கடவுளை மற..மனிதனை நினை..

07 May 2010

அஜ்மல் கசாப் கொல்லப் படுவானா?

6:36:00 AM Posted by புலவன் புலிகேசி , 35 comments

மும்பைத் தாக்குதல் வழக்கில் நேற்று கசாபிற்கு மரண தண்டனை வழங்கப் பட்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் 2001ம் ஆண்டு முதல் வழங்கப் பட்டிருக்கும் மரண தண்டனைகளில் எத்தனை நிறைவேற்றப் பட்டிருக்கின்றன எனப் பார்த்தால் ஒன்றே ஒன்று மட்டுமே.பலருக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டு கருணை மணு என்ற பெயரில் பலர் விடுவிக்கப் பட்டு, இப்போது மரண தண்டனையை எதிர் நோக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை இந்த கொடூரனையும் சேர்த்து 30 பேர்.

ஒருவனுக்கு எப்போது மரண தண்டனை வழங்கப் படுகிறது? அவனது செயல் திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கும் பட்சத்திலும், அது கொடுரமான செயலாக இருக்கும் பட்சத்திலுமே. அப்படி இருக்கையில் அவர்கள் மீது என்ன கருணை வேண்டியிருக்கு? இதுவே அயல் நாடுகளில் விதிக்கப் பட்டால் உடன் கொல்லப் படுவான்.

இங்குதான் கருணை மனு, கத்தரிக்காய் என இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். 2001ம் ஆண்டு நம்து நாடாளுமன்றம் மீது "லஷ்கர்-ஈ-தொய்பா" மற்றும் "ஜெய்ஸ்-ஈ-மொஹமத்" தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த கொடூரர்கள் தாக்குதல் நடத்தியது அனைவரும் அறிந்ததே. இதில் ஆறு காவலர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டனர். இது சம்பந்தமாக 2002ல் பிடிக்கப் பட்ட "முகமது அப்சல் குரு"-விற்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது.


ஆனால் இன்று வரை அவன் கொல்லப் படவில்லை. அவனது கருணை மனு குடியரசுத்தலைவரிடம் நிலுவையில் இருக்கிறதாம். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால். இந்த கருணை மனுக்களை ஆய்ந்து ஏற்பதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ குடியரசுத் தலைவருக்கு காலக் கெடு கிடையாதாம். அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது பார்த்தால் போதுமாம்.

தற்போது 29 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரின் தீர்ப்பிற்காக நிலுவையில் கிடக்கின்றது. அந்தப் பட்டியலில் கசாப்பும் சேர்க்கப் படுவான் என நினைக்கிறேன். 2001 முதல் இன்று வரை விதிக்கப் பட்ட மரணதண்டனைகளில் நிறைவேற்றப் பட்டது ஒன்று மட்டுமே. அது சிறுமியை கற்பழித்துக் கொன்ற கொடூரன் "தனஞ்செய் சட்டர்ஜி".

கசாபிற்கு நேற்று வழங்கப் பட்ட மரண தண்டனையே குறைவான தண்டனை என மக்களில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவனுக்கெல்லாம் கொடூரமான முறையில் தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் எனக் கருத்துத் தெரிவிப்பவர்கள் பலர். ஆனால் தண்டனையை நிறைவேற்றுவதில் இந்தியாவின் வேகத்தைப் பார்த்தால் அவனே வயதாகி செத்து விடுவான் போல் தெரிகிறது.

தன் உயிரைப் பனையம் வைத்து கொடூர செயல் செய்ய வரும் ஒருவனுக்கு மரண தண்டனை ஒன்றும் பெரிய விடயமல்ல. அவன் இறக்கப் போவது உறுதியான ஒன்று. ஆனால் இது போல் தண்டனைகள் இழுத்தடிக்கப் பட்டால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் ஆச்சர்யப் படுவதிற்கில்லை.

வெளியில் இருந்து இறப்பதை விட இந்திய சிறைச்சாலையில் பிரியானி சாப்பிட்டு உயிர் வாழலாம் என்ற எண்ணம் நிச்சயம் வரும்.

வாழ்க இந்தியா! வளர்க கருணை மனுக்கள்!

