கடவுளை மற..மனிதனை நினை..

24 March 2010

பதிவுலகின் விமர்சன மேதாவிகள்

6:01:00 AM Posted by புலவன் புலிகேசி , 64 comments

விமர்சனம் என்றால் என்ன? என பொருள் தேடிப் பார்த்தால் ஒன்றின் நல்லவைக் கெட்டவைகளை ஆராய்வது என்றுதான் பொருள் இருக்கிறது.இங்கு ஒன்றின் என்று வரும் போதே அது மனிதன் போன்ற ஜீவராசிகளைக் குறிப்பதில்லை எனப் பொருள் படுகிறது. ஏனென்றால் ஒரு மனிதனை விமர்சிக்க இன்னொரு மனிதனுக்கு தகுதி இருக்கிறதா என்பது கேள்விக்குறியே(?).

இன்று திரைப்பட விமர்சனங்களை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள நல்லவைகளும், கெட்டவைகளும் பகுக்கப் ப்ட்டு விமர்சனம் செய்யப் படுகிறது. அது ஒரு ஆரோக்யமான விமர்சனம். ஆனால் ஒரு தனி மனிதனை விமர்சிக்கும் போது அவனின் நல்ல குணங்கள் பெரும்பாலும் மறைக்கப் பட்டு அவனிடம் உள்ள பிழைகளே விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.

ஒரு மனிதன் எப்போது விமர்சனத்திற்குள்ளாகிறான்? அவன் ஒரு பிரபலமானவனாக மாற்றம் பெற்ற பின்புதான். இது ஏன் என அது போன்ற விமர்சனங்களின் ஆதரவாளனான ஒரு பதிவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் "பிரபலங்களின் தவறான செயல் அனைவரையும் பாதிக்கும் என்றார்". இது ஒரு புறமிருக்கட்டும், முதலில் பிரபலம் என்பது மக்களின் மத்தியில் தெரியப்பட்ட ஒரு மனிதனாவது. இது நல்லவை, தீயவை இரண்டிற்கும் பொதுவே.

நல்லவர்கள் மட்டும் பிரபலமடைவதில்லை. ஓசாமா போல் பிரபலமடைந்த தீயவர்களும் இருக்கிறார்கள். நான் ஓசாமாவைப் பின் பற்றுகிறேன் என எவரும் சொல்வதில்லை. காரணம் அங்கு தீமை இருகிறது. ஆனால் ஒரு பிரபலமடைந்த நல்ல குணமுடையவனிடம் இருக்கும் தீமை மட்டும் எதிர்க்கப் பட்டால், மக்களுக்கு நன்மை, தீமைகளை பகுத்தறியத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம்.

உண்மையில் பார்த்தால் நல்ல குணம் மட்டும் கொண்டவர் என ஒருவர் கூட கிடையாது. நன்மை, தீமை கலந்ததுதான் மனித வாழ்வு. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தவறு செய்து விட்டு தான் இறக்கிறோம். அப்படி எல்லாம் இல்லை என ஒருவரும் சொல்ல முடியாது. இப்படி இருக்கையில் இன்னொருவரின் குறைகளை விமர்சிக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.

நித்யானந்தர் பிரச்சினையை படம்பிடித்து காசு பார்த்த ஊடகங்களுக்கு துணை நின்றோம். என்ன பலன் கிடைத்தது? உண்மையில் அவனை விமர்சிப்பதால் என்ன நன்மை நடந்தது. நன்மையை விட தீமைதான் அதிகம். இதன் விளைவு இன்று சிறுவயது குழந்தைக்கு கூட நித்யானந்தன் என்ன செய்தான் என தெரிந்திருக்கிறது.

உண்மையில் நித்யானந்தனால் பாதிக்கப் பட்டது யார்? அவனை முட்டாள்த் தனமாக நம்பிய மக்கள் ஏமாற்றப் பட்டனர். தவறு செய்தவனை விட, அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவனைத்தான் நான் குற்றவாளி என சொல்வேன். நித்யானந்தனுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது யார்? முட்டாள் மக்கள் தானே? அப்போ நியாயமாகப் பார்த்தால் விமர்சிக்கப் பட வேண்டியது அவர்கள் தானே?

அரசியல்வாதியானாலும் அவனின் தனிப்பட்ட விடயங்கள் விமர்சிக்கப் பட வேண்டியதல்ல. எந்தத் துறைப் பிரபலமானாலும் சரி, மக்களை பாதிக்கும் விடயங்கள் மட்டுமே விமர்சிக்கப் பட்டு தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். ஆனால் அந்த வேலையை செய்ய எந்த ஊடகமாவது தயாரா?

ஊடகங்களின் சுதந்திரம் எல்லாம் அடுத்தவனின் படுக்கை அறையை நோக்கிதான். எதைக் காட்டினால் காசு கிடைக்கும் எதை மறைத்தால் பெரிய வளர்ச்சியடைய முடியும் என்ற சிந்தனை மட்டுமே அவர்களுடையது. அவ்ற்றில் மயங்கிப் போய் மங்கிப் போவது மக்களின் குணமாக இருக்கிறது.

ஒருவனைப் பிரபலம் என்று சொல்லுங்கள். அவனின் சாதனைகளைப் புகழுங்கள். அதற்குரிய மரியாதையை செலுத்துங்கள். எந்த தவறும் இல்லை. ஆனால் அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி அவனை பர்சனலாக நம்பாதீர்கள். அது அவனுக்கு தவறு செய்யும் தூண்டுகோலாக மாறக்கூடும். நம்மைப் பொறுத்த வரை அவன் ஒரு சாதனையாளன், பிரபளம். அவ்வளவே இருக்க வேண்டும்.

குறைகளை எல்லாம் நம்மிடமே வைத்துக் கொண்டு அடுத்தவனை விமர்சிக்கும் வேலையை பதிவுலகிலாவது விட்டொழிப்போம். அது போன்ற விமர்சனங்களை ஆதரிக்காமலாவது இருப்போம்.

இந்தப் புரிதல்களைப் பற்றி ஆராயாமல் சச்சின், வைரமுத்து, இளையராஜா மற்றும் பதிவர்கள் போன்றோரை விமர்சிப்பதால் என்ன பயன்? அவர்களின் குறைகளை சொல்ல விமர்சகர்களுக்கு என்னத் தகுதி இருக்கிறது?


64 விவாதங்கள்:

ஸ்ரீராம். said...

உண்மை. நல்ல சிந்தனையுடன் கூடிய பதிவு. இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வந்தன,
"சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றம் கூறுகையில்,
மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மார்பினைக் காட்டுதடா..
மனிதர்களே உங்கள் குற்றத்தை மறைக்க முதுகைப் பாருங்கள்...
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்..." என்ற பழைய பாடலும்,

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில்
மிகை நாடி மிக்கக் கொளல்.

என்ற குறளும்.

Anonymous said...

