கடவுளை மற..மனிதனை நினை..

26 February 2010

பள்ளியும் சமுதாயமும்

5:41:00 AM Posted by புலவன் புலிகேசி , 23 comments
முதன் முதல் அம்மா அப்பாவைப் பிரிந்து எட்டு மணி நேரம் இருந்ததும் அதன் பின் அதையே பழக்கமாக்கியதும் அந்தப் பள்ளிக்கூடம் தான்.ஆரம்பத்தில் எதற்காகப் போகிறோம் என்று எவருக்கும் தெரிந்ததில்லை. அது போலத்தான் பள்ளி வாழ்க்கையை தொடங்கின அந்த இரு சிட்டுகளான ரமேசும், அம்பிகாவும்.


பள்ளிகளில் சீருடை வரக்காரணம் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால் அந்த சீருடையிலும் ரமேஸ் தரம் பிரிக்கப் பட்டான். அவனைத் தரம் பிரித்துக் காட்டியது பின்னால் கிழிந்த அவனது அரைக்கால் சட்டையும், பைக் கிழிந்த அவனது மேல் சட்டையும்தான்.

அம்பிகாவும் ரமேசும் அருகருகே வசிக்கும் தெரு நண்பர்கள். இருவரும் ஒன்றாகத்தான் பள்ளி சென்று வந்தனர். இது வரை இருவருக்குள்ளும் சாதிப் பிரச்சினை வந்ததில்லை. காரணம் சாதி என்றால் என்ன? எனத் தெரியாத விகல்ப்பமில்லாப் பருவமது. இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர்.

மஞ்சள் நிற துணிக்கடை பை, காலை விட நீளமான செருப்பு, சில பாடப் புத்தகங்கள், பழைய சிலேட்டு, சில உடைந்த பல்பங்கள் இவைத் தவிற அந்த வயதில் எதுவும் அவர்களுக்கு பெரிய சொத்தாகத் தெரிந்ததில்லை. பள்ளியும், தெரு விளையாட்டும் அவர்களை பிரித்துப் பார்க்க மனமில்லாமல் வழி நடத்திக் கொண்டிருந்தன.

இப்படியே சென்று கொண்டிருந்த ஒரு நாளில் அம்பிகா பூப்பெய்தினாள். அப்போது இருவரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். சில நாடகள் ரமேஸ் தனியே பள்ளி சென்றான். அம்மாவிடம் கேட்டான் "ஏம்மா அம்பி ஸ்கூலுக்கு வரதில்ல?" அதற்கு பதிலாய் அவனுக்குக் கிடைத்தது "நாளை வருவாள்" என்பது மட்டுமே.

"இல்ல அவ வயசுக்கு வந்துட்டாளாம் இனிமே என் கூட வர மாட்டாளாமே? நம்ம ராசாத்தி சொன்னா" என்றான்.

பதில் சொல்ல முடியாமல் "ஆமாம்" என நிறுத்திக் கொண்டாள் தாய்.

இந்த சிலநாள் இடைவெளி இருவருக்குள்ளும் ஒரு நீண்ட இடைவெளியாக மாறத் தொடங்கியிருந்தது. அவள் த்ந்தையுடன் மீண்டும் பள்ளி வந்தாள். ரமேசைப் பார்த்து வெட்கப் பட்டாள். அது அவனுக்கு புதி(ரா)தாக இருந்தது. வீடு திரும்புகையில் வழக்கம் போல் ரமேஸ் அவள் கைப்பிடித்து நடக்க எத்தனிக்க அவள் தட்டி விட்டு சொன்னாள்.

"டேய் ரமேசு இனிமே நான் எந்த ஆம்பளப் பசங்க கூடயும் தொட்டுப் பேசக் கூடாதாமுடா" அம்மா சொன்னாங்க.

"ஏன் அப்புடி?" என்றான்.

"தெரியவில்லை" எனபதை விட அவளுக்கு வேறு காரணம் தெரியவில்லை.


