கடவுளை மற..மனிதனை நினை..

22 March 2010

டரியல் (22-மார்ச்-2010)

5:41:00 AM Posted by புலவன் புலிகேசி 28 comments
திருநெல்வேலியில் நூறு மற்றும் ஐநூறு ரூபாய்களை அச்சடித்த கள்ள நோட்டு கும்பல் சிக்கியிருக்கிறது. மூன்று பேரைக் கைது செய்திருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றவாளியான சேகர் என்பவன் தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறான். வேலியே பயிரை மேய்வது ஒன்றும் நம் நாட்டிற்கு புதிதில்லையே....!

------------------------

மாயாவதிக்கு போடப்பட்ட பணமாலைக் குறித்து இந்த ஊடகங்கள் ஒளிவுமறைவாகவே செயல்படுகின்றன. அதற்கான விசாரணை என்ன ஆனது என்பது பற்றி ஊடகங்கள் எந்த விசாரணையும் செய்யவில்லை. இது போல் அரசியல்வியாதிகளை இவைகள் கண்டு கொள்ளாமல் விடுவதுதான் அவர்களின் அராஜகங்களுக்கு காரணம். இதை விட நித்யானந்தர் பிரச்சினை ரொம்ப முக்கியமானதா...? தான் பெற்ற லஞ்சப் பணத்திற்கான கணக்கு இப்படியும் காட்டப் படுமோ...?

------------------------

சமீபத்தில் தோழி ஒருவரின் ஆர்குட்டில் கிடைத்தது இந்த குறும்படம். மிக அருமையாகவும் சுருக்கமாகவும் எடுக்கப் பட்டிருக்கும் இப்படம் வறுமையின் நிலைபாட்டை அழகாக விளக்கியிருக்கும்.

------------------------


சில நாட்களுக்கு முன்னர் நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இறந்ததாக செய்தியை தட்ஸ்தமிழ் இணையத்தில் படித்ததும் பதறிப் போனேன். படித்து முடித்த சில நிமிடங்களிலேயே அந்த செய்தி நீக்கப் பட்டு "வதந்திகள் பரப்பப் பட்டதாக செய்தியை வெளியிட்டது அந்த இணையதளம். உறுதிப் படுத்தப் படாத செய்தியை ஒரு சிறந்த செய்தி ஊடகம் வெளியிட்டது வருத்தத்திற்குரியது. தலைவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்தேன்.
------------------------

சென்ற வாரம் கூகுல் பஸ்ஸில் நான் ஓட்டியது:

நீ வீசியெரிந்த குப்பை நான்
எடுத்துக் கொண்டவளுக்குத்
தெரிந்தது அதன் கவிதை!
------------------------
இந்த வாரப் பதிவர்: வந்தே மாதரம் சசிக்குமார்


பதிவர்களுக்குத் தேவையான பல தகவல்கள் மற்றும் வலைபூவில் உள்ள தொழில்நுட்ப பிரச்சினைகள், வலைப்பூவை அழகு படுத்துதல் போன்றவற்றிகான வழிமுறைகளை தெளிவாக எழுதியிருக்கிறார். சமீப காலங்களாக சில நகைச்சுவை புகைப் படங்களையும் தேடிப் பிடித்து பதிவின் முடிவில் வெளியிடுகிறார்.

இவரின் வலைப்பூ: வந்தே மாதரம்
------------------------

இந்த வார டரியல் அன்புடன் அருணா எழுதிய மீன்களும் மீனாக்களும்!. படித்துப் பாருங்கள். வாழ்வியல் விளக்கும் சிறுகதை.
------------------------

28 விவாதங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

எல்லாமே (பண மாலை) அரசியல்தான் புலவரே.

குலவுசனப்பிரியன் said...

குறும்படத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. படத்தில் தென்படும் கண்ணியம் நம்நாட்டில் ஏழைகள் மீது காட்டப்படுவது இல்லை.