வெறும் வழிப்போக்கனா இருக்குறது தான் பெட்டர்னு தோணுதா? உங்களுககு யார் மீது கோபம்? ஏன் கோபம்? சொல்ல வர்றதுதான் என்ன? முதலில் தெளிவா சிந்திங்க. எழுதுங்க.

புலவன் புலிகேசி said...

//வெறும் வழிப்போக்கனா இருக்குறது தான் பெட்டர்னு தோணுதா? உங்களுககு யார் மீது கோபம்? ஏன் கோபம்? சொல்ல வர்றதுதான் என்ன? முதலில் தெளிவா சிந்திங்க. எழுதுங்க.//

நீன்கத் தெளிவாப் படிச்சீங்களா??? விமர்சனம் செய்பவர்கள் செய்வது சரின்னு சொல்றீன்களா?

திருவாரூர் சரவணா said...

கிட்டத்தட்ட உங்கள் கருத்துதான் என் கருத்தும் நண்பரே. தெளிவாக எழுதுவதாக நினைத்து நானும் இரண்டு பதுவுகளில் குழப்பியிருப்பதாகத்தான் நினைக்கிறேன். நேரமிருந்தால் பாருங்கள்.

http://ilaiyabharatham.blogspot.com/2010/03/blog-post_07.html

http://ilaiyabharatham.blogspot.com/2010/03/blog-post_10.html

Anonymous said...

பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் எல்லோருமே விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் தான். அது, ரஜினிஷா இருந்தாலும் சரி, நித்தியா இருந்தாலும் சரி, சச்சினா இருந்தாலும் சரி, நீங்களா இருந்தாலும் சரி, நானா இருந்தாலும் சரி... அரசியல்வாதிகளை விமர்சிக்கனும்னா மேதைகளா இருக்கணும்ன்ற அவசியம் இல்லை... ஒழுங்கா ஓட்டுப் போடுறவனா இருந்தாலே போதும். விமர்சனம் செய்றவன் சரியில்லைன்னா, அவனையும் விமர்சியுங்க. அத உட்டுட்டு இப்படி எல்லாம் ஃபீல் பண்ணக்கூடாது. முழுசா படிச்சுட்டு தான் கருத்து பதிவு செய்தேன். நீங்க ஏதோ சொல்ல முயற்சி பண்றீங்க. ஆனால், அதுக்கு கொடுக்குற விளக்கங்கள் தான் நீங்களே குழப்பத்துல இருக்கிறத காட்டுது.

புலவன் புலிகேசி said...

//அரசியல்வாதிகளை விமர்சிக்கனும்னா மேதைகளா இருக்கணும்ன்ற அவசியம் இல்லை... ஒழுங்கா ஓட்டுப் போடுறவனா இருந்தாலே போதும். விமர்சனம் செய்றவன் சரியில்லைன்னா, அவனையும் விமர்சியுங்க. அத உட்டுட்டு இப்படி எல்லாம் ஃபீல் பண்ணக்கூடாது. //

அர்சியல்வாதியாக இருந்தாலும் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை...மக்களுக்கு எதிரான செயல்கள் விமர்சிப்பதில் தவறில்லைன்னுதான் சொல்லிருக்கேன்...நான் சொல்ல வந்தது இன்னொருவனை விமர்சிக்கும் முன் சுய விமர்சனம் செய்து பர்க்க வேண்டும். அவனை இமர்சிப்பதால் மக்களுக்கு என்ன நன்மை என யோசிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்...

Anonymous said...

@புலவன் புலிகேசி //அர்சியல்வாதியாக இருந்தாலும் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை...//

தப்புங்க. பொதுவாழ்க்கைக்கு வந்துட்ட பிறகு ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சனத்துக்கு உட்பட்டதுதான்னு பெரியவங்க சொல்லுவாங்க.

Anonymous said...

@புலவன் புலிகேசி//அர்சியல்வாதியாக இருந்தாலும் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தால் - ஒன்றும் ஆகப் போவதில்லை- ...//

ஒன்றும் ஆகப் போவதில்லைன்னு எப்படிங்க சொல்ல முடியும். இதில், கிளிண்டன் விவகாரத்தை விட எளிமையான உதாரணம் வேற இருக்க முடியாது. குறைந்த பட்சம் தவறிருந்தால் ஒப்புக்கொண்டு மன்னிப்பாவது கேட்க வேண்டும். "ஒன்றும் ஆகப் போவதில்லை," என்று சும்மா இருந்துவிட்டால், நம்மைப் போன்ற சாமானியர்கள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு புலவரே.

மரா said...

எனக்கும் சிரவணன் கூறுவதே சரியெனப் படுகிறது. தனிமனித ஒழுக்கம் மிக மிக முக்கியம் புலவரே யாராயினும்..

புலவன் புலிகேசி said...

//siravanan said...

@புலவன் புலிகேசி //அர்சியல்வாதியாக இருந்தாலும் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை...//

தப்புங்க. பொதுவாழ்க்கைக்கு வந்துட்ட பிறகு ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையும் விமர்சனத்துக்கு உட்பட்டதுதான்னு பெரியவங்க சொல்லுவாங்க.
//

ஏங்க இன்னும் பெரியவங்க சொன்னாங்க பெரியவங்க சொன்னாங்கன்னு ஏமாத்திட்டிருக்கீங்க...சுயமா முடிவெடுக்கத் தெரியாதா...?

புலவன் புலிகேசி said...

//ஒன்றும் ஆகப் போவதில்லைன்னு எப்படிங்க சொல்ல முடியும். இதில், கிளிண்டன் விவகாரத்தை விட எளிமையான உதாரணம் வேற இருக்க முடியாது. குறைந்த பட்சம் தவறிருந்தால் ஒப்புக்கொண்டு மன்னிப்பாவது கேட்க வேண்டும். "ஒன்றும் ஆகப் போவதில்லை," என்று சும்மா இருந்துவிட்டால், நம்மைப் போன்ற சாமானியர்கள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்கள்.//

நம்மைப் போன்ற சாமானியர்கள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறோமா? பொது வாழ்க்கைக்கு வந்தால் மட்டுமே ஒழுங்காக இருக்க வேண்டும் என்பது சரியா? விமர்சிக்க வேண்டிய விஷயங்கள் அவர்களின் ஊழல்கள், பணமாலைகள். அவற்றை எத்தனைப் பேர் நித்யானந்தர் விடயம் அளவிற்கு பெரிதாக விமர்சித்திருக்கிறீர்கள்? பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்....

புலவன் புலிகேசி said...

//மயில்ராவணன் said...

