கடவுளை மற..மனிதனை நினை..

10 December 2009

சோறு போடுங்க சாமியோவ்..!!!

7:54:00 PM Posted by புலவன் புலிகேசி 55 comments
மனிதன் சிந்திக்கத் தொடங்கியதால் விளைந்தது நன்மையா? தீமையா? பாப்பையாவை வைத்து பட்டி மன்றம் நடத்துனா கூட சரியான தீர்ப்பு கிடைக்காது. ஏனெனில் அந்த சிந்தனையிலிருந்துதான் மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்பட்டு நிற்கிறான்.

மனிதன் ஆக்கத்திற்கு கண்டு பிடித்ததை விட அழிவுக்கு கண்டுபிடித்ததுதான் அதிகம். ஆக்கத்திற்கு கண்டு பிடித்ததை அழிவுக்கு பய்ன்படுத்தவும் கற்று கொடுத்தது அவனது அறிவு. விஞ்ஞானம் என்ற பெயரில் மனிதன் சோம்பேரியாக மற்றப்பட்டிருக்கிறான்.

இத்தகைய விஞ்ஞானம் இன்று நம் இந்தியாவை சோற்றுக்கு அந்நியனிடம் கையேந்த வைத்துள்ளது. உணவுப் பொருட்கள் ஏற்றுமதியான காலம் போய் இன்று இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

விளை நிலங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளாக்கப் பட்டு விட்டன. இன்று சென்னையில் வாழும் பலரது கனவு சென்னையில் ஒரு வீடு. அது 18 லகரமானாலும் சரி 50 லகரமானாலும் சரி. தன் சந்ததி தங்குவதற்கு வீடு என யோசிக்கிற எவரும் பிற்கால சந்ததியின் உணவுக்கு என்ன வழி என யோசிப்பதில்லை.

நமது அரசாங்கமும் பாலம் கட்டுவதிலும் மற்ற துறைகளிலும் காட்டும் அக்கரையை விவசாயத்தில் காட்டுவதில்லை. விளைவு இன்று விலையேற்றம். 1 கிலோ சர்க்கரை இன்று 35 ரூபாய், வெங்காயம் 50-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் குறைவான விளைச்சலும், விளையுமிடத்தின் தூரமும்.

இத்தகைய நிலைக்கு காரணம் யார்? என் நண்பனை கேட்டேன். அவன் சொன்னான், நமது அரசாங்கம் தான் என்று. அது எந்த அளவுக்கு உண்மை என யோசித்தால் 10% த்திற்கும் குறைவுதான்.

இந்த நிலைக்கு 90% காரணம் நாம் தான். நம்மை போன்றவர்கள் எப்படி பணம் சேர்ப்பது என்பதை மட்டும் தான் யோசிக்கிறோம். தேவையானது கிடைத்தாலும் இன்னும் கிடைக்குமா என தேடுகிறோம். நம்மில் எத்தனை பேருக்கு விவசாயம் பற்றி "அ...ஆ" தெரியும்? நமக்கே இப்படி என்றால் நம் சந்ததி?

இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் இந்தியாவில் மனிதனால் வாழ முடியாது என்ற நிலை நிச்சயம் வரும். என்னுடைய ஆசை என்னவென்றால் கொஞ்சம் பணம் சேர்த்து சென்னையில் வீடு வாங்காமல் மயிலாடுதுறை அருகில் ஒரு விளை நிலம் வாங்கி விவசாயம் கற்க வேண்டும். நிச்சயம் இதை செய்ய வேண்டும் என்றிருக்கிறேன்.

55 விவாதங்கள்:

அகல்விளக்கு said...

நல்ல எண்ணம் தல...

நிச்சயம் நானும் உங்களுடன் கலந்து கொள்கிறேன்...

க.பாலாசி said...

//தன் சந்ததி தங்குவதற்கு வீடு என யோசிக்கிற எவரும் பிற்கால சந்ததியின் உணவுக்கு என்ன வழி என யோசிப்பதில்லை.//

இது சரிதான்...

//என்னுடைய ஆசை என்னவென்றால் கொஞ்சம் பணம் சேர்த்து சென்னையில் வீடு வாங்காமல் மயிலாடுதுறை அருகில் ஒரு விளை நிலம் வாங்கி விவசாயம் கற்க வேண்டும்.//

நம்முடைய எண்ணமாகவே இருக்கட்டும்....

நல்ல இடுகை நண்பரே....

