கடவுளை மற..மனிதனை நினை..

25 January 2010

புலிக்குகைக்கு போன கதை

8:09:00 AM Posted by புலவன் புலிகேசி 26 comments

நேற்று மதியம் அறை நண்பர்களுடன் கலந்து கோவளம் கடற்கரை செல்லலாம் என முடிவெடுத்து புறப்பட்டோம். திருவான்மியூர் வழி செல்லாமல் ஓ.எம்.ஆரில் செல்லலாம் என நான் சொன்ன யோசனையை அனைவரும் ஏற்று கொண்டனர். இங்கதான் ஆரம்பிச்சது வினை.

பழைய மகாபலிப்ரம் சாலையில் திரும்ப வேண்டிய சோழிங்கநல்லூர் மற்றும் கேளம்பாக்கம் என இரண்டு இடங்களிலும் திரும்பாமல் நேரே நீண்ட தூரம் சென்று விட்டோம். செல்லும் வழியில் மகாபலிபுரம் 17கி.மீ என்ற பலகையை பார்த்ததும் புரிந்தது ஆஹா பாதை மாறி வந்துட்டோமுடா, எப்புடி சமாளிக்கிறதுன்னு.

அப்புறம் அறை நண்பர்களிடம் ஒருவழியாக சமாளித்து மகாபலிபுரமே போலாமுன்னு சொல்லி போய் 1 கி.மீ முன்னாடி நிறுத்தி பாத்தா மணி 4:40. சரி இதுக்கப்புறம் அங்க போனா நேரம் பத்தாதுன்னு சொல்லி முட்டுக்காடு போலாமுன்னு புறப்பட்டோம். போற வழியில புலிக்குகைன்னு ஒரு அறிவிப்பு பலகையை பார்த்தோம். பல முறை பார்த்திருந்தாலும் உள்ளே போனதில்லை.

வாகனத்தை அருகிலிருந்த தேநீர் நிலையத்தில் நிறுத்தி நண்பர்கள் தேநீர் அருந்தி முடித்ததும் உள்ளே சென்றோம் (நுழைவுக் கட்டணம் இருக்குமோன்னு நெனைச்சோம் ஆனா அதெல்லாம் இல்லை). பலர் காரிலும் இரு சக்கர வாகனத்திலும் வந்திருந்தனர். அப்படி என்ன சிறப்பான இடம் என உள் நுழைந்தோம்.

ஒரு பெரிய திடல் போன்ற இடத்தில் ஆங்காங்கே அழகிய பாறைகள். பாறைகள் குறைவாக இருந்தாலும் புல்வெளியில் ஆங்காங்கே காணப்படுவது திரைப்படங்களுக்கு அரங்கம் அமைத்தாற்போல் இருந்தது. இந்த இடத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ஏதுவாக அங்கே எந்த ஒரு விளக்கமும் வைகப்படவில்லை(நாங்க தேடுனது அவ்வளவுதானோ என்னவோ). நுழைவாயிலில் இந்த இடம் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பாதுகாக்கப் படுவதாகவும், இது வரலாற்று நினைவுச் சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் பலகை ஒன்றில் எழுதப்பட்டிருந்தது.

கையில் புகைப்படக் கருவி எடுத்து செல்லாததால் நண்பரின் அலைபேசியின் உதவியில் சுமாராக புகைப்படங்கள் சில எடுத்தோம்.சென்னையின் மெரீனா, பெசன்ட் நகர், மகாபலிபுரம் என சுற்றி திரிந்த எங்களுக்கு இந்த இடம் ஒரு புது அனுபத்தை தந்தது. இதன் பின்புறம் ஒரு கடற்கரை இருந்தது. அங்கே சென்று சிறிது நேரம் இளைப்பாறினோம். சென்னையிலேர்ந்து 50கி.மீ தள்ளி வந்தாலும் கடற்கரையில் காதலர் கூத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை. இங்கும் ஆங்காங்கே காதலர்களை(?) காண முடிந்தது.

பின்னர் வாகனத்தை எடுத்து புறப்பட்டு முட்டுகாடு வந்தடைந்த போது மணி 6:00. இருட்டியதால் படகு சவாரி செய்யாமல் அங்கே அமர்ந்து மாலையும் இருளும் கலக்கும் நேரத்து தண்ணீரின் அழகையும் சவாரி செய்து கொண்டிருந்த படகுகளையும் ரசித்து விட்டு வீடு திரும்பினோம்.

26 விவாதங்கள்:

துளசி கோபால் said...

நல்லது.

இந்த இடத்தைப்பற்றிப் பாதி எழுதிக் கிடப்பில் போட்டுவச்சுருக்கேன்.

