கடவுளை மற..மனிதனை நினை..

27 February 2010

டரியல் (27-பிப்ரவரி-2010)

7:27:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
அஜீத் என்ன சொன்னா நமக்கென்னங்க? நமக்கு தனிப்பட்ட முறையிலயும், நாட்டுலயும் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அவங்க சொன்ன அந்த வார்த்தைகள், அதனால் எழுந்த பிரச்சினைகள் பொது மக்களுக்குத் தேவையற்றது. அவரு சொன்ன மாதிரியே சொல்லனும்னா "மக்களை மக்களா இருக்க விடுங்க". அவருக்காக வருத்தப் படவோ, ஆதரவு கொடுக்கவோ அவுரு இந்த தேசத்துக்காக ஒன்னும் செய்யல.

----------------------


நீண்ட நாட்களாக எதிர்பார்த்த "விண்ணைத்தாண்டி வருவாயா" படம் வந்துருக்கு. படம் நல்லா இருக்குன்னு பலர் சொல்லிட்டாங்க. இன்னைக்கு இரவுக் காட்சிக்கும் பதிஞ்சாச்சு. பாத்துட்டு வந்து அடுத்த டரியல்ல சொல்றேன். பல பேர் சொல்லிருந்தாங்க போனது என்னவோ ரகுமான், கௌதமுக்காகத்தான், ஆனா பாத்தது சிம்புவுக்காகன்னு. அவ்வளவு அருமையா நடிச்சிருக்காராம். பாப்போம். (இதப்பத்தி பேசியும் ஒன்னும் நடக்கப் போறதில்லை. இது பொழுதுபோக்கு அவ்வளவே)

----------------------

இது நம்ம சென்னை மக்களின் பொழுது போக்கு இடமான மெரீனா கடற்கரைங்க.


குப்பைகளை கண்ட இடத்தில் போடும் வழக்கம் கொண்ட தமிழர்கள் தானே.மெரினாவில் எதாவது வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பையை அங்கேயே போட்டு விட்டு வருகிறார்கள். நாம உபயோகிக்கற இடமும் நம்ம வீடு மாதிரிதாங்க. மெரினான்னு இல்ல எங்க போனாலும் பொது இடத்தில் குப்பை போடாமல் குப்பைத் தொட்டிகளில் போடலாமே. அரசும் குப்பைத் தொட்டிகளைக் குறைவாகத்தான் வைத்திருக்கிறது. அதனாலென்ன அக்குப்பையை கையில் வைத்திருந்து குப்பைத் தொட்டியப் பார்க்கும் போது போடலாமே. அது கையில் இருப்பதால் நாம் ஒன்றும் குறைந்து போய் விடுவதில்லை. அக்குப்பையை உருவாக்கியதே நாம் தானே...

----------------------

இந்த வாரப் பதிவர்

நமது நண்பர் ஈரோடு கதிர்.இவரது பதிவுகள் பெரும்பாலும் வாழ்வியல் பிரதிபலிப்புகளாகவே இருந்திருக்கிறது. கவிதைகள் எழுதுவதில் வல்லவர். அதோடில்லாமல் ஈரோடு வலைப்பதிவர் குழுமம் உருவானதில் பெரும் பங்காற்றியவர். அங்கு பதிவர் சந்திப்பை தமிழ் மன்ற விழா போல் நடத்திய பெருமைக்குரியவர். வாழ்த்துக்கள் கதிர் அண்ணா.

அவரது வலைப்பூ: கசியும் மௌனம்

----------------------

சிறுகதைகளுக்காக தனியே வலைப்பூ வைத்து எழுதி வரும் நண்பர் சே.குமாரின் "'ஆ'சிரியர்". நாட்டில் பல இடங்களில் நடக்கின்ற சம்பவம். அருமையாய் கதைப்படுத்தி எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள் ஆ'சிரியர்

----------------------

26 விவாதங்கள்:

மீன்துள்ளியான் said...

புலி குமார் கதை நல்ல அறிமுகம்

Chitra said...

