கடவுளை மற..மனிதனை நினை..

27 May 2010

மாம்பலம் மேன்சன்

12:59:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
மாம்பலம் ரயில் நிலையம் அருகில் உள்ளது அந்த மேன்சன். நூறு பேர் இருக்கும் அந்த மேசனிலும் அவன் தனிமையையும் வெறுமையையுமே உணர்ந்தான். ஆனால் அதிலிருந்து வெளிவர அவனுக்கு மனமிருந்ததில்லை. அவன் ஏன் அப்படி இருக்கிறான் என இதுவரை யாரும் கேட்டதில்லை. கேட்கும் அளவுக்கு அவன் யாரிடமும் பேசியதில்லை.

யார் அவன்? பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் தாயைப் பறி கொடுத்தவன். அன்று தொடங்கியதுதான் அந்த தனிமை. பின் கல்லூரியில் பி.ஏ தமிழ். எதற்காக தமிழ் படிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை. கிடைத்தது அது மட்டுமே என சேர்ந்தான். அங்கு அவனது தனிமை சிறிது காலம் விடை பெற்றிருந்தது.

நண்பர்கள், அரட்டை, கேலி கிண்டல் என அனுபவித்துக் கொண்டிருந்த நேரம் அவன் தந்தை இரண்டாவதாக ஒருத்தியை மணம் முடித்து வந்தார். வழக்கமான சித்திக் கொடுமை அவன் தாயை நினைவு படுத்தத் தொடங்கிற்று. கல்லூரிப் படிப்பு முடிகின்ற நேரம் சித்தியுடனான வாக்குவாதத்தில் வீட்டை விட்டு விரட்டியடிக்கப் பட்டான். மீண்டும் தனிமை அவனைத் தழுவிக் கொண்டது.

கல்லூரி நண்பன் ஒருவனின் நட்பு அறைதான் அந்த மேற்கு மாம்பல மேன்சன் அறை. பி.ஏ தமிழ் படித்தவனின் நிலை கற்றது தமிழ் படத்திலேயே சொல்லப் பட்டதுதான். கிட்டத்தட்ட அதே நிலைதான் இவனுக்கும். அவனது நாட்கள் பெரும்பாலும் மேன்சன் அறையிலேயெ கழிந்தன. உடன் இருப்போரிடம் இந்த ஆறு மாத காலத்தில் இவன் பேசிய வார்த்தைகள் விரல் விட்டு எண்ணக் கூடியவை.

தனிமையை நேசிக்கத் தொடங்கினான். அந்தத் தனிமையிலும் அவனுடன் உறவாடியது அறைக் காத்தாடி. விட்டத்தைப் பார்த்த படி காற்றாடியுடன் பேசி மகிழ்ந்தான். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் எல்லாம் மறந்து போயினர். அந்த காற்றாடியின் இசை மட்டுமே பிடித்திருந்தது அவனுக்கு.

வாரக்கடைசி நாட்களைக் கழிப்பது அவனுக்கு நரகமாக இருந்தது. அறை நண்பர்கள் அரட்டை, டாஸ்மாக் சரக்கு என இவன் தனிமையை கலைப்பதாக உணர்ந்தான். மேன்சனை விட்டு வெளியே வந்து ரெங்கநாதன் தெருவுக்குள் நுழைந்தான். ஒரே இரைச்சல், நெரிசல். தனிமையைத் தேடி அலைந்தான். பித்துபிடித்தவன் போல் திரிந்தான்.

கையிலிருந்த காசுகள் கரைந்து போயின. சில நாட்களில் மேன்சனிலிருந்து வெளியேற்றப் பட்டான். போக்கிடமின்றி தி.நகரில் திரிந்தான். வெளிச்சமும் இரைச்சலும் அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. அன்றிரவு மேட்லி சப்வேயில் ஒதுங்கினான். வாகன இரைச்சல் வெளியை விட அங்கு அதிகாமாக இருப்பதை உண்ர்ந்தான்.

காதுகளைப் பொத்தி, கால்களை முடக்கி இரைச்சலின் எரிச்சலில் நடுக்கத்துடன் உறங்கிப் போனான். பொழுது விடிந்தது. மனித எந்திரங்கள் அங்குமிங்கும் நடக்கத் தொடங்கின. வாகனங்கள் நெறிசல் ஏற்பட்டு சப்வேயில் குவிந்திருந்தன. கண் விழித்தான். இப்போது அவனுக்கு எந்த இரைச்சலும் பெரிதாகத் தோன்றவில்லை. தான் யார் என்பது கூட மறந்து போனது அவனுக்கு.

ரெங்கநாதன் தெருவிலும் அவனால் தனிமையை உணர முடிந்தது.....ஒரு குழந்தை தாயிடம் "அம்மா பைத்தியம்" என்றது.

27 விவாதங்கள்:

பனித்துளி சங்கர் said...

//////கையிலிருந்த காசுகள் கரைந்து போயின. சில நாட்களில் மேன்சனிலிருந்து வெளியேற்றப் பட்டான். போக்கிடமின்றி தி.நகரில் திரிந்தான். வெளிச்சமும் இரைச்சலும் அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. அன்றிரவு மேட்லி சப்வேயில் ஒதுங்கினான். வாகன இரைச்சல் வெளியை விட அங்கு அதிகாமாக இருப்பதை உண்ர்ந்தான்.

காதுகளைப் பொத்தி, கால்களை முடக்கி இரைச்சலின் எரிச்சலில் நடுக்கத்துடன் உறங்கிப் போனான்./////////


தனிமை என்பது நம்மை ஆளத்தொடங்கிவிட்டால் உலகில் அனைத்தும் வேறுப்பாய் தோன்றும் .

