கடவுளை மற..மனிதனை நினை..

10 May 2010

டரியல் (10-மே-2010)

7:14:00 AM Posted by புலவன் புலிகேசி 24 comments
ஏ.ஆர். ரகுமானின் இரண்டாவது மகளான ரஹீமாவுக்கு மும்பையில் இருதய அறுவை சிகிச்சை நடை பெற்றுள்ளது.கடந்த சில தினங்களாக இசை மறந்து தன் மகளுக்காக இரவு பகல் பாராமல் தந்தைக்குரியக் கடமையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் ஏ.ஆர். ரகுமான். அவர் மகள் விரைவில் நலமுடன் திரும்ப என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
------------------------


"Need to better my bowling, rhythm hasn't been up to the mark... I ll come back strong in the remaining matches ...." இது முதல் சூப்பர்-8 போட்டி முடிவில் ஜாகிர்கான் அவரது ட்விட்டரில் வெளியிட்ட செய்தி. ஆனால் இரண்டாவது போட்டியிலும் கேவலமான பந்து வீச்சே. நமது பந்து வீச்சாளர்களின் திறமையான(?) பந்து வீச்சாலும், முக்கியமான போட்டிகளில் தன் திறமையைக் காட்டத் தவறிய மட்டையாளர்களாலும் இந்திய அணி இத்துடன் இந்த வருட உலக கோப்பையிலிருந்து வெளியேத் தூக்கி வீசப் பட்டிருக்கிறது.
------------------------

பெற்றோரின் ரத்தத்தை உறிஞ்சும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தை ஏற்க முடியாது எனத் தனியார் பள்ளிகள் சங்கம் கருத்து கூறியுள்ளது.

"பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பள்ளி தாளாளர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருமித்த கருத்துடன் கூடிய கல்வி கட்டணத்தை நிர்ணயித்தால் மட்டுமே நிர்வாக சிக்கல்களை பள்ளி தாளாளர்கள் தவிர்க்க இயலும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்" இது அவர்கள் கூறிய கருத்து.

தனியார் பள்ளிகள் என்றால் என்ன? அரசு பள்ளி என்றால் என்ன? கல்வியின் தர்ம் சிறப்பாகவே இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள் அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் வளர்ந்துக் கொழுத்துக் கொண்டிருப்பது தனியார் பள்ளிகளே. அவர்கள் இந்த அளவு துணிச்சலான அறிக்கை விடக் காரணமும் அரசு பள்ளிகளின் தரமின்மையே.

ஆசிரியர் பணியை சேவையாக நினைத்து செய்பவர்கள் மிகச்சிலரே. ஆனால் பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு கூட பணி புரிவதில்லை. படித்துப் பணிக்கு வரும் இது போன்றவர்களின் மெத்தனப் போக்கைக் கண்டிக்க ஆளில்லாமல் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து சாமான்ய மக்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிப்படைந்திருக்கிறது.

தனியார் பள்ளிகள் இதை மேற்கோள் காட்டியே தங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களே அரசுத் திருந்துவதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் நீங்கள் திருந்துங்கள் வாங்குகின்ற சம்பளத்தில் உண்ணும் உணவு உள் செல்லும் முன் யோசித்துப் பாருங்கள் "இந்த உணவுக்கான பணியை செய்திருக்கிறோமா" என்று. அப்போது உரைக்கும் உங்களுக்கு.
------------------------


"ராவணன்" படத்தின் பாடல்கள் வெளியாகி எதிர் பார்த்தது போலவே வெற்றியும் பெற்றிருக்கிறது. எனக்கு அனைத்துப் பாடல்களும் பிடித்துப் போயி விட்டது. குறிப்பாக அனுராதா ஸ்ரீராம், சங்கர் மகாதேவன் குரல்களில் "காட்டுச் சிறுக்கி" பாடலும் கார்த்திக்கின் குரலில் "உசுரே போகுதே" பாடலும் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. கேட்டுப் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.
------------------------

சில மாதங்களுக்கு முன்னர் பார்த்த ஒரு வீடியோ. என்னை மிகவும் கவர்ந்திழுத்தது. "ஒன்று பட்டால் உண்டு வாழ்வே" என்னும் தத்துவத்தை மிக அழகாக ஒரு சிறுவன் மூலம் எடுத்தியம்பும் இந்த வீடியோ உங்கள் அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும் என நினைத்ததால் இங்கே.


------------------------

இந்த வாரப் பதிவர்: அன்புடன் அருணா


இவர் பதிவுகளிலேயே என்னை மிகக் கவர்ந்தது சமீபமாக இவர் எழுதி வரும் "நிமிடத்தில் கடவுளாகலாம்". மிக அருமையாக கடவுளுக்கான புரிதல்களை எடுத்தியம்பும் இவை என்னை கவர்ந்தது. மேலும் இவர் இளமை விகடனில் "மாணவர்கள் தற்கொலை ஏன்?" என ஒரு தொடர் எழுதி வருகிறார். நல்ல பதிவுகளை சமுதாய நோக்கில் எழுதி வரும் இவருக்கு என் வாழ்த்துக்கள்.

