கடவுளை மற..மனிதனை நினை..

19 April 2010

டரியல் (19-ஏப்ரல்-2010)

6:43:00 AM Posted by புலவன் புலிகேசி 24 comments
ஒரு வழியாக பழைய நிறுவனத்திலிருந்து விடைபெற்று புதிய நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வாரமாயிற்று. பணி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இனி நிச்சயம் அவ்வப்போது வலைப்பூவில் தலையைக் காட்டுவேன்.

------------------------------------
"தமிழ்ப் பட பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவதாக சிலர் குறைபட்டுக் கொண்டனர். அப்படியெல்லாம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. நான் துட்டுக்கு பாட்டு எழுதும் கவிஞன். தமிழை வளர்க்க நான் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. அது தன்னாலேயே வளரும் தன்மை கொண்டது..."

எனக் கவிஞர் வாலி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

------------------------------------
தாயார் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை:


"விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல."

அப்புடிங்களா சுவாமி, அப்ப இங்க ஆட்சியில இருக்குறவங்க எல்லாம் இந்தியர்கள் தானா? அவங்கல்லாம் வந்துத் தங்க அனுமதிப்பீங்க, ஒரு தமிழ் மூதாட்டி வரக்கூடாது. வாழ்க உமது மனித நேயம்.

------------------------------------

நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் விடுத்து பதி விரத பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார் அந்த கொச்சைத்(பச்சை) தமிழன். இவரை முதல்வர் என்கிறோம். இது போன்ற விசயங்களில் இவர்தான் முதல்வர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
------------------------------------
இந்த வாரப் பதிவர்: சிறகுகள் "பாலவாசகன்"


திடீர் திடீர் என இவர் எழுதும் காதல் கவிதைகள் மிக அழகாகவும், அருமையாகவும் இருக்கும். புகைப்பட விரும்பி. அவ்வப்போது தான் தன் அலைபேசியில் எடுத்தப் படங்களை வெளியிடுவார்.

இவரது வலைப்பூ: சிறகுகள்

------------------------------------

இந்த வார டரியல் நண்பர் அகல் விளக்கு எழுதிய "கடவுளும், நானும்". இவரும் கடவுளைக் காண்பதில் என் வரிசையில் சேர்ந்து விட்டார். படித்துப் பாருங்கள் புரியும் அவர் கடவுளை எங்கே கண்டார் என.

24 விவாதங்கள்:

பிரபாகர் said...

புது வேலையில் பரிமளிக்க வாழ்த்துக்கள் புலிகேசி.

பிரபாகர்.

Chitra said...

வாழ்த்துக்கள், புதிய வேலைக்கு!
பதிவு, காரசாரமாக நல்லா இருக்குங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

அப்பப்ப தலைய காட்டுனாலும்,
காட்டமாவே இருக்கு!!
புதிய வேலையில் சிறக்க வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் முருகவேல்

காமடி பீசு சொன்னத பெரிசா எடுத்துக்கிட்டு அந்தாளுக்கு ஏன் இத்தன விளம்பரம் கொடுக்கனும்

மரா said...

புது ஆபிசா? சொல்லவே இல்ல. வாழ்த்துக்கள். வாலி எப்போதுமே வெளிப்படையானவர். சுப்ரமணியசாமி யாருங்க? எனக்குத் தெரியாது!

Unknown said...

வாழ்த்துகள், புது வேலைக்கு...

//காமடி பீசு சொன்னத பெரிசா எடுத்துக்கிட்டு அந்தாளுக்கு ஏன் இத்தன விளம்பரம் கொடுக்கனும்//

ரிப்பீட்ட்டு

Tamil said...

//யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல//

வெண்ணை, இது உனக்கும் பொருந்தும்
Go back to Persia

முனைவர் இரா.குணசீலன் said...

சிந்தனையும் அறிமுகமும் அருமை நண்பா..

vasu balaji said...

வாழ்த்துகள் நண்பரே.:)

ஸ்ரீராம். said...

முன்னர் சொன்ன அலுவலக டென்ஷன்கள் குறைந்து விட்டதில் மகிழ்ச்சி. பதிவுகளைத் தொடருங்கள்

ஜெட்லி... said...

வாங்க புலி......

பனித்துளி சங்கர் said...

//////ஒரு வழியாக பழைய நிறுவனத்திலிருந்து விடைபெற்று புதிய நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வாரமாயிற்று. பணி நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இனி நிச்சயம் அவ்வப்போது வலைப்பூவில் தலையைக் காட்டுவேன்.////////


ஏலே புலவரே இனி அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்துதொங்க வேண்டும் .

மீண்டும் வருவேன்

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் நண்பரே...

அவன்லாம் ஒரு மனுஷன்ட்டு............ இந்த இடத்துல ரெண்டுப்பேரச் சொன்னேன்....

சுசி said...

பணி சிறக்க வாழ்த்துக்கள் புலவரே.

டரியல் :))))

irudayaa said...

இன்ன நயினா...! நீ இப்பிடியெல்லாம் கூவுரதுனால தான் உன் கட்சியிலே தொண்டர்களே இல்ல. இன்னா பிரியுதா. இன்னொரு தபா எங்க காவல் தெயவத்த பத்தியும் அவுர் ஆயி அப்பன் பத்தியும் எதாவது கிறுக்கு மாதிரி பேசின மவன உன்ன இன்னா பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. ஆமா.

இளமுருகன் said...

சிறகுகள்,அகல்விளக்கு அறிமுகத்திற்கு நன்றி.

புதிய வேலையிலும் ஜொலிக்க வாழ்த்துகள்

இளமுருகன்
நைஜீரியா

'பரிவை' சே.குமார் said...

புது வேலை உற்சாகத்தைக் கொடுக்கட்டும்.
நிறைய எழுதுங்கள்.

malarvizhi said...

புது வேலை !!!!!! வாழ்த்துக்கள் புலவரே! பதிவு நன்றாக உள்ளது.

மங்குனி அமைச்சர் said...

//தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல."///




அப்பா இந்தியா சுப்ரமணிய சாமியின் அப்பன் வீட்டு சொத்து போலருக்கு

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ராஜவம்சம் said...

http://nizamroja01.blogspot.com/2010/04/blog-post.html

வாழ்த்துக்கல் புலவரே

இனியாள் said...

http://pulikesi.wordpress.com/ ithu ungalodatha.....

அன்புடன் அருணா said...

பூங்கொத்து வாழ்த்துக்கள், புதிய வேலைக்கு!

புலவன் புலிகேசி said...

//இனியாள் said... 23

http://pulikesi.wordpress.com/ ithu ungalodatha.....
//

இல்ல இந்து..அது என்னுதில்ல