அன்புசிவம்(Anbusivam) said...

கண்டிப்பா வாங்கலாம்... நான் கூட ஒரு ஐந்து ஆண்டுக்கு அப்புறம் கணிப்பொறி வேலைய விட்டுட்டு விவசாயம் செய்ய போலாம்னு இருக்கேன்..

softengrin said...

மயிலாடுதுறை அருகில் உங்கள் நிலம் எதாவது விற்பனைக்கு உள்ளதா?

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள்

Thenammai Lakshmanan said...

//தன் சந்ததி தங்குவதற்கு வீடு என யோசிக்கிற எவரும் பிற்கால சந்ததியின் உணவுக்கு என்ன வழி என யோசிப்பதில்லை.//

உண்மை புலவரே உண்மை

Chitra said...

//இந்த நிலைக்கு 90% காரணம் நாம் தான். நம்மை போன்றவர்கள் எப்படி பணம் சேர்ப்பது என்பதை மட்டும் தான் யோசிக்கிறோம். தேவையானது கிடைத்தாலும் இன்னும் கிடைக்குமா என தேடுகிறோம். நம்மில் எத்தனை பேருக்கு விவசாயம் பற்றி "அ...ஆ" தெரியும்? நமக்கே இப்படி என்றால் நம் சந்ததி?// ............... சவுக்கடிதான். இதை படித்து விட்டு வெறும் கமெண்ட் அடித்தால் மட்டும் போதாது என்று என் மனம் சொல்லி, குறுகுறுக்க வைத்து விட்டீர்கள்......

Ashok D said...

செஞ்சா சந்தோஷம்தான்ப்பா...

vasu balaji said...

உண்மையில் இளைய தலைமுறை கூட்டாக செயல் படுத்த வேண்டிய மிக நல்ல முயற்சி. முன்பே கதிருக்கு பின்னூட்டம் போட்டிருந்தேன். இந்த நிலைக்கு அரசாங்கத்தின் பங்கு 60 சதமெனச் சொல்லுவேன். விரிவாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.

செ.சரவணக்குமார் said...

நல்ல இடுகை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

//என்னுடைய ஆசை என்னவென்றால் கொஞ்சம் பணம் சேர்த்து சென்னையில் வீடு வாங்காமல் மயிலாடுதுறை அருகில் ஒரு விளை நிலம் வாங்கி விவசாயம் கற்க வேண்டும்.//

நம்முடைய எண்ணமாகவே இருக்கட்டும்.... //

ஆமாம் நண்பரே..

புலவன் புலிகேசி said...

நன்றி

@அகல்விளக்கு

@க.பாலாசி

@அன்புசிவம்

//அன்புசிவம் said...

கண்டிப்பா வாங்கலாம்... நான் கூட ஒரு ஐந்து ஆண்டுக்கு அப்புறம் கணிப்பொறி வேலைய விட்டுட்டு விவசாயம் செய்ய போலாம்னு இருக்கேன்..
//

உங்களின் சிந்தனையும் செயலும் அப்படியே என்னைப் போலவே...

புலவன் புலிகேசி said...

நன்றி //softengrin said...

மயிலாடுதுறை அருகில் உங்கள் நிலம் எதாவது விற்பனைக்கு உள்ளதா?
//

நிச்சயம் கிடைக்கும் தல

புலவன் புலிகேசி said...

//ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள்
//

இளமை விகடனில் வந்த உங்கள் "மகிழ்ச்சியும், எச்சரிக்கையும்" கூட இந்த சிந்தனையின் தூண்டுகோல்களீல் ஒன்று....

புலவன் புலிகேசி said...

நன்றி

@thenammailakshmanan

@Chitra

//சவுக்கடிதான். இதை படித்து விட்டு வெறும் கமெண்ட் அடித்தால் மட்டும் போதாது என்று என் மனம் சொல்லி, குறுகுறுக்க வைத்து விட்டீர்கள்......//

ம்ம்ம்...

புலவன் புலிகேசி said...

நன்றி

@D.R.Ashok

@வானம்பாடிகள்

@செ.சரவணக்குமார்

/வானம்பாடிகள் said...

உண்மையில் இளைய தலைமுறை கூட்டாக செயல் படுத்த வேண்டிய மிக நல்ல முயற்சி. முன்பே கதிருக்கு பின்னூட்டம் போட்டிருந்தேன். இந்த நிலைக்கு அரசாங்கத்தின் பங்கு 60 சதமெனச் சொல்லுவேன். விரிவாக ஒரு இடுகையில் சொல்கிறேன்.
//

சொல்லுங்கய்யா தெரிஞ்சிக்கிறோம்....