அமீரகத்தில் பலரின் நிலை இதுவே யாரும் வெளியில் காட்டிகொள்வதில்லை . எல்லாம் தனிமையின் போதையில் மூழ்கிப்போனதால்தான் என்னவோ !
அனைத்தும் மறுத்துப்போனவர்களாய் தனக்குத்தானே பேசிக்கொண்டு நடைப் பழகும் பலரை தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் செய்வதேதும் அறியாமல் .

vasu balaji said...

ஆளாளுக்கு பட்டைய கிளப்புறீங்க. சந்தோஷமா இருக்கு. வெல்டன் புலிகேசி.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு புலிகேசி...

||வானம்பாடிகள் said...
சந்தோஷமா இருக்கு. ||

ஒருத்தன பைத்யம் ஆக்கறதுன்னா எம்பூட்டு சந்தோஷம்.. ம்..

balavasakan said...

நல்லாருக்கு புலிகேசி...

ஹேமா said...

சமூகம் யாரைத்தான் விட்டு வைக்குது புலவரே.

Chitra said...

கையிலிருந்த காசுகள் கரைந்து போயின. சில நாட்களில் மேன்சனிலிருந்து வெளியேற்றப் பட்டான். போக்கிடமின்றி தி.நகரில் திரிந்தான். வெளிச்சமும் இரைச்சலும் அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. அன்றிரவு மேட்லி சப்வேயில் ஒதுங்கினான். வாகன இரைச்சல் வெளியை விட அங்கு அதிகாமாக இருப்பதை உண்ர்ந்தான்.

/////காதுகளைப் பொத்தி, கால்களை முடக்கி இரைச்சலின் எரிச்சலில் நடுக்கத்துடன் உறங்கிப் போனான். பொழுது விடிந்தது. மனித எந்திரங்கள் அங்குமிங்கும் நடக்கத் தொடங்கின. வாகனங்கள் நெறிசல் ஏற்பட்டு சப்வேயில் குவிந்திருந்தன. கண் விழித்தான். இப்போது அவனுக்கு எந்த இரைச்சலும் பெரிதாகத் தோன்றவில்லை. தான் யார் என்பது கூட மறந்து போனது அவனுக்கு.//////


..... You know what? about 6 months back, a South Indian guy went through a similar thing around Washington area - when he lost his job and couldn't find another one..... No one (his Indian friends) knew about his financial and psychological problems. One fine day, he committed suicide. :-(

பா.ராஜாராம் said...

// வானம்பாடிகள் said...
ஆளாளுக்கு பட்டைய கிளப்புறீங்க. சந்தோஷமா இருக்கு. வெல்டன் புலிகேசி.//

இதேதான் புலவரே.. ரொம்ப சந்தசமாய் இருக்கு.

க ரா said...

புலவரே தமிழ் படித்தவனுக்கு இதான் நிலைமயா (-:

Romeoboy said...

Gud gud .. keep it up dude .

Unknown said...

தனிமை... இனிமை ,,

ஜில்தண்ணி said...

நல்ல படைப்பு

//காதுகளைப் பொத்தி, கால்களை முடக்கி இரைச்சலின் எரிச்சலில் நடுக்கத்துடன் உறங்கிப் போனான்//

வேறு என்ன செய்ய முடியும் அந்த தனிமை முத்திய மனிதனால்

கதையாக இருந்தாலும் நிஜத்தை பிரதிபலிக்கிறது

அகல்விளக்கு said...

அருமை தல...

தனிமைப்படுத்தலின் கோரம்...

Vijay said...

nice....heart touching dude...keep it up

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

"மனித எந்திரங்கள் அங்குமிங்கும் நடக்கத் தொடங்கின" -- ரசித்த வரி...
கதை நல்லா இருக்கு புலவரே...
யாருமற்ற அவன் வாழ்க்கையின் வெறுமையை கதைப் படுத்தியிருக்கும் விதம் அருமை...

Priya said...

//தனிமை என்பது நம்மை ஆளத்தொடங்கிவிட்டால் உலகில் அனைத்தும் வேறுப்பாய் தோன்றும் .//...உண்மைதான்!
Good one!

Priya said...
This comment has been removed by the author.
ஈரோடு கதிர் said...

அருமையா வந்திருக்கு கதை

ஸ்ரீராம். said...

அருமை.

dheva said...

இரைச்சலின் அடர்த்தி அமைதிதான் வேலு! அவனளவில் அவன் சந்தோசமாயிருப்பான்! நல்ல பதிவு! வாழ்துக்கள்!

dheva said...

இரைச்சலின் அடர்த்தி அமைதிதான்! அவனளவில் அவன் சந்தோசமாயிருப்பான்! நல்ல பதிவு! வாழ்துக்கள்!

ரோஸ்விக் said...

:-(

மங்குனி அமைச்சர் said...

நல்ல கதை சார் , ஆனா எங்கேயோ படிச்ச ஒரு பீலிங்

சுசி said...

அசத்திட்டிங்க புலவரே..

hello said...

@மங்குனி அமைச்சர்

ஜெயசீலன் said...

நல்லா இருக்கு....

Anandh said...

என்ன புலவரே..
இன்னும் கதை எழுத வேண்டுமா ..?
நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும்
நிறைய கதைகள் சிதறிக்கிடக்கின்றன - போய்
பொறிக்கிக்கொள் அதே மேற்குமாம்பழ மேன்சன்களில்..