நேற்றுடன் ஒரு வருடம். நமது இனம் அருகாமையில் அழிக்கப் பட்டிருக்கிறது. நாம் தமிழராய் இருந்து இதுவரை அதற்காக ஒன்றும் கிழித்து விடவில்லை. அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு போர் விதிமுறைகள் மீறப் பட்டிருப்பதாகவும், அப்பாவி மக்கள் கொல்லப் பட்டிருப்பதாகவும் வழக்கு ஒன்றைத் தொடுத்திருக்கிறது.
------------------கொளுத்தி எடுத்துக் கொண்டிருந்தது வெயில். "லைலா" (அட புயலோட பேர சொன்னேங்க) வந்ததும் செம குளிர்ச்சியாயிருச்சி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் அறையில் நிம்மதியான ஒரு உறக்கம். ஓடாத காற்றாடி வேகமாக ஓடியது, எரியாத விளக்கு நன்றாக எரிகிறது. மழைக்காகத் தவித்துக் கிடந்த என்னைப் போன்ற மக்களுக்கு "லைலா"(மறுபடியும் புயல்தான் நம்புங்க) ஒரு வரப்ரசாதம்.
------------------
வெஸ்ட் இண்டீஸ் போய் விளையாடி கோப்பையை கொண்டு வாங்கடான்னு அனுப்பி வச்சா, அங்க போய் குடிச்சிட்டு கலாட்டா பண்ணிருக்கானுங்க நம்ம "வீரர்"கள். யுவராஜ் சிங், ஆசிஷ் நெஹ்ரா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஜாகிர் கான், பியூஷ் சாவ்லா இந்த ஆறு பேர் தான் நம்ம நாட்டுக்காக போர் புரிந்த அந்த வீரர்(?)களாம்.
------------------
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக நம்ம ஏ.ஆர்.ரகுமான் இசைத்துக் கொடுத்தப் பாடலை 27 பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். பாடல் அவ்வளவு அழகாக வந்திருக்கிறது. இதற்கு சரியான ஒளி அமைத்தால் நிச்சயம் வந்தே மாதரம் அளவிற்கு வெற்றி பெறும்.
பாடலைப் பதிவிறக்கம் செய்ய:"செம்மொழியாம் எங்கள் தமிழ்"
------------------
இந்தக் குறும்படத்தை சமீபத்தில் நண்பர் ஒருவரின் ஆர்குட்டில் பார்த்தேன். ஒரு நிமிடத்தில் ஒரு கதை, அதை அழகாக சமுதாய கருத்துடன் சொல்லி யிருக்கும் விதம் என்னைக் கவர்ந்தது.
-----------------
இந்த வாரப் பதிவர்: தோழி "தேனம்மை லக்ஷ்மண்"
பதிவர் சந்திப்பு, நூல் வெளியீட்டு விழா எனப் பலத் தமிழ் சார்ந்த விழாக்களில் பங்கேற்று, அது குறித்த விளக்கங்கலையும் பதிவிட்டு வருகிறார். பூக்களின் காதலியான இவரது கவிதைகள் அனைத்தும் அவ்வளவு அழகு.
இவரது வலைப்பூ: "சும்மா"
------------------
கடந்த பத்து நாட்களாக யாருடைய வலைப்பூவையும் அவ்வளவாகப் படிக்க வில்லை. பணி நிமித்தமாக வலைப்பூ பக்கம் வர இயலவில்லை. அதனால் இந்த வ்ஆர டரியலில் யாருடையப் பதிவையும் சுட்டவில்லை. அடுத்த வாரம் நிச்சயம் சுட்டுகிறேன்.
------------------
21 விவாதங்கள்:
ஆகா !! இங்கயுந்தான் சுட்டெரித்த வெயிலுக்கு பிறகு நல்ல மழை நேற்று இரவு இன்னும் ஒரு வாரமாவது மழைபெய்யவேண்டும்...
டரியல் கலக்கல்
கதம்பம்.... வாசம் வீசுது.
குறும்படமும்,செம்மொழி இசையும் சூப்பர்
நன்றி
"லைலா" effect - எல்லாமே கூல்!
குரும்படம் அருமை
லைலா ஒரு ரவுண்டு வருவாங்கன்னு நினைக்கிறேன்... நமக்கு இந்த கோடையில் மழை பெய்தா சரிதான்...
செம்மொழி பாடலுக்கான லிங்க் கொடுத்தமைக்கு நன்றி....
குறும்படம் நல்ல பகிர்வு...
அடிக்கடி சொந்தங்களை பாக்க தலைவரே...
செம்மொழி பாடல் லிங்க்கிற்கு நன்றி தல...
அந்த குறும்படம் அருமையான கருத்து...
வழக்கம்போல் இந்த வார டரியலும் மிகவும் அருமை . அதிலும் அந்த குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது . பகிர்வுக்கு நன்றி !
"செம்மொழியாம் எங்கள் தமிழ்"
thanks Nanbere!
லைலாவைக் கொஞ்சம் ராஜஸ்தானுக்கு அனுப்புங்கோ!!!
ஆமாம் லைலா பத்தி தானே...
நல்லாத் தான் இருக்கு
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
மழை வந்தது சந்தோஷம்..
அப்படியே விடியலும் வரட்டும் எம் இனத்துக்கு..
:)
oonam paththi unga parvaiyai solli irukalam
டரியல் பலே தல.....
செம்மொழி பாடல் லிங்க்கிற்கு நன்றி தல...
லைலா வந்தாச்சா?..
அப்ப விழா எடுக்க வேண்டியதுதான்..ஹி..ஹி
முகத்தில் அறையும் குறும்படம்....
தரவிறக்கிக் கொண்டேன்...நன்றி.
செம்மொழி பாடல் அவ்ளோ சோக்கா இல்ல நண்பரே.டரியல் ஓகே.
தேனக்கா நல்ல செலேக்சன். நான் பாடலை பதிவிறக்கம் செய்து விட்டேன் நண்பா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நன்றி புலிகேசி.. நானும் வலைச்சரத்தில் இரு வாரங்களுக்கு எழுதுகிறேன்.. எனவே தாமதம் ஆகிவிட்டது..இங்கு வர..
Post a Comment