காலமும், சமுதாயமும் இவர்களின் இடைவெளியை அதிகப் படுத்தியிருந்தது.அந்த இடைவெளியே ரமேசுக்கு அவளை வேறு படுத்திப் பார்க்கத் தூண்டியது. இப்போது பதினோராம் வகுப்பு. அவள் அவனுக்கு ஒரு பருவப் பெண்ணாகத் தெரிந்தாள். இருவருக்குள்ளும் ஒரு விகல்பம் தோன்றியிருந்தது.

23 விவாதங்கள்:

Anonymous said...

அடுத்த பகுதி இருக்கா??இல்ல இதனுடன் இந்த பதிவு முடிகிறதா??

வெற்றி said...

சிறுகதை ரொம்ப சிறுசா இருக்கே தல..இது சிறுகதையா இல்ல தொடர்கதையா..?

புலவன் புலிகேசி said...

நிச்சயமாத் தொடர்கதை இல்லை...இது ஒரு குட்டிக்கதை...

சைவகொத்துப்பரோட்டா said...

தேவையற்ற குழப்பங்களில், நம் மனங்கள் தடுமாறுவதை சொல்லி இருக்கிறீர்கள்.

ஈ ரா said...

கரெக்டுதான்...ஆனா இப்பல்லாம் புள்ளைங்க ரொம்ப விவரமாயிட்டாங்கன்னு நினைக்கிறேன்..

Chitra said...

ஐயோ........... சேத்து வச்சா வில்லங்கம். விலக்கி வச்சா விகல்பம். வேற என்ன செய்ய? :-)

அகல்விளக்கு said...

:-)

vasu balaji said...

விகல்பம்? சரியா தோணலை.

இன்றைய கவிதை said...

இது ஒரு விடலை விளையாட்டு, காலம் தான் சொல்ல வேண்டும் இது விகல்பமாக மாறுமா அல்லது நல்ல நட்பாக முடியுமா என்று
மறு பாதி உண்டா?

நன்றி ஜேகே

Unknown said...

ஆர்.சி.சக்தி படம் பாக்கிறமாதிரி இருக்கு..

Raghu said...

நானும் தொட‌ர்க‌தையோன்னு நினைச்சுட்டேன்:)

செல்வராஜா மதுரகன் said...

Nice Story, sorry abt english font, i'm commenting through mobile...

http://saaralhal.blogspot.com

க.பாலாசி said...

இன்ட்ரஸ்ட்டிங்கான கதை நண்பா...

டக்கால்டி said...

கதை தொடருமா?
இல்லை முற்றுபெற்றுவிட்டதா?
யதார்த்தம் ...

Romeoboy said...

அப்பறம் ???

Unknown said...

எப்போ அடுத்த பார்ட்...,

ஜெட்லி... said...

அறியாத வயசு புரியாத மனசு ரெண்டும் இங்கே
காதல் செய்யும் நேரம்....

சுசி said...

சரியா சொல்லி இருக்கீங்க புலவரே..

ஸ்ரீராம். said...

நல்ல இருக்கு புலிகேசி...அதிலும் அந்தக் கடைசிப் படம் பொருத்தம். வளர்ச்சியில் பெண் சற்று முன்னவள்தான்..ஆணைக் காட்டிலும்..அழகாகச் சொல்லி உள்ளீர்கள். வானம்பாடிகள் சொல்வது போல விகல்பம் வார்த்தை இடிக்கிறது...!

மரா said...

ஜெட்லியை வழிமொழிகிறேன்..

சசிகுமார் said...

நல்ல பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

இனியாள் said...

அழகி படம் படத்துல கூட இந்த மாற்றத்த அழகா எடுத்திருப்பாங்க. நல்ல பதிவு.

Thenammai Lakshmanan said...

நல்லா இருக்கு புலவரே ஆனா சட்னு முடிச்ச மாதிரி இருக்கு