எனக்கும் சிரவணன் கூறுவதே சரியெனப் படுகிறது. தனிமனித ஒழுக்கம் மிக மிக முக்கியம் புலவரே யாராயினும்..
//

இல்லை மயில் உங்கள் புரிதல் தவறாக இருக்கிறது. நித்யானந்தருக்கும், சச்சினுக்கும் எதிராக கொடி பிடிபப்வர்கள் ஏன் இவர்களுக்கு எதிராகப் பிடிக்கவில்லை. அப்படியே பிடித்திருந்தாலும் ஒரு நாளுடன் தூக்கி எரிகின்றனர். நித்யானந்தரை விமர்சிக்கும் அளவு அரசியல்வியாதிகள் விமர்சிக்கப் பட்டால் நிச்சயம் அவர்கள் பிடிபடுவார்கள். அதை செய்ய மறுப்பவர்களுக்கு அவர்களின் படுக்கை அறை விமர்சனம் செய்ய என்னத் தகுதி அல்லது தேவை இருக்கிறது?

Anonymous said...

@புலவன் புலிகேசி ரொம்ப கரெக்ட். ஆனால், ஃபாலோ பண்ண வேண்டிய விஷயங்களை நீங்க சொன்னாலும் நீங்க பெரியவங்கதான். அப்படி ஃபோல பண்றது தப்பு இல்ல. எல்லா விஷயத்துலயும் சுயபுத்திய பயன்படுத்துவதும் ஆபத்தானது, உங்களோட இந்தப் பதிவு போல. அது, தவறான முன்னுதாரணமாக ஆயிடும்.

பொதுவாழ்க்கையில் இருக்கிறவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை கண்டுக்காம இருக்கிறதுதான் 'சுயமா சிந்திச்சு எடுக்கிற முடிவு'ன்னு சொன்னா, இன்னும் முதிர்ச்சி தேவைப்படுத்துன்னும் அர்த்தம்.

Anonymous said...

@புலவன் புலிகேசி நல்லா எழுதுறீங்க. நிறைய படிங்க. வாழ்த்துகள் புலவன் புலிகேசி.

புலவன் புலிகேசி said...

//பொதுவாழ்க்கையில் இருக்கிறவங்களோட தனிப்பட்ட வாழ்க்கையை கண்டுக்காம இருக்கிறதுதான் 'சுயமா சிந்திச்சு எடுக்கிற முடிவு'ன்னு சொன்னா, இன்னும் முதிர்ச்சி தேவைப்படுத்துன்னும் அர்த்தம்.//

அதை மட்டுமே பெரிதாய் எழுதுவதை விட அவற்றை எழுதாமலிருப்பதுதான் சிறந்தது. படுக்கை அறை, தப்புகள் எல்லாம் பிரபலமானவர்களுக்கு மட்டுமே என நினைப்பது மிகமிகத் தவறு. இதில் அனைவரும் சமமே. அப்படி இருக்கையில் அவற்றை விமர்சிப்பதால் மக்களுக்கு என்ன நன்மை? சொல்லுங்கள்...

விமர்சனம் செய்ய வேண்டிய விடயங்களை விடுத்து அடுத்தவனின் அந்தரங்கங்களை ஆராய்வதுதான் முதிர்ச்சி என்றால் நான் முதிர்ச்சியற்றவனாகவே இருந்து விட்டுப் போகிறேன்...நன்றி..

புலவன் புலிகேசி said...

ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள். நித்யானந்தன் செய்ததாக சொல்லப் படும் தவறுகளுக்கு அவன் மட்டும் காரணம் என்றால் அது சுத்தப் பொய் அல்லது மழுப்பலான பதிலாகத்தான் இருக்கும். அவனை வளர்த்து விட்டு அவனை நம்பிய மக்கள்தான் இங்கு குற்றவாளிகள்...விமர்சிக்கப் பட வேண்டியவர்கள் மக்கள்...

Chitra said...

Thought for the day...

dheva said...

சிந்திக்க வேண்டிய நல்ல கருத்து... நண்பரே....! வாழ்த்துக்கள்!

//எந்தத் துறைப் பிரபலமானாலும் சரி, மக்களை பாதிக்கும் விடயங்கள் மட்டுமே விமர்சிக்கப் பட்டு தோலுரித்துக் காட்டப்பட வேண்டும். ஆனால் அந்த வேலையை செய்ய எந்த ஊடகமாவது தயாரா?//

பனித்துளி சங்கர் said...

////////////ஒரு மனிதன் எப்போது விமர்சனத்திற்குள்ளாகிறான்? அவன் ஒரு பிரபலமானவனாக மாற்றம் பெற்ற பின்புதான்.////////////

நண்பருக்கு வணக்கம் . விமர்சனம் பற்றிய உங்களின் இந்த பதிவு மிகவும் குறுகிய கண்ணோட்டத்தில் எழுதியதாகவே தெரிகிறது . மொத்தத்தில் விமர்சனம் என்பது பிரபலமானவர்களுக்கு மட்டும்தான் என்று நீங்கள் சொல்லி இருப்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாக தெரிகிறது . நீங்கள் சொல்ல வந்தது
விமர்சனம் பற்றியா ?
இல்லை
இன்றைய நிலையில் விமர்சனத்தின் சீரழிவு பற்றியா ?
என்பது எனக்கும் சற்றுக் குழப்பமாகத்தான் உள்ளது .

படைப்பின் பயனாக வாசகனாக நீங்கள் அடையும் அனுபவத்தின் குறிப்பு தான் விமர்சனம். ஆனால் கிளர்ந்த உணர்வின் பாங்கையும், ஒரு வித நிர்ணயிப்பையும் செய்வது விமர்சனம். நிதர்சனத்தில், வலையில் இருக்கும் அத்தனை பேரும் விமர்சித்துக்கொண்டிருந்தாலும் விமர்சனத்திற்கென்று சில சாம பேதங்கள், இலக்கணங்கள், ஏன் ரெஃபரன்ஸ் புத்தகங்கள் கூட இருக்கின்றன.
அடிப்படையில், விமர்சனம் மூன்று வகைப்படும்-

- நார்மேட்டிவ்
- இண்டர்ப்ரெட்டிவ்
- டிஸ்க்ரிப்டிவ்.


நார்மேட்டிவ் என்பது ஆசிரியர் எவ்வழியோ, மாணவன் அவ்வழி ரகம். கோடு போட்டால் ரோடு போடும் பேர்வழிகளுக்கு. ஒரு கலைப்படைப்பை அதை நிறுவியவர் எவ்வாறாய் விளங்கச்செய்ய முனைகிறாரோ, அதன் கூற்றுபடி செவ்வன நடந்துகொள்வது. ஏன் எதற்கு போன்ற கேள்விகள் எழாது. இவ்வகையானது ஊடகங்களை விட ஆய்வு, நூலாசிரியர், கல்லூரி பேராசிரியர் அந்தஸ்துகளில் இருப்பவர்களது தொழில்.

