கடவுளை மற..மனிதனை நினை..

06 October 2009

மதம் பிடித்த மனிதன்...!!! (கடவுள் பகுதி-3 )

9:14:00 AM Posted by புலவன் புலிகேசி 32 comments


கடவுளைப் பற்றிய விவாதத்தின் மூன்றாவது பகுதியில் நான் மதங்களைப் பற்றி விவாதிக்க விரும்புகிறேன்..

முதலில் வைரமுத்துவின் பார்வையில் இந்துக் கடவுளான சிவன் எவ்வாறு உருவாக்கப் பட்டான் எனப் பார்ப்போம். வைரமுத்துவின் "கள்ளிக் காட்டு இதிகாசத்தில்" சிவன் என்பவன் யார் என விளக்கியுள்ளார்.

"மனிதனின் பரிணாம வளர்ச்சியில் விவசாயம்தான் முதலிடம் வகிக்கிறது. அந்த விவசாயத்திற்கு முக்கியமான விலங்காக மனிதன் மாடுகளைப் பயன் படுத்த தொடங்கினான். அப்படி தொடங்கிய முதல் மனிதனை மற்றவர்கள் பாராட்டி அவனுக்கு உருவம் தீட்டி, சிவன் என்று பெயரிட்டு கடவுளாக சித்தரித்ததாக கூறியுள்ளார்."

இன்று உலகெங்கும் பெரும்பாலும் பரவியிருக்கக் கூடிய மதங்கள் இந்து, கிறிஸ்த்தவம், இசுலாமியம். ஒவ்வொரு மதத்திலும் கடவுள் என்பவன் நன்மையை தரக் கூடியவன், நியாய தர்மங்கள் அறிந்தவன் என்பதுதான் கருப்பொருளாக சித்தரிக்கப் பட்டிருக்கும்.

இத்தகைய சித்தரிப்புகள் மனிதனை நல்வழிப் படுத்துவதற்காக சித்தரிக்கப் பட்டிருந்தாலும், மனிதனால் அவைகள் பிரித்துப் பார்க்கப் படுகிறது. இந்த பிரிவினைகள் அவரவர் மதங்களை வைத்தே உருவாக்கப் படுகின்றன.

இதுவும் தேர்தல் போலத் தான் நடக்கிறது. பெரும்பான்மை பெற்றவன் உயர்ந்தவன் என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப் படுகிறான்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் கொள்கை என்று சொல்லப் படும் "ஜிகாத்" என்ற வார்த்தையின் அர்த்தம் "புனிதப் போர்" என்பதாகும். உண்மையில் போர் என்பது புனிதமான ஒரு விசயமா???

இலங்கையில் பெரும்பாலானவர்களால் கடவுளாகக் கருதப் படுபவர் "புத்தர்". அவரது கொள்கைப் படி "மனிதன் என்பவன் ஆசைகளைத் துறந்தவனாக இருக்க வேண்டும்". அப்படி அந்தக் கொள்கையில் வாழ்பவன் தானா சிங்களத்தான்?? அப்படி என்றால் "எங்கள் தமிழ் சகோதரிகளின் கற்பு சூறையாடப் படுவதும் எங்கள் உறவுகள் கொல்லப் படுவதும்" ஆசையை துறந்தவர்கள் செய்யக் கூடிய காரியமா???

இன்றும் பல கோவில்களில் "தீண்டாமை" இருக்கத் தான் செய்கிறது. பல கோவில்களில் நான் கண்ட அறிவிப்பு பலகைகளில் "வேற்று மதத்தவர்கள் உள்ளே வரக்கூடது" என எழுதப் பட்டிருக்கும். ஏன் அந்தக் கடவுளுக்கு வேற்று மதத்தவர் "மனிதனாகத் தெரியவில்லையா???"

ஒரு சில கிறிஸ்த்தவர்கள் அவர்கள் மதத்தைப் பரப்புவதற்காக பலரையும் "மூலை சலவை" செய்து வருகின்றனர். கடவுள் என்பவன் கட்டாயப் படுத்தி நம்பவைக்கப் பட வேண்டுமா???

"உண்மையில் சொன்னால் எந்த ஒரு மனிதனும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனே!!! அவனுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் அவன் கடவுள் நம்பிக்கை கொண்டவனாய் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான்."

மதம் என்பது யானைகளுக்கு மட்டும் தான் பிடிக்க வேண்டும்.....மனிதனுக்கு அல்ல........