இவரது வலைப்பூ: அன்புடன் அருணா
------------------------

இந்த வார டரியல் நண்பர் பலா பட்டரை ஷங்கரின் ம்ருதுளா... இந்த சிறுகதையைப் படித்துப் பாருங்கள். கவிதைகள் கலந்து மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.
------------------------

24 விவாதங்கள்:

Unknown said...

குறும்படம் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

பிரபாகர் said...

எல்லாம் அருமை புலிகேசி... குறும்படம் பிறகு பார்க்கிறேன்!

பிரபாகர்...

Chitra said...

superb!
200 followers - Congratulations!

dheva said...

அன்புடன் அருணாவின் அறிமுகத்திற்கும்.... நண்பர் பலா பட்டறை சங்கரின் கவிதைக் கதை எடுத்துக் காட்டியிருப்பதற்கும் மிக்க நன்றி! ம்ருதுளா....உண்மையிலேயே...சங்கர் மீது...மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது....

மொத்தத்தில் இந்தவார டரியல் சூப்பர்!

dheva said...

அன்புடன் அருணாவின் அறிமுகத்திற்கும்.... நண்பர் பலா பட்டறை சங்கரின் கவிதைக் கதை எடுத்துக் காட்டியிருப்பதற்கும் மிக்க நன்றி! ம்ருதுளா....உண்மையிலேயே...சங்கர் மீது...மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது....

மொத்தத்தில் இந்தவார டரியல் சூப்பர்!

ஜில்தண்ணி said...

\\நமது பந்து வீச்சாளர்களின் திறமையான(?) பந்து வீச்சாலும், முக்கியமான போட்டிகளில் தன் திறமையைக் காட்டத் தவறிய மட்டையாளர்களாலும் இந்திய அணி\\

காசு கொடுத்தா மட்டும் விளையாடும் யூசுப் பை என்ன செய்வது


\\இந்த வாரப் பதிவர்: அன்புடன் அருணா\\

இப்பதான் பார்த்தேன்
அருமையா இருக்கு
அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி

Paleo God said...

மிக்க மகிழ்ச்சி புலவரே :))

ஜெட்லி... said...

இராவணன்னில் எனக்கு பிடித்தது கெடா கெடா... கோடு போட்டா...
பென்னி தயாள் செம வாய்ஸ்...

vasu balaji said...

டரியல் கலக்குது:)

க.பாலாசி said...

//ஆசிரியர் பணியை சேவையாக நினைத்து செய்பவர்கள் மிகச்சிலரே. ஆனால் பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் வாங்கும் சம்பளத்திற்கு கூட பணி புரிவதில்லை.//

இந்த நிலைமை இப்போது பெரும்பாலும் மாறிவிட்டது என்று நினைக்கிறேன். தாங்கள் சொல்வதுபோல் 25 சதவீத ஆசிரியர்கள் இருக்கலாம்... நண்பனொரும் அரசுப்பள்ளியில் ஆசிரியனாக இருக்கிறான். அவன் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில் இந்த கருத்து....

அன்புடன் அருணா said...

அட! மீண்டும் டரியலிலா?????நன்றிங்கோ!!!

அன்புடன் நான் said...

மிக மிக அருமைங்க.. அத்தனையும்.

விஜய் said...

நல்ல வீடியோ

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

க ரா said...

எல்லாம் நல்லாருக்கு புலவரே.

Priya said...

நல்ல வீடியோ... thanks for sharing!

ஈரோடு கதிர் said...

ஏற்கனவே பார்த்த மிக அருமையான காணொளி

நன்றி

balavasakan said...

சூப்பர் டரியல் ராவணா.. வாவ் !!

மரா said...

நல்லதொரு கலவையான செய்திகள்.நன்றி

சசிகுமார் said...

நல்ல அறிமுகம், வாழ்த்துக்கள் அன்புடன் அருணா. உங்கள் புகழ் மேநேம்ளும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

ஏ.ஆர்.ஆர் பெண் நலம் பெற 'எங்கள்' பிரார்த்தனையும்...
பள்ளிக் கட்டணம் - கட்டுப் பாடு...ஏப்ரலுக்கு ஏப்ரல் நடக்கும் கூத்து...

'பரிவை' சே.குமார் said...

இசைப்புயலின் புதல்வி குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

வழக்கம் போல் டரியலில் தேங்காய்... மாங்காய்... சுண்டல்... அளவாய் சுவையாய் தித்திப்பாய் புலவரே..!

மிருதுளா படிச்சாச்சு.

ஷர்புதீன் said...

உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html

Thenammai Lakshmanan said...

இந்த வார டரியலும், ம்ருதுளாவும் அருமை புலிகேசி