற் போயிருப்பார். இப்போ மக்கள் அது பற்றி அதிக அக்கரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற அரசியல்வாதி எண்ணம். மக்களும் அப்படித்தான், இவரை போன்றவர்களின் ஏமாற்று தொனிளில் ஏமாந்து கொண்டே இருப்பர்.

இவர்களும் அவர்கள் விழித்துக் கொள்ளாத படி நல்லவன் போலவே நிஜ வாழ்விலும் நடித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு ஜால்ரா அடிக்கவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த ஜால்ரா கோஷ்டிகளும் மக்களை மடையர்களாக்கும் வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த தமிழர் உணர்வாளன் எனக் கூறிக் கொண்டு அரசியல் நடத்த முயலும் முட்டாள் மாக்கள் இந்தப் படத்தை எதிர்ப்பின்றி வெளியிட்டாலும் அதைப் பார்க்க மாட்டேன் என்ற உறுதி மொழியை நாம் எடுத்துக் கொண்டு நம் எதிர்ப்பைப் பதிவு செய்வோம். என் உறுதி மொழியுடன் துவக்குகிறேன் "நான் இப்படத்தை எதிர்க்கிறேன்".

41 விவாதங்கள்:

kumar said...

unmai thaan.....

அழகிய அனானி said...

ஏதோ நாலு மொக்கையை போட்டமா.. முதுகு சொறிஞ்சோமா, புரியாத கவிதைக்குக ஆத்தாடி இது ஆட்டம்பாம் ஹம்மாடி இது ஹைடிரஜன்பாம்முனு ஜால்ரா தட்னோமா ஓட்ட உசார் பண்ணோமா பரிந்துரையில ஏறினோமா பிரபல பதிவர் ஆனோமான்னு இல்லாம என்ன இது சமூக அக்கர?

அப்பவே நான் சொன்னேன் நீங்க கேக்கல வெண்ணிற இரவுகளை கட்டம் கட்டியது போலவே இனி உங்களுக்கும் கட்டம்தான்...எதிரிகள் வட்டம்தான்...

Anonymous said...

விவேக் ஓபராய் இலங்கை சென்று யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவியுள்ளார். அது மாதிரி செய்ய நினைக்கும் சூர்யாவும் பாராட்டபட வேண்டியவர்.
http://news.bbc.co.uk/2/hi/world/south_asia/10308540.stm

ஹேமா said...

புலவரே பாதிக்கப்பட்டாத்தான் வலி தெரியும்.எல்லாமே வியாபாரம்.
பணம் பெயர் புகழ்.
போகட்டும் விடுங்க.

சிறுகுடி ராம் said...
This comment has been removed by the author.
மீன்துள்ளியான் said...

ingae niraya peruku EEZHATHILA enna nadakuthunae theriyathu.. adhai patri therinchakavum viruppam illai. aana pesa mattum vanthuruvaanunga,,

yaaruku theriyum vivek oberoi mulama kuda srilanka govt suriyavai kavuthurukkalam . adhu theriyama intha aalum ularukindrana ennavo..

புலவன் புலிகேசி said...

@சிறுகுடி ராமு

நண்பரே சிறுகுடி ராமு நீங்களும் அரசியல் தந்திரத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் பொது மக்களில் ஒருவர் என்பது நன்கு தெரிகிறது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லாமே வியாபாரம்...

நமக்கு எதுக்கு இவனுகளோட பிரச்னை...

ப்ரீயா விடுங்க வாத்தியாரே.

tamil4true said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சூர்யாவின் இந்த பேட்டியின் மூலம், இந்த பிரச்சனையை பற்றிய அவரின் அறைகுறை அறிவு விளங்குகிற்து. நானும் ஒரு மூட்டாள் நடிகன் தான் என்பதை நீருபிக்கிறார்.