உங்கள் எண்ணங்களையும் வாக்குகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். காத்திருக்கிறான் ஒரு சாதாரண கடவுள் அல்லாத மனிதன்....

32 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு....கடவுளை முன்னிறுத்துவதை விட மதங்களை ..முன்னிருத்துகிறார்கள் ...
எந்த கடவுளும் அன்பை தான் சொல்கிறது ...............................
மதத்தை விட மனிதமே முக்கியம்

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு....கடவுளை முன்னிறுத்துவதை விட மதங்களை ..முன்னிருத்துகிறார்கள் ...
எந்த கடவுளும் அன்பை தான் சொல்கிறது ...............................
மதத்தை விட மனிதமே முக்கியம்

ஊடகன் said...

கடவுளைப்பற்றிய உங்கள் விவாதத்தில் இதுவே சிறந்த பதிவு, மற்றவை அனைத்தும் உங்கள் பார்வையில் தவறே..........!

வானம்பாடிகள் said...

தலைப்பு நூற்றுக்கு நூறு சரி. நல்ல கருத்துக்கள். பாராட்டுக்கள் புலிகேசி.

புலவன் புலிகேசி said...

//நல்ல பதிவு....கடவுளை முன்னிறுத்துவதை விட மதங்களை ..முன்னிருத்துகிறார்கள் ...
எந்த கடவுளும் அன்பை தான் சொல்கிறது //

கடவுள் சொல்லவில்லை...மத போதகர்கள் சொன்னது...நன்றி நண்பரே!!!

//கடவுளைப்பற்றிய உங்கள் விவாதத்தில் இதுவே சிறந்த பதிவு, மற்றவை அனைத்தும் உங்கள் பார்வையில் தவறே..........!//

நன்றி நண்பரே!!! என்னுடய பார்வையில் அல்ல. உங்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவுதான்....

புலவன் புலிகேசி said...

//தலைப்பு நூற்றுக்கு நூறு சரி. நல்ல கருத்துக்கள். பாராட்டுக்கள் புலிகேசி.//

நன்றி நண்பரே!!!

பிரபாகர் said...

கடவுளை பற்றியும், மதங்களைப் பற்றியும் அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

//கடவுளை பற்றியும், மதங்களைப் பற்றியும் அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள்...

பிரபாகர்.//

நன்றி நண்பரே!!

க.பாலாஜி said...

மதங்களை முன்னிருத்தும் மனிதர்களின் செயல்களை உங்கள் பார்வையில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லியிருக்கிறீர்கள்.

சிந்தனை தூண்டும் கேள்விகள்....நல்ல இடுகை...ஆழ்ந்த கருத்துடன்... தொடருங்கள்...

புலவன் புலிகேசி said...

//சிந்தனை தூண்டும் கேள்விகள்....நல்ல இடுகை...ஆழ்ந்த கருத்துடன்... தொடருங்கள்.//

நன்றி பாலாஜி.....

Anonymous said...

எங்கள் தமிழ் சகோதரிகளின் கற்பு சூறையாடப் படுவதும் எங்கள் உறவுகள் கொல்லப் படுவதும்" ஆசையை துறந்தவர்கள் செய்யக் கூடிய காரியமா

//

நீங்க இப்ப சொல்லறிங்களே " எங்கள் " என்று அது போலத்தான் தன் இனத்தையும் தன் பழக்க வழக்கங்களையும் பிற இனமோ கலாச்சாரமோ அழித்து விட கூடாது என்று உருவாக்கியது தான் இந்த மதம் ஜாதி இனம் எல்லாம் . ஒரு வித கூட்டு கலாச்சார அனுபவத்தில் அனுசரித்து செல்லும் வரையில் பிரச்னை என்பது வருவது இல்லை அந்த அனுசரிப்பு அல்லது நெகிழும் தன்மை உறுதி குறையும் போது தான் தேவைற்ற சண்டைகள் வருகிறது . அதற்க்கு துணையாக மதம் எனும் மார்க்கத்தை மனிதன் கையாளுகிறான் .காரணம் மதம் ஒன்று தான் மிக பெரிய குழுக்களை கொண்டு இருக்கிறது இந்த மதம் மூலம் மட்டுமே அவனால் பெரிய அணி சேர்க்க முடிகிறது .

தேவை படும் வரை இவை எல்லாம் நன்மைக்கே

புலவன் புலிகேசி said...

