கடவுளை மற..மனிதனை நினை..

20 March 2010

புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் - 3

7:02:00 AM Posted by புலவன் புலிகேசி , 21 comments

அன்றாட பழக்க வழக்கங்களில் சிறு மாற்றம் செய்தல்

- தினசரி நாம் உபயோகிக்கும் மின்சாரம் சார்ந்த பொருட்களை சரியன முறையில் பராமரிக்க வேண்டும்

- முடிந்த வரை வீட்டிலேயே உணவு சமைத்து சாப்பிட பழக வேண்டும். இயலாத நேரங்களில் மட்டும் ஹோட்டல்களுக்கு செல்லலாம். ஹோட்டல்களில் உபயோகிக்கப் படும் கியாஸ் சிலிண்டர்களால் வெளியிடப்படும் கார்பன் - டை- ஆக்சைடு அதிக அளவு காற்று வெளிகளில் கல்ந்து காற்றை மாசு படுத்துவதோடு புவி வெப்பமாதலுக்கும் துணை நிற்கிறது.

- அசைவ உணவுகள் தயாரிப்பதற்கு ஆகும் கியாஸ் அதிகம். அதற்கு செலவிடப் படும் எனர்ஜியை திரும்பத் தயாரிக்க தேவைப்படும் கியாஸ் மூலம் காற்றுவெளி மாசடைந்து இந்த பூமியை வெப்பப்படுத்தும் காரணியாகிறது.

- முடிந்த வரை அசைவ உணவுகள் உண்ணுவதை குறைத்துக் கொள்ளலாம். அதே நேரம் சைவ உணவுகள் தயாரிக்க ஆகும் நேரமும், அதற்கு செலவிடப் படும் எரிபொருளும் மிகக்குறைவே.

- அசைவம் தவிர்க்க நிச்சயம் நம்மில் பலருக்கு மனமிருக்காது. ஆனால் குறைத்துக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

- வீடுகளுக்கு வர்ணம் பூசும் போது செய்ய வேண்டியவை: தட்ப வெட்ப நிலை நல்ல வெயில் எனில் வெளிர் நிறங்களில் வர்ணம் பூசவும்.

- நீங்கள் வசிக்கும் பகுதி குளிர் நிறைந்தது எனில் நல்ல அடர்த்தியான(டார்க்) நிறத்தில் வர்ணம் பூசவும். இதன் மூலம் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைக்க முடியுமாம்.

மரங்களை வளர்த்தல்

இதன் அவசியம் குறித்து தனிப் பதிவே எழுதியிருக்கிறேன் பசுமைக் கொலைகள். ஒரு மரம் வெட்டினால் இரு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். மரங்களின் அவசியம் மரத்துப் போன மனிதர்களுக்கு என்றுதான் புரியப் போகிறதோ?

இவற்றை செய்வது நம் கடமை அல்ல. நம் இயல்பாக இருக்க வேண்டும். இத்தகைய சிறு செயல்களினால் பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது அப்பட்டமான உண்மை. கை கோர்த்து இப்போரில் வெற்றி பெறுவோம் வாருங்கள்.

பி.கு: இனி டரியல் திங்கள் கிழமைகளில் வெளிவரும். மேலும் இந்த புவி வெப்பமாதலைத் தடுக்கும் வழி முறைகள் தெரிய வந்தால் அவ்வப்போது டரியலில் சொல்கிறேன்.

21 விவாதங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

கண்டிப்பாக செயல்படுத்த வேண்டிய தருணம் இது, நன்றி நண்பா.

இளமுருகன் said...

கடமை இயல்பாய் வந்தால் காரியம் கைகூடும்.ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும்.வாருங்கள் நம்மால் முடியும்.வாரம் ஒரு கன்று வைத்தால் கூட போதும்.ப்ளீஸ் ....

Chitra said...

simple and good ideas...... non-veg - pressure cooker cooks faster. so, no problem.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சமூக அக்கறை உள்ள சிறந்த புனைவு நண்பரே !

ஆஹா ! சிறந்த வழிமுறைகள் . பகிர்வுக்கு நன்றி !

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////// இவற்றை செய்வது நம் கடமை அல்ல. நம் இயல்பாக இருக்க வேண்டும். இத்தகைய சிறு செயல்களினால் பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது அப்பட்டமான உண்மை. கை கோர்த்து இப்போரில் வெற்றி பெறுவோம் வாருங்கள். /////////


அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒன்றுதான் .

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வெய்ட் பண்ணுங்க இந்த மலையை உருட்டிட்டு . இன்னும் சற்று நேரத்தில் மீண்டும் உருண்டு வருகிறேன் .

Sangkavi said...

நிச்சயம் செயல் படுத்த வேண்டியதுதான்...

மாயவரத்தான்.... said...

Neenga eppadi sir?!

க.பாலாசி said...

கருத்துள்ள இடுகை நண்பா... புவி வெப்பமாதலில் முக்கிய பங்கு நாம் சாப்பிடும் மாமிச உணவுகளிலும் உண்டென்று ஒரு ஆய்வு கூறுகிறது..