IIFA விழாவின் பொது தமிழகத்தில் நடைபெற்ற எதிர்ப்பை, இது LTTE லாபியின் பொய் குற்றச்சாட்டு எனவும் இலங்கை தமிழர்களின் இந்த கோரமானா நிலைக்குக்காரண்ம் LTTE தான் என்பதை போன்ற கருத்தை வடநாட்டு ஊடகங்களில் பரப்பினார். இவ்வாறு இலங்கையின் கைப்பாவை விவேக் ஒபராய் நடந்ததற்கு ஒரு பின்னனியும் உண்டு. தனது முன்னால் காதலியின் குடும்பத்தில் (ஐய்ஸ்வர்யா ராய்)) மேல் உள்ள கோபத்தால், அவர்கள் போகாததால் விழாவிற்கு எற்ப்பட்ட தோல்வியை மறைக்க, சிங்களவெறியனின் கையாலாக தமிழற்களின் போராட்டத்தை கொச்சைபடுத்தி வடநாட்டு ஊடகங்களில் பேட்டியளித்தார். இது தெரியாத சூர்யா மடத்தனமாக பேசுகிறார்.சிங்களவெறியனின் தமிழின படுகொலையை மறைக்க துணைபோன விவேக் ஒபராய் நடித்த ரத்த சரித்திரத்தை,இன உண்ர்வுள்ள ஒவ்வொறு தமிழனும் எதிர்ப்போம்.

http://www.youtube.com/watch?v=uCP0MjUAgwA

சிறுகுடி ராம் said...

நானும் இந்த அரசியல் தந்திரத்தால் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான் நண்பரே... ஆனால் இத்தனை நாளும் நானும் தமிழீழ மக்களுக்காக அனைவரிடத்திலும் (நண்பர்களிடத்தில்தான்) சண்டைகளும் விவாதங்களும் செய்துகொண்டுதானிருந்தேன்.

ஆனால் இப்போது இங்கு நாம் என்னதான் பேசினாலும், இங்குள்ள கீழ்த்தரமான அரசியல்வாதிகளிடம் எடுபடாது... தமிழீழம் என்று யார் பேசினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை. எந்த அரசாங்கம் வந்தாலும் இப்படித்தான் இருக்கப்போகிறது. ராஜபக்ஷே என்ற ஓநாயும் இங்கு இந்தியாவிற்கு வருகை புரிந்து அதற்கு தேவையானவற்றை மட்டும் வாங்கிக்கொண்டு போய்விடும்.. அங்குள்ள நம் மக்களைப்பற்றி (சும்மா) வாய் கிழிய பேசிக்கொண்டிருக்கும் ஒருவரினாலும் ஏதும் செய்ய இயலாது...அல்லது செய்ய மனம் வராது...
ஒன்று இங்குள்ள நம் அரசியல்வாதிகளின் பணத்தாசையும், பதவியாசையும் ஒழியவேண்டும்! அல்லது அங்கு சிங்கள (வெறிபிடித்த) கூட்டமே அழியவேண்டும்! அன்றுதான் நம் தமிழீளர்களுக்கு விடுதலை.

அதனால் முடிந்தவரையில், இப்போது அங்கு (உயிரோடு) இருக்கும் நம்மின மக்களையாவது, ஓரளவிற்கு நல்ல நிலைமையில் (கொஞ்சம் மகிழ்ச்சியாக) இருக்கச்செய்ய இயலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை, முயற்ச்சிகளை நான் வரவேற்கிறேன் என்கின்ற முறையில்தான் எனது கருத்தினை பதிவு செய்தேன். நன்றி.

சசிகுமார் said...

உண்மை நண்பரே தொடருங்கள்

ஜில்தண்ணி said...

என்னா எழவோ அரசியலோ
விடுங்க பாஸ்

புலவன் புலிகேசி said...

@சிறுகுடி ராமு

நண்பரே அப்படியெல்லாம் விட்டு விடாதீர்கள். உங்கள் குரலை கொடுத்துக் கொண்டே இருங்கள். இல்லையென்றால் நீங்கள் ஆதரிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மக்கள் கண்களை மறைத்து மறக்கடித்து மடையர்களாக்கி விடும். விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவோம். அரசியல்வாதிகளின் கொட்டம் அப்போது அடங்கும்.

