கடவுளை மற..மனிதனை நினை..

29 January 2010

யார் சொன்னது நான் நாத்திகன் என்று?

5:43:00 AM Posted by புலவன் புலிகேசி 31 comments
இந்த பொங்கல் முடித்து வெளியிட்ட டரியலில் பொங்கலின் போது ஊரில் நான் சில நல்லுள்ளம் படைத்த மனிதர்களை சந்தித்ததாக சொல்லியிருந்தேன். அது பற்றியதுதான் இந்த பதிவு. ஆம் இதில் சில முறை மட்டுமே சந்தித்த மூன்று நபர்களை பற்றிதான் கூற விழைகிறேன்.

கணேசன் (மாமா என அழைப்போம்)

என் பால்ய நண்பன் ஒருவன் மூலமாக இவரின் அறிமுகம் சில வருடங்களுக்கு முன் கிடைத்தது. என் நண்பனும் இன்னும் சிலரும் அவரை செல்லமாக மாமா என்று அழைப்பதால் நானும் அவரை அவ்வாறே அழைப்பேன். இந்த பொங்கலின் போது வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியை மேய்ந்துகொண்டு (பொங்கலையும்தான்) இருந்த போது என் நண்பனிடமிருந்து என் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது "உடனே புறப்பட்டு மாமா கடைக்கு வா" என்றான்.

கணேசன் ஒரு நகை செய்யும் தொழில் செய்பவர். மேலும் குடிப்பழக்கம் உள்ளவர். என்ன குடித்தாலும் அவரின் நற்குணங்கள் இதுவரை குன்றியதில்லை என்பதுதான் உண்மை. நானும் வாகனத்தை எடுத்து கொண்டு அவர் கடைக்கு சென்றேன். அங்கே நண்பனும் கணேசனும் ஒரு கட்டு கரும்புகளை துண்டாக வெட்டி கட்டி கொண்டிருந்தனர். நான் சென்றதும் அந்த ஆஸ்ரமத்துக்காக வாங்கினேன் போய் குடுத்துட்டு வரதான் கூப்பிட்டேன் என்றார். கரும்புகளோடு சேர்த்து சில பிஸ்கட் பாக்கெட்களையும் வாங்கி வைத்திருந்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர் வீட்டில் பொங்கல் வைப்பதற்கு போகாமல் இதை கொண்டு அந்த குழந்தைகளிடம் சேர்ப்பதில் குறியாக இருந்தார். கொண்டு சேர்த்துவிட்டு வந்தோம்.

கணேசனின் அப்பாவும் அம்மாவும்

அடுத்து நானும் என் நண்பனும் அருகிலிருக்கும் ஆடுதுறை சென்று என் சித்தி மற்றும் சகோதரிகளையும், தம்பியையும் பார்த்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தோம். அன்று மாட்டு பொங்கல். வரும் வழியில் திருவாடுதுறை எனும் இடத்தை நெருங்கியபோது நண்பன் சொன்னான் "இங்கதான் மாமாவோட அப்பாவும் அம்மாவும் இருக்காங்க. பார்த்து விட்டு வரலாம்" என்று. நான் இதற்கு முன் அவர்களை சந்தித்ததில்லை. அவர்கள் வீடு அந்த கிராமத்தில் ஒரு சிறிய குடிசை வீடு. வீட்டிற்கு இன்னும் மின்சார இணைப்பு கூட கொடுக்கப்படவில்லை.

நாங்கள் சென்று வாகனத்தை நிறுத்திய போது கணேசனும் அங்கு வந்திருந்தார். வீட்டு வாசலை அடைந்த போது அவரின் அம்மாவும் அப்பாவும் ஓடிவந்து "வாப்பா நல்லா இருக்கியா?" என என்னை தெரிந்தவன் போல் விசாரித்தனர். கணேசனின் தந்தை நெருங்கிய சொந்தக்காரனை விசாரிப்பது போல் என் குடும்பம் சகிதம் நலம் விசாரித்து முடித்து தன் மனைவியிடம் "புள்ளைங்களுக்கு காபி கொடுடி" என்றார். காபி கொடுத்தார்கள். அதன் பின் அவரின் தாயார் "இன்னைக்கி கவிச்சி குழம்பு இருந்து சாப்பிட்டுட்டுதான் போவனும்னாங்க" (எங்கள் வீட்டில் அனைவரும் சைவம் என்னை தவிர. இருந்தாலும் அம்மா கையால சாப்பிட்டு பல நாளானதால்தான் மறுத்தோம்).

எதையோ சொல்லி வேணாம்னு சொல்லிட்டோம். அப்புறம் அவரின் தாயர் நடந்து கொண்டவிதம் என்னை நெகிழச் செய்தது. என்னை உள்ளே அழைத்து "இப்பதான மொதோ தடவ வர வந்து வீட்டைப்பாருன்னு" சொல்லி அந்த குடிசையை ஒரு பெருமிதத்துடன் சுற்றி காட்டினார். அப்போது அந்த குடிசை நகரத்தின் உயர்ந்த அடுக்ககங்களை விட உயர்வாக இருப்பது போல் தோன்றியது எனக்கு.