//ஒரு வித கூட்டு கலாச்சார அனுபவத்தில் அனுசரித்து செல்லும் வரையில் பிரச்னை என்பது வருவது இல்லை அந்த அனுசரிப்பு அல்லது நெகிழும் தன்மை உறுதி குறையும் போது தான் தேவைற்ற சண்டைகள் வருகிறது .//

உண்மைதான்... ஆனால் கூட்டுக் கலாச்சாரங்கள் அழிந்தல்லவா போய்க் கொண்டிருக்கிறது.......

கவிதை(கள்) said...

நல்ல பதிவு.

புலவன் புலிகேசி said...

// கவிதை(கள்) said...
நல்ல பதிவு.//

நன்றி நண்பரே!!!

ஹேமா said...

அருமையா இருக்கு புலிகேசி.
எதையுமே மறுக்க இல்ல நான்.

புலவன் புலிகேசி said...

// ஹேமா said...
அருமையா இருக்கு புலிகேசி.
எதையுமே மறுக்க இல்ல நான்.//

நன்றி ஹேமா!!!

செல்வன் said...

//உண்மையில் சொன்னால் எந்த ஒரு மனிதனும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனே!!! அவனுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் அவன் கடவுள் நம்பிக்கை கொண்டவனாய் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான்.//

இது தான் உண்மை.

புலவன் புலிகேசி said...

//Blogger செல்வன் said...

//உண்மையில் சொன்னால் எந்த ஒரு மனிதனும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனே!!! அவனுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் அவன் கடவுள் நம்பிக்கை கொண்டவனாய் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான்.//

இது தான் உண்மை.//

நன்றி நண்பரே!!!

மொழி said...

புலவன் புலிகேசி உங்கள் எழுத்து எனக்கு ரொம்ப பிடித்திருக்கிது..ஆனால் உங்களின் கீழ்க்கண்ட கருத்திற்கு எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது../////வைரமுத்துவின் "கள்ளிக் காட்டு இதிகாசத்தில்" சிவன் என்பவன் யார் என விளக்கியுள்ளார்.

"மனிதனின்
பரிணாம வளர்ச்சியில் விவசாயம்தான் முதலிடம் வகிக்கிறது. அந்த
விவசாயத்திற்கு முக்கியமான விலங்காக மனிதன் மாடுகளைப் பயன் படுத்த
தொடங்கினான். அப்படி தொடங்கிய முதல் மனிதனை மற்றவர்கள் பாராட்டி அவனுக்கு
உருவம் தீட்டி, சிவன் என்று பெயரிட்டு கடவுளாக சித்தரித்ததாக
கூறியுள்ளார்."/////

இது உண்மையல்ல..நான் வேறு எதையும் பற்றி இங்கே சொல்லி அனாநிகளிடம் திட்டு வாங்க விரும்பவில்லை:)ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்..வைரமுத்து சொல்லி இருக்கிறார் என்றால் அது அவருடைய கருத்து..அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.வைரமுத்து மகான் இல்லையே ஒரு கவிஞன்..ஒரு சாதாரண மனிதன்..அப்படி இருக்கும் பொழுது அவர் சொல்லி இருப்பத்தை இங்குஏன் கொடுத்தீர்கள் என்பதன் நோக்கம் புரியாததால் கேட்கிறேன்..

மற்றும் ஒன்று..

/////உண்மையில்
சொன்னால் எந்த ஒரு மனிதனும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனே!!!
அவனுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் அவன் கடவுள்
நம்பிக்கை கொண்டவனாய் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான்."/////

இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை புலி:(...நீங்கள் கடவுள் இல்லை என்பது பற்றி பேசுகிறீர்களா?இல்லை மூட நம்பிக்கை பற்றி பேசுகிறீர்களா?

////இந்துக்
கோவில்களில் "தீண்டாமை" இருக்கத் தான் செய்கிறது. பல கோவில்களில் நான்
கண்ட அறிவிப்பு பலகைகளில் "வேற்று மதத்தவர்கள் உள்ளே வரக்கூடது" என எழுதப்
பட்டிருக்கும். ஏன் அந்தக் கடவுளுக்கு வேற்று மதத்தவர் "மனிதனாகத
தெரியவில்லையா???"/////

