வாகனங்களை பராமரித்தல்
- வாகனங்களை சரியான முறையில் பராமறரிக்க வேண்டும். சரியான கால இடைவெளிகளில் சர்வீஸ் செய்து பயன்படுத்தல் வேண்டும்.
- மிதமான வேகத்திலும் சீராகவும் வாகனத்தை ஓட்டப் பழக வேண்டும். அதிவேகமாக செல்லும் போது அதன் எரிபொருட்கள் அதிக அளவு கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது. மிதமான வேகமும் அதற்கேற்ற கியர் முறையும் பயன் படுத்தப் பட்டால் எரிபொருள் சிக்கனமாவதுடன் புவியின் வெப்பத்தையும் குறைக்க முடியும்.
- வாகனங்களை ஒரே இடத்தில் ஆன் செய்து நிறுத்தி வைப்பதைத் தவிர்க்கவும். 30 செகன்ட்சுக்கு மேல் ஆகும் என்றால் அவற்றை அனைத்து வைக்க வேண்டும்.
- வாகனங்களின் டயர் அவ்வப்போது சரி பார்க்கப் பட வேண்டும். எரிபொருள் சிக்கனத்திற்கு உதவும்.
- வாகனங்களில் ஏ.சி பயன் படுத்தும் போது குறிப்பிட்ட அளவு குளிரானதும் அதை நிறுத்தி வைக்கவும். வெயிலின் தாக்கம் அதிகமிருந்தால் மட்டுமே ஏ.சியை உபயோகிக்கவும். பெருமைக்காக உபயோகிக்க வேண்டாம்.
- குறைந்த அருகில் உள்ள இடங்களுக்கு செல்லும் போது மோட்டார் வாகனங்களைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். அது பூமிக்கு மட்டுமல்ல நம் உடலுக்கும் நல்லது. வாக்கிங் சென்றது போல் இருக்கும்.
- உங்கள் வாகனம் கேஸ் சிலிண்டரில் இயங்குவதாயின் அதன் மூடியை தினம் சரி பார்க்கவும். வாயுக் கசிவு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை.
- அதிக மைலேஜ் கொடுக்கும் வாகனங்களாக பார்த்து வாங்கவும். அதன் மூலம் நம் பணத்துடன் சேர்த்து பூமியையும் காக்க முடியும்.
- வாகனத்தில் ஏ.சி இருப்பின் சர்வீஸ் செய்யும்போது அதன் கூலண்ட் ரீசைக்கிள் செய்யப் பட வேண்டும். இதன் மூலம் கார்பன் - டை- ஆக்ஸைடு வாயுவைக் கட்டுப் படுத்த முடியும்.
யோசித்துப் பார்த்தால் இவை சொல்லி செய்ய வேண்டிய காரியங்கள் அல்ல. இயல்பாக நாம் செய்ய வேண்டியவை. நம்முடைய அலட்சியத்தால் இவ்வளவு நாள் செய்யாமல் இருந்திருக்கிறோம். இனியாவது செய்யலாம் வாருங்கள்.
மீதமுள்ள இரண்டு முறைகளைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். இவை சொல்லுக்காக அல்ல நாம் செயல் படுத்துவதற்காக. இந்தப் போரில் நாடு மொழி, மதம், இனம் பாராமல் நாம் பங்கேற்க வேண்டும். கை கோர்க்கத் தயாராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.
பி.கு: இது என் நூறாவது இடுகை. ஒரு நல்ல விடயத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் என்ற திருப்தி இருக்கிறது.
29 விவாதங்கள்:
நல்ல முயற்சி. நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
முதலில் படித்தவர்கள் மாறவேண்டும்.வீண் ஆடம்பரங்களை தவிர்க்கும் எண்ணம் வரவேண்டும்.
நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள்.
முதலில் 135cc, 150cc, 160cc, 180cc, 200cc bike களை தடை செய்ய வேண்டும். இவற்றால் தான் பெரும்பாலும் co2, co emission நடைபெறுகிறது.
சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே. நீங்கள் சொல்லி இருப்பது போல் சில விஷயங்கள் எல்லாம் சொல்லி செய்ய வேண்டியது இல்லை. ஆனால் பலரும் வளர்ந்த சூழ்நிலை, தன வீட்டில் இழவு விழும் வரை எதுவுமே நாம் கவனிக்க வேண்டியது இல்லை என்ற மனோபாவமே மேலோங்கி இருக்கிறது. எங்கள் வீட்டில் குடியிருக்கும் ஒரு குடித்தனத்தில் இருபத்தி ஒரு வயது வாலிபன் கழிவறையில் ஒழுங்காக தண்ணீர் ஊற்றுவது கூட இல்லை. பல முறை சொல்லிப் பார்த்தும் கேட்பதில்லை. இந்த மாதிரி அரை வேக்காடுகளை வைத்துக்கொண்டு நாம் வல்லரசாக முயற்சிக்கிறோம். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போன்றவர்கள்தான் இப்படி பொறுப்பில்லாமல் இயங்குபவர்கள்.
******
வெள்ளி நிலாவில் தேநீர் கதை படித்தேன்.உழைத்துப் பசித்திருப்பவனின் நாக்கு ருசியை எதிர்பார்ப்பதில்லை. என்ற அற்புதமான கருத்தை கதை தாங்கியிருந்தது.
100வது இடுகையா..! வாழ்த்துக்கள் புலவரே...
அருமையானதொரு விஷயத்தை 100வது இடுகையாக எழுதியிருக்கிறீர்கள். கண்டிப்பாக இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
-
DREAMER
நூறு ஆயிரம் ஆக வாழ்த்துக்கள் நண்பா.....
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பா..
தொடர்ந்து பலநூறு கட்டுரைகள் வெளியிட வாழ்த்துக்கள்..
காலத்துக்கு ஏற்ற கருத்துக்களைத் தாங்கிய இது போன்ற கட்டுரைகள் நிறைய எழுதுங்கள்..
செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் தல.
நூறுக்கு வாழ்த்துகள் முருகவேல்
மிக நல்ல கருத்துக்களை தாங்கிய இடுகை
தொடரட்டும்
வாழ்த்துகள் புலவரே.:))
நூறாவது இடுகைக்காக , வாழ்த்துக்கள். சமூக அக்கறையுள்ள பதிவு.
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்...
மிகவும் பயனுள்ளதாய் சிந்திக்கும் வண்ணம் உள்ளது புலிகேசி... ஓட்டுக்கள் வீட்டிலிருந்து....
பிரபாகர்.
சார் இடுக்கை 1000 எதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம் , அப்புறம் "புவி வெப்பமாதலுக்கு எதிராக ஒரு போர் "
ரொம்ப அவசிய தேவையானது சார்
நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள் புலிகேசி. நல்ல கருத்துள்ள இடுகை.
//வாகனங்களை ஒரே இடத்தில் ஆன் செய்து நிறுத்தி வைப்பதைத் தவிர்க்கவும். 30 செகன்ட்சுக்கு மேல் ஆகும் என்றால் அவற்றை அனைத்து வைக்க வேண்டும்.//
ஆன்லேயே வச்சிருக்குறது பெருமைன்னு நெனக்கிறாங்க பல பேர்.. இதை படிக்கும் நண்பர்கள் தான் அவர்களுக்கு புரிய வைக்கணும்.. வண்டில சில நேரம் பகலிலும் லைட் எரியுது சில வண்டிகளில், அதனால் கூட எதுவும் பதிப்பு வருமா நண்பா..? நூறு பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா..
100 வது இடுகைக்கும் நல்லதொரு பதிவுக்கும் வாழ்த்துக்கள் புலிகேசி.