35 விவாதங்கள்:

ஜெட்லி... said...

என்னத்த பண்றது.....

ஸ்ரீராம். said...

என்ன செய்ய..? இந்தியா ஜனநாயக நாடு, செக்குலரிசம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அந்தப் பெயரை உலக நாடுகளிடம் தக்க வைத்துக் கொள்ள இப்படியெல்லாம் செய்கிறது...வாழ்க ஜனநாயகம்...!

மரா said...

இன்னும் நிறைய கூத்துகள் நடக்கும்.பொறுத்திரிந்து பார்க்கவும்...

rooto said...

இப்பிடி சொல்லி இந்தியா ஜனநாயக நாடு எண்டு காட்ட பாக்கிறியள். உந்த கருணாநிதியை தண்டிக்கமுடியாத கையாலாகாத பயல்கள்தானே நீங்க!!! கசாப்பாவது 100 பேர்களின் உயிர்பலிக்குதான் அதிகபட்சம் காரணமாவான். ஆனல் இந்த கருணாநிதியும் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் சுமார் ஒரு லட்சம் மக்கள் கடந்த மே மாதம் இலங்கையில் சாவதற்கு காரணமாணவர்கள்.
எப்பிடி பக்கத்துநாட்டில நடக்கிறதுக்கு எல்லாம் நாங்க காரணமாகலாம் என நீங்க கேக்கலாம்.
1.இராணுவ, ஆயுத உதவிகளை வழங்கியது.
2.நேச நாடு, அயல்நாடு என்ற ரீதியில் மற்றவர்களை தலையிடவிட்டமல் பண்ணியது.
3. அமேரிக்கா போன்ற நாடுகள் உதவும் நிலையில் இருந்தாலும், இந்தியா தலையிடுகிறது என்ற மாயையை நீங்கள் தோற்றுவித்ததால் அவர்கள் தங்கள் தலையீட்டை நிறுத்திகொணது.
4.உலகுக்கு இலங்கையில் போர் முடிவடைந்துவிட்டது/ போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என பொய் பிரச்சாரம் உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது மட்டுமலாது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறைத்தது.(தெரிந்திருந்தும்)

இவளவு தவறையும் நீங்கள் செய்துவிட்டு , செய்துகொண்டிந்துகொண்டு பாக்கிஸ்தானை தீவிரவாத நாடாக காட்டிகொண்டும் இந்தியாவை ஜனநாயக நாடக காட்டிகொண்டும் இன்னமும் அறிக்கைகள், பதிவுகள், சினிமாக்கள், பல வெளியுறவுக்கொள்கைகளை வகுப்பவர்களுக்கு என்ன தண்டனையை எப்போது நாம் தருவது????

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

குடியரசுத் தலைவருக்கு காலக் கெடு கிடையாதாம். அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது பார்த்தால் போதுமாம்.
//

அவரு..கோவை செம்மொழி மாநாட்டுக்கு வேற வரவேண்டியிருக்கு..

அதெல்லாம் முடிந்த பிறகு..முடிவு செய்வார்களோ. எனன்மோ சார்?..

பிரபாகர் said...

அரசியல் நெருக்கடியாலும், சுயநல நாய்களாலும்தான் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. நல்ல கேள்வியை முன்வைத்திருக்கிறீர்கள் நண்பா!

பிரபாகர்...

சசிகுமார் said...

/* தன் உயிரைப் பனையம் வைத்து கொடூர செயல் செய்ய வரும் ஒருவனுக்கு மரண தண்டனை ஒன்றும் பெரிய விடயமல்ல. அவன் இறக்கப் போவது உறுதியான ஒன்று. */

இவன போல ஆளுங்களுக்கெல்லாம் தண்டனை அளிப்பதை அனைத்து நாடுகளுக்கும் live telecast செய்யவேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக ஒவ்வொரு பகுதியாக வெட்டி வெட்டி அவனை துடிக்க துடிக்க சாகடிக்கவேண்டும். அதை பார்க்கும் ஒவ்வொரு தீவிரவாதிகளும் பயப்பட வேண்டும். ஆனால் நம் அரசியல் வாதிகளா இதை செய்வார்கள் . கேட்டால் ஜனநாயகம் அது இதுன்னு ஒரு நொண்டி சாக்கு சொல்வார்கள். ஜனங்களுக்கே நியாயம் இல்லாத இந்த நாட்டில் ஏதுடா ஜனநாயகம். மானங்கெட்ட அரசியல் வாதிகள் . அவர்களை தேர்ந்தெடுத்த மானங்கெட்ட மக்கள் (என்னையும் சேர்த்து ) இருக்கும்வரை இதே நிலை தான்.