புலவன் புலிகேசி said...

//வெறும்பய said... 8
எல்லாமே வியாபாரம்...

நமக்கு எதுக்கு இவனுகளோட பிரச்னை...

ப்ரீயா விடுங்க வாத்தியாரே.
June 25, 2010 8:56 AM // அப்புடி விட்டு விட்டு தான் மக்களைக் கெடுத்து வச்சிருக்கோம். நடக்கறது மொதல்ல மக்களுக்குப் புரியனும்.

வெண்ணிற இரவுகள்....! said...

உண்மை நண்பா .......சூர்யா போன்ற பச்சோந்திகள் .....எவ்வளவு நன்றாய் நடித்தால்
என்ன ......................????? உள்ளே ஆயிரம் அழுக்கை வைத்து கொண்டு வெளியே
நல்லவன் போல் நடிப்பது ...................!!!!!!

சிறுகுடி ராம் said...

நண்பரே... நன்றி..! எனக்கு ஒரு சந்தேகம்.. இப்போது யாருக்கு என்ன தெரியாமல் இருக்கிறது? எல்லாருக்கும் இந்த அரசியல்வாதிகளைப்பற்றியும் தெரியும், நடிகர்களைப்பற்றியும் தெரியும் முக்கியமாக அந்த ராஜபக்ஷேவைப்பற்றியும் தெரியும். இதில் என்ன விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றுதான் எனது கேள்வி..!!

புலவன் புலிகேசி said...

@சிறுகுடி ராமு நண்பரே எல்லோருக்கும் தெரியும். ஆனால் எந்த அளவுக்கு என்பதுதான் முக்கியம். அதோடில்லாமல் தெரிந்திருந்தாலும் அவற்றை மறக்கடிக்கும் வேலைகளை இது போன்றவர்கள் செய்கிறார்கள். அது பற்றி மக்கள் அறிவதில்லை. அந்த விழிப்புணர்வைத்தான் ஏற்படுத்த வேண்டும் என சொல்கிறேன்.

சிறுகுடி ராம் said...

அப்புறம் இன்னொன்னு..

என்னைய இப்போ ஓட்டு போடச்சொன்னா, யாருக்கு ஓட்டு போடுறதுன்னே எனக்கு தெரியல... அந்த அளவுக்கு குழம்பிபோயிருக்கேன்.... படிச்ச நம்மலே இப்படி இருக்குறப்ப, நம்மூர்ல இருக்குற படிக்காதவங்க யாரைன்னு தேர்ந்தெடுப்பாங்க..! எவனுமே நல்லவன் இல்லன்னு அப்பட்டமா தெரியுது..... இல்ல நல்லவனா இருந்தாலும் இங்க வந்த உடனே அவய்ங்கள மாதிரியே ஆயிர்றாங்க...
ஆனா எப்பவுமே நம்ம சும்மா சும்மா மக்களையே கொற சொல்லிக்கிட்டு இருக்கோம்.. இதுக்கு என்ன தீர்வு நண்பா..? உங்க கருத்து ப்ளீஸ் ...

Karthick Chidambaram said...

இலங்கை - ஈழ விவகாரத்தில் என்ன செய்வது என்பதில் இப்போது பெரிய குழப்பம் நிகழ்கிறது.
நடிகர்கள் பலரும் இந்த விவகாரம் பற்றி அறிந்துவைதிருபரா என்று தெரியவில்லை .

Karthick Chidambaram said...

இலங்கை - ஈழ விவகாரத்தில் என்ன செய்வது என்பதில் இப்போது பெரிய குழப்பம் நிகழ்கிறது.
நடிகர்கள் பலரும் இந்த விவகாரம் பற்றி அறிந்துவைதிருபரா என்று தெரியவில்லை .

