கடவுளை மற..மனிதனை நினை..

31 May 2010

ஐஃபா விழா - பங்கேற்காமை வற்புறுத்தலால் இருக்குமோ?

7:13:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 12 comments
கொடூரன் ராஜபக்ஷ்சே தமிழர்கள் கொல்லப் பட்டதன் முதலாமாண்டு நிறைவு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செதிருக்கும் இந்த ஐஃபா விழா அங்குள்ள மக்களைத் திசைத் திருப்பும் முயற்சி. இதில் கலந்து கொள்ள தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பன்மொழிக கலைஞர்களுகு அழைப்பு விடுத்திருந்தது அந்த அமைப்பு.

இந்நிலையில் இந்தியாவின் முக்கிய திரைக்கலைஞர்கள் இவ்விழாவைப் புறக்கனித்து வருவது நாம் அறிந்ததே. இதற்கு என்ன காரணம் தமிழர்கள் மீதுள்ள உணர்வா? அல்லது பயமா?


முதலில் இதற்கான அழைப்பிதழைப் பார்த்து கடுப்பாகிப் போய் தூக்கிப் போட்ட இரு நடிகர்கள் ரஜினி, கமல் எனக் கூறப் படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. அப்படி உண்மை எனில் அவர்களுக்கு என் சல்யூட்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் விலகியிருக்கிறார். இந்த விழாவில் அவரின் ராவணன் சிறப்புக் காட்சியாக ஒளிபரப்பு செய்யப் பட இருந்தது. எங்கே தான் சென்றால் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமோ என்ற பயத்தில் விழாவைப் புறக்கணித்திருக்கிறார்.

அடுத்து அமிதாப் குடும்பத்தார். நாம் தமிழர் இயக்கத்தினரின் போராட்டத்திற்கு பின் ரஜினியுடன் பேசியிருக்கிறார் அமிதாப். அப்போது இவ்விழாவைப் புறக்கணிக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் அமிதாப்பிடம் கூறிய காரணம் "அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள் வைத்துள்ள மதிப்பு குறித்து ரஜினி எடுத்துக் கூறினாராம். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் விளக்கியுள்ளார் (ராவணன் வரனும்ல)". இதையடுத்து அமிதாப் சிறப்புத் தூதர் பதவியிலிருந்து விலகியதுடன் தன் குடும்பம் பங்கேற்காது என அறிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு பிறகு இவ்விழாவில் பங்கேற்பவர்களின் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை விதிக்கப் படும் என தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், ரித்திக் ரோஷன், அமிதாப் போன்றவர்களின் படங்களுக்கு தனி வரவேற்பு இருக்கும்.

ஷாருக்கான் இப்போது தனக்கு வேளை பளு அதிகமிருப்பதால் இவ்விழாவில் பங்கேற்க போவதில்லை என கூறியிருக்கிறார். கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல கதையா இருக்கு. எங்கே தன் படங்கள் தென்னகத்தில் வெளி வராதோ என்ற பயம் தான் காரணமாக இருக்கும்.

தற்போது நடிகை நமீதா "ஆனால் இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இங்கே இந்த பிரச்சனை இருப்பது தெரிந்த பிறகும் எப்படி நான் போக முடியும். எனக்கு சோறு போட்டது தமிழ் மக்கள்தான். இன்று இந்த அந்தஸ்து வந்தததும் அவர்களால்தான். எனவே யாரும் சொல்வதற்கு முன்பே மறுத்துவிட்டேன்." எனக் கூறியிருக்கிறார். அம்முனி மறுக்கறதுன்னா முன்னரே மறுத்துருக்கனும்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இவ்விழாவில் விலகுபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர் உணர்வாலோ, மனித உணர்வாலோ விலக வில்லை. தன் சொந்த வேலை பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்திலும் தமிழ் ரசிகர்கள் மீதான பயத்திலுமே விலகியிருக்கின்றனர் என அப்பட்டமாகத் தெரிகிறது.

எது எப்படியோ அந்த விழா தோல்வியைத் தழுவ வேண்டும் என்பதே தமிழர் மற்றும் மனித உணர்வுள்ள மக்களின் விருப்பம்.

12 விவாதங்கள்:

Rathi said...

////இவ்விழாவில் விலகுபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர் உணர்வாலோ, மனித உணர்வாலோ விலக வில்லை....தன் சொந்த வேலை பாதிப்படையக் கூடாது என்ற எண்ணத்திலும் தமிழ் ரசிகர்கள் மீதான பயத்திலுமே விலகியிருக்கின்றனர் என அப்பட்டமாகத் தெரிகிறது.////

ஹையோ, கைகொடுங்க புலவரே நான் நினைச்சதையே நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். இருந்தாலும் இந்த நிகழ்வு நடந்துமுடிந்த பின் தான் எதுவும் தெரியும், புரியும். இந்த தியாகத்தை இவர்கள் செய்தால், ஈழத்தமிழன் அந்த ஒரு நன்றிக்கடனுக்காகவே புலத்தில் இவர்கள் சினிமாவை வாழவைப்பான் என்று தோன்றுகிறது. இவர்களும் பதிலுக்கு தங்கள் திரைப்படத்துக்கான வெளிநாட்டு உரிமைக்கு விலையை கூட்டுவார்கள்....It is all business.


இருந்தாலும் எல்லோருக்கும் நன்றி.

Balavasakan said...

உண்மைதான் புலிகேசி...

வானம்பாடிகள் said...

True:)

அஹமது இர்ஷாத் said...

வானம்பாடிகள் said...
True:)///

Repppppppeeeeeeeeeeeeeet...

ஜெட்லி said...

நீங்க சொல்றது தான் உண்மைனு தோணுது....

சுசி said...

உண்மைதான் புலவரே..

ஜோதிஜி said...

ரதியைப் போலவே நானும் புலவரே. ஆனால் இப்போது உள்ள பயத்துக்கு எத்தனை காரணங்கள் சொன்னாலும் இது போன்று தேர்தல் சமயத்தில் உருவாக்க முடியாத காரணம் என்ன?

சி. கருணாகரசு said...

எப்படி விலகினாலும்.... அவர்களை வரவேற்போம்...

//எது எப்படியோ அந்த விழா தோல்வியைத் தழுவ வேண்டும் என்பதே தமிழர் மற்றும் மனித உணர்வுள்ள மக்களின் விருப்பம்.//

இதுதான் எனது எண்ணமும்.

சசிகுமார் said...

எப்பவும் போல நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

யாசவி said...

what u said is seems most probably correct.

Any way they respecting our feeling or their business whatever finally not visited is just enough.
No need to dig all these into root

Anonymous said...

We do not have any scope to find what is in their mind. They didnt go. That is what we wanted. It happened. So lets be glad. Its better to not look into few issues in depth. Namitha is much better than Mani Ratnam cos at least she had the guts to say why she didnt go. We should not doubt everyone like this. Lets show some gratitude and not bitch about them. What you say.

Anonymous said...

//
முதலில் இதற்கான அழைப்பிதழைப் பார்த்து கடுப்பாகிப் போய் தூக்கிப் போட்ட இரு நடிகர்கள் ரஜினி, கமல் எனக் கூறப் படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. அப்படி உண்மை எனில் அவர்களுக்கு என் சல்யூட்.//
What is the big deal about it if you cant accept what Amithab or Namitha did. Amithab clearly said that he didnt want to hurt Tamil's feelings. Namitha said the same too. Why cant to salute them if you can salute at these two.

Lets be fair please.