அமெரிக்க கல்லூரி மாணவர்களிடையே எலும்பு பொருக்குதல் என்ற சொற்றொடர் பிரபலம். சாப்பாட்டுக்கு காசில்லாமல் இருக்கும் போது, பக்கத்து அறை மாணவர்கள் சாதாரணமாக குப்பையில் போடும் பிசாவின் வரட்டு ரொட்டிப் பகுதியை (crust) தேடி, I came looking for bones என்று போவார்கள். வறுமை கொடியது, எல்லா உருவிலும்.

ப்ரியமுடன் வசந்த் said...

மாயாவதி-பணவாதி....

வந்தேமாதரம் சசிக்குமார் உபயோகமான அறிமுகம் நன்றி வேல்...!

Cable சங்கர் said...

நைஸ் டரியல்.

பிரபாகர் said...

பணமாலை விஷயத்தைக்கூட சிலர் நியாயப்படுத்தறாங்க புலிகேசி!

டரியல், வழக்கம்போல்.

பிரபாகர்.

ஜெட்லி... said...

நான் கூட கவுண்டர் நியூஸ் கேள்வி பட்டதும்
கொஞ்சம் சோகம் ஆயீட்டேன்.....:((

ராமலக்ஷ்மி said...

வழக்கம் போல நல்ல தொகுப்பு.

வந்தேமாதரம் சசிக்குமார் அறிமுகத்துக்கு நன்றி. பயனுள்ள பதிவுகள் தந்து வருகிறார்.

அருணாவுக்கு வாழ்த்துக்கள்!

Chitra said...

வந்தே மாதரம் சசிகுமார், பதிவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து சொல்கிறவர்.
அன்புடன் அருணா அவர்களின் கதை முன்பே படித்தேன். அருமை. நல்ல தேர்வு.

அன்புடன் மலிக்கா said...

டயரியல் சூப்பர்.

சசி நல்ல அறிமுகம்.

அரசியல் அரசியல்..

வறுமையின் நிறம் கறுப்பு
வறுமைப்பட்டோருக்கு...

vasu balaji said...

இந்த வருமான வரிக்காரன் நம்மள மாதிரி மாசக்கூலிய மிரட்டி, சாக்கிரத, 5 லட்சத்துக்கு மேலான பணப்புழக்கம் கண்காணிக்கப் படுகிறதுன்னெல்லாம் மிரட்டுரானே. மாலை போட்டதும் அதில ஒரு முழம் டாக்ஸுக்குன்னு அறுத்துட்டு போகக்கூடாதா?

சசிகுமார் அறிமுகத்துக்கு நன்றி.

க.பாலாசி said...

அந்த கவிதை வெகு அருமை நண்பா...

மாயாவதிய விட்டுத்தள்ளுங்க... அங்கயாவது எல்லாருக்கும் தெரியிறமாதிரி பணமால போட்டாங்க... ஆனா...நம்ம மாநிலத்துல தெரியாமலே நடந்துகிட்டிருக்கு..

வரதராஜலு .பூ said...

//அதற்கான விசாரணை என்ன ஆனது என்பது பற்றி ஊடகங்கள் எந்த விசாரணையும் செய்யவில்லை. //

எல்லாமே அரசியல்தான். மதுகோடா விவகாரத்தில் என்ன பரபரப்பு காட்டினார்கள் மீடியாகாரர்கள். ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆயிட்டாருன்னு ஒரு பிரேக்கிங் நியூஸ், சிபிஐ விசாரணைக்கு அவர் வீட்டுக்கு கௌம்பிடிச்சின்னு ஒரு பிரேக்கிங் நியூஸ், விசாரணை பண்றாங்கன்னு ஒரு பிரேக்கிங் நியூஸ். யாருடைய உத்தரவின் (அ) வேண்டுகோளின் பேரில் இப்படி பரபரப்பு கிளப்பினார்கள்? இப்போது என்ன கிழிக்கிறார்கள்?

முதலில் சொன்னதுபோல எல்லாமே அரசியல்தான்.

நம்ப நாட்ட இந்த மாதிரி நாதாரி மீடியாக்கிட்டேயிருந்து யாரு காப்பாத்தப் போறாங்கன்னு தெரியல.