இது மிகுந்த வருத்தத்தை தரக்கூடிய செயல்..என்றாலும் இந்து கோவில் என்று மட்டும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்..நான் மதம் வெறி பிடித்த பெண் கிடையாது ஆனாலும் எந்த ஒரு சர்ச்லையும் ,எந்த ஒரு மாஸ்க்லையும் வேற்று மதத்தவரை உள்ளே அனுமதிப்பதில்லை என்றே தோன்றுகிறது ...நான் காலேஜ் நாட்களில்(போன மாதம்) ஒரு ப்ராஜெச்க்ட் செய்வதற்காக மூன்று மதத்தின் வழிபாட்டு தளங்களில் அணுகியபோது..இந்து கோவில்களில் மட்டுமே அனுமதி பெற்றோம்..சர்ச்சில் என்னுடன் இருந்த கிருஸ்துவ தோழியை மட்டுமே அனுமத்தார்கள் ..மாஸ்க்க்கும்என் வகுப்பறையை சேர்ந்த ஆண் நண்பர்கள் செல்ல முயன்ற போது உள்ளே வரக்கூடாது என்று தடுத்து விட்டார்கள்..

இப்படி தான் இருக்கிறது நாட்டின் நிலைமை..இவ்வாறு இருக்கும் பொழுது பர்டிகுலராக இந்து கோவில்கள் என்று மட்டும் சொல்லி இருப்பது தவறாக படுகிறது....எல்லா சாதியிலும் தீண்டாமை இருக்கிறது ஆனால் இந்துக்களை மட்டும் தான் குறை சொல்ல முடியும்..ஏன் என்றால் அவர்கள் தான் கோழைகள் ஏமாந்தவர்கள்..அதுனால் தான் சினிமாவிலும் சரி அரசியல் ஆற்றும் மக்களும் சரி இந்து மதத்தை மட்டும் குறை சொல்லி கைதட்டல் வானுகிறார்கள்..மூட நம்பிக்கைகளும் அதே போல் தான்..இந்துக்களை திருநீர்,திருமன்(நாமம்) போட்டால் கிண்டல் அடிக்கும் அரசியல் வாதிகள்,சின்னிமாகாரகள் ஏன் முஸ்லிம்கள் குல்லாய் அணிவதை பற்றி கருத்து கூருவதில்தை..கிருஸ்துவர்கள் மற்ற மதத்தவை மதம் மாற்ற நினைப்பது பற்றி எதுவும் கருத்து கூறவில்லை..எனென்றால் அவர்களை ஏதாவது சொன்னால் பெரிய ப்றேச்ச்னையாகிவிடும்..இந்துக்கல்லை ஏதாவது சொன்னால் கேட்க ஆள் இல்லை..இதுதான் காரணம்..நான் எல்லா முஸ்லிம்கள்,கிருஸ்துவர்கள்,இந்துக்களை கூறவில்லை மதம் என்ற பெயரில் மற்றவர்களை காயப்படுத்தும் மதத்தவர்களை பற்றி மட்டும் தான் சொல்கிறேன்..எனக்கு என்னுடை இஸ்லாமிய தோழன் ஷேக்கும் தோழி ரிஸ்வாநாவும் வேண்டும்,கிருஸ்துவ நண்பன் வசந்த்தும் வேண்டும்,இந்து நண்பன் கோவிந்த்தும் வேண்டும்....நான் எந்த மதங்களை குறை கூறவில்லை....எல்லா மதத்தையும் மனிதர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறேன்..எல்லா மதத்தில் அவர் அவர்களுக்கென்று நம்பிக்கைகள் இருக்கும் பொழுது இந்துக்களை குறி வைத்து அடிப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது ..புலிகேசியிடமிருந்து இப்படி இவ்வளவு தவறுகள் நிறைந்த பதிவை எதிர்பார்க்கவில்லை..
நான் ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மனித்து விடுங்கள்.

இங்கணம்,
மொழி...

மொழி said...

மதங்களில் தீண்டாமை இருக்க கூடாது என்கிற உங்களின் கருத்து வரவேற்ககூடியது புலி...மனிதர்களுக்காதான் மதம்,மதத்திற்காக மனிதனில்லை..மற்றவர்களின் நம்பிக்கைகளை பற்றி பேசும் பொழுது எப்பொழுதும் கவனமாக இருங்கள் புலி..அனுபவத்தில் சொல்கிறேன்..எந்த ஒரு முஸ்லிமும் முஸ்லிம்களை மாற்றி அவதூறாக பேச மாட்டாங்க,அதே போல் தான் கிருஸ்துவர்களும் ஆனால் இந்துக்கள் தான் தாராள மனசு படைத்தவர்கள்(?)..அவர்கள் மதத்தை பற்றி அவர்களேகிண்டல் கேலி செய்து கொள்வார்கள்..

