கடவுளை மற..மனிதனை நினை..

12 December 2009

வாழப் ப(பு)டிக்காதவன்

10:23:00 PM Posted by புலவன் புலிகேசி 36 comments

வாழப் பிடிக்கவில்லை என்றான்
காதலில் தோற்றவன்
நீ வாழ படிக்கவில்லை
என்றேன்

போக்குவரத்து நெறிசலைக் குறைக்க
அரசு கட்டும் பாலமென்றான்
திறப்பு விழா அன்று போக்குவரத்து
நெறிசல் நிச்சயம்
என்றேன்

திரையரங்கில் வரிசையில் நின்றவன்
நான் தல ரசிகன் என்றான்
உன் மனைவி உன்னை
தறு'தல' என்றாள்
என்றேன்

சென்னையில் வீடு வாங்கப்
போகிறேன் என்றான்
கடன் வாங்கப் போகிறாயா(?)
என்றேன்

உனக்கு என்னத் தெரியுமென்றான்(?)
உனக்கு தெரிந்ததாக நீ
சொன்னவை எனக்குப் புரிந்தது
என்றேன்

பி.கு: இந்த கவிதையை உரையாடல் கவிதைப் போட்டி க்கு அனுப்பியுள்ளேன்.

36 விவாதங்கள்:

கலகலப்ரியா said...

நல்லா இருக்கு புலிகேசி... கொஞ்சம் எழுத்துப் பிழை கவனிக்கலாம்...

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள்

பிரியமுடன்...வசந்த் said...

நல்லாருக்குப்பா எதிர்மறை கவிதையா?...

வாழ்த்துக்கள்....

பூங்குன்றன்.வே said...

//நீ வாழ படிக்கவில்லை
என்றேன்//
/உனக்கு என்னத் தெரியுமென்றான்(?)
உனக்கு தெரிந்ததாக நீ
சொன்னவை எனக்குப் புரிந்தது
என்றேன்//

ரசித்த வரிகள்.

வாங்க..நீங்களும் நம்ம ஜோதியில்(உரையாடல் கவிதை போட்டி) ஐக்கியமாட்டீங்க :)

வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா.

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு புலவரே!வெற்றி பெற வாழ்த்துக்கள்!

Balavasakan said...

##வாழப் பிடிக்கவில்லை என்றான்
காதலில் தோற்றவன்
நீ வாழ படிக்கவில்லை
என்றேன்##

உணமையான வரிகள்...

சக்தி said...

புலவரே, கவலை வேண்டாம் உம் ராஜதந்தந்திரம் உம்மை கைவிடாது பாரிசுபோருல் உமக்கே...!

பிரபாகர் said...

முதலும் கடைசியும் அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

இளவட்டம் said...

வாழ்த்துக்கள் நண்பா!

விடுத‌லைவீரா said...

வாழ்க்கை தேவையானதை கவிதையாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே! வாழ்த்துக்கள்..

அகல்விளக்கு said...

//வாழப் பிடிக்கவில்லை என்றான்
காதலில் தோற்றவன்
நீ வாழ படிக்கவில்லை
என்றேன்//

அருமை தல...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

Chitra said...

உனக்கு என்னத் தெரியுமென்றான்(?)
உனக்கு தெரிந்ததாக நீ
சொன்னவை எனக்குப் புரிந்தது
என்றேன் ............. message is captured very nicely in these words.

க‌ரிச‌ல்கார‌ன் said...

நீங்க‌ளுமா? வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்

அரவிந்தன் said...

கமர்சியலாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

அக்பர் said...

//வாழப் பிடிக்கவில்லை என்றான்
காதலில் தோற்றவன்
நீ வாழ படிக்கவில்லை
என்றேன்
//

நிதர்சனமான உண்மை.
கவிதை நல்லாயிருக்கு.

செ.சரவணக்குமார் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா.

காவிரிக்கரையோன் MJV said...