நசரேயன் said...

//
சென்னையில் வீடு வாங்காமல் மயிலாடுதுறை அருகில் ஒரு விளை நிலம் வாங்கி விவசாயம் கற்க வேண்டும்.
//

எங்க ஊரிலே இதற்கான முயற்சிகள் தான் நடந்துக்கிட்டு இருக்கு

கலகலப்ரியா said...

நல்ல முயற்சி...! வாழ்த்துகள்..!

Anonymous said...

//நமது அரசாங்கமும் பாலம் கட்டுவதிலும் மற்ற துறைகளிலும் காட்டும் அக்கரையை விவசாயத்தில் காட்டுவதில்லை. //

லஞ்சம் எதில் கிடைக்குமோ அதில் தான் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டுவார்கள்.

என் நடை பாதையில்(ராம்) said...

விலைவாசி உயர்விற்கு பதுக்கலும், கடத்தலும் கூட ஒரு வித காரணம் தான்...

ஈ ரா said...

நல்லபதிவு புலி... அக்கறையானது..

thiyaa said...

அருமை!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல எண்ணம் .செய்யுங்கள்.

பூங்குன்றன்.வே said...

//என்னுடைய ஆசை என்னவென்றால் கொஞ்சம் பணம் சேர்த்து சென்னையில் வீடு வாங்காமல் மயிலாடுதுறை அருகில் ஒரு விளை நிலம் வாங்கி விவசாயம் கற்க வேண்டும். நிச்சயம் இதை செய்ய வேண்டும் என்றிருக்கிறேன். //

என்னிடம் கொஞ்சம் சேமிப்பு இருக்கிறது,எவ்வளவு வேண்டுமென சொல்லுங்கள்..கண்டிப்பாக அனுப்புகிறேன் நண்பா..

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

இந்த பதிவிற்காக நன்றி புலிகேசி.
இந்த சிந்தனையின் மற்ற முகங்களான SEZ,ORGANIC FOOD,GM FOOD,இவற்றை பற்றியும் எழுதுங்கள். நிறைய பேர் படிக்கும் உங்கள் Blog பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.

எனக்கும் அந்த எண்ணம் உண்டு. காவிரியின் கரையில் நானும்,நீங்களூம் சந்தித்துக்கொள்ள நேர்ந்தாலும் நேரலாம்.

வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

நண்பா,

விவசாயம் செய்வது தொடர்பாய் முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து விட்டேன். பேசுவோம் இது பற்றி.

பயனுள்ள இடுகை...

பிரபாகர்.

Rajeswari said...

எச்சரிக்கை உணர்வுடன் கூடிய நல்ல பதிவு.

ஆனால்,விவசாயிகள் நிறைய விசயங்களில் அரசாங்கத்தால் ஏமாற்றப்படுவதும், ஆதல்லால் அவர்தம் விளைநிலங்களை துக்கத்துடன் விற்பனை செய்வதும் நாம் மறந்துவிடக்கூடாது..

ஆனபோதிலும் உங்களது முடிவிற்கு வாழ்த்துக்கள்...

GAYATHRI said...

good thought ...will come true soon.. all the best

அத்திரி said...

நல்ல பதிவு.

Unknown said...

கோபமும் ஏக்கமும் கலந்த பதிவு..., உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்..,

அன்புடன் நான் said...

சிந்தனையைத் தூண்டும்... அக்கறையுள்ள பதிவுங்க. பாராட்டுக்கள்.

வால்பையன் said...

நல்ல இடுகை!

எண்ணம் போலே வாழ்க்கை அமையும் தல!

Balaji said...

நிச்சயம் நானும் உங்களுடன் கலந்து கொள்கிறேன்...

தமிழ் உதயம் said...

என்னுடைய ஆசை என்னவென்றால் கொஞ்சம் பணம் சேர்த்து சென்னையில் வீடு வாங்காமல் மயிலாடுதுறை அருகில் ஒரு விளை நிலம் வாங்கி விவசாயம் கற்க வேண்டும்.இதை நீங்கள் செய்தால் வாழ்த்து வேன்

ஸ்ரீராம். said...