சசிகுமார் said...

மாமியார் ஒடச்சா மண்பானை மருமகள் ஒடச்சா பொன்பானை/ இந்த நிலைமை தான் இன்று நம் நாட்டில் இருக்கிறது.இதற்க்கு நம் மீடியாவும் ஒரு காரணம்.
இதே டெண்டுல்கர் அணியும் ஹெல்மெட்டில் கொடி கீழே இருந்தால் அனைத்து மீடியாக்களும் தலைப்பு செய்திகளிலேயே கூறுவார்கள்.

சசிகுமார் said...

என்னதான் நம்ம எழுதினாலும், நம்மால பத்தி இன்னொரு தளத்தில் எழுதி பாராட்டி இருந்தால் அந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. அனுபவித்தவர்களுக்கு அது புரியும் என்னை அந்த பேரின்பம் அடையவைத்த புலிகேசி உங்களுக்கும், அதற்கு மனதார வாழ்த்து கூறியிருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி.

Ashok D said...

//Cable Sankar said...

நைஸ் டரியல்.//

அங்கிள் சொன்னத ரிபிட்டுபா.. :)

கலகலப்ரியா said...

:o பணமாலை..?.. என்னங்கடா நடக்குது உலகத்தில... யப்பே.....

பனித்துளி சங்கர் said...

இந்த வார டரியல் மிகவும் கலக்கல் . அதிலும் அந்த குறும்படம் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே வாழ்த்துக்கள் !

சுசி said...

பணமாலை:((( ராமலக்‌ஷ்மி அக்காவோட கவிதை இப்போதான் படிச்சிட்டு வரேன்..

சசிக்குமார், அருணாவுக்கு வாழ்த்துக்கள்.

//நீ வீசியெரிந்த குப்பை நான்
எடுத்துக் கொண்டவளுக்குத்
தெரிந்தது அதன் கவிதை!//
சூப்பர் புலவரே :)))

ஸ்ரீராம். said...

அரசியல்வாதிகளை எல்லாம் யார் கேட்பது?
கவுண்டர் விஷயம் ஒரு திருஷ்டி சுத்திப் போட்டா மாதிரி...

அன்புடன் அருணா said...

அடடே ...மீண்டும் டரியலிலா????நன்றி!
வலைப்பூ வந்தே மாதரம் அறிமுகத்துக்கு நன்றி!

ரோஸ்விக் said...

இந்த வியாதிகளுக்கு பிண மாலை போட எப்போ நம்ம மகா ஜனங்கள் தயாராகப் போறாங்களோ??

மொத்தத்தில் டரியல்... சுவையான பொரியல்... :-)

Thenammai Lakshmanan said...

குறும் படம் மனதை உலுக்கி விட்டது புலிகேசி :((


சசிகுமாருக்கு வாழ்த்துக்கள் :))

Menaga Sathia said...

குறும்படம் அருமை!! சசிகுமார் நல்ல அறிமுகம்.வழக்கம் போல் டரியல் கலக்கல்.

'பரிவை' சே.குமார் said...

டரியல்... சுவையான பொரியல்...

Romeoboy said...

மேட்டர் கம்மியா இருக்கு .. சரக்கை ஏத்து சகா ..

மங்குனி அமைச்சர் said...

பன்னாடைகளா தமிழ் நாட்டுல நான் ஆட்சில இருந்தப்போ பெரிசா என்னத்தடா கிளுசுடின்ங்க,
அவுகள பாரு, தெரு தெருவா சின்னத்துக்கு அவுகளுக்கும் சிலை வைகிராக , அந்த மாலைய பாரு கண்கொள்ளா காட்சி போய் எல்லோரும் ஒரு மூணு மாசம் அவுங்கள்ட்ட ட்ரைனிங் எடுத்திட்டு வாங்க ........

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்று,

Unknown said...

அப்துல்லா[பெரியார்தாசன்]வை பார்த்து திருந்துங்கள் ஆனால் உங்களுடைய அரசியல் நன்று