கடவுளை மற..மனிதனை நினை..

15 December 2009

தன்வினை..

4:26:00 AM Posted by புலவன் புலிகேசி 36 comments

சேலையை பார்த்து சாலையில்
நடந்தவன் தடுக்கி விழுந்தான்
சாலையோர சாக்கடையில்
மாலை வந்து விழுந்தது
அவன் புகைப்படத்தில்

காமவெறி பிடித்து கட்டற்ற
காளையாக திரிந்தான்
காலன் வந்து அழைத்துச்
சென்றான் எய்ட்ஸ் எனும்
வாகனத்தில்

பணம் சேர்க்கத் தெரிந்தவன்
மனம் சேர்க்கத் தெரியாமல்
மனநலக் காப்பகத்தில்
(பண)மன நோயாளியாய்

அதிர்ஷ்டம் எனும் மாயையை
அழைத்துக் கொண்டு முயற்சி
திறமை எனும் நண்பர்களை
விட்டு சென்றான் தோல்வி
எனும் துயர் வந்தது

36 விவாதங்கள்:

ஜோதிஜி said...

voted

balavasakan said...

அனைத்து வரிகளுமே அருமை நணபா..
பொருத்தமான தலைப்பும் கூட...
வாவ்....

பிரபாகர் said...

சேலை, மாலை... காமம், காலன்... பணம், மனம்... என கலக்குறீங்க நண்பா...

பிரபாகர்.

Thenammai Lakshmanan said...

தன்வினை எதுகை மோனையோடு நல்லா வந்து இருக்கு புலிகேசி

Chitra said...

அதிர்ஷ்டம் எனும் மாயையை
அழைத்துக் கொண்டு முயற்சி
திறமை எனும் நண்பர்களை
விட்டு சென்றான் தோல்வி
எனும் துயர் வந்தது ..........................well-said!

ராமலக்ஷ்மி said...

தலைப்பும் கவிதையும் அருமை.

இளவட்டம் said...

:-))))

முனைவர் இரா.குணசீலன் said...

பணம் சேர்க்கத் தெரிந்தவன்
மனம் சேர்க்கத் தெரியாமல்
மனநலக் காப்பகத்தில்
(பண)மன நோயாளியாய்//

சிலர் மனநலக் காப்பகத்தில்
இன்னும் சிலர் மனித வடிவில்
அங்கு செல்லயிருப்பதை அறியாமல்..

கவிதை அழகு!!

முனைவர் இரா.குணசீலன் said...

அதிர்ஷ்டம் எனும் மாயையை
அழைத்துக் கொண்டு முயற்சி
திறமை எனும் நண்பர்களை
விட்டு சென்றான் தோல்வி
எனும் துயர் வந்தது//

திருஷ்டம் என்றால் பார்வை
அதிருஷ்டம் என்றால் குருட்டுப்பாரை்வை

குருட்டுப்பார்வையை நம்புபவன்

கண்பார்வை குறைவுடையவனாகத்தான் இருப்பான்..

கவிதைகள் நன்றாகவுள்ளன..

சிவாஜி சங்கர் said...

:))

வெண்ணிற இரவுகள்....! said...

தன் வினை தன்னை சுடும் ....
இதை நியூட்டன் எதிர்வினை உண்டு என்றார்
நல்ல சிந்தனை புலி

shortfilmindia.com said...

ellaarum kavithai ezuthuranga.. aanaa என் லெவலுக்கு யாரும் எழுத மாட்டேன்கிறாங்க..:):):):):)

க.பாலாசி said...

//திறமை எனும் நண்பர்களை
விட்டு சென்றான் தோல்வி
எனும் துயர் வந்தது//

சரியான வரிகள்...கவிதை முழுதும் சிறப்பு....

vasu balaji said...

சிறப்பான கவிதை. பாராட்டுகள் புலிகேசி

க‌ரிச‌ல்கார‌ன் said...

இற‌ங்கி ஆடுறிங்க‌ புலி

விஜய் said...

