கடவுளை மற..மனிதனை நினை..

30 January 2010

டரியல் (30-சனவரி-2010)

6:36:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments
நண்பர் சினிமா புலவன் தன் சினிமா புலவன் வலைப்பூவுக்கு என்னையும் ஆசிரியராக இருக்கும் படி அழைத்தார். முன்னர் அவர் எழுதிக் கொண்டிருந்தவை எல்லாம் சினிமா செய்திகளாகவே இருந்து வந்தது. இருவரும் இணைந்த பின்பு திட்டமிட்டு பேசி தினம் ஒரு பிரிவில் சினிமா நிகழ்வுகளை பதிய முடிவு செய்து தொடங்கினோம். இதன் விளைவு அந்த வலைப்பூ இப்போது பலரால் ரசிக்கப் பட்டு வருகிறது.

அதிலும்
"தமிழ் சினிமா உருவான வரலாறு - 1" தொடர் கட்டுரை திரைத்துரையின் பல அரிய தகவல்களை வழங்கப் போகிறது. நண்பர்கள் நேரமிருந்தால் சென்று படித்து உங்கள் கருத்துக்களை அங்கே தெரிவியுங்கள்.

----------------------

இந்த வார பதிவர்

அப்புறம் என் 50வது பதிவில் வாரம் ஒரு பதிவர் பற்றி எழுதப் போவதாக சொல்லியிருந்தேன். நீண்ட தாமதத்திற்கு பின் இந்த வாரம் முதல் துவக்குகிறேன்.


வானம்பாடிகள் பாலா ஐயாவத்தான் மொதல்ல சொல்லனும்னு எப்பவோ முடிவு பன்னிட்டேன். ஐயா ஒரு நகைச்சுவை நாயகன்னு முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். ஐயாவோட அனுபவப் பகிர்வுகளை படிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும். அவரை நகைச்சுவையாளர்னு மட்டும் தப்பா நெனச்சிராதீங்க. அவரோட "நறுக்குன்னு நாலு வார்த்தை" பதிவுகளை படிச்சா மனுசன் எவ்வளவு பெரிய கோவக்காரர்னு உங்களுக்கே தெரியும்.

நிறைய நகைச்சுவை மற்றும் சிந்தனைகளை வழங்கி வரும் ஐயா வானம்பாடிகள் பின்னூட்டமிடுவதில் வல்லவர். இவருக்கு மட்டும் எப்புடித்தேன் நேரம் கிடைக்குதோ. பல சமயங்களில் கலகலாவின் பதிவுகளில் இவரின் பின்னூட்டங்களிலும் அந்த நகைச்சுவையும் கோவமும் கொப்பளிக்கும்.
இவரின் வலைப்பூ பாமரன் பக்கங்கள்
நன்றி வானம்பாடிகள் ஐயா
----------------------

நம்ம இந்திய அணி ஜாகீர்கான் புண்ணியத்துல(?) வங்கதேசத்தோட மோதி கோப்பையை தட்டி வந்திருக்கு. ஜாகீர்கான் ஆட்ட நாயகனாவும், தொடர் நாயகனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுருக்காரு. ஏம்பா ஜாகீரு எதாவது பச்ச புள்ள கெடைச்சா வெளுத்து வாங்குற நீ பெரிய ஆளுங்க கிட்ட சோடை போயிடுறியேமா.

----------------------

தபால் நிலையத்துல 1.45 கோடி ஊழலாம். அடா அடா அடா என்ன ஒரு சாதனை. திண்டுக்கல் வேடச்சந்தூர் தபால் நிலையத்துல பொதுமக்கள் சிறுசேமிப்பில் போட்டு வச்சிருந்த பணத்துல 1.45 கோடியை ஆட்டய போட்டாங்களாம். இதுக்காக அங்க சி.பி.ஐ விசாரனையும் சோதனையும் பன்னி கிட்டிருக்கு. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சேமிப்புக்கு நம்பும் தபால் துறையிலேயே இப்படி ஒரு முறைகேடு நடந்திருக்கிறது. என்ன கொடுமைங்க.

----------------------
இந்த வார டரியல் நம்ம சித்ரா அவர்களின் "காதல், கல்யாணத்தில் "முடிஞ்சிருச்சா"?" அருமையான பதிவு பாக்கலைன்னா போய் பாத்துருங்க

26 விவாதங்கள்:

முனைவர்.இரா.குணசீலன் said...

அதிலும் "தமிழ் சினிமா உருவான வரலாறு - 1" தொடர் கட்டுரை திரைத்துரையின் பல அரிய தகவல்களை வழங்கப் போகிறது. நண்பர்கள் நேரமிருந்தால் சென்று படித்து உங்கள் கருத்துக்களை அங்கே தெரிவியுங்கள்.