இண்டர்ப்ரெட்டிவ் என்றால்.. அதே தான் புரிந்து கொள்ளுதல். இன்னும் சொல்லப்போனால் எதிர்வினை புரிதல். இவ்வகை விமர்சகர்கள் தான் ஜாஸ்தி. "படம் மொக்க மச்சி!" தொடங்கி "..இது எழுத்தாளரின் ஆகச்சிறந்த ஆளுமை.." ரேஞ்சில் செயல்படக்கூடியது. கலைக்குள் மூழ்கி முத்தெடுத்து தனது அனுபவத்தை முன் வைக்கும் முயற்சி. இங்கு முந்தைய பகுப்பிற்கு நேரெதிராக விமர்சகனும் வாசகனும் சமநிலையில் இருக்கிறார்கள் என்பது காண்க.

டிஸ்க்ரிப்டிவ் என்பது வரலாற்றுப் புத்தகம் மாதிரி. வெறுமனே தகவல் தெரிவிக்கும் வேலையை செய்வது. விக்கிப்பீடியாவைப் போல. பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.

மேலோட்டமாக இவ்வளவே. இன்னும் உபபிரிவுகளென முதல் வகையில் நான்கு, மீதியிரண்டிலும் மூன்று மூன்றாக மொத்தம் விமர்சனம் பத்து வகைப்படும். உலக சினிமா விமர்சகர்களாக பார் போற்றும் பெரியவர்கள் ஜோனதன் ரோசன்பாம், ரோஜர் ஈபர்ட் முதலியவர்கள், தேர்ந்த புகைப்பட கட்டிடக்கலை நடுவர்கள், விமர்சகர்கள் அனைவரும் இரண்டாம் வகையான இண்டர்ப்ரெட்டிவ் க்ரிட்டிசிசத்தையே செப்பனிட்டும், செவ்விய முறையில் தழைத்தோங்கவும் செய்ய விழைகிறார்கள்.

இப்படி விமர்சனத்திற்க்கும் சில சிறப்புகள் இருக்கிறது . ஏதோ இன்று சற்றும் சோதிக்காமல் யாரோ சொல்வதையும் , கேட்டதையும் வைத்தது பக்கம் பக்கமா ஒன்றுக்கும் உதவாத சில நிகழ்வுகளை பற்றி காது , மூக்கு ,மூக்குத்தி எல்லாம் குத்தி தன்னை பெருமையாக நினைக்கவேண்டும் என்பதற்காக கண்மூடித் தனமாக நாம் எல்லோரும் செய்யும் ஆமாம் சாமி என்று தலை அசைக்கும் இன்றையக் கேவலமான விமர்சனங்கள் . விமர்சனம் என்ற வார்த்தையின் மொத்த சிறப்பையும் என்றோ ஆழத்தில் புதைத்துவிட்டது .


புரிதலுக்கு நன்றி !

க.பாலாசி said...

//இதன் விளைவு இன்று சிறுவயது குழந்தைக்கு கூட நித்யானந்தன் என்ன செய்தான் என தெரிந்திருக்கிறது.//

சரிதான்....

sweet said...

Pani thuli sankar is right. i think this pulikesi is talking foolishly?

okey i like sachin

bye
madhumidha

sweet said...

Pani thuli sankar is right. i think this pulikesi is talking foolishly?

okey i like sachin

bye
madhumidha

sweet said...

Pani thuli sankar is right. i think this pulikesi is talking foolishly?

okey i like sachin

bye
madhumidha

vasu balaji said...

:).நல்லா எழுதியிருக்கீங்க.

புலவன் புலிகேசி said...

//தோ இன்று சற்றும் சோதிக்காமல் யாரோ சொல்வதையும் , கேட்டதையும் வைத்தது பக்கம் பக்கமா ஒன்றுக்கும் உதவாத சில நிகழ்வுகளை பற்றி காது , மூக்கு ,மூக்குத்தி எல்லாம் குத்தி தன்னை பெருமையாக நினைக்கவேண்டும் என்பதற்காக கண்மூடித் தனமாக நாம் எல்லோரும் செய்யும் ஆமாம் சாமி என்று தலை அசைக்கும் இன்றையக் கேவலமான விமர்சனங்கள் . விமர்சனம் என்ற வார்த்தையின் மொத்த சிறப்பையும் என்றோ ஆழத்தில் புதைத்துவிட்டது .
//

நல்ல விளக்கங்கள் தோழரே...நான் இக்கால விமர்சனங்களின் சீரழிவு பற்றிதான் சொல்கிறேன்..இந்த சீரழிவுதான் இன்ரு விமர்சனம் எனப் பெயர் பெறுகிறது....

புலவன் புலிகேசி said...

//sweet said...

Pani thuli sankar is right. i think this pulikesi is talking foolishly?

okey i like sachin

bye
madhumidha
//

ரொம்ப நன்றிங்க மேதாவி...

புலவன் புலிகேசி said...

வரைமுறைகளை எல்லாம் விட்டுத் தள்ளி விட்டு சமூகத்திற்கு நன்மை என்ன என யோசித்ஹ்டுப் பாருங்கள். அப்போது புரியும் இந்த foolish பையன் என்ன சொல்றேன்னு?

பிரிட்டோ said...

உங்கள் விமர்சனம் தவறு என்று நினைக்கிறேன். பொதுவாழ்க்கையில் வரும்போது அவனது அந்தரங்களை விமர்சிக்க உரிமை கிடையாது.ஆனால் அது எல்லா விசயத்திலும் இல்லை. நித்யானந்தர் பிரம்மசர்யத்தை வளியுருத்தி கூறினார். ஆனால் அவர் நடந்து கொண்டது வேறு.இதை விமர்சிப்பது தவறா?. ஒருவர் பற்றிய விமர்சனம் என்பது பொதுவாழ்க்கையில் அவர் செய்யும் செயலுக்கு எதிர்மாறாக செய்யும் போது விமர்சிப்பதுதான்.அது அந்தரங்கமாக இருந்தாலும் சரியே(ஒருவர் லஞ்சம் வாங்குவது தவறுனு எல்லோரிடமும் சொல்லிட்டு தான் மட்டும் லஞ்சம் வாங்கினால் அது அவ்ர் சொந்த விசயம் என்று சொல்லுவீர்களா?) .இதுவே நித்யானந்தர் பிரம்மசர்யத்தை பற்றி கூறாமல் சம்சாரியத்தை பற்றி கூறியிப்பாராயின் இந்த விசயம் இவ்வளவு தூரம் விமர்சன்த்திற்க்கு உள்ளாகியிருக்காது என்பது என் கருத்து.

புலவன் புலிகேசி said...