//போக்குவரத்து நெறிசலைக் குறைக்க
அரசு கட்டும் பாலமென்றான்
திறப்பு விழா அன்று போக்குவரத்து
நெறிசல் நிச்சயம்
என்றேன்//

நச்சென்று நெற்றி பொட்டில் இறங்கும் வரிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் புலி!!!

காவிரிக்கரையோன் MJV said...

//போக்குவரத்து நெறிசலைக் குறைக்க
அரசு கட்டும் பாலமென்றான்
திறப்பு விழா அன்று போக்குவரத்து
நெறிசல் நிச்சயம்
என்றேன்//

நச்சென்று நெற்றி பொட்டில் இறங்கும் வரிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் புலி!!!

காவிரிக்கரையோன் MJV said...

//போக்குவரத்து நெறிசலைக் குறைக்க
அரசு கட்டும் பாலமென்றான்
திறப்பு விழா அன்று போக்குவரத்து
நெறிசல் நிச்சயம்
என்றேன்//

நச்சென்று நெற்றி பொட்டில் இறங்கும் வரிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் புலி!!!

அன்புடன் மலிக்கா said...

வரிகள் அருமை வெற்றி பெற
வாழ்த்துக்கள் தோழா.

[இதோ நானும் உரையாடல் கவிதை போட்டிக்காக எழுதியது http://niroodai.blogspot.com/2009/12/blog-post_07.html/

ஸ்ரீ said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

வாழப் பிடிக்கவில்லை, வாழப் படிக்கவில்லை....அருமை.

thenammailakshmanan said...

//உனக்கு என்னத் தெரியுமென்றான்(?)
உனக்கு தெரிந்ததாக நீ
சொன்னவை எனக்குப் புரிந்தது
என்றேன்//

வாங்க வாங்க நீங்களும் வந்துட்டீங்களா

களை கட்டீருச்சு இல்ல திருவிழா

வெற்றி பெற வாழ்த்துக்கள் புலவரே

சுசி said...

நல்லா இருக்கு கவிதை.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Cable Sankar said...

ok..rightu.. நான் ஜெயிக்க போறதில்லை.. அது மட்டும் நல்லா தெரியுது.. ர்ர்ர்ர்ர்.. வாழ்த்துக்கள்

Sivaji Sankar said...

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் நண்பரே..

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு, வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

//போக்குவரத்து நெறிசலைக் குறைக்க
அரசு கட்டும் பாலமென்றான்
திறப்பு விழா அன்று போக்குவரத்து
நெறிசல் நிச்சயம்
என்றேன்//

உண்மை....

கவிதையில் ஒரு தாக்கம்...

வெற்றிக்கனி பெற வாழ்த்துக்கள் நண்பா...

ரோஸ்விக் said...

*** நீ வாழ படிக்கவில்லை
என்றேன்***

நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லா இருக்கு புலவரே. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அதி பிரதாபன் said...

புலவன் புலிகேசி: நான் புலவனெல்லாம் இல்லைங்க...

நம்பிட்டோம்.

Vidhoosh said...

மெட்ராஸ்தான???

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தியாவின் பேனா said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

பணம் சேர்க்கத் தெரிந்தவன்
மனம் சேர்க்கத் தெரியாமல்
மனநலக் காப்பகத்தில்
(பண)மன நோயாளியாய்

இன்னும் பலர் கோடிசுவரர்கள் என்றபெயரில் நம்மோடு!!

இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டோர் என்ற கருத்து அருமை நண்பா...

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் வித்தியாசமாக இருந்தது. முக்கியத்துவம் இழந்துவிட்டோம் முக்கியமில்லாத விசயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து என ஒருவர் அப்படி எனில் ஒருவர் இப்படி என்பதுதான் உலகம் எனும் நிதர்சனமும் கவிதையில் தெறிக்கிறது.

வெற்றி பெற வாழ்த்துகள்.

ராம்குமார் - அமுதன் said...

நல்ல கவிதை.... வெற்றீக்கு வாழ்த்துக்கள்....