கடவுளை மற..மனிதனை நினை..

28 February 2010

கிரிக்கெட்டும் நானும் - தொடர்பதிவு

6:31:00 AM Posted by புலவன் புலிகேசி 27 comments
நண்பர்கள் வெள்ளி நிலா ஷர்புதீன் மற்றும் முகிலன் அழைத்ததால் இத் தொடர்பதிவை எழுதுகிறேன்.

இத்தொடர்பதிவின் விதிமுறைகள்

1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
*******
மூன்றாவது விதிமுறை மீறப்படும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்கு இந்தத் தொடர்பதிவை எழுத யாரையும் அழைக்க விருப்பமில்லை.

(சச்சின் டெண்டுல்கர்)
1.பிடித்த கிரிக்கெட் வீரர்சச்சின் (எனக்கு கிரிக்கெட் தெரிய ஆரம்பித்ததிலிருந்து)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்ஸ்ரீசாந்த் (திமிர் பிடித்தவன்)

3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர்ஆலன் டொனால்ட் (தென் ஆப்பிரிக்காவின் முந்நாள்)

4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் -- நெஹ்ரா (முக்கியமான கட்டத்துலக் கூட பந்து வீசத்தெரியாதவர்)

5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் -- முத்தையா முரளிதரன் (சாதனைகள் பல)

6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் -- முரளி கார்த்திக்

7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர்வேற யாரு சச்சினே தான்

8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர் - அப்ரிதி (குருட்டாம்போக்கில் விளாசுபவர்)

(சௌரவ் கங்குலி)
9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர் -- கங்குலி, கில்கிறிஸ்ட் மற்றும் யுவராஜ்

10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர் -- யாருமில்லைங்க

(அஜய் ஜடேஜா)
11. பிடித்த களத்தடுப்பாளர் - ஜான்டி ரோட்ஸ், அஜய் ஜடேஜா மற்றும் ராபின் சிங்

12. பிடிக்காத களத்தடுப்பாளர் -- இப்பதான் நிறைய பேர் இருக்கானுங்களே நம்ம இந்திய அணியில

13. பிடித்த ஆல்ரவுண்டர்ராபின் சிங் (திறமையான வீரன்)

14. பிடிக்காத ஆல்ரவுண்டர் -- யூசுப் பதான் (இரண்டிலுமே சொதப்பல்)

15. பிடித்த நடுவர் - ஷெப்பர்ட் (மறக்க முடியுமா இவரை), பில்லி பார்டன்

16. பிடிக்காத நடுவர் -- தர்மசேனா

17. பிடித்த நேர்முக வர்ணனையாளர் -- டோனி கிரேக்

18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் -- சிவராமகிருஷ்ணன்

19. பிடித்த அணிஇந்தியா

20. பிடிக்காத அணிஇந்தியாவுடன் விளையாடும் எதிரணிகள்

21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள்இந்தியா மற்றும் பாகிஸ்தான்

22. பிடிக்காத அணிகளுக்கான போட்டிபங்களாதேஸ், கென்யாவுடன் பெரும் அணிகள் விளையாடும் போது

23. பிடித்த அணித் தலைவர் -- சவுரவ் கங்குலி, அசாருதீன்

24. பிடிக்காத அணித் தலைவர் -- பாண்டிங் (எதிரணிகளை ஏளனமாக விமர்சிப்பதால்)

25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிகங்குலி-சச்சின்

26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி - சடகோபன் ரமேஷ் உடன் களமிறங்கிய ஜோடிகள்

(ராகுல் திராவிட்)
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் - டிராவிட் (வேறு யாரும் நிகரல்ல)

28. உங்கள் பார்வையில் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - சச்சின்

29. பிடித்த போட்டி வகைஒரு நாள் போட்டிகள்

30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்சச்சின்

27 விவாதங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

குட்டி பாப்பாக்களின் படம் கொள்ளை அழகு.

வெற்றி said...