//உங்கள் விமர்சனம் தவறு என்று நினைக்கிறேன். பொதுவாழ்க்கையில் வரும்போது அவனது அந்தரங்களை விமர்சிக்க உரிமை கிடையாது.ஆனால் அது எல்லா விசயத்திலும் இல்லை. நித்யானந்தர் பிரம்மசர்யத்தை வளியுருத்தி கூறினார். ஆனால் அவர் நடந்து கொண்டது வேறு.இதை விமர்சிப்பது தவறா?. ஒருவர் பற்றிய விமர்சனம் என்பது பொதுவாழ்க்கையில் அவர் செய்யும் செயலுக்கு எதிர்மாறாக செய்யும் போது விமர்சிப்பதுதான்.அது அந்தரங்கமாக இருந்தாலும் சரியே(ஒருவர் லஞ்சம் வாங்குவது தவறுனு எல்லோரிடமும் சொல்லிட்டு தான் மட்டும் லஞ்சம் வாங்கினால் அது அவ்ர் சொந்த விசயம் என்று சொல்லுவீர்களா?) .இதுவே நித்யானந்தர் பிரம்மசர்யத்தை பற்றி கூறாமல் சம்சாரியத்தை பற்றி கூறியிப்பாராயின் இந்த விசயம் இவ்வளவு தூரம் விமர்சன்த்திற்க்கு உள்ளாகியிருக்காது என்பது என் கருத்து.//

உங்கள் கருத்தில் ஓரளவு நியாயம் இருக்கிறது..ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இங்கு விமர்சனம் செய்யப் பட வேண்டியவர்கள் மக்கள். காரணம் அவர்களால் தான் அவனுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. ஏன் சாமியாரின் பின் ஓடுகிறார்கள். மக்களிடம் உள்ளக் குறைகளை மறைக்கும் நோக்கம்தான் இன்று இப்பிரச்சினையின் விஷ்வரூபம். இதை யாரும் மறுக்க முடியாது.

பனித்துளி சங்கர் said...

//////////வரைமுறைகளை எல்லாம் விட்டுத் தள்ளி விட்டு சமூகத்திற்கு நன்மை என்ன என யோசித்ஹ்டுப் பாருங்கள். அப்போது புரியும் இந்த foolish பையன் என்ன சொல்றேன்னு //////



உண்மைதான் நண்பரே !
உங்களின் எண்ணங்கள் அனைத்தும் வரவேற்கத்தகுந்த ஒன்றுதான் .ஆனால் அதை சற்று இன்னும் தெளிவாக சொன்னால் அனைவரும் எளிதாக புரிந்து கொள்வார்கள் .


இன்றும் நமக்கு பதிணெண்கீழ்கணக்கு நூல் புரிவதில்லை. இவற்றுக்கு தெளிவுரை வேண்டியிருக்கிறது, விளக்கவுரை வேண்டியிருக்கிறது.

அதுபோல் இல்லாமல் நாம் எழுதும் பதிவுகள் அனைத்தும் பிறருக்கு தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் அமைத்தால் நலம் . சில நேரங்களில் படிப்பவர்களின் புரிதலின் தவறு அனைத்தும் தவறாகவே மாறிப்போய்விடுகிறது .இன்றைய உங்களின் சிறந்த பதிவை போலவே .

பிரிதலுக்கு நன்றி !

புலவன் புலிகேசி said...

//அதுபோல் இல்லாமல் நாம் எழுதும் பதிவுகள் அனைத்தும் பிறருக்கு தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் அமைத்தால் நலம் . சில நேரங்களில் படிப்பவர்களின் புரிதலின் தவறு அனைத்தும் தவறாகவே மாறிப்போய்விடுகிறது .இன்றைய உங்களின் சிறந்த பதிவை போலவே//

நன்றி ஷங்கர்...

ஈரோடு கதிர் said...

பின்னூட்ட விவாதங்களும் அருமை

butterfly Surya said...

அருமை.

பின்னூட்டங்களில் இவ்வளவு விமர்சங்கள். ஆரோக்கியமான விவாதம் தொடரட்டும்.

Anonymous said...

Very nice.

ராஜ நடராஜன் said...

ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம் என கருதுகிறேன்.பின்னூட்டங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன.

Radhakrishnan said...

நீங்கள் எழுதியதும் கூட ஒரு வகையில் விமர்சனம் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் போது விமர்சனத்தின் பணி எத்தகையது என்பது புரிய வரும். ஒருவரது செயல்பாடுகள் பிறரால் சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. சராசரி மனிதர்கள், சாதனையாளர்கள் என வரும்போது பேதங்கள் இருப்பது இயல்பே. தொடர்ந்து விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். 'காய்த்த மரம் மட்டுமே கல்லடி படும்' ;) மரத்திற்கு வலி இருக்காது, வலி இருந்தாலும் அதை அந்த மரம் வெளிக்காட்டாது. ஆனால் எறிபவனுக்குத்தான் வலி அதிகம் இருக்கும்.

இரும்புத்திரை said...
This comment has been removed by the author.
இரும்புத்திரை said...

//ஏனென்றால் ஒரு மனிதனை விமர்சிக்க இன்னொரு மனிதனுக்கு தகுதி இருக்கிறதா என்பது கேள்விக்குறியே(?).//

//இந்தப் புரிதல்களைப் பற்றி ஆராயாமல் சச்சின், வைரமுத்து, இளையராஜா மற்றும் பதிவர்கள் போன்றோரை விமர்சிப்பதால் என்ன பயன்? அவர்களின் குறைகளை சொல்ல விமர்சகர்களுக்கு என்னத் தகுதி இருக்கிறது?//

நீங்கள் ஒரு பிரபலம்.அதனால் விமர்சனம் செய்யாமல் செல்கிறேன்.மற்றபடி இந்த பதிவில் எனக்கு உடன்பாடு கிடையாது.

வெற்றி said...

மக்கள் நல்லவன் என ஒருவனை நம்புவது அவர்களின் குற்றமல்ல..அந்த நல்லவர்களை நல்லவர்களாக போர்ட்ரே செய்யும் மீடியாக்களை வேண்டுமானால் குற்றம் சொல்லலாம்..

sajihdha said...

CAN;T TAKE EXAMPLE ABOUT OSAMA FOR WRONG

smart said...

இப்படி எல்லாரும் மேதவியில்லைனா (முட்டாள்னா) யார்தான் தட்டி கேட்பது?

சரி இவ்வளவு காலம் நீங்க விமர்சிச்சேங்க. இப்ப உங்களுக்கு போட்டிய யாரோ வந்தவுடனே இப்படி ஒரு அந்தர் பல்டியா யா யா யா ?

புலவன் புலிகேசி said...

//smart said...

இப்படி எல்லாரும் மேதவியில்லைனா (முட்டாள்னா) யார்தான் தட்டி கேட்பது?

சரி இவ்வளவு காலம் நீங்க விமர்சிச்சேங்க. இப்ப உங்களுக்கு போட்டிய யாரோ வந்தவுடனே இப்படி ஒரு அந்தர் பல்டியா யா யா யா ?
//

நான் இதுவரை எந்த ஒரு தனி மனிதனையும் விமர்சித்ததில்லை..சும்மால்லாம் தெரியாம எழுதாதீங்க...

புலவன் புலிகேசி said...

//V.Radhakrishnan said...

