கடவுளை மற..மனிதனை நினை..

08 December 2009

வறுமையில் ஓர் நாள்...

8:23:00 PM Posted by புலவன் புலிகேசி 27 comments


சாலையோர உணவு விடுதியில்
10ரூபாய்க்கு கிடைத்த கோழிக்கறி
அதில் பங்கு கிடைக்குமா
என பரிதாபமாக பார்க்கும்
தெருநாய்

கொடுப்பதா வேண்டாமா என
யோசித்து நாயின் மீதுவந்த
பரிதாபத்தால் கொடுக்கப் பட்ட
சிறுதுண்டு

அதை கவ்விக் கொண்டோடும்
போது துரத்திக் கொண்டோடும்
இன்னொரு நாய்

அதை வேடிக்கைப் பார்த்து
ரசித்து கொண்டிருந்த பிச்சைக்கார
குழந்தை

தெரிந்தது வறுமையில்
ஏற்றதாழ்வு.


பி.கு: ஒரு வார காலமாக கடுமையான அலுவல் காரணமாக யாருடைய பதிவுக்கும் பின்னூட்டமிட முடியவில்லை...அதனால்தான் பதிவும் எழுதவில்லை..

27 விவாதங்கள்:

ஹேமா said...

வறுமையாயிருந்தாலும் நிச்சயம் பலசாலிதானே ஜெயிப்பான்.
இதிலென்ன சந்தேகம்.இதுதான் இன்றைய உலகம்

கேசவன் .கு said...

/// தெரிந்தது வறுமையில்
ஏற்றதாழ்வு ///

):

Balavasakan said...

எங்கய்யா போயிருந்தீக எத்தனை தரம் வந்து பாத்தன் தெரியுமா ..... சரி சரி இனியாவது சொல்லிட்டு போங்க...
நல்ல கவிதை...

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு நண்பா.

வானம்பாடிகள் said...

ரொம்ப நல்லாயிருக்கு புலிகேசி.

இன்றைய கவிதை said...

கலக்குங்க!


-கேயார்

கலகலப்ரியா said...

வறுமையிலும் வகைதெரிந்து சொன்ன விதம் அருமை புலிகேசி..:-)..

கலகலப்ரியா said...

2/2 :) (maththavanga enga..)

நசரேயன் said...

நல்லா இருக்கு

ஈ ரா said...

நன்று..

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல கவிதை நண்பா .......

புலவன் புலிகேசி said...

நன்றி ஹேமா

// வறுமையாயிருந்தாலும் நிச்சயம் பலசாலிதானே ஜெயிப்பான்.
இதிலென்ன சந்தேகம்.இதுதான் இன்றைய உலகம்
//

உண்மைதான்

புலவன் புலிகேசி said...

நன்றி கேசவன் .கு ,Balavasakan

//Balavasakan said...

எங்கய்யா போயிருந்தீக எத்தனை தரம் வந்து பாத்தன் தெரியுமா ..... சரி சரி இனியாவது சொல்லிட்டு போங்க...
நல்ல கவிதை...
//

நன்றி தல இனிமே நிச்சயம் சொல்லிட்டு போறேன்...

புலவன் புலிகேசி said...

நன்றி செ.சரவணக்குமார்,வானம்பாடிகள் ,இன்றைய கவிதை,கலகலப்ரியா

//கலகலப்ரியா said...

வறுமையிலும் வகைதெரிந்து சொன்ன விதம் அருமை புலிகேசி..:-)..
December 8, 2009 11:53 PM
கலகலப்ரியா said...

2/2 :) (maththavanga enga..)
//

எங்கன்னு தெரியல ப்ரியா...

புலவன் புலிகேசி said...

நன்றி நசரேயன்,ஈ ரா,வெண்ணிற இரவுகள்

Chitra said...

//தெரிந்தது வறுமையில்
ஏற்றதாழ்வு.//
ஒரு பிடி சோற்றுக்கே கஷ்டப்படும்போது, தலைக்கு மேல் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன என்றா இருக்க முடியும்? கருத்தாழம் மிக்க கவிதை.

ரோஸ்விக் said...

நல்லாயிருக்கு நண்பா.

T.V.Radhakrishnan said...

நல்ல கவிதை

க.பாலாசி said...

வறுமையை கண்டுகொண்ட இடமும், அதை வடித்த விதமும் சிறப்பாக இருக்கிறது நண்பா....தொடருங்கள்....

பூங்குன்றன்.வே said...

//தெரிந்தது வறுமையில்
ஏற்றதாழ்வு.//

உண்மைதான் நண்பா.என்று தீருமோ இந்த வறுமை? உன் கவிதை மிக அருமை.

முனைவர்.இரா.குணசீலன் said...

கொடுப்பதா வேண்டாமா என
யோசித்து நாயின் மீதுவந்த
பரிதாபத்தால் கொடுக்கப் பட்ட
சிறுதுண்டு

அதை கவ்விக் கொண்டோடும்
போது துரத்திக் கொண்டோடும்
இன்னொரு நாய்//

வாழ்வியல் எதார்த்தங்களை மிக அழகாகப் பதிவுசெய்கிறீர்கள்..

ஸ்ரீ said...

நல்லாருக்கு பாஸ்.

ஸ்ரீ said...

நல்லாருக்கு பாஸ்.

ஜோதிஜி said...

சிறப்பா இருந்ததுன்னு சொல்றேன்.

thenammailakshmanan said...

//வறுமையில்
ஏற்றதாழ்வு.//

அருமையான வார்த்தைப் பிரயோகம் புலவரே
நல்லா இருக்கு

:-)

Divya said...

கொடுப்பதா வேண்டாமா என
யோசித்து நாயின் மீதுவந்த
பரிதாபத்தால் கொடுக்கப் பட்ட
சிறுதுண்டு

அதை கவ்விக் கொண்டோடும்
போது துரத்திக் கொண்டோடும்
இன்னொரு நாய்

சிலரிடம் தமிழ் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும்.. உங்களிடம் கொஞ்சி விளையாடுகிறது.. வாழ்த்துக்கள்..

திகழ் said...

உண்மை தான்