கடவுளை மற..மனிதனை நினை..

02 December 2009

ஊருக்குள்ள நாங்கல்லாம்....

10:15:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments
மொக்கை கைதி எண்:506, தப்பியோடிய போது போலீசாரால் சுட்டு கொலை செய்யப் பட்டான் என்ற செய்தியை நாளிதழில் படித்தான் வஜ்ரவேலு. "டேய் கந்தா மொக்கைய சொன்ன மாதிரியே போட்டாங்கேடா. அந்த இனுசுபெட்டர் பயல வரச் சொல்லி பணம் குடுத்து அனுப்புச்சுடு".

மொக்கை - வஜ்ரவேலு குப்பத்து ரவுடியாக இருந்ததிலிருந்து அவனுக்காக நாயாக உழைத்தவன் (கொலை பன்றது, கை கால் எடுக்குறது தான்). ராசு- இவந்தான் மொக்கைக்கு நெருங்கிய நண்பன். இவனும் வஜ்ரவேலுவின் ஆள்தான். இருவரும் சேர்ந்து தான் மதுரையில வஜ்ரவேலுவுக்கு புடிக்காதவங்களை எல்லம் போட்டுத் தள்ளி கிட்டிருந்தாங்கே.

"எலே ராசு எங்க்டா அந்த மொக்க்ப்பய" என்றான் வஜ்ரவேலு. "ஐயா நேத்துதான் மொக்கைக்கு கண்ணாலமாச்சுங்க". "என்னடா சொல்லவே இல்ல".

"இல்லீங்கய்யா அவன் அத்தப் பொண்ண கல்யாண மண்டபத்துலருந்து தூக்கிட்டு வந்து...." என்று இழுத்தான். "சரி இந்தா இந்த பணத்த கொண்டு போயி அவங்கிட்ட குடுத்துட்டு வா" என்றான் வஜ்ரவேலு. கடத்தி கிட்டு வந்து கட்டிகிட்டாலும் வள்ளியும் மொக்கையும் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தனர்.

"ஏண்டா மொக்க தங்கச்சிக்கு உன் மேல இருந்த கோவம் போயிடுச்சா" என்றான் ராசு. "அதெல்லாம் போயி நாங்கதான் ஒன்னாயிட்டமுல்ல. அவளுக்காகத்தாண்டா இனிமே வாழ்க்கையே" என்றான் மொக்க.நண்பனை நினைத்து பெருமை பட்டு கொண்டான் ராசு. இருவரும் புறப்பட்டு வஜ்ரவேலு வீட்டுக்கு போனார்கள்.

"டேய் மொக்க நம்ம தலைவருக்காக ஒரு செய்கை செய்யனும்டா" என்றான் வஜ்ரவேலு. "சொல்லுங்கய்யா செஞ்சி புடுவோம்" என்றான் மொக்க. "நம்ம எதிர்கட்சி ராமசாமியோட சுத்திகிருப்பானே ரஞ்சித்துனு ஒரு பய..அவனத்தேன்" என்றான். "சரிங்கய்யா நாங்க பொறப்படுறோம்" என்றான் மொக்க. "டேய் ராசு அவன பாத்துக்கடா கோவக்காரப்பய எதாவது ஏடாகூடம் பன்னிடப் போறான்". "சரிங்கய்யா" என்று பதிலளித்து விட்டு இருவரும் சொன்ன 3வது நாளில் காரியத்த முடிச்சிட்டானுங்க.

ஒரு நாள் வஜ்ரவேலு மொக்கய தனியா கூப்பிட்டு "டேய் மொக்க நம்ம தலைவருக்காக இன்னொருத்தன.." என்றான். "சொல்லுங்கய்யா" என்றான் மொக்க. "நம்ம ராசுவத்தாண்டா போடனுமாம்" என்றதும் பதறிப் போனான். "என்னய்யா சொல்றீங்க" என நடுக்கத்துடன் கேட்டவனை கந்தன் உள்ளே அழைத்து சென்று

"டேய் மொக்க இன்னைக்கி நீ இல்லேன்னா அவன நாளைக்கு வேற எவனாவது போடப்போறான். அவன் ஒன்டிக்கட்டடா உனக்கு குடும்பம் இருக்கு ஐயாவ பகச்சிக் கிட்டு வெளியில போறதுக்கு இது படம் இல்லடா. உன்னைய போட்டு பொண்டாட்டிய தூக்கிடுவாங்கேடா" என்றான்.