Selva Kumar said...

hello, yellarum vanchachaa, Vivek oberoy Amma Tamilnattukaaranga. Tsunamiyala bathikkapatta oru village thatheduthaaru. Appa intha "Naam Tamilar Iyakkam" yenga pochu.

illa theriyama thaan kekkuren, IIFA vilavukku mukkiya pangu vahichathe Airtel niruvanam thaan. Enga thairiyamiruntha antha office mooda sollunga pappom.

Anga ponaa kettavan, Pogathavan nallavanaa.

Rajabakshe inga vanthappa, Enga pochu unga Tamil Patru.

Athellam vida Parvathy Ammavai thiruppi anupichappa enga pochu unga "Naam Tamilar Iyakkam".

Ooruku ilaichvan Pillaiyar Koil aandi mathiri, Koothadikalai vanchaa Periyaalairulamnu ninaikkatheenga.

சிறுகுடி ராம் said...

சரியா சொன்னீங்க செல்வகுமார்... உங்களோட பின்னூட்டத்த தமிழ்ல எழுதுனீங்கன்னா இன்னும் சௌகரியமா இருக்கும். நன்றி..

இதைப்பயன்படுத்தி பாருங்க...
http://www.google.co.in/transliterate/indic/Tamil

Anbu said...

நீங்கள் எழுதி இருப்பதே படிச்சா சிரிப்பு சிரிப்பா வருதுண்ணே...

தொடர்ந்து இந்த மாதிரி காமெடிபதிவு நிறைய எழுதுங்க..

இனியாள் said...

யாரையாவது குறை சொல்லி கொண்டே எழுதி கொண்டிருப்பது ஆரோக்யமான எழுத்து அல்ல, பிரபலமாக வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட எழுத்துக்கள் யாவும் காணமல் பொய் கொண்டிருக்கின்றன. இதை போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே.

vels-erode said...

சில பேருக்கு ஏதாவது நொள்ளை-நொட்டை கண்டுபுடிச்சி எழுதலன்னா அந்தன்னைக்கு தூக்கம் வராது போல.....!
நல்லா வருது வாயில.....போயி வேற ஏதாவ்து நல்ல வேலையைப் பாருங்கப்பா!
தப்பு கண்டு புடிக்கறதே தலையாய கடமையா அலையாதீங்க!

Rajamanickam senthil said...

Hello Mvel,
I read that, what happen to you??? pls stop I want blood vomit!

Anonymous said...

nanbare enakkum ippadithaan indha eenapiravigalai ninaithu kovam kovama varum bp earum tension varum.ivargali thirutha mudiyadhu.nama pulabi enna use.nalaike ellam onna nippanga .thats why vrs il naan ippo foreighn il irukken .

புலவன் புலிகேசி said...

//சிறுகுடி ராமு said... 18
அப்புறம் இன்னொன்னு..

என்னைய இப்போ ஓட்டு போடச்சொன்னா, யாருக்கு ஓட்டு போடுறதுன்னே எனக்கு தெரியல... அந்த அளவுக்கு குழம்பிபோயிருக்கேன்.... படிச்ச நம்மலே இப்படி இருக்குறப்ப, நம்மூர்ல இருக்குற படிக்காதவங்க யாரைன்னு தேர்ந்தெடுப்பாங்க..! எவனுமே நல்லவன் இல்லன்னு அப்பட்டமா தெரியுது..... இல்ல நல்லவனா இருந்தாலும் இங்க வந்த உடனே அவய்ங்கள மாதிரியே ஆயிர்றாங்க...
ஆனா எப்பவுமே நம்ம சும்மா சும்மா மக்களையே கொற சொல்லிக்கிட்டு இருக்கோம்.. இதுக்கு என்ன தீர்வு நண்பா..? உங்க கருத்து ப்ளீஸ் ...
June 25, 2010 10:11 AM //

குழப்பமே வேணாம் ஓட்டுப் போட விருப்பமில்லைன்னு எழுதிக் குடுத்துருங்க. எல்லாக் கட்சிகளின் அங்கீகாரங்களும் ரத்தாயிரும்.