இந்த விஷயத்தில் அரபு நாடுகளை நான் பாராட்டுகிறேன்.

vasu balaji said...

கொல்லப்படுவானா என்பது தவறான பிரயோகம் புலிகேசி. அப்பீலில் பாதி, மனுவில் மீதி ஆயுள் கழிந்துவிடும்:)

Chitra said...

என்னமோ நடக்குது. மர்மமாக இருக்குது. ஒண்ணுமே புரியல.

க.பாலாசி said...

நம் சட்டங்களினால் அடைக்கப்படாத, முடியாத ஜனநாயக ஓட்டைகள்...கொஞ்சம் பெரிதாகவும் இருக்கிறது....

காலையில் செய்தித்தாளில் வாசித்தபோதும் இதுதான் தோன்றிது... இன்னும் இதற்கான, இவனுக்கான முடிவு எத்தனை காலம் தொடருமோ....

எல் கே said...

sir enna sir solrenga. ungaluku irakkam illaya, ungalukkum kasabkum enna difference? avanku tooku tandanai tarappattal indiavil manitha urimaigal alinthu vidum...

_ human rights association endra peyaril poli mugathudan suttrm bayangaravathigal. ivangala mutthala suttu tallina sariya poidum

'பரிவை' சே.குமார் said...

வாழ்க ஜனநாயகம்.

என்ன சொல்ல புலிகேசி.

நாட்டுல எத்தனையோ பேர் வறுமையில் வாட, கசாப்புக்கு ஒரு நாளைக்கு 8.5 லட்சம் செலவு செய்கிறதாம் அரசாங்கம்.

அரபு நாடுகள் போல உடனுக்குடன் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால்தான் அடுத்தவன் தவறு செய்ய மாட்டான்.

ஆனால் நாமோ ஜனநாயகம் என்ற போர்வையில் அவர்களை பாதுகாக்கிறோம்.

Unknown said...

ஹ்ம்ம்....கொடுமை.. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் .... தண்டனைகள் துரிதமாக்கப்பட வேண்டும்..இங்கே அரசியல்வாதிகளுக்கு ஏற்றவாறு சட்டம் திருதபட்டுள்ளத்தால்....இனிமே எல்லாம் இப்டித்தான்..

Anonymous said...

if you ready to execute him, you should execute manmohan singh for vidharbhaa suicides (due to LPG)

மோனி said...

மனசு விட்டுடாதீங்க. 2050-க்குள்ள தண்டனை Conform ஆயிடும்.

Anonymous said...

நீங்கள் எழுதியது அதனையும் உண்மை தான்..ஒத்துக்கு கொள்கிறேன்..

குற்றம் செய்தும் தண்டிக்க பாடாத இதிலும் பாதகச்செயல் செய்த மோடிக்கும் அ(எ)த்வாணிக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லி விடுங்கள்...

சுசி said...

:((((

dheva said...

உண்மைதான் நண்பரே.....! நம்ம நாட்டை பொறுத்த அளவிள்...எத செய்யணுமோ...அதை உடனே செய்ய மாட்டார்கள்....! எது தேவையில்லையோ.....அங்கே...மூக்கை நுழைத்து எல்லா கருமத்தையும் செய்வார்கள்! தேவையான ஒரு பதிவு!

VR said...

@rooto

I fully agree with you my brother.

Swamy.

balavasakan said...

நியாயமான கேள்விதான் !!

hamaragana said...