நல்ல யோசனைதான்...அடுக்கு மாடிக் குடி இருப்புகளில் கூட சிறு தொட்டிகள் வைத்து சில காய்கறிகளை விளைவித்துப் பயனடையலாம்...

இன்றைய கவிதை said...

யோசிக்க வைத்த பதிவு!

-இன்றைய கவிதை நண்பர்கள்

balavasakan said...

ஆமா நண்பா ... என்ன செயவது....ம்..ம்...

Pebble said...

Even I do want to leave US to my native place to start a small dairy farm and ZBNF(Zero budget natural Farm) for fruits and vegetables!!!!!

புலவன் புலிகேசி said...

//நசரேயன் said...

எங்க ஊரிலே இதற்கான முயற்சிகள் தான் நடந்துக்கிட்டு இருக்கு
//

வாழ்த்துக்கள் தல...

புலவன் புலிகேசி said...

நன்றி கலகலப்ரியா ,சின்ன அம்மிணி,என் நடை பாதையில்(ராம்)

//என் நடை பாதையில்(ராம்) said...

விலைவாசி உயர்விற்கு பதுக்கலும், கடத்தலும் கூட ஒரு வித காரணம் தான்...
//

ஆம் நண்பரே..

புலவன் புலிகேசி said...

நன்றி ஈ.ரா, தியா, ஸ்ரீ

புலவன் புலிகேசி said...

//பூங்குன்றன்.வே said...
என்னிடம் கொஞ்சம் சேமிப்பு இருக்கிறது,எவ்வளவு வேண்டுமென சொல்லுங்கள்..கண்டிப்பாக அனுப்புகிறேன் நண்பா..
//

நல்ல மனசு தல உங்களுக்கு...நன்றி...

புலவன் புலிகேசி said...

//ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

இந்த பதிவிற்காக நன்றி புலிகேசி.
இந்த சிந்தனையின் மற்ற முகங்களான SEZ,ORGANIC FOOD,GM FOOD,இவற்றை பற்றியும் எழுதுங்கள். நிறைய பேர் படிக்கும் உங்கள் Blog பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.

எனக்கும் அந்த எண்ணம் உண்டு. காவிரியின் கரையில் நானும்,நீங்களூம் சந்தித்துக்கொள்ள நேர்ந்தாலும் நேரலாம்.

வாழ்த்துக்கள்.
//

நிச்சயம் தல...வாங்க காவிரிகரையில சந்திப்போம்..

புலவன் புலிகேசி said...

//பிரபாகர் said...

நண்பா,

விவசாயம் செய்வது தொடர்பாய் முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து விட்டேன். பேசுவோம் இது பற்றி.

பயனுள்ள இடுகை...

பிரபாகர்.
//

நன்றி நண்பா...அலைபேசியில் அப்பறம் உரையாடுவோம்..விவசாயத்திற்கு வாழ்த்துக்கள்..

புலவன் புலிகேசி said...

//Rajeswari said...

எச்சரிக்கை உணர்வுடன் கூடிய நல்ல பதிவு.

ஆனால்,விவசாயிகள் நிறைய விசயங்களில் அரசாங்கத்தால் ஏமாற்றப்படுவதும், ஆதல்லால் அவர்தம் விளைநிலங்களை துக்கத்துடன் விற்பனை செய்வதும் நாம் மறந்துவிடக்கூடாது..

ஆனபோதிலும் உங்களது முடிவிற்கு வாழ்த்துக்கள்...
//

நன்றிங்க...அரசியல்வியாதிகளை விடுத்து நம்ம்மால் முடிந்த அளவு விவச்சாயம் முயற்சிக்கலாமே...

புலவன் புலிகேசி said...

நன்றி Gayathri , அத்திரி ,பேநா மூடி,சி. கருணாகரசு,வால்பையன்,Balaji,tamiluthayam

புலவன் புலிகேசி said...

//ஸ்ரீராம். said...

நல்ல யோசனைதான்...அடுக்கு மாடிக் குடி இருப்புகளில் கூட சிறு தொட்டிகள் வைத்து சில காய்கறிகளை விளைவித்துப் பயனடையலாம்...
//

இது கூட நல்ல யோசனைதான் தல..நன்றி.

புலவன் புலிகேசி said...

நன்றி இன்றைய கவிதை ,Balavasakan ,Anonymous

//Anonymous said...

Even I do want to leave US to my native place to start a small dairy farm and ZBNF(Zero budget natural Farm) for fruits and vegetables!!!//

வாங்க நண்பரே விவசாயத்தை வைத்து இந்திய பொருளாதாரத்தை உயர்த்த முடியும்னு நிரூபிப்போம்... வாழ்த்துக்கள்

விஜய் said...