மொழி

மொழி said...

ஏதாவது முஸ்லிம்மோகிறுசத்துவனோ மற்ற மதங்களின் உள்ள நம்பிக்கைகளை பற்றி பேசுகிறார்களா?இந்துக்கள் தான் இந்துக்களின் நம்பிக்கைகளை அசிங்கப்படுத்துவது மட்டும் அல்லாமல்மற்ற மதத்தவரின் நம்பிக்கையையும் தொட்டு அவர்களையும் புண்டுத்துகிறார்கள்..
என் கருத்துப்படி மதங்கள் இருக்கலாம்..மதங்களுக்குள் நம்பிக்கைகள் இருக்கலாம் ..அது அவரவர் விருப்பம் சந்த விஷயம் அது கூடாது என்று சொல்ல நமக்கு எந்த உரிமையும் கிடையாது..ஆனால் மத வெறி மற்றும் அவர்களின் நம்பிக்கைகள் மற்றவர்களின் மனதை புண்படுத்தாதவாறு இருப்பது மிக அவசியம்..இதுவேஎன் தாழ்மையான கருத்து..

நான் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மனிப்பு கேட்டு கொள்கிறேன்..இன்னும் எவ்வளவு நாட்களுக்கு ஜாதி,மதம் என்று பேசி பேர் வாங்க பார்ப்பார்கள் என்ற ஒரு ஆதங்கத்தில் தான் கொட்டி தீர்த்து விட்டேன்...மறுபடியும் என் கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மனிப்பு கேட்டு கொள்கிறேன்..


மொழி..

புலவன் புலிகேசி said...

//இது உண்மையல்ல..நான் வேறு எதையும் பற்றி இங்கே சொல்லி அனாநிகளிடம் திட்டு வாங்க விரும்பவில்லை:)ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்..வைரமுத்து சொல்லி இருக்கிறார் என்றால் அது அவருடைய கருத்து..அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.வைரமுத்து மகான் இல்லையே ஒரு கவிஞன்..ஒரு சாதாரண மனிதன்..அப்படி இருக்கும் பொழுது அவர் சொல்லி இருப்பத்தை இங்குஏன் கொடுத்தீர்கள் என்பதன் நோக்கம் புரியாததால் கேட்கிறேன்..//

நான் வைரமுத்துவை மகான் என்று சொல்லவில்லை...அவருடைய அந்தக் கருத்து எனக்குப் பிடித்திருந்ததால் அனைவருக்கும் சொல்ல விரும்பினேன் அவ்வளவுதான்..

புலவன் புலிகேசி said...

///////உண்மையில்
சொன்னால் எந்த ஒரு மனிதனும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனே!!!
அவனுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் அவன் கடவுள்
நம்பிக்கை கொண்டவனாய் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான்."/////

இதிலும் எனக்கு உடன்பாடு இல்லை புலி:(...நீங்கள் கடவுள் இல்லை என்பது பற்றி பேசுகிறீர்களா?இல்லை மூட நம்பிக்கை பற்றி பேசுகிறீர்களா?//

இங்கு நான் சொல்லியிருப்பது மனிதனிடம் கடவுள் எப்போது தேவைப் படுகிறான் என்பதைத்தான். இதற்கும் கடவுள் இல்லை என்பதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது........

புலவன் புலிகேசி said...

//நான் காலேஜ் நாட்களில்(போன மாதம்) ஒரு ப்ராஜெச்க்ட் செய்வதற்காக மூன்று மதத்தின் வழிபாட்டு தளங்களில் அணுகியபோது..இந்து கோவில்களில் மட்டுமே அனுமதி பெற்றோம்..சர்ச்சில் என்னுடன் இருந்த கிருஸ்துவ தோழியை மட்டுமே அனுமத்தார்கள் ..மாஸ்க்க்கும்என் வகுப்பறையை சேர்ந்த ஆண் நண்பர்கள் செல்ல முயன்ற போது உள்ளே வரக்கூடாது என்று தடுத்து விட்டார்கள்..//

உண்மையில் வருத்தத்திற்குரிய செயல் தான். நான் பார்த்த வரையில் இந்துக் கோவில்கள். அப்படி செய்யும் எல்லா மதக் கோவில்களுக்கும் இது பொருந்தும்.....