மொக்கை அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறி வீட்டுக்கு சென்றான். மறுநாள் ராசு வாயில் பீடியை பற்றவைத்துக் கொண்டு "டேய் மொக்க வாடா கம்மாய்க்கு போயிட்டு வருவோம்" எனக் கூப்பிட்டு இருவரும் புறப்படும் போது "ஏண்டா எங்கடா நேத்து உன்ன ஆளையே காணும்" என்றான் ராசு. சற்று கலங்கியவனாய் "ஐயாவோட தோப்புல காவக்காரன் வரலையாம் அதனால அங்கயே..." என்றிழுத்தான்.

இருவரும் கம்மாயை நெருங்கிய போது எதிர்பாராத நேரத்தில் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராசுவின் இடப்பக்க நெஞ்சில் குத்தினான் மொக்க. "என்னடா மொக்க...." என்றவாறு சரிந்தான் ராசு. அவன் நெஞ்சில் வழிந்த ரத்தத்தோடு இவன் கண்ணில் வழிந்த கண்ணீர் கலக்க "என்னய மன்னிச்சிடுடா ராசு" என ராசுவை கட்டியழுதான்.

முன்னரே அங்கு ஒளிந்திருந்த காவலர்கள் மொக்கையை கைது செய்ய, நீதிமன்றத்தில் மொக்கைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐயா வெளியில் எடுப்பார் என்றிருந்த மொக்கையிடம் அந்த காவலன் "டேய் மொக்க ஐயா வெளிய வண்டியோட நிக்கிறாரு உன்னய தப்பிச்சி வர சொன்னருன்னு சொல்லி தப்பிக்க வச்சி போட்டுத் தள்ளிட்டான்".

எதிர்கட்சி ராமசாமி வீட்டு தொலைபேசி மணி ஒலித்தது "ஐயா நீங்க சொன்ன மாதிரியே அவனுங்க ரெண்டு பேரையும் முடிச்சாச்சு" என்றான் வஜ்ரவேலு. "கவலையே படாதடா நீதான் இந்த தேர்தல்ல உன்னோட தொகுதியில மந்திரி..ஆளுங்கட்சிக்கார பய செய்யாதத நான் உனக்கு செய்யறன்டா" என்றான்.

எதற்காக கொல்லப் பட்டோம் என தெரியாமலே ராசுவும், மொக்கையும் இறக்க இன்று வள்ளி கையில் குழந்தையுடன் நடுத்தெருவில்...........

32 விவாதங்கள்:

வானம்பாடிகள் said...

நீங்க எப்ப கட்சி ஆரம்பிக்க போறீங்க. யப்பா! என்னா வில்லங்கம்.:)). நல்லாருக்கு.

அகல்விளக்கு said...

//எதற்காக கொல்லப் பட்டோம் என தெரியாமலே ராசுவும், மொக்கையும் இறக்க இன்று வள்ளி கையில் குழந்தையுடன் நடுத்தெருவில்.//

இன்று ஏறக்குறைய இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.

thenammailakshmanan said...

உண்மை புலவர் புலிகேசி இப்படித்தான் எங்கும் நடக்குது

ஏன் இறந்தோம் என்று தெரியாமலே ஒருவரை ஒருவர் இன்னொருவரின் ஆதாயத்துக்காகவும் பலியிட்டுக்கொள்வது

புலவன் புலிகேசி said...

//வானம்பாடிகள் said...

நீங்க எப்ப கட்சி ஆரம்பிக்க போறீங்க. யப்பா! என்னா வில்லங்கம்.:)). நல்லாருக்கு.
//

கட்சியிலெல்லாம் ஈடுபாடில்லீங்கோ...நன்றி

புலவன் புலிகேசி said...

நன்றி அகல்விளக்கு,thenammailakshmanan

ரோஸ்விக் said...

//ஆளுங்கட்சிக்கார பய செய்யாதத நான் உனக்கு செய்யறன்டா//

அவ்வளவு நல்லவரா தல அவரு...:-) ஒருவேளை ஆளுங்கட்சியா வந்தா தான் எதுவும் பண்ண மாட்டாய்ங்களோ?

ஊடகன் said...

புகைப்படத்தேர்வு அருமை....

திரைக்கதை கொடுமை...

ஒரே குழப்பமா இருக்குங்கோ.....!

புலவன் புலிகேசி said...

நன்றி ரோஸ்விக், ஊடகன்

//ஊடகன் said...

புகைப்படத்தேர்வு அருமை....

திரைக்கதை கொடுமை...