புலவன் புலிகேசி said...

//Selva Kumar said... 21
hello, yellarum vanchachaa, Vivek oberoy Amma Tamilnattukaaranga. Tsunamiyala bathikkapatta oru village thatheduthaaru. Appa intha "Naam Tamilar Iyakkam" yenga pochu.

illa theriyama thaan kekkuren, IIFA vilavukku mukkiya pangu vahichathe Airtel niruvanam thaan. Enga thairiyamiruntha antha office mooda sollunga pappom.

Anga ponaa kettavan, Pogathavan nallavanaa.

Rajabakshe inga vanthappa, Enga pochu unga Tamil Patru.

Athellam vida Parvathy Ammavai thiruppi anupichappa enga pochu unga "Naam Tamilar Iyakkam".

Ooruku ilaichvan Pillaiyar Koil aandi mathiri, Koothadikalai vanchaa Periyaalairulamnu ninaikkatheenga.//

நான் தான் இந்த நாம் தமிழர் இயக்கத்தையே எதிர்க்கிறேனே...நமக்கு போனவன் நல்லவனா? போகாதவன் கெட்டவனாங்கறது முக்கியமில்ல. அந்த ஐ.பா விழா ஒரு வேலை வெற்றியடைந்திருந்தால் மக்களின் போராட்ட குணங்கள் அழிக்கப் பட்டிருக்கும், ராஜபக்ஷ்சேவின் அரசியல் தந்திரங்களும் ஜெயித்திருக்கும். நம்ம ஊர் அரசியல் வியாதிகளைப் போல் அவனும் ஒரு ஏமாற்றுக் காரன் தானே? எங்கள மாதிரி ஆளுங்களோட ஆசையெல்லாம் அரசியல் பின்னனிகள் மக்களுக்குப் புரியனுங்கறதுதான். அதைப் புரியாமல் மாக்களாய் மக்கள் மடிவதில், ஏமாற்றப் படுவதில் எனக்கு உடன் பாடில்லை. தூற்றுவோர் தூற்றட்டும். அது பற்றி எனக்கு கவலையுமில்லை.

புலவன் புலிகேசி said...

//சிறுகுடி ராமு said... 22
சரியா சொன்னீங்க செல்வகுமார்... உங்களோட பின்னூட்டத்த தமிழ்ல எழுதுனீங்கன்னா இன்னும் சௌகரியமா இருக்கும். நன்றி..

இதைப்பயன்படுத்தி பாருங்க...
http://www.google.co.in/transliterate/indic/Tamil// சிறுகுடி ராமு, அவர் சொன்னது மேம்போக்காகப் பார்த்தால் உங்களுக்கு சரி என்றுதான் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள் உண்மை புரியும்.,

புலவன் புலிகேசி said...

//Anbu said... 23
நீங்கள் எழுதி இருப்பதே படிச்சா சிரிப்பு சிரிப்பா வருதுண்ணே...

தொடர்ந்து இந்த மாதிரி காமெடிபதிவு நிறைய எழுதுங்க.// உங்கள மாதிரி ஆளுங்க மாறனும்னுதான் நினைக்கிறேன். நிச்சயம் நடக்கும். நன்றி.

புலவன் புலிகேசி said...