புலவன் புலிகேசி said...

//இன்னும் எவ்வளவு நாட்களுக்கு ஜாதி,மதம் என்று பேசி பேர் வாங்க பார்ப்பார்கள் என்ற ஒரு ஆதங்கத்தில் தான் கொட்டி தீர்த்து விட்டேன்...மறுபடியும் என் கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மனிப்பு கேட்டு கொள்கிறேன்..
//

இது பெயர் வாங்கும் நோக்கத்தில் எழுதப் பட்டது அல்ல. மனிதனுக்கு மனிதத்தைப் புரிய வைக்கும் முயற்சியில் எழுதப் பட்டது....

மொழி said...

லி பெயர் வாங்க எழுதப்பட்டது எண்டு நான் சொல்ல வில்லையே...உங்களை அப்படி சொல்லவில்லை..சினிமா மற்றும் அரசியல் வாதிகளை தான் சொன்னேன்..உங்கள் உடன் பதிலும் நான் சொன்ன கருத்தை நீங்கள் ஏற்றுக்கொண்ட விதமும் மகிழ்வை தந்தது..உங்களை போல் சமூக அக்கறை உள்ளவர்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை திருத்தமாக சொல்ல வேண்டும் என்றே ஆசை படுகிறேன்..நன்றி..இன்னும் அதிகம் நல்ல பதிவுகள் போட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்..

வால்பையன் said...

//"உண்மையில் சொன்னால் எந்த ஒரு மனிதனும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனே!!! அவனுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் அவன் கடவுள் நம்பிக்கை கொண்டவனாய் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான்."//

எனக்கும் அப்படி தான் தோணுது தல!

சும்ம கஷ்டம் வர்ற நேரத்திலும், நம்ம கூட மல்லு கட்டும் நேரத்திலும் தான் அவுங்களுக்கு கடவுள் ஞாபகமே வரும்!

புலவன் புலிகேசி said...

//உங்களை போல் சமூக அக்கறை உள்ளவர்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை திருத்தமாக சொல்ல வேண்டும் என்றே ஆசை படுகிறேன்..நன்றி..இன்னும் அதிகம் நல்ல பதிவுகள் போட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்..//

நன்றி தோழியே!!! உங்கள் மீது ஒன்றும் கோபம் இல்லை....நிச்சயம் மக்களுக்கு பயன்தரும் பதிவுகளை மட்டும் தான் எழுதுவேன்.........

புலவன் புலிகேசி said...

//எனக்கும் அப்படி தான் தோணுது தல!

சும்ம கஷ்டம் வர்ற நேரத்திலும், நம்ம கூட மல்லு கட்டும் நேரத்திலும் தான் அவுங்களுக்கு கடவுள் ஞாபகமே வரும்!//

சரியா சொன்னீங்க தல.....

நெஞ்சின் அடியில்.... said...

//"உண்மையில் சொன்னால் எந்த ஒரு மனிதனும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனே!!! அவனுக்கு எப்போது பிரச்சினை வருகிறதோ அப்போது மட்டும் அவன் கடவுள் நம்பிக்கை கொண்டவனாய் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறான்."//
அப்பட்டமான உண்மை....
உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்.....கடவுள் நம்முள் தான் இருக்கிறார்.....நாம்தான் வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம்.....அஹம் ப்ரஹ்மாஸ்மி.......

Anonymous said...

முதலில் புலிகேசி நீங்கள் பெரியாரை தூக்கிப் பிடிப்பவர். உங்களது பதிவில் மொழி என்பவர் பார்ப்பன இந்து மதம் சார்பாக வந்து கண்டனம் தெரிவித்து உள்ளார். நீங்களும் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். தன்னுடைய மத்த்தை சேர்ந்தவர்களைப் பார்த்தாலும் தொட்டாலும் கூட தீட்டு எனச் சொல்லும் மதம் உலகிலேயே இந்து மதமாகத்தான் இருக்கும் என்று உங்களால் அடித்து சொல்ல முடியவில்லையா... அல்லது கொள்கையை விட நட்பு முக்கியம் என்று கருதுகின்றீர்களா...