நீங்கள் எழுதியதும் கூட ஒரு வகையில் விமர்சனம் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் போது விமர்சனத்தின் பணி எத்தகையது என்பது புரிய வரும். ஒருவரது செயல்பாடுகள் பிறரால் சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. சராசரி மனிதர்கள், சாதனையாளர்கள் என வரும்போது பேதங்கள் இருப்பது இயல்பே. தொடர்ந்து விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். 'காய்த்த மரம் மட்டுமே கல்லடி படும்' ;) மரத்திற்கு வலி இருக்காது, வலி இருந்தாலும் அதை அந்த மரம் வெளிக்காட்டாது. ஆனால் எறிபவனுக்குத்தான் வலி அதிகம் இருக்கும்.
//

நான் எழுதியிருப்பது தனி நபர் விமர்சனம் அல்ல நண்பரே...ஒரு கூட்டம் குறித்த விமர்சனம். விமர்சனம் என்பது மக்களுக்கு பயன் தரும் படி இருக்க வேண்டும்..பரபரப்புக்காக எழுதப் பட்டதாக இருக்கக் கூடாது...

புலவன் புலிகேசி said...

//smart said...

இப்படி எல்லாரும் மேதவியில்லைனா (முட்டாள்னா) யார்தான் தட்டி கேட்பது?
//

மேதாவி இல்லைன்னா முட்டாள் என்ற குறுகிய சிந்தனையிலேயே புரிகிறது உங்கள் கருத்துக்கள். தட்டிக் கேட்க வேண்டும் என்றால் தவறு செய்யும் அரசியல்வியாதிகளைத் தட்டிக் கேட்க நீங்கள் தயாரா? அவர்களின் ஊழலால் நேரடியாக பாதிக்கப் ப்டும் மக்கள் பக்கம் நிற்க தயாரா? அப்படி எழுதப் பட்டு தொடரப் பட்ட விமர்சனங்களைக் காட்டுங்கள். இதற்காவது பொருப்புடன் பதில் சொல்கிறீர்களா பார்க்கலாம்...

smart said...

I don't read frequently on your pages. But while surfing i found so many pages. Due to the time constraint, this is the sample of yours.


//அந்த விழாவில் ஒரு நடிகர் கோபமாகப் பேசி பாராட்டு பெற்றாரம். நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அரசியலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். அது போன்ற பிரச்சினைகள் நடிகனுக்கு தேவையற்றது என்று பேசியிருக்கிறார். உங்களை எல்லாம் தூக்கி உச்சத்தில் உட்கார வைத்திருப்பது இந்த சமூகம்தான்.சமூகப் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். ஒப்புக் கொள்கிறேன். உங்கள் திரைத்துறையினரிடம் இல்லாதப் பணமா? நீங்கள் அனைவரும் பகிர்ந்து செலவு செய்தாலே உங்கள் துறையில் கஷ்டப் படுபவர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கலாம். ஏன் அரசாங்கம் கட்டித்தர வேண்டும்? யோசித்தீர்களா?

எங்கள் துறையினருக்கு நாங்கள் கட்டி கொடுத்து கொள்கிறோம். நீங்கள் வீடில்லாத சாதாரன மனிதர்களுக்கு உதவுங்கள் என்று சொல்ல யாருக்கும் தைரியமும் கிடையாது. மனமும் கிடையாது.

இது போன்ற சுயநலவாதிகளுக்கு கட் அவுட், சுவரொட்டிகள் வைப்பதை நிறுத்துவோம். இது போன்ற நடிகர்களுக்கு விழா எடுத்தால் கூட்டம், படம் வெளிவந்தால் கூட்டம் என நம் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதை விடுத்து இனிமேலாவது அவரவர் வாழ்க்கையை பற்றி யோசிப்போம். பணம் அதிகமிருந்தால் இல்லாதவனுக்கு உதவுவோம்//

Please think before post

Thanks

புலவன் புலிகேசி said...

//smart said...

I don't read frequently on your pages. But while surfing i found so many pages. Due to the time constraint, this is the sample of yours.//

நல்ல உதாரணம் கொடுத்தீர்கள் மதுமிதா...மிக்க நன்றி..இங்கு நான் சொல்லியிருபது கூட அந்த நடிகரின் கருத்தைத்தான். நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் எங்கே? தைரியமிருந்தால் மழுப்பாமல் பதில் சொல்லுங்கள் அந்த அரசியல்வதி குறித்த கேள்விகளுக்கு....

smart said...

//தட்டிக் கேட்க வேண்டும் என்றால் தவறு செய்யும் அரசியல்வியாதிகளைத் தட்டிக் கேட்க நீங்கள் தயாரா? அவர்களின் ஊழலால் நேரடியாக பாதிக்கப் ப்டும் மக்கள் பக்கம் நிற்க தயாரா?//

அப்படி தட்டிக்கேட்பவர்கள் பலர்.
அதை ஒத்துக்கொள்கிறவர்கள்தான் சிலர்(உங்களைப்போல )

உண்மைத்தமிழன்,
சாவுக்கு,
இட்லிவடை,
(சில சமயம்) வினவு
(சில சமயம்) வால்பையன்
(சில சமயம்) நீங்கள்
மற்றும் பலர்.

நான் கேட்க வருவது, நீங்களும் விமர்சித்தவர்தானே பின் எதற்கு இந்த திடீர் மாற்றம்?

smart said...

//நல்ல உதாரணம் கொடுத்தீர்கள் மதுமிதா...மிக்க நன்றி.//

மதுமிதா!
எனக்கு நீங்க வச்ச பேர?

புலவன் புலிகேசி said...

//அப்படி தட்டிக்கேட்பவர்கள் பலர்.
அதை ஒத்துக்கொள்கிறவர்கள்தான் சிலர்(உங்களைப்போல )

உண்மைத்தமிழன்,
சாவுக்கு,
இட்லிவடை,
(சில சமயம்) வினவு
(சில சமயம்) வால்பையன்
(சில சமயம்) நீங்கள்
மற்றும் பலர்.

நான் கேட்க வருவது, நீங்களும் விமர்சித்தவர்தானே பின் எதற்கு இந்த திடீர் மாற்றம்?//

சரியான புரிதலை ஏற்படுத்தத் தவறியிருக்கிறேன் என நினைக்கிறென்.. நீங்கள் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். நான் விமர்சிப்பதெல்லாம் மக்களை பாதிக்கும் விடயங்கள் குறித்துதான்...அதைத் தொடர்ந்து விமர்சிப்பேன். ஆனால் இன்று பதிவர்களிடையே எழுதப் படும் பெரும்பாலான விடயங்கள் பரபரப்புக்காக மட்டுமே இருக்கிறது. உதாரணம் நித்யானந்தா..இன்று கூட தமிழிஸ் சென்று பாருங்கள் தெரியும். இது இந்த அளவு விமர்சிக்கப் பட என்னத் தேவை இருக்கிறது? இதைத் தவிற விமர்சிக்க வேறு சமூகப் பிரச்சினைகளே இல்லையா? அரசியல் பிரச்சினைகள் இல்லையா?