நகரத்தில் கட்டிடங்கள் உயர்ந்து மனித மனங்கள் சுருங்கி போயிருக்கிறது. ஆனால் இது போன்ற இடங்களில் வெறும் குடிசையில் மனிதம் நிறைந்து கிடக்கிறது.

என்னைக் கேட்டால் இது போன்ற மனிதம் வாழும் இல்லத்தை கோவில் என்றும் அவர்களை கடவுள் என்றும் சொல்வேன். யார் சொன்னது நான் நாத்திகன் என்று?

31 விவாதங்கள்:

சைவகொத்துப்பரோட்டா said...

//நகரத்தில் கட்டிடங்கள் உயர்ந்து மனித மனங்கள் சுருங்கி போயிருக்கிறது. ஆனால் இது போன்ற இடங்களில் வெறும் குடிசையில் மனிதம் நிறைந்து கிடக்கிறது.//

இது உண்மைதான் நண்பா, நல்ல அனுபவம், வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

ஜெட்லி... said...

பகிர்வுக்கு நன்றி...

தாராபுரத்தான் said...

உங்களை யார் சொல்லுவார் நாத்திகர் என்று.

Paleo God said...

அதானே புலவரே..
அருமை..:))

பிரபாகர் said...

நண்பா,

குடிசையில் தெய்வங்களை கண்டு பேறு பெற்றிருக்கிறீர்கள்...

அருமையான பகிர்வு...

பிரபாகர்.

திவ்யாஹரி said...

நல்ல அனுபவம் புலவரே.. அருமையான பகிர்வு.. நன்றி..

Cable சங்கர் said...

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையாக சொல்லி இருக்கீங்க..

vasu balaji said...

அருமையான பகிர்வு.:)

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு

அகல்விளக்கு said...

நெகிழச்செய்துவிட்டாய் நண்பா....

வெள்ளிநிலா said...

intersting to read- gud

வெள்ளிநிலா said...

intersting to read- gud

sathishsangkavi.blogspot.com said...

//என்னைக் கேட்டால் இது போன்ற மனிதம் வாழும் இல்லத்தை கோவில் என்றும் அவர்களை கடவுள் என்றும் சொல்வேன்.//

உங்களை வழிமொழிகிறேன்....

அருமையான பகிர்வு....

malarvizhi said...

nalla pathivu.nanraaga ullathu nanpare!!!

சுசி said...

சரியா சொல்லி இருக்கீங்க.

//என்னைக் கேட்டால் இது போன்ற மனிதம் வாழும் இல்லத்தை கோவில் என்றும் அவர்களை கடவுள் என்றும் சொல்வேன். //

அருமையான இடுகை.

பனித்துளி சங்கர் said...

//நகரத்தில் கட்டிடங்கள் உயர்ந்து மனித மனங்கள் சுருங்கி போயிருக்கிறது. ஆனால் இது போன்ற இடங்களில் வெறும் குடிசையில் மனிதம் நிறைந்து கிடக்கிறது.//



உண்மைதான் நகரம் என்ற பெயரில் நரக வாழ்க்கை !
சிறந்த புனைவு வாழ்த்துக்கள் .

ஹேமா said...

புலவரே...நீங்க ...
நீங்க...புலவர்தான்.
அசத்திட்டீங்க.

க.பாலாசி said...

///நகரத்தில் கட்டிடங்கள் உயர்ந்து மனித மனங்கள் சுருங்கி போயிருக்கிறது. ஆனால் இது போன்ற இடங்களில் வெறும் குடிசையில் மனிதம் நிறைந்து கிடக்கிறது.///

உண்மைதாங்க நண்பரே... நல்ல அனுபவம்...

வெற்றி said...

//யார் சொன்னது நான் நாத்திகன் என்று?//

அதானே, யாருய்யா சொன்னது :)

கண்மணி/kanmani said...

//நகரத்தில் கட்டிடங்கள் உயர்ந்து மனித மனங்கள் சுருங்கி போயிருக்கிறது. ஆனால் இது போன்ற இடங்களில் வெறும் குடிசையில் மனிதம் நிறைந்து கிடக்கிறது.//

உண்மை

Anonymous said...

தனிமரம் தோப்பாகுமா?

There are good poor and bad poor.

இதுதான் வாழ்க்கையின் உண்மை.

There is also a pshychological elemment here.

ஒரு குடும்பத்தில் இப்படிப்பட்ட altrusitic trait runs deep.

எனக்கு ஒரு நண்பன் உண்டு. அவன் இயல்பே பிறருக்கு உதவி செய்வதுதான்.

