கடவுளை மற..மனிதனை நினை..

16 April 2010

அங்காடித்தெருவில் நான்

9:00:00 AM Posted by புலவன் புலிகேசி , , 19 comments

அங்காடித்தெருத் திரைப்படம் பார்த்து பல நாட்கள் ஆனாலும் இன்றும் மனதை விட்டு நீங்கவில்லை. இப்படி ஒரு திரைப்படத்தைத் தந்த வசந்தபாலனுக்கு என் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். இப்படத்தைப் பற்றி பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்து விட்டன.

ஆனால் எப்படிப் பட்ட விமர்சனமாக இருந்தாலும் இப்படத்தை அவர்களால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை என்பது அவர்களின் விமர்சனன்களை முழுமையாகப் படித்த பின் தெரிந்தது. பலர் விமர்சனங்களில் சொல்லியிருந்தது "படத்தில் சிலக் காட்சிகள் மிகைப் படுத்த்டப் பட்டுக் காட்டப் பட்டிருந்தது" என்று.

உண்மைதான், ஆனால் யதார்த்தத்தை அப்படியே படமாக்கினால் அப்படத்தை வெற்றிப் படமாக்க மக்கள் தயாராக இல்லை. சினிமாவிற்கென சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றைத் தாண்டிப் படமெடுக்கும் இயக்குனர்கள் மிகச்சிலரே. ஆனால் அவற்றை முற்றிலும் புறக்கணித்துப் படமெடுக்க இயக்குனர்கள் இல்லை என சொல்வதை விட, ஏற்றுக் கொள்ளும் ரசிகர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் வசந்தபாலன் எடுத்த இந்தப் படமும் சேர்ந்திருக்கிறது. மனித உணர்வுகளை படமாக்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அந்த கடினமான வேலையை செய்து ஒரு வெற்றியை பெற்றிருக்கிறார் வசந்த பாலன். இந்த அளவு உணர்வுகளைப் பதிந்ததற்கே மக்களிடம் என்ன வரவேற்பு கிடைத்திருக்கிறது?

மாஸ் ஹீரோக்கள் படம் அளவிற்கு வசூல் சாதனையோ, மக்கள் கூட்ட்ம் பெருந்திரளாகவோ இல்லை. பல திரையரங்கங்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள்தான் ஓடுகிறது. ஆனால் வழக்கமான மசாலா படமான "பையா" நான்கு காட்சிகள், வசூல் சாதனை எனப் பின்னியெடுக்கிறது.

இந்த நிலையில் அந்த விமர்சகர்கள் சொல்வது போல் படமாக்கியிருந்தால் வந்த சுவடு தெரியாமல் வெளியேறியிருக்கும் இந்த "அங்காடித் தெரு". இன்னும் மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு வரவில்லை என்பதுதான் உண்மை. இப்படம் பிடித்திருந்தாலும் குறுந்தகடுகளில் பார்க்கும் கூட்டம்தான் அதிகம்.


அப்புறம் பலர் சொல்லியிருந்தனர் "இப்படத்தின் பாதிப்பு சில மணித்துளிகளே இருக்கும்" என்று. உண்மைதான் என்றாலும் முழுமையாக ஒப்புக் கொள்ள இயலவில்லை. காரணம் இப்படத்தைப் பார்த்து விட்டு ரெங்கநாதன் தெருக் கடைகளுக்குள் நுழையும் யாருக்க்கும் அதன் ஊழியர்கள் மீது ஒரு கோபம் வரவைக்காது.

அவர்களிடம் ஒரு கணிவு கலந்த பேச்சு நிச்சயம் இருக்கும். அது அந்த ஊழியர்களுக்கு ஒரு உற்சாகத்தையும், சந்தோசத்தையும் தரக்கூடும். மேலும் இப்படம் பல ஆரோக்யமான விவாதங்களைத் தூண்டி விட்டிருக்கிறது. ஆனால் இப்படத்தின் பாதிப்பு எப்படி சில விநாடிகளோ, அதே போல்தான் அந்த விமர்சனங்களின் பாதிப்பும்.

அனைத்தும் கருத்து தெரிவிப்பதோடு நின்று விடும். வேறொன்றும் நிகழப் போவதில்லை. இலங்கைப் பிரச்சினை, உலகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துப் பழகிப் போய் விட்டோம். நம்மை சுற்றி நடக்கும் பிரச்சினைகளை மறந்து போய் விட்டோம்.

அங்காடித்தெரு - பார்க்காதவர்கள் திரையரங்கம் சென்று பாருங்கள்.

19 விவாதங்கள்:

இராஜ ப்ரியன் said...

நல்ல பகிர்வு

இளமுருகன் said...