ஜெட்லி... said...

புலிக்குகை நல்ல ஸ்பாட்.....எல்லாத்துக்குமே....!!

முனைவர் இரா.குணசீலன் said...

நான் கூட உயிரோடு உள்ள புலிகுகைக்குத் தான் சென்றீர்களோ.

என்று நினைத்தேன்..

க.பாலாசி said...

அழகிய அனுபவம். புலிகேசி புலிக்குகையை பார்க்கலன்னா எப்டி??? ரைட்... ஆமா இதுல முதல்படம்தான் புலிக்குகையா??

சங்கர் said...

நான் கூட ஏதோ கள்ளத் தோணி விவகாரமோன்னு நினைச்சிட்டேன் :))

ஆரூரன் விசுவநாதன் said...

thanks for sharing

சைவகொத்துப்பரோட்டா said...

தலைப்பை பார்த்து என் ஆனதோ, எதானதோன்னு ஓடி வந்தேன், அட பயண அனுபவம்.

vasu balaji said...

:)

Chitra said...

ரொம்ப அழகான பயண குறிப்பு.

சாருஸ்ரீராஜ் said...

ஒரு புது விதமான அனுபவம்

ஸ்ரீராம். said...

புலி இல்லாத நேரமாப் பார்த்துதானே பாஸ் உள்ளே போனீங்க...

செ.சரவணக்குமார் said...

புலிகேசியின் புலிக்குகை அனுபவங்கள் அருமை. மொபைல் கேமராவில் எடுத்திருந்தாலும் படங்கள் அழகு.

வெற்றி said...

//செல்லும் வழியில் மகாபலிபுரம் 17கி.மீ//

ச்சே..திருப்பதி 10 கி.மீ ன்னு இருந்தா லட்டாவது சாப்பிடுருப்பீங்க..

வெற்றி said...

// ஜெட்லி said...

புலிக்குகை நல்ல ஸ்பாட்.....எல்லாத்துக்குமே....!!//


நன்றி.. :))))

balavasakan said...

புலி பிலிக்குகைக்கு போயிருக்கிறது எனகிறீர்கள்...ஹி..ஹி..

பின்னோக்கி said...

புலிகேசி இப்பத்தான் புலிகுகைக்கு போனீங்களா ?.

இப்பொழுது நன்றாக பராமரிக்கிறார்கள். அந்த காய்ந்து போன மரம் வீழ்ந்து போன அந்த மரன் இன்னும் அங்கு இருக்கிறதா ?

MJV said...

அந்த ஓ. எம். ஆர் வழி பயணப்பட்டாலே இப்படியான குழப்பங்கள் உண்டு. நல்ல சாலை என்பதாலும் இருக்கலாம். நல்ல பகிர்வு புலிகேசி.

MJV said...

அந்த ஓ. எம். ஆர் வழி பயணப்பட்டாலே இப்படியான குழப்பங்கள் உண்டு. நல்ல சாலை என்பதாலும் இருக்கலாம். நல்ல பகிர்வு புலிகேசி.

சுசி said...

நல்ல பதிவு.

படங்களோட பகிர்ந்து கொண்டத்துக்கு நன்றிகள்.

தாராபுரத்தான் said...

பயமின்றி பதிவு செய்துள்ளீர்கள்.வணக்கம். வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

புலிக்குகைக்கும் ’புலி’கேசி போன கதை?
நண்பர்களின் போட்டோ மட்டும் போட்டுட்டு தகவல் எதும் சொல்லலையே!

பிரபாகர்.

திவ்யாஹரி said...

நண்பா உங்களின் இந்த பதிவு வெற்றிக்கு உதவி செய்ய போகுதுன்னு நெனக்கிறேன்.. இனி யாராவது வெற்றிய பார்க்கணும்னா புலிக்குகைக்கு போங்க.

நல்ல அனுபவம் நண்பா. ECR இல் போயிருந்தால் இன்னும் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்.. ஒரு முறை சென்று வாருங்கள்.. "புலி-குகைக்கு போன கதை" தலைப்பு எப்பூடி?

விஜய் said...

ஒரு புலியே புலிகுகைக்குள் போயிருக்கிறதே !

விஜய்

ஹேமா said...

புலி புலிக்குகைக்கு போனது என்ன அதிசயம் !ஆனாலும் பயணம் நல்லாருக்கு புலவரே.

"உழவன்" "Uzhavan" said...

என்ஜாய் :-)

malarvizhi said...

puthiya thagaval. aduthamurai chennai cellum pothu avasiyam poi parkiren.