ஒருநாள், நான் அவன் அறையில் (திருவல்லிக்கேணி மான்சன்) அளாவிக்கொண்டிருந்த போது, அங்கு ஒருவர் வந்தார். அவரிடம் இவர் வெகுனேரம் பேசிக்கொண்டிருதார். அஃது ஒரு சிறுமியப்பற்றியது. அவளின் எதிர்காலம். வளர்ப்பு பற்றியது.

அவர் போனவுடன், நான் ‘யாரவர்? யாரந்த சிறுமி? அவர் மகளா?’

நண்பரின் பதில்:

வந்தவர் என் அண்ணன். ஒரு கிளார்க். அவர் காட்டிற்குள் காலைக்கடனைக்கழிக்கச் சென்ற போது, இருவர் ஒரு சிறுமியின் கண்களைகுருடாக்க முயற்சி செய்து கொண்டிருக்கு, அவரின் ஓங்குதாங்கான கரிய உருவத்தைப்பார்த்தவுடன் அச்சிறுமியை அங்கேயே விட்டுவிட்டி ஓடுவிட்டனர். அச்சிறுமி ஒரு அனாதை. இவர்களிடம் சிக்கிக்கொண்டாள். அவளை வீட்டிற்குக் கொண்டுவந்து வளர்த்துவருகிறார் அண்ணன்!”

இவரின் தந்தை, இன்னொரு தம்பி, அக்காள் இப்படிப்பட்ட altruist trait in personality கொண்டவர்கள்.

இதற்கு மாறாக, பிறருக்கு இரங்கல் என்ற எண்ணமே பாவம் என்னும் குணமும் குடுமபங்களில் வழிமுறையாக வருவது. ஏழைகள், பணக்காரர்கள், பட்டணம், கிராமம் என்ற வேறுபாடுகள் கிடையா.

Radhakrishnan said...

அருமையான நெகிழ்வான நிகழ்வு, நாணல் அவர்களின் பின்னூட்டமும் அருமை.

priyamudanprabu said...

என்னைக் கேட்டால் இது போன்ற மனிதம் வாழும் இல்லத்தை கோவில் என்றும் அவர்களை கடவுள் என்றும் சொல்வேன். யார் சொன்னது நான் நாத்திகன் என்று?
//////

athuthaanee?????
yaarupaa athu?
summa irukka maattikalaa?

balavasakan said...

மனிதம் இன்னும் இருக்கிறது..ஆனால் இப்படி எங்களுக்கு எட்டாத தூரங்களில் தான்...!!!!

ஸ்ரீராம். said...

மனிதர்களைப் புரிந்து கொள்ளவே தனி மனம் வேண்டும்...நல்ல பகிர்வு..

நண்பன் said...

நாத்திகன் என்று சொன்னதற்கு காரணம் அடுத்தவர் மதநம்பிக்கையை கேலிபேசுவதால். அதையும் குறைத்தால் உண்மையில் நாத்திகன் இல்லையென ஒத்துக்கொள்ளலாம்.
eg:
http://youthful.vikatan.com/youth/Nyouth/murugavel17112009.asp

முனைவர் இரா.குணசீலன் said...

"இப்பதான மொதோ தடவ வர வந்து வீட்டைப்பாருன்னு" சொல்லி அந்த குடிசையை ஒரு பெருமிதத்துடன் சுற்றி காட்டினார். அப்போது அந்த குடிசை நகரத்தின் உயர்ந்த அடுக்ககங்களை விட உயர்வாக இருப்பது போல் தோன்றியது எனக்கு.

நகரத்தில் கட்டிடங்கள் உயர்ந்து மனித மனங்கள் சுருங்கி போயிருக்கிறது. ஆனால் இது போன்ற இடங்களில் வெறும் குடிசையில் மனிதம் நிறைந்து கிடக்கிறது.

என்னைக் கேட்டால் இது போன்ற மனிதம் வாழும் இல்லத்தை கோவில் என்றும் அவர்களை கடவுள் என்றும் சொல்வேன். யார் சொன்னது நான் நாத்திகன் என்று?



அருமை நண்பரே..
உண்மையும் அதுதான்..
உயர்ந்த மாளிகைகளில் பணம் மட்டுமே ஆட்சிசெய்யும்...

உறவுகளே உணர்வுகளே செத்துப்போயிருக்கும்.

நெகிழ்ச்சியான சிந்தனையைத் தூண்டும் பதிவு நண்பரே..

Unknown said...

அருமை நண்பா...

மந்திரன் said...

நல்லா சொன்னிங்க ..

//என்னைக் கேட்டால் இது போன்ற மனிதம் வாழும் இல்லத்தை கோவில் என்றும் அவர்களை கடவுள் என்றும் சொல்வேன். யார் சொன்னது நான் நாத்திகன் என்று?
//
Repeat ....