செஞ்சுரி அடிச்சிட்டீங்களா, எப்படிங்க ஒரு பாலுல கூட(ஒரு பதிவுல) அவுட்டாகம செஞ்சுரி அடிச்சிடீங்க, வாழ்த்துக்கள் நண்பா உன் பணி தொடரட்டும்.
நல்ல பதிவு, நல்ல கருத்துக்கள். மிக்க நன்றி.
ஏனுங்க அண்ணே, என் வண்டிய ஒருனாள் லாரிக் அடியில் பார்க் பண்ணினேன் அதுனால எதாது பிரச்சனை வருமா?
விழிப்புணர்வினைக் கொணரும் இடுகை நண்பா....
100வது இடுகைக்கு வாழ்த்துக்கள்... மேலும் தொடருங்கள்.....
குட் போஸ்ட்!
ஒரு + குத்து!
100 க்கு வாழ்த்துகள்..
தொடருங்கள்..
நல்ல இடுகை...
நீங்கள் கூறியவற்றில் சிலவேனும் நான் பின்பற்றுகிறேன்...
உலக வெப்ப மயமாதல் எல்லாம் ரெண்டாம் காரணம். நான் இவைகளை பின்பற்ற முதல் காரணம் எனது பட்ஜெட்டுங்க. பெட்ரோல் ஊத்தி மாளலீங்க...
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!! பதிவு நல்லாயிருக்கு...
நல்ல இடுகை.
நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் தோழர்.
நூறாவது இடுகை பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்
நல்ல பகிர்வு நூறுக்கு வாழ்த்துக்கள் புலவரே...:))))))))))))
மிக நல்ல கருத்துக்களை தாங்கிய இடுகை வாழ்த்துக்கள்!!
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!
@ மன்னார்குடி
நன்றி நண்பா
@ இளமுருகன்
நன்றி இளமுருகு
@ என் நடை பாதையில்(ராம்)
ஆம் நண்பா...நன்றி
@ திருவாரூரிலிருந்து சரவணன்
மிக்க நன்றி..வெள்ளி நிலா கதையை நாளைப் பதிவிடுகிறேன்
@ DREAMER
நன்றி நண்பா
@ ஜெட்லி
நன்றி ஜெட்லி
@ முனைவர்.இரா.குணசீலன்
நிச்சயம் எழுதுகிறேன் நண்பா
@ சைவகொத்துப்பரோட்டா
நன்றி தோழரே
@ ஈரோடு கதிர்
நன்றீ கதிர் அண்ணா
@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
நன்றி நண்பா..இந்த விடயத்தில் உங்கள் பதிவுகளும் பாராட்டுக்குரியது
@ Chitra
நன்றி சித்ரா
@ பிரபாகர்
நன்றி அண்ணா
@ மங்குனி அமைச்சர்
நன்றி மங்குனி
@ malarvizhi
நன்றி சகோ
@ திவ்யாஹரி
நிச்சயம் வரும்..அது போன்ற விடயங்களும் தவிர்க்கப் பட வேண்டும்..நன்றி திவ்யா
@ முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி தோழி
@ சசிகுமார்
நன்றி சசி..
@ பித்தனின் வாக்கு
நன்றி நண்பா..லாரிக்கு எதுவும் ஆகலையே..??
@ க.பாலாசி
நன்றி பாலாசி
@ நாமக்கல் சிபி
நன்றி சிபி
@ திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்)
நன்றி நண்பா
@ டக்கால்டி
உண்மை...லாபம் புவிக்கு மட்டுமல்ல நமக்கும்...நன்றி
@ Mrs.Menagasathia
நன்றி சகோ
@ ஸ்ரீ
நன்றி ஸ்ரீ
@ தமிழ்....
நன்றி தமிழ்
@ ஸ்ரீராம்
நன்றி ஸ்ரீராம்
@ சே.குமார்
நன்றி நண்பா
@ thenammailakshmanan
நன்றீ சகோ
@ prabhadamu
நன்றி பிரபா...
Post a Comment