சமூக சாடல் எதுகை மோனையோடு ஒளிர்கிறது

குணசீலன் விளக்கம் அருமை

வாழ்த்துக்கள்

விஜய்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு பாஸ்.

Unknown said...

அருமை போங்க...,

திவ்யாஹரி said...

பணம் சேர்க்கத் தெரிந்தவன்..
மனம் சேர்க்கத் தெரியாமல்..
மனநலக் காப்பகத்தில்..
(பண)மன நோயாளியாய்!!!

மனம் சேர்க்க தெரிந்தவன் பாச வலையில் வாழ்வான்.. பணம் சேர்க்க தெரிந்தவன் மோச வலையில் விழுவான்...

உணர்ந்து வாழ்ந்தால் சரி தான்..

திவ்யாஹரி said...
This comment has been removed by the author.
பூங்குன்றன்.வே said...

நல்ல கவிதைகள்..சிந்தனையை தூண்டுகின்றன நண்பா.

Anonymous said...

அருமையான கவிதை.

வெற்றி said...

நல்லா இருக்கு.....

அத்திரி said...

கலக்கல் கவிதை

ஹேமா said...

தலைப்புக்கேத்தமாதிரி சிந்தனைக் கவிதை.நல்லாருக்கு.

அன்புடன் மலிக்கா said...

தோழனே. சமூகசிந்தனையில் சரிகமபதநி ஆட்டம். கலக்குங்கப்பா

ஸ்ரீராம். said...

என்ன இப்போ எல்லாம் கவிதை மழை?

புலவன் புலிகேசி said...

அனைத்து நண்பர்களுக்கும் முதலில் நன்றிகள்...

புலவன் புலிகேசி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...

அதிர்ஷ்டம் எனும் மாயையை
அழைத்துக் கொண்டு முயற்சி
திறமை எனும் நண்பர்களை
விட்டு சென்றான் தோல்வி
எனும் துயர் வந்தது//

திருஷ்டம் என்றால் பார்வை
அதிருஷ்டம் என்றால் குருட்டுப்பாரை்வை

குருட்டுப்பார்வையை நம்புபவன்

கண்பார்வை குறைவுடையவனாகத்தான் இருப்பான்..

கவிதைகள் நன்றாகவுள்ளன..
//

நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்....

புலவன் புலிகேசி said...

//shortfilmindia.com said...

ellaarum kavithai ezuthuranga.. aanaa என் லெவலுக்கு யாரும் எழுத மாட்டேன்கிறாங்க..:):):):):)
//

கேபிள் சங்கர் அண்ணா...எண்டர்ர்ர்ர் கவிதையா???

புலவன் புலிகேசி said...

//Divya said...

பணம் சேர்க்கத் தெரிந்தவன்..
மனம் சேர்க்கத் தெரியாமல்..
மனநலக் காப்பகத்தில்..
(பண)மன நோயாளியாய்!!!

மனம் சேர்க்க தெரிந்தவன் பாச வலையில் வாழ்வான்.. பணம் சேர்க்க தெரிந்தவன் மோச வலையில் விழுவான்...

உணர்ந்து வாழ்ந்தால் சரி தான்..
//

உண்மை திவ்யா...வாஉகைக்கு நன்றி

புலவன் புலிகேசி said...

//ஸ்ரீராம். said...

என்ன இப்போ எல்லாம் கவிதை மழை?
December 15, 2009 9:28 PM //]

சும்மா எழுதிதான் பாப்பமேன்னு..

அகல்விளக்கு said...

அனைத்துமே அருமை தல...

அன்புடன் நான் said...

பணம் சேர்க்கத் தெரிந்தவன்
மனம் சேர்க்கத் தெரியாமல்
மனநலக் காப்பகத்தில்
(பண)மன நோயாளியாய்//

நல்லாயிருக்குங்க.

விக்னேஷ்வரி said...

தலைப்பு நல்லாருக்கு.

இன்றைய கவிதை said...

அருமை! அருமை!

கவிதை!!

-கேயார்