//இனியாள் said... 24
யாரையாவது குறை சொல்லி கொண்டே எழுதி கொண்டிருப்பது ஆரோக்யமான எழுத்து அல்ல, பிரபலமாக வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட எழுத்துக்கள் யாவும் காணமல் பொய் கொண்டிருக்கின்றன. இதை போன்ற பதிவுகளை தவிர்க்கலாமே// பிரபலமடைவது மட்டும் நோக்கமாக இருந்திருந்தால் நிச்சயம் இது போன்ற பதிவுகள் எழுதியிருக்க மாட்டேன். வெறும் கவிதையோ, கதையோ எப்போதும் போல் எழுதினால் போதும் நான் பிரபலமடைய. உங்களைப் போன்ற நடுத்த்ர வர்க்கத்தினர்தான் எது நடந்தா எனக்கென்ன? இதப் பத்தி ஏன் எழுதுற? அப்புடின்னுலாம் இருக்கறது. நடுத்தட்டு மக்களை வைத்துதான் அரசியல் புரிகிறார்கள் அந்தக் கழிசடைகள். அது உங்களைப் போன்ற வேண்டியது கிடைக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு புரிய மாட்டேன் என்கிறது. ஏன் மேல்தட்டு மக்கள் இல்லையா? எனக் கேட்கலாம். ஆனால் அதிகமிருப்பது இந்த நடுத்தட்டு மக்கள் தானே. ஒரு நடிகனின் சுய ரூபம் காட்டினால் அது உங்களுக்குப் பிடிக்கவில்லை. நல்ல கருத்துக்கள் உங்களுடையது. இப்படியே இருந்தீர்களேயானால் நிச்சயம் இந்த அரசியல் கற்றவர்களின் ஆதிக்கம் மாறப் போவதில்லை.

புலவன் புலிகேசி said...

//velumani1 said... 25
சில பேருக்கு ஏதாவது நொள்ளை-நொட்டை கண்டுபுடிச்சி எழுதலன்னா அந்தன்னைக்கு தூக்கம் வராது போல.....!
நல்லா வருது வாயில.....போயி வேற ஏதாவ்து நல்ல வேலையைப் பாருங்கப்பா!
தப்பு கண்டு புடிக்கறதே தலையாய கடமையா அலையாதீங்க!
June 25, 2010 1:58 PM // பலருக்கு உண்மைக் கசக்கும். உங்களுக்கும் அப்படித்தான் போலும். நடிகனுக்கு கொடி பிடியுங்கள் உங்கள் சந்ததியினர் உங்களை எண்ணிப் பெருமைக் கொள்வர்.

பனித்துளி சங்கர் said...

கலக்குறீங்க நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி

அழகிய அனானி said...

நடிகனுக்கு கொடி பிடியுங்கள் உங்கள் சந்ததியினர் உங்களை எண்ணிப் பெருமைக் கொள்வர்./////////////


இந்த கிசும்பு வெண்ணிற இரவுகள் கிட்ட மிஸ்ஸிங்.. கொஞ்சம் கடனாவாது குடுப்பா...

Bibiliobibuli said...

ஹிந்தி மட்டுமல்ல தமிழ் நடிக, நடிகையற்கும் பொதுவாக ஈழவரலாறும் தெரிவதில்லை, எங்கள் வலிகளும் புரிவதில்லை. பொதுசனத்திற்கும், ரசிகர்களுக்கும் அரசியல் சாக்கடைகளை அடையாளம் காட்டுவது போல் இந்த கலைத்துறையினருக்கும் ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் அறச்சீற்றம் புரியவைக்கப்பட வேண்டும். அடிப்படை உரிமைகளுக்காக போராடும் ஓர் இனத்தின் ரத்த சரித்திரம் செத்துப்போன விவகாரம் இல்லை என்பதும் இவர்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது நடந்தால் இப்படி கொழுப்பெடுத்த பேச்சுக்கள் இவர்கள் வாயிலிருந்து வராது.

///"நான் இப்படத்தை எதிர்க்கிறேன்".// நல்லதோர் ஆரம்பத்திற்கு தொடக்கப்புள்ளி இது.

கொத்தணிக்குண்டுகளும், பொஸ்பரஸ் குண்டுகளும் ஈழத்தமிழன் தலையில் விழுந்தபோது அறியப்படாத விவேக் ஓபராய் போன்றோர் iifa வினால் மட்டுமே அறியப்படுகிறார்கள். இவர்களுக்கு பரிந்து பேசுபவர்களும் இதையெல்லாம் கொஞ்சம் யோசிக்கட்டும்.

puduvaisiva said...