பதிவு நல்லா இருக்குங்க.........!
மெரினா அழகு, மக்கள் கையில் என்று நல்லா சொல்லி இருக்கீங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த குப்பை மேட்டரில் இன்னும் நமக்கு விழிப்புணர்வு போதிய அளவு இல்லை என்றுதான்
சொல்ல வேண்டும், நல்ல பதிவு புலவரே.

அகல்விளக்கு said...

பொதுவாகவே மக்களுடைய குணமாகிவிட்டது தல அந்த குப்பை மேட்டர்... இதுல மெரினா மட்டுமில்ல எல்லா இடங்களிலேயும் இதைத்தான் பண்றாங்க...

நிச்சயம் மக்கள் மாற வேண்டும்...

:-)

ஜெட்லி said...

அஜித் நாட்டுக்காக பல நல்ல விஷயங்கள்
பண்ணி இருக்கார் புலிகேசி....... :))
இதோட முடிச்சிக்கிறேன்...

பேநா மூடி said...

ஆ'சிரியர்' - நல்ல அறிமுகம் நண்பா

க.பாலாசி said...

முதல் பேராவை மீண்டும் அழுத்தி சொல்லுங்கள்...

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

{{{{{{{{{ நாம உபயோகிக்கற இடமும் நம்ம வீடு மாதிரிதாங்க. மெரினான்னு இல்ல எங்க போனாலும் பொது இடத்தில் குப்பை போடாமல் குப்பைத் தொட்டிகளில் போடலாமே. }}}}}}}}}}}}

கை குடுங்க நண்பரே . இதுதான் உண்மையும்கூட . சற்று எல்லோரும் சிந்திக்கவேண்டிய விசயம்தான் . பகிர்வுக்கு நன்றி !

ஈரோடு கதிர் said...

அறிமுகத்திற்கு நன்றி முருகவேல்...

ஈரோடு கதிர் said...

//நமக்கு தனிப்பட்ட முறையிலயும், நாட்டுலயும் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அவங்க சொன்ன அந்த வார்த்தைகள், அதனால் எழுந்த பிரச்சினைகள் பொது மக்களுக்குத் தேவையற்றது. //

இது
சினிமா...
கிரிக்கெட்..
கடவுள் சர்ச்சை...
இன்னபிற.... என எதிலெல்லாம் மோதுகிறோமோ அவை அனைத்திற்கும் பொருந்தும்....

இய‌ற்கை said...

மிக நல்ல பதிவு.. அசத்தலான அறிமுகம்:‍)

மயில்ராவணன் said...

கதிரோட ப்ளாக் சமீபமாத்தேன் பார்த்தேன்.எளிமையாக எழுதிகிறார். ஆ’சிரியர் அறிமுகத்திற்கும் நன்றி.
இப்பதானே மெரினாவ அழகுபடுத்தினாரு தலிவரு :) இது பழய போட்டோவா இருக்கும்.....ஆங்!!!

புலவன் புலிகேசி said...

//இது
சினிமா...
கிரிக்கெட்..
கடவுள் சர்ச்சை...
இன்னபிற.... என எதிலெல்லாம் மோதுகிறோமோ அவை அனைத்திற்கும் பொருந்தும்....//

ஏன் இதச் சொல்றீங்கன்னு எனக்குப் புரியுது...இதில் சினிமா, கிரிக்கெட் ஒப்புக் கொள்கிறேன். கடவுள் பற்றி என்பதை விட நான் சொல்வது சமூக சீரழிவுக்குக் காரணமான மூட நம்பிக்கைகளைத்தான்.

மேலும் கிரிக்கெட்டோ சினிமாவோ வெறும் பொழுது போக்காக ரசிக்கலாம். ஆனால் அதில் சாதனைப் புரிந்து தேசத்திற்கு பெருமைத் தேடித்தருபவர்களை விட்டு கொடுக்க முடியாது...

வானம்பாடிகள் said...

டரியல் கலக்கல்:)

நாஞ்சில் பிரதாப் said...

நல்லாருக்கப்பு

க.இராமசாமி said...