"மயிலாடுதுறை அருகில் ஒரு விளை நிலம் வாங்கி விவசாயம் கற்க வேண்டும்"

கண்டிப்பா செய்ங்க. விவசாயம் பற்றிய முழு உதவியும் நான் செய்றேன்.

visit agasool.blogspot.com

விஜய்

Santhappanசாந்தப்பன் said...

இதை எங்கோ படித்த ஞாபகம்,
பட்ஜெட்க்குப் பிறகு ஒரு ஏழை பாமரனுக்கும், ஒரு மெத்த படித்த பணக்க்காரனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்..

பணக்காரன் : கார் விலை 1 லட்சம் வரை குறைஞ்சுருக்கு....
பாமரன் : ரோட்டுக் கடைல இட்லி விலை ரெண்டு ருபாய் ஆகிடுச்சுங்க.

பணக்காரன் : லெப்டாப் விலை 10 ஆயிரம் வரை குறைஞ்சுருக்கு....
பாமரன் : பால் விலை 6 ரூபாய் ஆகிடுச்சுங்க.

என்கிற‌ ரீதியில் போகும்...

இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் இருவ‌ர் ச‌ந்தித்துக் கொண்டால், புதிதாக வ‌ந்திருக்கும் கார், மொபைல் போன் பற்றித்தான் பேசிக் கொள்வார்க‌ள்.. விலைவாசியை ப‌ற்றி பேச‌ அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் ஏது.

புலவன் புலிகேசி said...

//Blogger கவிதை(கள்) said...

"மயிலாடுதுறை அருகில் ஒரு விளை நிலம் வாங்கி விவசாயம் கற்க வேண்டும்"

கண்டிப்பா செய்ங்க. விவசாயம் பற்றிய முழு உதவியும் நான் செய்றேன்.

visit agasool.blogspot.com

விஜய்//

அண்ணே நிச்சயம் நான் தொடங்கும் போது உங்க உதவி தேவை...

புலவன் புலிகேசி said...

//Blogger பிள்ளையாண்டான் said...

இதை எங்கோ படித்த ஞாபகம்,
பட்ஜெட்க்குப் பிறகு ஒரு ஏழை பாமரனுக்கும், ஒரு மெத்த படித்த பணக்க்காரனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்..

பணக்காரன் : கார் விலை 1 லட்சம் வரை குறைஞ்சுருக்கு....
பாமரன் : ரோட்டுக் கடைல இட்லி விலை ரெண்டு ருபாய் ஆகிடுச்சுங்க.

பணக்காரன் : லெப்டாப் விலை 10 ஆயிரம் வரை குறைஞ்சுருக்கு....
பாமரன் : பால் விலை 6 ரூபாய் ஆகிடுச்சுங்க.

என்கிற‌ ரீதியில் போகும்...

இன்றைய‌ இளைஞ‌ர்க‌ள் இருவ‌ர் ச‌ந்தித்துக் கொண்டால், புதிதாக வ‌ந்திருக்கும் கார், மொபைல் போன் பற்றித்தான் பேசிக் கொள்வார்க‌ள்.. விலைவாசியை ப‌ற்றி பேச‌ அவ‌ர்க‌ளுக்கு நேர‌ம் ஏது.//

ஆமாம் நண்பரே...இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான் என் ஆசை...

திவ்யாஹரி said...

நண்பா உன் இடுக்கையை பார்க்கும் போது இளைய சமுதாயம் மேல் புது நம்பிக்கை துளிர்க்கிறது.. உன்னை போல அனைவரும் சிந்தித்தால் இந்திய பொருளாதாரம் முன்னேறும்..எனக்கும் விவசாயம் செய்ய ஆசை.. நானும் மயிலாடுதுறை தான்... இடம் கிடைத்தால் சொல்லுங்கள்

புலவன் புலிகேசி said...

நிச்சயம் சொல்றேங்க...மாற்றங்கள் நிகழ்வது எழுத்தோடு நின்று விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன். இன்னும் 3 அல்லது 4 வருடங்கள் தேவைப்படலாம் என் ஆசை நிறைவேற...

amagesh said...

Yes i think same as you. No one has been thinking about this. All mens are thinking only how to earn and save money and how to settle in city. So Your comment is good. Thank you................................