மகிழ்ச்சி நண்பரே..

முனைவர்.இரா.குணசீலன் said...

வானம்பாடி ஐயாவை ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றேன். மிகவும் எளிமையான மனிதர்.
நமக்கெல்லாம் முன்னொடி.

(இவர் தம் பின்னூட்ட அனுபவங்களையே ஒரு தனிப்பதிவாக இடலாம். பல பதிவர்களின் ஒரே கேள்வி..?
இவர் மட்டும் எப்படி இவ்வளவு பின்னூட்டமிடுகிறார் என்பது தான்)

சைவகொத்துப்பரோட்டா said...

//திண்டுக்கல் வேடச்சந்தூர் தபால் நிலையத்துல பொதுமக்கள் சிறுசேமிப்பில் போட்டு வச்சிருந்த பணத்துல 1.45 கோடியை ஆட்டய போட்டாங்களாம்//

அடப்பாவிகளா, இவனுகளை எல்லாம் உட்டுட்டு, ஹெய்ட்டில அப்பாவிகள பழி வாங்குறியே பூமாதேவி.

ஸ்ரீராம். said...

பாமரன் சார் பத்தி சொல்லணுமா? நானும் படித்து ரசித்து வருகிறேன்...
ஜாகிர் கமெண்ட் ரசித்தேன்...உண்மை..

ஸ்ரீராம். said...

சாரி, பாலா சார் என்பதும் வானம்பாடிகள் என்பதும் மனதில் நினைத்து பாமரன் சார் என்று வந்து விட்டது...!

கும்மாச்சி said...

வானம்பாடி ஐயா அவர்கள் நமது பதிவுலக முன்னோடி.

ஈரோடு கதிர் said...

வானம்பாடி குறித்து எழுதியமைக்கு மிக்க மகிழ்ச்சி

ஆனா... யாரோ கண்ணு வச்சிட்டாங்கப்பா... இப்போ எழுதவே மாட்ங்கிறாரு... கொஞ்சம் கவனிங்க புலிகேசி

நாஞ்சில் பிரதாப் said...

தல நம்ம வானம்பாடிகள் ஐயாவை பத்தி சரியாத்தான் போட்ருக்கீங்க. நல்ல விசயம். ஆனா அதுல நிறைய உள்குத்துக்கள் இருக்கும்பேல இருக்கே...:-)

ஜாகீர் கான் பத்தி சொன்னது கரெக்ட்தான்... பங்களாதேஷ்பத்தி ஷேவாக் மேட்ச் தொடங்குறதுக்குமுன்னாடிய சொல்லிட்டாரே...


தபால்துறை ரொம்ப நஷ்டத்துல ஓடிட்டிருக்கு, அங்கயும் ஊழலா... அங்க சேமிப்பு வச்சுருக்குற எல்லாருமே பாவப்பட்ட ஜனங்கள்தான். அங்கயும் ஊழல் பண்ண எப்படித்தான் தோணுதா... இழுத்துவச்சு அறுத்தாத்தான் சரிப்படுவானுங்க...

Subankan said...

வானம்பாடிகள் ஐயாவைப்பற்றி எழுதியதற்கு மகிழ்ச்சி. ஆரம்பமே அசத்தல், தொடருங்க :)

புலவன் புலிகேசி said...

//Blogger நாஞ்சில் பிரதாப் said...

தல நம்ம வானம்பாடிகள் ஐயாவை பத்தி சரியாத்தான் போட்ருக்கீங்க. நல்ல விசயம். ஆனா அதுல நிறைய உள்குத்துக்கள் இருக்கும்பேல இருக்கே...:-)//

அய்யய்யோ கிலிய கிளப்பாதீங்க. அய்யாவப் பத்தி எழுதுற்ப்ப எப்புடிங்க உள்குத்து வரும்.

அகல்விளக்கு said...

டரியல் சூப்பர்....


பாலாண்ணா அட்டகாசம்...

ஜாகிர் - :(

//"காதல், கல்யாணத்தில் "முடிஞ்சிருச்சா"?" //

அருமையான பதிவு தல...

பகிர்ந்தமைக்கு நன்றி...

வானம்பாடிகள் said...

மிக நெகிழ்ச்சியாயிருக்கிறது புலிகேசி. நன்றி. டரியல் எப்பவும் போல் கலக்கல்.

பலா பட்டறை said...

அசத்தல் டரியல்.. ஐயாவ பத்தி எழுதினது மிக்க மகிழ்ச்சி புலவரே. :))

- தொடரட்டும்..:))

vellinila said...