வானம்பாடிகள் said...

நல்ல இடுகை. சமையலில் கொஞ்சம் தயார் நிலையில் எல்லாம் வைத்துக் கொண்டு சமைத்தால், நிறைய எரிபொருள் சேமிப்புடன், சுற்றுச்சூழலையும் காக்கலாம்.

நாளும் நலமே விளையட்டும் said...

முதலில் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து தொடங்குங்கள்!
நீங்கள் எத்துணை இதுவரை உங்களை கேட்பார் நம் மக்கள்.
கன்றுகள் நடுவது மட்டும் போதாது. அதைப் பராமரிக்க வேண்டும்,
நம்மால் இயன்றவரை ஆற்றல் சேமிப்போம்.

திருவாரூரிலிருந்து சரவணன் said...

ஆண்டுக்கு மூன்று அல்லது நாலு நாட்கள் சாப்பிட்ட அசைவத்தையும் நான் விட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
******
அசைவ உணவுக்கு வளர்க்கும் பிராணிகள் சாப்பிடுவதற்கும் அவை மேய்வதற்கும் கணிசமான அளவு காடு தேவைப்படுகிறது என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////////// நாளும் நலமே விளையட்டும் said...
முதலில் நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து தொடங்குங்கள்!
நீங்கள் எத்துணை இதுவரை உங்களை கேட்பார் நம் மக்கள்.
கன்றுகள் நடுவது மட்டும் போதாது. அதைப் பராமரிக்க வேண்டும்,
நம்மால் இயன்றவரை ஆற்றல் சேமிப்போம். ///////////////


நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு !

thenammailakshmanan said...

மிக அருமையான் பகிர்வு நன்றி புலிகேசி

சசிகுமார் said...

//நீங்கள் வசிக்கும் பகுதி குளிர் நிறைந்தது எனில் நல்ல அடர்த்தியான(டார்க்) நிறத்தில் வர்ணம் பூசவும். இதன் மூலம் கார்பன் -டை- ஆக்சைடின் அளவைக் குறைக்க முடியுமாம்.//

எப்படி தல ஒடெம்பெல்லாம் புல்லரிக்குது! சின்ன சின்ன விஷயங்களை கூட தேடி தேடி எழுதி உள்ளீர்கள். வளரட்டும் உன் சமூக அக்கறை.

ஸ்ரீராம். said...

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எதையும் எடுத்தால் உடனே சமைக்காமல் ரூம் டெம்ப்ரேச்சர்க்கு வந்ததும் சமைத்தல் நல்லது. அவசியமான பொழுதுகளில் மட்டும் டிவி ஆன் செய்வது நல்லது (சில வீடுகளில் ஓடிக் கொண்டே இருக்கும்)

மங்குனி அமைச்சர் said...

///இவற்றை செய்வது நம் கடமை அல்ல. நம் இயல்பாக இருக்க வேண்டும்/////

இது தான் சார் , மொத்த பதிவோட ஹைலைட் , ஏதாவது துட்டு கிட்டு குடுத்திங்கன்னா நாங்க பாலோ பண்றோம் சார்

மங்குனி அமைச்சர் said...

///இவற்றை செய்வது நம் கடமை அல்ல. நம் இயல்பாக இருக்க வேண்டும்/////

இது தான் சார் , மொத்த பதிவோட ஹைலைட் , ஏதாவது துட்டு கிட்டு குடுத்திங்கன்னா நாங்க பாலோ பண்றோம் சார்

ஜோதிஜி said...

தெளிவான அழகான கருத்துக்கள் .

சி. கருணாகரசு said...

சரியானதருணத்தில்... நல்ல கருத்துள்ள பதிவு... கைகோர்க்கிறேன் நானும்.

புலவன் புலிகேசி said...

@சைவகொத்துப்பரோட்டா

நன்றி நண்பா

@இளமுருகன்

நன்றி இளமுருகன்

@Chitra

நன்றி சித்ரா

@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர்

நன்றி ஷங்கர்

@Sangkavi

நன்றி சங்கவி

@மாயவரத்தான்....

நானும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் நண்பா

@க.பாலாசி

ஆமாம் நண்பா..நன்றி

@வானம்பாடிகள்

ஆம் ஐயா..நன்றி

@நாளும் நலமே விளையட்டும்

நாங்கள் தொடங்கி விட்டோம் நண்பா..நன்றி

@திருவாரூரிலிருந்து சரவணன்

ஆம் சரவணா...நன்றி

@thenammailakshmanan

நன்றி சகோ

@சசிகுமார்

நன்றி சசி

@ஸ்ரீராம்

இது கூட நல்ல வழி ஸ்ரீராம்...நன்றி

@மங்குனி அமைச்சர்

ஹ ஹா ஹா...நன்றி மங்குனி

@ஜோதிஜி

நன்றி ஜோதிஜி

@சி. கருணாகரசு

நன்றி கருணாகரசு