ஒரே குழப்பமா இருக்குங்கோ.....!
//

குழப்பமா இர்ந்தா சரியா படிக்கலைன்னு நெனைக்கிறேன். மறுபடியும் படிச்சிப் பாருங்க..

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல படைப்பு

பூங்குன்றன்.வே said...

சும்மா சுத்தி சுத்தி திரைகதியில் விளையாடி இருக்கீங்கோ 'புலி' மாதிரி..

கவிதை(கள்) said...

Different Thinking

not a typical stroy

Valthukkal

vijay

தியாவின் பேனா said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html

ராஜவம்சம் said...

திறைப்பட டைரக்டர்களுக்கு ஒர் எச்சரிக்கை எங்கள் அண்னன் புலவர் புலிகேசி உங்களுக்கு போட்டியாக உங்கள் கலத்தில் கூடிய விரைவில்

கலகலப்ரியா said...

nallaarukku..!

என் நடை பாதையில்(ராம்) said...

பெரிய விஷயம்; சின்ன கதை, மொத்தத்தில் சூப்பர்.

Balavasakan said...

உங்கள் தளத்தில் மல்வெயார் என்று குறோம் எச்சரிக்கிறது என்னவகன்று பாருங்கள் தூயா.. உணமைத்தமிழனுக்கு லிங்க் கொடுத்திருந்தால் தூக்கி விடவும்

கதை அருமை

புலவன் புலிகேசி said...

நன்றி வெண்ணிற இரவுகள்,பூங்குன்றன்.வே,கவிதை(கள்)

புலவன் புலிகேசி said...

//தியாவின் பேனா said...

அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html
//

நன்றி தியா

புலவன் புலிகேசி said...

நன்றி ராஜவம்சம்

//ராஜவம்சம் said...

திறைப்பட டைரக்டர்களுக்கு ஒர் எச்சரிக்கை எங்கள் அண்னன் புலவர் புலிகேசி உங்களுக்கு போட்டியாக உங்கள் கலத்தில் கூடிய விரைவில்
//

அந்த மாதிரி ஆசை எல்லாம் இல்ல தல..

புலவன் புலிகேசி said...

நன்றி கலகலப்ரியா,என் நடை பாதையில்(ராம்)

புலவன் புலிகேசி said...

//Balavasakan said...

உங்கள் தளத்தில் மல்வெயார் என்று குறோம் எச்சரிக்கிறது என்னவகன்று பாருங்கள் தூயா.. உணமைத்தமிழனுக்கு லிங்க் கொடுத்திருந்தால் தூக்கி விடவும்

கதை அருமை
//

நன்றி தல..எடுத்து விட்டாச்சு...

இளவட்டம் said...

ம்ம்ம்...நல்ல இருக்கு ...

அன்புடன் மலிக்கா said...

தோழனே. செம சூப்பரூ.. பதிவுலத்தில் நீங்கலெல்லாம்........ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

புலவன் புலிகேசி said...

நன்றி இளவட்டம்,அன்புடன் மலிக்கா

பேநா மூடி said...

நன்றாக உள்ளது... :-)

ஸ்ரீராம். said...

நன்றாகப் பின்னி உள்ளீர்கள்....மூன்று நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் என் கணினி உங்கள் பக்கத்துக்குள் என்னை அனுமதிக்கிறது...ஏனென்று தெரியவில்லை

இன்றைய கவிதை said...

எதிர்பார்த்த முடிவுதான்!
இருந்தாலும் நல்லாருக்கே!

-கேயார்

Chitra said...

"எதற்காக கொல்லப் பட்டோம் என தெரியாமலே ராசுவும், மொக்கையும் இறக்க இன்று வள்ளி கையில் குழந்தையுடன் நடுத்தெருவில்..........." இது கதையின் முடிவு மட்டும் இல்லை. நிஜமும் கூட. வருத்தத்துக்குரிய நிஜம்.

Sivaji Sankar said...

நல்லா இருந்தது புலிகேசி... டெம்ப்ளட் மாற்றி பிளாக் நல்லா இருக்கு..

Nanum enn Kadavulum... said...

There is no depth and proper reasoning behind it. so it doesn't touch at all. Try again. Good luck !!

ஹேமா said...

நானும் படங்களைப் பாத்து பருத்திவீரன் படக்கதையாக்கும்ன்னு ஏமாந்திட்டேன்.ஆனாலும் நல்லாருக்கு புலவரே.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

"கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே சாவு" என்பதை விளக்கும் நல்ல கதை. அரசியலின் கொடூர யதார்த்தம் மிளிர்கிறது. வாழ்த்துகள்!