மன்னிக்கவும் நண்பரே "Sweet" என்ற பெயரில் மதுமிதா என்று ஒருவர் எழுதியிருந்தார். அதான் தவறுதலாக கூறி விட்டேன்.

smart said...

///ஆனால் இன்று பதிவர்களிடையே எழுதப் படும் பெரும்பாலான விடயங்கள் பரபரப்புக்காக மட்டுமே இருக்கிறது. உதாரணம் நித்யானந்தா..இன்று கூட தமிழிஸ் சென்று பாருங்கள் தெரியும். இது இந்த அளவு விமர்சிக்கப் பட என்னத் தேவை இருக்கிறது? இதைத் தவிற விமர்சிக்க வேறு சமூகப் பிரச்சினைகளே இல்லையா? அரசியல் பிரச்சினைகள் இல்லையா?///

I agree with this points.

then//"பதிவுலகின் விமர்சன மேதாவிகள்"// sounds nothing

thanks

இரும்புத்திரை said...

//சரியான புரிதலை ஏற்படுத்தத் தவறியிருக்கிறேன் என நினைக்கிறென்.. நீங்கள் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள். நான் விமர்சிப்பதெல்லாம் மக்களை பாதிக்கும் விடயங்கள் குறித்துதான்...அதைத் தொடர்ந்து விமர்சிப்பேன்.//

http://pulavanpulikesi.blogspot.com/2010/02/200.html

இந்த சச்சினை விமர்சித்த சாரு ரசிகன் பதிவு எந்த விதத்தில் மக்களைப் பாதித்தது..சொன்னால் தன்யனாவேன்..

இங்கு யாரும் குழம்பவில்லை..நீங்கள் தான் குழம்பி குழப்பி கொண்டு இருக்கிறீர்கள்.

தமிளிஷ் தளத்தில் சூடான இடுகையில் நித்யானந்தா,கிரிக்கெட் என்று வந்தால் அது திரட்டியின் தவறு.எதையும் மறக்காமல் இருக்க விமர்சித்து கொண்டே இருக்க வேண்டும்.பத்திரிக்கை செய்வது போல மறந்து விட்டு வேறு விஷயங்களுக்கு சென்று விட்டால் இன்னொரு சாமியார் உருவாகி இருப்பான்.சச்சினை விமர்சனம் செய்தால் உங்களுக்கு கோபம் வருகிறது என்றால் பிரச்சனை உங்களிடம் தான்.நித்யா விஷயத்தில் விமர்சிக்கப் பட வேண்டியவர்கள் மக்கள் என்றால் சச்சின் விஷயத்தில் விமர்சிக்கப்பட வேண்டியவர் நீங்கள் தான். அவர் விமர்சிக்கப்பட்டதால் தான் இந்த அளவு வளர்ந்திருக்கிறார்.இல்லை என்றோ காணாமல் போய் இருப்பார்.

smart said...

//விளையாட்டு வீரன் தன் திறமையை நிரூபித்து ஜெயிப்பதைக் கூட// இந்த திறமைதான் நாட்டுக்குத்தேவை அதனால் நாடு சுபிட்ஷமாகும் வறுமை ஒழியும்.

எவ்வளவோ தொழிலாளிகள் மிகுந்த உடலுழைப்புடன் உழைத்தும் உயரமுடியவில்லை அவர்களையும் அடையாளம் கண்டு ஆதரியுங்கள்

புலவன் புலிகேசி said...

//smart said...

//விளையாட்டு வீரன் தன் திறமையை நிரூபித்து ஜெயிப்பதைக் கூட// இந்த திறமைதான் நாட்டுக்குத்தேவை அதனால் நாடு சுபிட்ஷமாகும் வறுமை ஒழியும்.

எவ்வளவோ தொழிலாளிகள் மிகுந்த உடலுழைப்புடன் உழைத்தும் உயரமுடியவில்லை அவர்களையும் அடையாளம் கண்டு ஆதரியுங்கள்
//

நிச்சயம் நண்பரே...ஆனால் அதற்காக கண்மூடித்தனமாக விளையாட்டை எதிர்ப்பதுத் தவறு. உலக அரங்கில் ஒரு இந்தியனின் திறமை நிரூபிக்கப் படும் போது அது நாட்டின் உயர்வுக்கு நிச்சயம் ஊன்றுகோல்தான்.

ஐ.பி.எல்லை எதிர்த்தால் சந்தோஷப் படுவேன். ஏனெனில் அது முழுக்க முழுக்க காசுக்காக மக்களை மடையர்களாக்கும் வேலை.

இரும்புத்திரை said...

பணமாலை,ஊழல் பற்றி இந்த பதிவு பேசியதா..அதை பதிவில் எழுதியிருந்தால் நான் உடன்பட்டு இருப்பேனே..ஏன் விவாதம் செய்ய போகிறேன்.ஏன் நான் கேட்ட பின் சொல்ல வேண்டும்.திசை திருப்பவா.

நிச்சயம் விமர்சனம் தான் சச்சினை உயர்த்தியது..காம்ளியிடம் கூட தான் திறமை இருந்தது.அவர் விளையாடும் போது சச்சின் அவருக்கு பின் தான் இறங்குவார்.இப்போது காம்ளி ஏங்கே.ராதாகிருஷ்ணன் சொன்னது போல் சச்சின் பழுத்த மரம்.விமர்சனம் எல்லாம் ஒன்றும் செய்யாது.

புலவன் புலிகேசி said...

//இரும்புத்திரை said...

பணமாலை,ஊழல் பற்றி இந்த பதிவு பேசியதா..அதை பதிவில் எழுதியிருந்தால் நான் உடன்பட்டு இருப்பேனே..ஏன் விவாதம் செய்ய போகிறேன்.ஏன் நான் கேட்ட பின் சொல்ல வேண்டும்.திசை திருப்பவா.//

ஹா ஹா ஹா..யார் நான் திசைத் திருப்புகிறேனா? நல்ல நகைச்சுவை. நீங்கள்தான் திசைத் திருப்புகிறீர்கள். இது இன்று எழுதிய பதிவு. ஆனால் இது குறித்து கூகுல் பஸ்ஸில் நேற்றே விவாதம் செய்தேன். அங்கு நான் கேட்ட கேள்வி தான் அந்த பணமாலையும் நித்யானந்தமும். பதில் சொல்லாமல் மழுப்ப ஒரு பதில் சொல்லியிருக்கிறீகள்...வாழ்க உமது விமர்சனங்கள்..