அன்புடன் வணக்கம்
கசப்புக்கு மரண தண்டனை என்று கோர்டில் தீர்ப்பு !!!!.இன்னும் உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ,,கருணை மனு இதற்கு இடையல் அவன் கூட்டாளிகள் என்னத்தை கடத்தி அவனை விடுதலை செய் இல்லே இவங்களை கொல்லுவோம் என்று எப்போது யாரை எங்கே கடத்துவனுகனு உய்ரை கைலபிடிச்சு நடக்கணும் பறக்கணும் ,நம்ம தலை விதி சமயத்தில் கசாப் மீது குற்றம் நிருபிக்கபடவில்லை ஆகவே விடுதலை செய்கிறேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்படவேண்டாம் ??? நம் நாடு செக்குலர் கண்ட்ரி வாழ்க ஜன !!நாய!!! கம்!!!

ஈரோடு கதிர் said...

நியாயமான கேள்விகள்...

ஆனால் பதில்கள் எங்கே!!!???

சீனிவாசன் said...

இதில் யோசிக்கவே கூடாது.
இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை மனிதாபமின்றி சுட்டு கொன்ற அந்த மிருகத்தை நடுரோட்டில் நிற்கவைத்து கை தனியாக, கால் தனியாக அறுத்தெறியவேண்டும். அப்போது தான் மீண்டும் ஒரு கசாப்பை அனுப்ப திவிரவாதிகள் தயங்குவார்கள். தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இதை எல்லா மீடியாக்களிலும் ஒளிபரப்பி அவர்களுக்கு பயத்தினை உண்டு பண்ணவேண்டும்.

Anonymous said...

வேதனைகள், வலிகள் எல்லாம் புரிகிறது ஆனால் கொலைக்கு கொலையென்பது தண்டனையாகுமா? என்பதை இரண்டுமுறை யோசிக்கவேண்டும். சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற வண.டெஸ்மண்ட டுடு அவர்களின் கூற்றை நான் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “கொலைசெய்தவனைக் கொலைசெய்வது என்பது நீதியல்ல மாறாக பழிவாங்கலே!” - கசாப்பைக் கொல்வதால், இன்னும் கசாப்கள் உருவாகாமல் இருந்துவிடுவார்களா? இல்லை தீவிரவாதிகள் தான் உருவாகாமல் இருந்து விடுவார்களா? - உயிருக்கு பயப்படாமல் தங்கள் கூட்டத்தின் மூடக்கொள்கைக்காக இறக்கத்தயாராகி வந்து, இறந்தவர்கள் போக எஞ்சிய இவனுக்கு மரணதண்டனை என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது?

சர்வதேச மன்னிப்புச் சபை மரண தண்டனைக்கெதிராக சொல்லும் இந்தப் 10 காரணங்களைப் படித்துப்பாருங்கள் - http://goo.gl/6w2j .

ஒரு தீவிரவாதியை மரணதண்டனை நிறைவேற்றாமல் வைத்திருப்பதிலிருக்கும் ஆபத்துக்கள் வெளிப்படையானதே... அவனை விடுவிக்கக்கோரி நாளை அவன் கூட்டத்தார் பணயக்கைதிகளை பிடித்து வைத்து மிரட்டலாம் - இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவேண்டும். யுத்தத்தின் போதே உயிர்கள் கொல்லப்படுவது பற்றி, யுத்தக்குற்றங்கள் என்றெல்லாம் மனித உரிமை பேசுகிறோம், இந்த காலகட்டத்தில் மரண தண்டனை பற்றிய மற்ற முகத்தையும் நாங்கள் பார்க்கவேண்டியது அவசியம்.

As Most Rev. David B. Thompson, Bishop of Charleston, S.C. said, "Capital punishment feeds the cycle of violence in society by pandering to a lust for revenge. It brutalizes us, and deadens our sensitivities to the precious nature of every single human life."

rooto said...

@V R
நன்றி நண்பரே!!