இதே மேட்டரை எல்லா இடத்திலும் படித்து போரடித்துவிட்டது தல..இந்த தொடர்பதிவு விளையாட்டை இத்துடன் நிறுத்தி கொள்வது நலம்..

வெற்றி said...

//குட்டி பாப்பாக்களின் படம் கொள்ளை அழகு.//

ரிப்பீட்டு :)

என் நடை பாதையில்(ராம்) said...

//*சச்சின் (எனக்கு கிரிக்கெட் தெரிய ஆரம்பித்ததிலிருந்து)*//


$$$$$$$$$

balavasakan said...

புலிகேசி என்ன ஒரு ஒற்றுமை இரண்டு எனக்கும் உங்களுக்கும் .....

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

I like your post. It was an amazing performance by Sachin.
Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

vasu balaji said...

அழகான படங்கள் வித்தியாசம்:).

Chitra said...

கிரிக்கெட் வீரர்களின் சிறு வயது படங்களும், உங்களுக்கு வீரர்களை பிடித்த, பிடிக்காத காரணங்களை சொல்லிய விதமும் அருமை.

திவ்யாஹரி said...

குழந்தைகள் புகைப்படம் அருமை.. அதை தவிர வேறு படிக்க கூட மனசு இல்லை நண்பா..

அத்திரி said...

//பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர் - அப்ரிதி (குருட்டாம்போக்கில் விளாசுபவர்)
//

correct

Unknown said...

படங்கள் எல்லாம் சூப்பர்.. இந்த விசயத்தில் தனியாய் நிற்கிறீர்கள்..

தாராபுரத்தான் said...

நானும் படித்தேன்.

ஸ்ரீராம். said...

வித்யாசமான படங்கள்...

thiyaa said...

m
m
m
.........................
iyooooooooooooooooooooooooooooooo

Anonymous said...

அது பில்லி பார்டன் இல்லீங்கண்ணா.. பில்லி பௌடன்.

MJV said...

புலி. நல்லபடியா புகைப்படம் போட்டு எழுதியிருக்கீங்க. சச்சின் சச்சின் தான்!!!

Thenammai Lakshmanan said...

வீரர்களின் சிறுவயது புகைப்படம் போட்டு அசத்திட்டீங்க புலிகேசி

இன்றைய கவிதை said...

அண்ணா கொன்ணூட்டீங்க

எல்லா கருத்துக்களும் சூப்பர் அனைத்தும் எனக்கு பிடித்தது , பிடிக்காத வர்ணணையாளர் சூப்பர்

நன்றி ஜேகே

அன்புடன் நான் said...

உங்களின் பதிவு (எண்ணம்)
நேர்மையாக உள்ளது . தம்பிகளை பாப்பாவாக... காட்டியமைக்கு பாராட்டுக்கள்.

Prakaash Duraisamy said...

சச்சின் தவிர மற்ற இரண்டு போட்டோவிலும் இருபது டிராவிட் தான்.

சங்கர் said...

//பிடிக்காத அணித் தலைவர் -- பாண்டிங் (எதிரணிகளை ஏளனமாக விமர்சிப்பதால்)//


வேற வழியே இல்ல, கட்சி ஆரம்பிச்சிட வேண்டியதுதான், நம்ம "வெற்றி"க்கு மதுரை தொகுதி கொடுத்துடலாம் :)

பனித்துளி சங்கர் said...

{{{{ பிடித்த கிரிக்கெட் வீரர் – சச்சின் }}}}எனக்கும் . பகிர்வுக்கு நன்றி !

க.பாலாசி said...

டிராவிட்டா அது?? என்னைமாதிரி அழகா இருக்காரே...

Unknown said...

க்யூட்டான படங்களோட அருமையா எழுதி இருக்கீங்க சகோ..

வெள்ளிநிலா said...

ஷர்புதீன் ன்னு ஒரு பிளேயரை பத்தி எழுதவில்லையே !!??

மரா said...

நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய விசயங்கள் இப்பதிவைப் பொறுத்தமட்டில் ஒத்து வருது.

புலவன் புலிகேசி said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...