இப்படிதான் யோசிக்கணுமா டரியல் எழுத!

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
வானம்பாடி குறித்து எழுதியமைக்கு மிக்க மகிழ்ச்சி
ஆனா... யாரோ கண்ணு வச்சிட்டாங்கப்பா... இப்போ எழுதவே மாட்ங்கிறாரு... கொஞ்சம் கவனிங்க புலிகேசி//

அதேதாங்க... எனக்கும் டவுட்...ஒருவாரமா ஆளப்பாக்கவே முடியல...

இந்தவார டரியல் ஜாகீர் கானா??? ரைட்டு..

Balavasakan said...

சினிமாப்புலவன் ஏற்கனவே பாத்தன் அங்க புலிகேசி என்று பேரைப்பாத்த உடனை சாக் ஆயிட்டேன் இதான் ரகசியமா,,,,,
வானம்பாடி ஐயாவா... மகிழ்ச்சி...மகிழ்ச்சி

பிரபாகர் said...

ஆசானைப்பத்தி தம்பி அழகா சொல்லியிருக்கறத தோழர் ஆதங்கத்தோட வாழ்த்த, இன்னொரு தம்பி மகிழ்ச்சி என சொல்லி, எனக்கு கிடைத்திட்ட இந்த வலையுலக உறவை எண்ணி பெரிதும் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் புலிகேசி.

பிரபாகர்.

Chitra said...

Bala Sir is a guide, especially for new bloggers like me. Thank you for introducing me in the dariyal. :-)

பின்னோக்கி said...

வானம்பாடி அவர்களுடன் ஆரம்பித்தது சரியானது. பல கலை வல்லவர். நல்லவர். (வானம்பாடி சார் ! இப்படித்தானே பின்னூட்டம் போடனும்னு சொன்னீங்க போட்டுட்டேன் :) )

கிரகம் புடிச்சவனுங்க... தபால் ஆபீசையும் விடலையா :(

யூர்கன் க்ருகியர் said...

வானம்பாடி is a great person in tamil bloggers !

சிங்கக்குட்டி said...

வானம்பாடி குறித்து எழுதியமை மிக சரி :-).

சிங்கக்குட்டி said...

தவறாக நினைக்கவில்லை என்றால், "பன்னிட்டேன்" திருத்தவும்.

கலகலப்ரியா said...

அருமையான பதிவு புலிகேசி...! தூங்காம ப்ளாக்ஸ் படிச்சு பின்னூட்டம் போடுற ஒரு ஆத்மா இருக்குன்னா அது பாலா சார் தான்.. =))

முகிலன் said...

//கலகலப்ரியா said...
அருமையான பதிவு புலிகேசி...! தூங்காம ப்ளாக்ஸ் படிச்சு பின்னூட்டம் போடுற ஒரு ஆத்மா இருக்குன்னா அது பாலா சார் தான்.. =))

//

ரிப்பீட்டு...

கலகலப்ரியாவுக்கு பாலா சார் எழுதுன பின்னூட்டங்களைத் தொகுத்தா ஒரு பெரிய புத்தகமே போடலாம்.. :)

திவ்யாஹரி said...

//"தமிழ் சினிமா உருவான வரலாறு - 1" தொடர் கட்டுரை திரைத்துரையின் பல அரிய தகவல்களை வழங்கப் போகிறது.//
நன்று புலவரே. சினிமா புலவருக்கு பின்னூட்டம் இட முடிய வில்லை.. அதை கொஞ்சம் பாருங்கள் நண்பா..

//ஐயா ஒரு நகைச்சுவை நாயகன்னு முன்னர் ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். ஐயாவோட அனுபவப் பகிர்வுகளை படிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும்//
அய்யாவின் பதிவை படித்தேன்.. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல..

//ஏம்பா ஜாகீரு எதாவது பச்ச புள்ள கெடைச்சா வெளுத்து வாங்குற நீ பெரிய ஆளுங்க கிட்ட சோடை போயிடுறியேமா.//

ஜாகிர் :(

//தபால் நிலையத்துல 1.45 கோடி ஊழலாம்.//

இது ஒன்னு தான் உருப்புடியா இருந்துச்சி.. அதுவும் போச்சா..

//சித்ரா அவர்களின் "காதல், கல்யாணத்தில் "முடிஞ்சிருச்சா"?"//

முன்பே படிச்சிட்டேன். நண்பா. அருமையான பதிவு..

புலவன் புலிகேசி said...

அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...வேலை பளுவால் சில நாட்களாக பின்னுட்டங்களுக்கு பதில் போடவில்லை. இனி தொடர்ந்து பதில் எழுத முயற்சிக்கிறென்.