எனக்கு கசாப்மேல் எந்த அனுதாபமும் இல்லை. அவனும் சாவுக்கு அஞ்சபோவதும் இல்லை. இங்கு கசாப்பினுடைய தண்டனையை விரைவு படுத்தசொல்லும் அனைவரும் விபரம் குறைந்தவர்களாக காணப்படுகிறார்கள். ஏனெனில் இந்திய நீதி,சட்ட முறைகள் மிக நேர்த்தியாக பின்பற்றபடுவதில்லை. வழக்குகள் திர்ர்ப்பு வழங்கபடுவதற்கே இழுத்து அடிக்கபடுகிறன, பின்னர் எவ்வாறு தண்டனையை அமுல்படுத்த முடியும். அமேரிக்காவை போல் இந்திய சட்டங்கள் வேகமாகவும், விவேகமாகவும், தற்போதைய நடைமுறைகளுக்கு ஏற்ப முற்றாக வளர்ச்சியடைந்திருந்தால் அது நியாயம். அமேரிக்காவில் சில(டெக்ஸாஸ், ஒகலாம இன்னும் சில ) மானிலங்கள் மிக கேவலமான சட்டங்களை அதாவது ஒரு கருப்பினத்தவன் பிடிபட்டால் அவன் கட்டாயம் தண்டனைக்குள்ளாவான்.(தண்டனை செய்யவிட்டாலும்). ஆனால் பொஸ்டன் மாநிலம் இந்த விடயத்தில் போற்றபட வேண்டியது. அவர்களது சட்டதிட்டங்கள் அனைவருக்கும் சம உரிமையையும் மிக வேகமான, மற்றும் முழுநேர நீதிமன்றங்களையும், வளக்கறிஞ்ஞர்களையும் கொண்டது.
உதாரணத்திற்கு ஒரு சிறுமியை பாலியல் பலாத்கார செய்து ஒருவன் கொண்டுவிட்டான்.அவ் வழக்கு நீதிமன்றம் வருகிறது அரச தரப்பு வக்கீலாக ஆஜராகி இருப்பவர் மிக அனுபவசாலிமேற்படி வழக்குகளில் விற்பன்னர். ஆனல் குற்றவாளி சார்பாக ஆஜராக யாரும் இல்லை காரணம் பணம் மட்டுமல்ல அவனுக்காக வாதாட வளக்கறிஞ்ஞர்கள் யாரும் விரும்பவில்லை என்பதே காரணம்(இந்தியா எண்ட காசுக்கு அந்த அரச வழக்கரிஞ்ஞரே ஓடியிருப்பான் அந்த பக்கம். ஆகவே நீதிபதி அங்கு உள்ள சிறந்த வழக்கறிஞ்ஞர் ஒருவரை(மிக பெயர்போனவரை) நியமிக்கிறார்.(அந்த வழக்கறிஞ்ஞரின் விருப்பு கணக்கெடுக்கபடவில்லை என்பது வேறு) ஆனல் தீர்ப்புகளும் தண்டனைகளும் விரைவாக்கபட்டால் மட்டும் போதாது இந்திய சட்டங்களில் உள்ள மாபெரும் பெருச்சாளிகள், அரசியல்வாதிகள் தப்பகூடிய ஒட்டைகள் முதலில் அடைக்கபடவேண்டும்.அதுவரை விரைவு சாத்தியபடாத ஒன்று!!!தவிர அப்பவிகள் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்!!!

Thenammai Lakshmanan said...

சசி சொன்னதை வழிமொழிகிறேன் புலவரே

புலவன் புலிகேசி said...

//rooto said... 4

இப்பிடி சொல்லி இந்தியா ஜனநாயக நாடு எண்டு காட்ட பாக்கிறியள். உந்த கருணாநிதியை தண்டிக்கமுடியாத கையாலாகாத பயல்கள்தானே நீங்க!!! கசாப்பாவது 100 பேர்களின் உயிர்பலிக்குதான் அதிகபட்சம் காரணமாவான். ஆனல் இந்த கருணாநிதியும் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் சுமார் ஒரு லட்சம் மக்கள் கடந்த மே மாதம் இலங்கையில் சாவதற்கு காரணமாணவர்கள்.
எப்பிடி பக்கத்துநாட்டில நடக்கிறதுக்கு எல்லாம் நாங்க காரணமாகலாம் என நீங்க கேக்கலாம்.
1.இராணுவ, ஆயுத உதவிகளை வழங்கியது.
2.நேச நாடு, அயல்நாடு என்ற ரீதியில் மற்றவர்களை தலையிடவிட்டமல் பண்ணியது.
3. அமேரிக்கா போன்ற நாடுகள் உதவும் நிலையில் இருந்தாலும், இந்தியா தலையிடுகிறது என்ற மாயையை நீங்கள் தோற்றுவித்ததால் அவர்கள் தங்கள் தலையீட்டை நிறுத்திகொணது.
4.உலகுக்கு இலங்கையில் போர் முடிவடைந்துவிட்டது/ போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என பொய் பிரச்சாரம் உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது மட்டுமலாது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறைத்தது.(தெரிந்திருந்தும்)

