கடவுளை மற..மனிதனை நினை..

26 December 2009

டரியல் (26-திசம்பர்-09)

2:28:00 AM Posted by புலவன் புலிகேசி 25 comments
இந்த வாரம் நான் எழுதிய "வறுமையில்" என்ற கவிதை இளமை விகடனில் வெளிவந்துள்ளது.


என் பதிவில் இக்கவிதை

-------------------------------

பதிவர் "வெண்ணிற இரவுகள்" கார்த்தி கடைசி பதிவு என்று எழுதிய பின் அவரை சமாதானப் படுத்தி மீண்டும் எழுத சொன்னேன். அதன் பின் பலரும் அதையே சொன்னதால் எழுதினார். கார்த்தி கோபங்களை விடுத்து எந்த முடிவாக இருந்தாலும் பக்குவமாக யோசித்து எடுங்கள்.

-------------------------------

அவதார் திரைப்படம் பார்த்தேன். அப்பப்பா என்ன ஒரு தொழில்நுட்பம். பல கோடி ரூபாய் செலவு. ஆனால் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனை முறியடிக்கப் படும். இது போல் ஒரு படம் பார்த்து பல வருடமாயிற்று. பன்டோரா என்ற பூமி போன்ற ஒரு இடத்தில் வசிக்கும் "நவி" இனத்தை அங்கிருந்து விரட்டி அங்குள்ள வளங்களை பூமியில் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளும் மனிதர்கள். அதற்காக நவி உடலில் கூடு பாய்ந்து நவிகளுடன் உலவு பார்க்க செல்லும் நாயகன் அவர்களின் குணாதிசயங்களையும், மனிதர்களின் பேராசையயும் பார்த்து பின் நவிகளுக்காக போராடும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்று இறுதியில் நவியாகவே மாறுகிறான். இங்கு பயன்படுத்த பட்டுள்ள கணிப்பொறி நுட்பங்கள் (CG) வியக்க வைக்கின்றன. பாக்கலைன்னா போய் பாருங்க. சத்யம் திரையரங்கில் வியாழக் கிழமை வரை நுழைவு சீட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாம்.

-------------------------------

ஈரோடு பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடை பெற்றிருக்கிறது. முக்கியமாக ஒரு மிகப்பெரும் பதிவர் சந்திப்பாக நடந்திருக்கிறது. அதில் கலந்து கொள்ள இயலாதது மிகவும் வருத்தமளிக்கிறது. மக்கா அடுத்த சந்திப்பின் போது சொல்லுங்க, நிச்சயம் வாரேன்.

-------------------------------

என் இளங்கலை படிப்பின் போது கிடைத்த நண்பர்கள் அனைவரும் ஒருங்கினைந்து ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருகிறோம். இது எங்கள் சந்திப்பின் 7வது ஆண்டு. இந்த ஆண்டும் எங்கள் ஊரிலுள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்கு நண்பர்கள் சார்பாக எதாவது உதவலாம் என முடிவெடுத்திருக்கிறோம்.

-------------------------------

பையா படத்தின் பாடல்கள் கேட்டேன். அதன் மெட்டுக்களில் சில முன்னரே கேட்டது போலிருந்தாலும் அனைத்து பாடல்களும் அருமை. குறிப்பாக "துளி துளி துளி மழையாய்" மற்றும் யுவன் குரலில் "என் காதல் சொல்ல நேரமில்லை" மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. நா. முத்துகுமாரின் பாடல் வரிகள் அழகு.

-------------------------------

இந்த வார டரியல் கணவர் ஹரி மீது அளவு கடந்த காதல் கொண்ட தோழி திவ்யாஹரியின் "நீ" என்ற கவிதை. இவரின் ஒவ்வொரு கவிதையிலும் ஹரி மீதான பாசம் தெரிகிறது. வாழ்த்துக்கள் ஹரி.

-------------------------------

25 விவாதங்கள்:

சுசி said...

முதலில் வாழ்த்துக்கள் புலவரே.

அவதார் இன்னும் ரெண்டு நாள்ல பாக்க போறேன்.

நண்பர்கள் பணி என்றென்றும் தொடரட்டும்.

பையா பாடல் நான் இன்னும் கேக்கல. இசை வெளியீடு இன்னைக்கு பாத்தேன்.

திவ்யாவுக்கு வாழ்த்துக்கள். அருமையான கவிதை. ஹரி கொடுத்து வைத்தவர் :))

அன்புடன் நான் said...

கூடும் நட்பு வட்டத்திற்கு என் வாழ்த்துக்கள்..... நட்பு வட்டம் கூடுவதற்கும்...ஒரு கொடுப்பிணை வேணுமுங்க.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள நண்பா.

Anonymous said...

//ந்த ஆண்டும் எங்கள் ஊரிலுள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்கு நண்பர்கள் சார்பாக எதாவது உதவலாம் என முடிவெடுத்திருக்கிறோம்//

வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

அத்திரி said...