//நிச்சயம் விமர்சனம் தான் சச்சினை உயர்த்தியது..காம்ளியிடம் கூட தான் திறமை இருந்தது.அவர் விளையாடும் போது சச்சின் அவருக்கு பின் தான் இறங்குவார்.இப்போது காம்ளி ஏங்கே.ராதாகிருஷ்ணன் சொன்னது போல் சச்சின் பழுத்த மரம்.விமர்சனம் எல்லாம் ஒன்றும் செய்யாது.//

இது பொறாமையாளர்களின் பதில்...உங்களுக்குத் தெரிந்து கம்ளி மட்டும்தான். ஆனால் இன்னும் நிறைய பேர் இருக்காங்க. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு துறையிலும் திறமை வாய்ந்தவன் பாதிக்கப் பட வில்லையா? அவன் கீழேத் தள்ளப் படுவதில்லையா? இதை வைத்து ஒருவனின் உயர்வுக்கு விமர்சனம் காரணம் எனக் கூறுவது சரியல்ல.

இரும்புத்திரை said...

உங்கள் கூகுள் பஸ் என் ரூட்டில் வருகிறதா என்று பார்த்து விட்டு சொல்லவும்.நன்றி.நான் பொறாமைபடுபவனாகவே இருந்து விடுகிறேன்.

smart said...

//ஹா ஹா ஹா..யார் நான் திசைத் திருப்புகிறேனா? நல்ல நகைச்சுவை. //

உங்க தலைப்பே திசை திரும்பித்தானே இருக்கு

உங்கள் கூற்றுப்படி "மக்களைப் பாதிக்கும் விஷயத்தை விமர்சிக்காத பதிவுலகின் விமர்சன மேதாவிகளே " என்று வைத்தால் நானும் கூட திசைதிரும்பப் பட்டுயிருக்கமாட்டேன்

புலவன் புலிகேசி said...

//இரும்புத்திரை said...

உங்கள் கூகுள் பஸ் என் ரூட்டில் வருகிறதா என்று பார்த்து விட்டு சொல்லவும்.நன்றி.நான் பொறாமைபடுபவனாகவே இருந்து விடுகிறேன்.
March 24, 2010 11:50 PM //

சரி நண்பரே உங்களுக்கு அதை மின்னஞ்சல் செய்கிறேன்...

புலவன் புலிகேசி said...

//smart said...

//ஹா ஹா ஹா..யார் நான் திசைத் திருப்புகிறேனா? நல்ல நகைச்சுவை. //

உங்க தலைப்பே திசை திரும்பித்தானே இருக்கு

உங்கள் கூற்றுப்படி "மக்களைப் பாதிக்கும் விஷயத்தை விமர்சிக்காத பதிவுலகின் விமர்சன மேதாவிகளே " என்று வைத்தால் நானும் கூட திசைதிரும்பப் பட்டுயிருக்கமாட்டேன்
//

தலைப்பு உங்களைத் திசைத் திருப்பியிருந்தால் அது என் தவறே...ஒப்பு கொள்கிறேன்

Thenammai Lakshmanan said...

நல்ல சிந்த்தனைகள் மற்றும் பகிர்வு புலிகேசி

காஞ்சி முரளி said...

நண்பரே...
"போற்றுபவர் போற்றட்டும்,
தூற்றுபவர் தூற்றட்டும்"... என்ற வரிகளை சிரமேற்கொண்டு தொடர்ந்து செல்லுங்கள்....

********உண்மையில் பார்த்தால் நல்ல குணம் மட்டும் கொண்டவர் என ஒருவர் கூட கிடையாது. நன்மை, தீமை கலந்ததுதான் மனித வாழ்வு. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தவறு செய்து விட்டு தான் இறக்கிறோம். அப்படி எல்லாம் இல்லை என ஒருவரும் சொல்ல முடியாது.*********
*****நித்யானந்தர் பிரச்சினையை படம்பிடித்து காசு பார்த்த ஊடகங்களுக்கு துணை நின்றோம்.*****

மேற்சொன்ன வரிகளில் சொன்னது அத்தனையும் உண்மை....! "எவனும் யோக்கியன் கிடையாது" என்பதை நாகரிகமாய் சொல்கிறீர்கள்... உண்மை அதுவே..

என் கொள்கையான "முதலில் நாம திருந்தோனம்...! அப்புறம் மற்றவரை திருந்த சொல்லி அட்வைஸ் பண்ணனும்".... இதை விட்டுவிட்டு நான் மட்டும் யோக்கியன் மாதிரி மேதாவித்தனமாய் பேசக்கூடாது.

நித்யானந்தர்(ன்) செய்தது தவறுதான்... ஆனால் அதனை வெளியிட்டவனும் - பார்த்தவனும் யோக்கியர்களா?

அதோடு அவனை அயோக்கியன் என்று சொல்பவர்கள்... நேற்றுவரை அவன் பின்னால் அலைந்தவர்கள்... அவன் போதனையை கேட்டவர்கள்... டாக்டரால் குணமாக்கமுடியாத நோயை அவன் குணமாக்கியதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடித்தவர்கள்... இவர்கள் யார்? யோக்கிய சிகாமணிகளா...?

அதைப்போல ***நான் குற்றவாளி என சொல்வேன். நித்யானந்தனுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது யார்? முட்டாள் மக்கள் தானே? அப்போ நியாயமாகப் பார்த்தால் விமர்சிக்கப் பட வேண்டியது அவர்கள் தானே?*****

உண்மை... உண்மை.. உண்மை..
உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்...!

மீண்டும் சொல்கிறேன்....
"போற்றுபவர் போற்றட்டும்,
தூற்றுபவர் தூற்றட்டும்"... என்ற வரிகளை சிரமேற்கொண்டு தொடர்ந்து செல்லுங்கள்....

நட்புடன்....
காஞ்சி முரளி.....

vels-erode said...

@ஸ்ரீராம்.

என்ன இப்டி பொலம்புரீங்க?
பூமியின் கீழே உள்ல எல்லா செயல்களுமே விமர்சனத்துக்கு உட்பட்டதுதான்.
திடீர்னு புலவர், 'நித்தி' சீடர் ஆயிட்டாரா என்ன?

உங்கள்க்கு யார் மேல கொவம்? டி.வி.காரய்ங்க மேலயா? மானாவரியா கடுப்படிச்ச பதிவர்கள் மேலயா? இன்னா சாமீ ?

இத்ல அதி மேதாவின்னு நம்மையும் சேர்ந்துல்ல விமர்சிக்கறார்?

புலவன் புலிகேசி said...

//என்ன இப்டி பொலம்புரீங்க?
பூமியின் கீழே உள்ல எல்லா செயல்களுமே விமர்சனத்துக்கு உட்பட்டதுதான்.
திடீர்னு புலவர், 'நித்தி' சீடர் ஆயிட்டாரா என்ன?
//

அடக் கொடுமையே..ஏன் இப்புடின்னு கேட்ட சாமியார் கும்பல்ல சேத்துருவீங்க போல...நண்பரே சாமியே இல்லை என சொல்பவன் நான்....அதை நினைவு கொள்ளுங்கள்