நான் இப்படத்தின் திருட்டு D.V.D 5.1 எதிர்க்கிறேன்

புலிகேசி படம் பார்க சினிமா தியேட்டர் பக்கம் போய் பல ஆண்டு ஆகுது அதனால எதிர்ப்பை இப்படி காட்டுறோம்.

Anonymous said...

மன்னிகவும்… இவ்வாறான ஒரு பதிவை எழுத கூடாது என்றுதான் நினைத்தேன் .. ஆனால் உங்களின் பதிவுகளும் செயல்களுமே இதை எழுத வைத்தது,,, இனிமேலாவது எங்களை காயபடுத்தாதீர்கள்…
http://ilangaiunmaithamilan.blogspot.com/2010/06/blog-post.html

YUVARAJ S said...

நண்பரே

நடிகர் சூரியாவை எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும், திரு சிவக்குமாரின் மகன் என்பதால்.

நீங்கள் சொன்னது உண்மையாக (அந்த பேட்டி) இருக்கும்பட்சத்தில் என்னோட ஆணித்தரமான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

(முடிந்தால் அந்த பத்திரிக்கையின் இணையத்துக்கு சென்று அந்த பேட்டியின் இணைப்பை கொடுங்கள். மேலும் பொருத்தமாக இருக்கும்)

இதே போல் சமூக பொறுப்போடு நிறைய எழுதவும். போற்றுவார் போட்ட்ரட்டும்.........

Unknown said...

அதே சமயம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் டீம் கூட இந்திய விளையாடுதே. முரளிதரன் இலங்கைக்காக விளையாடறாரே. அதுவும் தப்பா? அங்க ஒரு நடிகர் போனார்னா அவரு படத்த இங்க தடை செய்வீங்களா. அந்த படத்துல அவரு மட்டும் தான் வேலை செஞ்சிருக்காரா? அந்த படத்துல வேலை செஞ்ச உப நடிகர்கள்ல இருந்து தயாரிப்பாளர் வரைக்கும் எல்லாருமே இதுல பாதிக்கப்படுவாங்களே. அவர் அவர்களுக்கு உதவி செய்யணும் தோணினா செய்யுங்க. பிரச்சனைக்கு தீர்வு காணனும். அத விட்டுட்டு ஒவ்வொரு தனி மனிதைனையும் விமர்சனம் பண்ணா எல்லாரோட கவனம் வேனா கிடைக்கும். பிரச்னை தீராது.

சசிகுமார் பாலகிருஸ்ணன் said...

வன்மையாக எதிர்க்கிறேன்.
மு.கருணாநிதியின் புத்தகங்களை என் வாழ்நாளில் வாசிப்பதில்லை என்று முடிவெடுத்ததைப் போலவே சூர்யாவின் திரைப்படங்களை ஒதுக்கிவிடுவதென்று தீர்மானித்திருக்கிறேன்.

அழிக்கப்பட்டு வரும் ஒர் இனத்திற்காக இதையெனும் செய்யவியலாத நாம் தமிழர்கள் என்று கூறிக்கொள்வதற்காக தலைக்குனிந்து கொள்ளுங்கள். முதலில் சூர்யா ஐஃப்பாவை ஆதரிப்பார்., பிறகு இன்னொருவர் ...,

இதற்கு ஆரம்பத்திலேயே ஒரு முற்றுப்புள்ளியிட்டாக வேண்டும்.


அருண் பாரத்...
நீங்கள் ஈழத்தை சேர்ந்தவரா..?
ஒரு நடிகருக்கு ஆதரவாக பேசும் நீங்கள் ஈழத்தில் இலட்ச கணக்கில் இரத்தத்திலுறங்கும் தமிழர்களை எப்படி மறந்தீர்கள்..?
அதுதான் அந்த தமிழ் நடிகனின் வெற்றி. இது போலவே ஒவ்வொரு நடிகனும் ஆரம்பித்தால் தமிழர்கள் தங்கள் இனத்திற்கு ஏற்பட்டழிவை மறந்து கருணா, கருணாநிதி போன்றோராகக் கூடும்.