நல்ல பகிர்வுங்க. நம்ம மக்கள்கிட்ட இந்த சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ரொம்ப கம்மிங்க.

சுசி said...

அஜித் :(((

வி தா வ செவ்வாய் பார்க்க போறேன். அதே ரகுமான், கௌதமுக்காக.

குப்பை தானே அதான் யாரும் கண்டுக்கிறதில்ல போல. பாதிப்பு??

கதிருக்கு வாழ்த்துக்கள்.

கதை படிச்சாச்சு. அருமை.

சே.குமார் said...

நல்லாயிருக்கு நண்பரே... என்னைப்பற்றி எழுதியதற்கும் உங்களுக்கு நன்றி.

பிரியமுடன் பிரபு said...

குப்பைகளை கண்ட இடத்தில் போடும் வழக்கம் கொண்ட தமிழர்கள் தானே.மெரினாவில் எதாவது வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பையை அங்கேயே போட்டு விட்டு வருகிறார்கள். நாம உபயோகிக்கற இடமும் நம்ம வீடு மாதிரிதாங்க. மெரினான்னு இல்ல எங்க போனாலும் பொது இடத்தில் குப்பை போடாமல் குப்பைத் தொட்டிகளில் போடலாமே. அரசும் குப்பைத் தொட்டிகளைக் குறைவாகத்தான் வைத்திருக்கிறது. அதனாலென்ன அக்குப்பையை கையில் வைத்திருந்து குப்பைத் தொட்டியப் பார்க்கும் போது போடலாமே. அது கையில் இருப்பதால் நாம் ஒன்றும் குறைந்து போய் விடுவதில்லை. அக்குப்பையை உருவாக்கியதே நாம் தானே...
/////

மிகச் சரி

PPattian : புபட்டியன் said...

அஜித் குறித்து என்னோட சிந்தனையும் இதுதான்..

குப்பை மேட்டர்.. நம்ம மக்கள் (என்னையும் சேத்துதான்) திருந்த இன்னும் நூறு வருஷம் ஆகும்

காவிரிக்கரையோன் MJV said...

புலி டரியல் வேகமாய் அரங்குக்கு வந்து விட்டது., அஜித் பாவம் விழி பிதுங்குகிறார். ஈரோடு கதிர் அவர்களின் வலைபூ முன்பே அறிமுகமான ஒன்று. ஆனால் நல்ல அறிமுகம். அடுத்த தரியலில் விண்ணைத்தாண்டி வருவாயா நோக்கி காத்திருக்கிறேன்!!!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

டரியல் கலக்கல்.
:))

திவ்யாஹரி said...

//அக்குப்பையை கையில் வைத்திருந்து குப்பைத் தொட்டியப் பார்க்கும் போது போடலாமே. அது கையில் இருப்பதால் நாம் ஒன்றும் குறைந்து போய் விடுவதில்லை. அக்குப்பையை உருவாக்கியதே நாம் தானே...//

சரியாய் சொன்னீங்க புலவரே..

அஜித் பெருசா எதுவும் செய்யல தான்.. அவரோட தன்னம்பிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கலாம்ன்னு தோணுது ..

thenammailakshmanan said...

ஈரோடு கதிரும் சே. குமாரும் மிக அருமையாக எழுதுவார்கள் கதிரின் ரயில் பயணக்கவிதையில் அவள் எடுத்துச்சென்ற மனசு பற்றிய கவிதை படிங்க அசந்து போவீங்க புலிகேசி

ROMEO said...

\\ ஈரோடு கதிர் //

யாருங்க இவரு ?? பார்க்க செம ஸ்மார்டா இருக்காரு ??

Priya said...

//அக்குப்பையை கையில் வைத்திருந்து குப்பைத் தொட்டியப் பார்க்கும் போது போடலாமே. அது கையில் இருப்பதால் நாம் ஒன்றும் குறைந்து போய் விடுவதில்லை.//....
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இயற்கையாகவே நம்மை சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு வேண்டும்!
நிச்சயமா இதை மக்கள் உணர்ந்தால் நல்லது!