இவளவு தவறையும் நீங்கள் செய்துவிட்டு , செய்துகொண்டிந்துகொண்டு பாக்கிஸ்தானை தீவிரவாத நாடாக காட்டிகொண்டும் இந்தியாவை ஜனநாயக நாடக காட்டிகொண்டும் இன்னமும் அறிக்கைகள், பதிவுகள், சினிமாக்கள், பல வெளியுறவுக்கொள்கைகளை வகுப்பவர்களுக்கு என்ன தண்டனையை எப்போது நாம் தருவது????
//

மிஸ்டர் rooto இது ஜனநாயக நாடு இல்ல. கேடுகெட்ட அரசியல்வியாதிகளின் நாடு.

புலவன் புலிகேசி said...

//
இவன போல ஆளுங்களுக்கெல்லாம் தண்டனை அளிப்பதை அனைத்து நாடுகளுக்கும் live telecast செய்யவேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக ஒவ்வொரு பகுதியாக வெட்டி வெட்டி அவனை துடிக்க துடிக்க சாகடிக்கவேண்டும். அதை பார்க்கும் ஒவ்வொரு தீவிரவாதிகளும் பயப்பட வேண்டும். ஆனால் நம் அரசியல் வாதிகளா இதை செய்வார்கள் . கேட்டால் ஜனநாயகம் அது இதுன்னு ஒரு நொண்டி சாக்கு சொல்வார்கள். ஜனங்களுக்கே நியாயம் இல்லாத இந்த நாட்டில் ஏதுடா ஜனநாயகம். மானங்கெட்ட அரசியல் வாதிகள் . அவர்களை தேர்ந்தெடுத்த மானங்கெட்ட மக்கள் (என்னையும் சேர்த்து ) இருக்கும்வரை இதே நிலை தான். //

சசி இதே கோபம் தான் எனக்கும்...

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said... 8

கொல்லப்படுவானா என்பது தவறான பிரயோகம் புலிகேசி. அப்பீலில் பாதி, மனுவில் மீதி ஆயுள் கழிந்துவிடும்:)
//

இல்லை ஐயா, அவன் கொடூரமாக கொல்லப் பட வேண்டும். தண்டிக்கப் பட கூடாது. அதனால்தான் அப்படி எழுதினேன்

புலவன் புலிகேசி said...

//வேதனைகள், வலிகள் எல்லாம் புரிகிறது ஆனால் கொலைக்கு கொலையென்பது தண்டனையாகுமா? என்பதை இரண்டுமுறை யோசிக்கவேண்டும். //

அனானி நண்பரே கொலைக்கு கொலை தண்டணை வேண்டாம். கொடூர கொலை தண்டனை கொடுக்கலாம்.

புலவன் புலிகேசி said...

@rooto

//தீர்ப்புகளும் தண்டனைகளும் விரைவாக்கபட்டால் மட்டும் போதாது இந்திய சட்டங்களில் உள்ள மாபெரும் பெருச்சாளிகள், அரசியல்வாதிகள் தப்பகூடிய ஒட்டைகள் முதலில் அடைக்கபடவேண்டும்.அதுவரை விரைவு சாத்தியபடாத ஒன்று!!!தவிர அப்பவிகள் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்!!!//

அதைத்தான் நாங்களும் எதிர் நோக்கியிருக்கிறோம். ஆனால் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளும், அவனுங்களை பாரபட்சமின்றி தேர்ந்தெடுக்கும் மக்களையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது.

விஜய் said...