வாங்க வேலு 'அங்காடி தெரு ' விமர்சனத்தோடு திரும்ப வந்திருக்கிங்க போல...
//வழக்கமான மசாலா படமான "பையா" நான்கு காட்சிகள், வசூல் சாதனை எனப் பின்னியெடுக்கிறது//

கஷ்டமாய் தான் இருக்கிறது,என்ன செய்ய?

இளமுருகன்
நைஜீரியா.

Chitra said...

இப்படத்தைப் பார்த்து விட்டு ரெங்கநாதன் தெருக் கடைகளுக்குள் நுழையும் யாருக்க்கும் அதன் ஊழியர்கள் மீது ஒரு கோபம் வரவைக்காது.

அவர்களிடம் ஒரு கணிவு கலந்த பேச்சு நிச்சயம் இருக்கும். அது அந்த ஊழியர்களுக்கு ஒரு உற்சாகத்தையும், சந்தோசத்தையும் தரக்கூடும்.


..... தொடர்ந்து மக்கள், அப்படி நடந்து கொண்டால் வரவேற்கப்பட வேண்டிய அம்சம். :-)
welcome back!

மாதேவி said...

"அங்காடித்தெருத் திரைப்படம் பார்த்து பல நாட்கள் ஆனாலும் இன்றும் மனதை விட்டு நீங்கவில்லை"

நல்ல செய்தி.நன்றி.

vasu balaji said...

welcome back:)

சைவகொத்துப்பரோட்டா said...

வருக!! வருக!!! புலவரே!!

அகல்விளக்கு said...

Welcome Back thala.........

மன்னார்குடி said...

விமர்சனம் ரொம்ப நல்லாயிருக்கு.

ILLUMINATI said...

You are right on one count friend....
Though they like this movie,people will see this only at cds and dvds.....But they are not the only ones to be blamed....The condition of theaters and their stupendous price makes people do so.....
When this changes,films like this will get much more success and collection.

And regarding paiyaa....
What can I say?Tamil rasanai.....avlothaan....

சசிகுமார் said...

வந்துட்டாருய்யா வந்துட்டாருய்யா இனிமே ஒரே கலக்கல் தான். நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

//அங்காடித்தெருத் திரைப்படம் பார்த்து பல நாட்கள் ஆனாலும் இன்றும் மனதை விட்டு நீங்கவில்லை.//

உண்மைதான் புலிகேசி சார், அந்தப் படத்தைப் பார்த்ததில் இருந்து மனம் கனத்துக் கிடக்கிறது

ஸ்ரீராம். said...

வேலைப்பளு முடிந்ததா..?
படம் நீங்கள் சொல்லும் அந்த அனுதாபத்தை ஏற்படுத்தினால் சரி.

சத்ரியன் said...

//அனைத்தும் கருத்து தெரிவிப்பதோடு நின்று விடும். வேறொன்றும் நிகழப் போவதில்லை. இலங்கைப் பிரச்சினை, உலகப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துப் பழகிப் போய் விட்டோம். நம்மை சுற்றி நடக்கும் பிரச்சினைகளை மறந்து போய் விட்டோம்.//

உண்மை நண்பா.

Unknown said...

//இப்படத்தைப் பார்த்து விட்டு ரெங்கநாதன் தெருக் கடைகளுக்குள் நுழையும் யாருக்க்கும் அதன் ஊழியர்கள் மீது ஒரு கோபம் வரவைக்காது//.

ரெங்கநாதன் தெருவுக்கு மட்டும் மல்ல....எந்த பெரிய கடை ஊழியர்களை பார்க்கும் போதும்...

சுசி said...

எப்டி இருக்கீங்க புலவரே..

பாடல்கள் பார்த்த அளவிலேயே பெரிய ஒரு எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு.. படத்தப் பத்தி..

நீங்க எழுதிய விதம் நல்லா இருக்கு.

படம் பார்த்ததும் என் கருத்த சொல்றேன்.

அன்புடன் அருணா said...

/நம்மை சுற்றி நடக்கும் பிரச்சினைகளை மறந்து போய் விட்டோம்.//
உண்மைதான்...

தாராபுரத்தான் said...

அவசியம் தியேட்டரில் போயி இன்னொரு தடவை பார்த்தா போச்சுங்க தம்பி.

ராஜ நடராஜன் said...

அங்காடி தெரு திரைப்படத்தை திரையரங்கில் பாருங்கள் என்கிறீர்கள்.எனக்கு திரையரங்கிலோ,டி.வி.டியாக கூட பார்க்கும் வாய்ப்பில்லை.அய்ங்கரன் கூடவா மார்க்கெட்டிங்க் செய்ய இயலாமல் இருக்கிறார்கள்?

மெல்லினமே மெல்லினமே said...

nalla pathivu !