வாழ்த்துக்கள்

balavasakan said...

கவிதைக்கு வாழ்த்துக்கள்....
அவதார் படம் நான் டவுண்லோட்பண்ணிதான் பாக்கணும் அவதார் பாக்க அமெரிக்காவோ கொழும்போ போனான் வாசு என்ற அவப்பெயர் வந்திரும் பாருங்க..ஹிஹி..

நண்பர்கள் சந்திப்பு இனிதாய் நடைபெற வாழ்த்துக்கள்...

பையா பாடல்கள் நானும் கேட்டேன் ஏற்கனவே கேட்ட யுவனின் மெட்டுக்கள் தான் ஆனாலும் நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பாடல்களும் அருமை..

அறிமுகம் கலக்கல்..

முனைவர் இரா.குணசீலன் said...

இளமை விகடனில் தங்கள் கவிதை வெளியிடப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

Paleo God said...

வாழ்த்துக்கள் புலவரே ...::))

ஸ்ரீராம். said...

இளமை விகடனில் வெளிவந்ததற்குப் பாராட்டுக்கள்.
பெயர் தெரிந்து கொண்டேன்...!
நண்பர்கள் வருடா வருடம் கூடுவதே பெருமை...அதில் நீங்கள் செய்யும் நல்ல கரியம் இன்னும் நல்லது...
திவ்யா ஹரி கவிதை அழகு

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் நண்பா...

டரியல் எதுவுமில்லாம் டரியல் சூப்பர்...

அடுத்த பதிவர் சந்திப்பில் நிச்சயம் நாம் சந்திக்க வேண்டும்.

வெற்றி said...

வாழ்த்துக்கள் புலவரே..

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பா... நண்பர்கள் சந்திப்பு இனிதாய் அமைய...

க.பாலாசி said...

//என் இளங்கலை படிப்பின் போது கிடைத்த நண்பர்கள் அனைவரும் ஒருங்கினைந்து ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருகிறோம். இது எங்கள் சந்திப்பின் 7வது ஆண்டு. இந்த ஆண்டும் எங்கள் ஊரிலுள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்கு நண்பர்கள் சார்பாக எதாவது உதவலாம் என முடிவெடுத்திருக்கிறோம்.//

நல்லது நண்பா.... தொடருங்கள்...

இளமைவிகடன் கவிதைக்கும் வாழ்த்துக்கள்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//இந்த ஆண்டும் எங்கள் ஊரிலுள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்கு நண்பர்கள் சார்பாக எதாவது உதவலாம் என முடிவெடுத்திருக்கிறோம்.//

நல்ல விஷயம். பாராட்டுகள்.

Anonymous said...

so ur age is 20 + 7 = 27. chage paa

vasu balaji said...

கவிதைக்கும், 7ம் ஆண்டு நிறைவு சார்பான முடிவுக்கும் பாராட்டுக்கள். டரியல் அருமை:)

malarvizhi said...

வாழ்த்துக்கள் நண்பா...நல்ல கவிதை...

மணிஜி said...

வாழ்த்துக்கள் நண்பரே...

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள்

divyahari said...

முதலில் இளமை விகடனில் தங்கள் கவிதை வெளியிடப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் நண்பா.. அவதார் இன்னும் பார்க்கவில்லை. இனிமேல் தான் பார்க்கணும்.. வருடம் ஒரு முறை சந்திப்பு அதிலும் உதவும் மனம்.. உண்மையில் பாராட்ட வேண்டிய ஒன்று.. மற்றவர்கள் கடைபிடிக்கவும் செய்தால் நன்று.. உங்கள் டரியலில் எந்தன் கவிதையை பற்றியும் ஹரியை பற்றியும் எழுதி இருந்தீர்கள்.. உண்மையில் "இளமை விகடனில் வந்தது போல" அளவில்லா சந்தோஷம் எனக்குள். மிக்க நன்றி நண்பா.. ஹரியும், உங்கள் வாழ்த்துக்கு தன் நன்றியை தெரிவிக்குமாறு சொன்னார்கள்..

ஸ்ரீராம், சுசி உங்களுக்கும் நன்றி.

பிரபாகர் said...

முன்பே படித்துவிட்டேன் புலிகேசி! அருமை,வாழ்த்துக்கள்...

டரியல் வழக்கம்போல்.... சுவராஸ்யம்.

பிரபாகர்.

சாருஸ்ரீராஜ் said...

வாழ்த்துக்கள் உங்கள் கவிதை விகடனில் வெளியானதற்கு .

ஜெட்லி... said...

//அதன் மெட்டுக்களில் சில முன்னரே கேட்டது போலிருந்தாலும் அனைத்து பாடல்களும் அருமை. குறிப்பாக "துளி துளி துளி மழையாய்"//


வேல்
படத்தில்
வரும் பாட்டை
போல் இருக்கும் நண்பா

வால்பையன் said...

அடுத்த சந்திப்பில் நிச்சயமாக நீங்கள் உண்டு!