என்ன செய்வது நமது வீணாப்போன அரசியலமைப்பு அப்படி இருக்கிறது.

வாழ்த்துக்கள்

அவசியம் நம்ம பக்கம் வரவும்

விஜய்

? said...

mani says:
May 7, 2010 at 4:06 pm

கசாபுக்கு தண்டனை தருவது சரிதான்.

ஆனால் அவனுக்கு முன்னரே இந்த நாட்டை சூறையாடிவர்களுக்கு என்ன தண்டனை தரப் போகிறீர்கள். தேர்தலில் தோற்க வைப்பீர்களா… அவர்கள் சம்பாதித்த சொத்தை வைத்துக் கொண்டு சந்தோசமாக வாழ அரசியலில் இருந்து ஓய்வு கொடுப்பீர்களா..

1. 1984 இல் யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனம் போபாலில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இரவில் திறந்து விட்ட நச்சுக் காற்றால் மூச்சுத் திணறி செத்தவர்கள், தலைமுறை தலைமுறையாக பாதிக்கப்பட்டவர்கள் இலட்சக்கணக்கான குடும்பங்கள். இந்திய நீதிமன்றங்களின் சட்டங்களுக்கு தான் கட்டுப்பட்டவன் இல்லை என்பதால் அமெரிக்காவில் வழக்கு நடந்து நட்ட ஈடு தரச் சொல்லி அந்த நாட்டு நீதிமன்றமும் உத்தரவிட்டு விட்டது. ஆனால் இன்று வரை எதுவும் நடந்த பாடாகவில்லை. யார் இதற்கு பொறுப்பேற்க போகிறார்கள்.

2. என்ரான் என்ற அமெரிக்க நிறுவனம் மின்சாரம் தயாரிக்க மின்நிலையம் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியில் பெற்ற கடனுக்கு சுயூரிட்டி கொடுத்த்து இந்திய அரசு. வரிவிலக்கு, இலவச தண்ணீர் எல்லாம் தந்து யூனிட் மின்சாரத்தை பதினாறு ரூபாய் கொடுத்து வாங்கி அவனுக்கு மீத தொகையை மானியமாக அரசு வழங்கிய பிறகும் என்ரான் திவால் ஆனது. திவால் ஆன போதுதான் அவனுக்கு சொத்து என ஒன்றுமே இல்லாத்தும் தெரிய வந்த்து. என்ரான் வாங்கிய கடனுக்கு இந்திய அரசு சுயூரிட்டி கொடுத்த்தால் இன்று நமது பிஎப் பணத்தில் இருந்து என்ரானின் கடனுக்கான பணம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு யாரை தூக்கிலேற்றுவது.

3. தனியார் மயம் தாராளமயம் உலக மயம் என்ற பெயரில் 1991 முதல் மன்மோகன்சிங் வகையறாக்களால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகுதான் இலட்சக்கணக்கான விவசாயிகள் விவசாய தொழிலில் ஏற்பட்ட நட்டத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இக்கொலைகளுக்கு முன்னோடியான பசுமை புரட்சிக்கு வித்திட்ட எம்எஸ் சுவாமிநாதன் என்ற துரோகியால் இந்திய நெல் ரகங்களில் 1600 வகை தமிழக அளவிலேயே இன்று மறைந்து போய் விட்டது. உணவு தானியத்திற்கு அன்னிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளிய இவர்கள் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை இலட்சங்களை தாண்டுகிறதே … என்ன தண்டனை தரலாம் என முடிவு செய்யுங்கள்..

சாமக்கோடங்கி said...

விட்டுட்டா அவனே வயசாகி செத்துடுவான்.. அப்படீன்னு நெனைக்கிரான்களோ...?

Anonymous said...

இவன போல ஆளுங்களுக்கெல்லாம் தண்டனை அளிப்பதை அனைத்து நாடுகளுக்கும் live telecast செய்யவேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக ஒவ்வொரு பகுதியாக வெட்டி வெட்டி அவனை துடிக்க துடிக்க சாகடிக்கவேண்டும். அதை பார்க்கும் ஒவ்வொரு தீவிரவாதிகளும் பயப்பட வேண்டும்.