ம‌தம் மனிதனுக்கு பயன்பட்டதை விட அரசுக்குத்தான் அன்றும் இன்றும் பயன்படுகிறது. அரசனின் செங்கோலையும், நீதிபதியின் செங்கோலையும் கண்டு பயம் கொண்டு மக்கள் தமக்கு நிகழும் அரசின் அடக்குமுறைக்கு அடங்கி இருக்கவில்லை. இந்த உலகில் துன்பம் அடைபவர்கள் மறுமையில் சொர்க்கத்தையும், இப்போது வசதியாக இருப்பவர்களுக்கு மற்றவர்களுக்கு அவர்கள் தீங்குமிழைத்து சொத்து சேர்ப்பதால் மறுமையில் நரகமும் உண்டு என்றுதான் எல்லா மதமும் சொல்கிறது. மனிதன் பயத்தின் அடிப்படையில் இயற்கையை வணங்கிய ஆதிகால சமூகம் பிறகு ஆண்டான் அடிமை சமூகமாக மாறிய காலம் தொட்டு இன்றைய நவீன முதலாளித்துவ சமூகம் வரை ஆளுகின்றவனின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் ஒன்று சேர்வதை தடுக்கும் போதை மருந்தாகவே மதம் பயன்படுகிறது. ஏங்கல்சின் மொழியில் சொல்வது என்றால் இரக்கமற்ற உலகத்தின் இதயமாக, பேச வழியற்ற மக்களின் பேச்சாக, மொத்த்த்தில் மதம் மக்களை மயக்கும் அபினியாகத்தான் இருக்கிறது. மற்றபடி நீங்கள் விரும்பியபடியோ அல்லது ஒரு கவிஞன் விரும்பியபடியோ வரலாறு தன்னை இறந்த காலத்திற்கு திரும்பவும் போய் மாற்றிக் கொள்ள முடியாது.

அடுத்து போர் புனிதமானதா என்று கேள்வி எழுப்புகின்றீர்கள். அமைதியை மக்களுக்கு வழங்கும், அவர்களுக்கு நல்ல வாழ்வைத் தரும் புரட்சி என்ற சமூக மாற்றம் கூட போர்தான். அதற்காக அதனை புனிதமற்றது என ஒதுக்க முடியாது. அது என்ன ஜிகாத் ஐப் பற்றிப் பேசும்போது தாஜ் ஹோட்டல் எரிவதைக் காட்டுகின்றீர்கள். இந்துக்களின் சார்பாக மோடி 2002 இல் குஜராத்தின் நடத்தினானே ஒரு படுகொலை அதற்கு போர் என்று பெயர் தர முடியாதா... முதலாளிகளின் ஹோட்டல் எரிந்த போது வெடித்த உங்களது நெஞ்சம் குஜராத் இன் ஷகிரா பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்து சிசுவை வெளியில் எடுத்துக் கொன்றார்களே இந்து மத வெறியர்கள் அதனை கண்டித்து ஒன்றும் சொல்லாதா... ஆர் எஸ் எஸ் நடத்தும் சாகா பற்றி ஒன்றும் சொல்லாதா... அவர்கள் நடத்திய மும்பை கலவரம், பாரப் மசூதி இடிப்பு, பகல்பூர் படுகொலைகள், மீரட், கான்பூர் கலவரங்கள் எல்லாம் ஒரு பகுத்தறிவு வாதியின் கண்ணுக்கு தெரியாதா.. சிறுபான்மை சமூகத்தின் மீது நஞ்சு க்க்கும் வேலையை பார்ப்பனர்களுடன் சேர்ந்து துவங்கி உள்ள தாங்கள் ஏன் பெரியாரை தூக்கிப் பிடிக்கின்றீர்கள்.

புத்த மதம் ஆசையை துறப்பதன் மூலம் தன்னை அழிக்க வந்த பார்ப்பன இந்து மத்த்தை எதிர்க்க முடியாமல் தப்பி ஓடவே அந்த கொள்கையை பின்பற்றியது. அதனையே கொள்கையா எடுத்தாள்வது நகைப்பிற்குரியது. கற்பு என ஒன்று உள்ளதாக பெரியாரின் சீடன் சொல்வதும் நகைப்பிற்குரியதுதான். பாலியல் வல்லுறவு எனச் சொல்வதுதான் சரி. இதற்கு ஆசை அவசியம் என்பதும் நகைப்பிற்குரியதுதான். பெண்ணை சக மனித ஜீவனாக மதிக்காத ஆணாதிக்க, தந்தைவழிச் சொத்துடைமை பெற்ற சமூகத்தில் பெண்ணும் ஒரு சொத்தாகத்தான் கருதப்படுகிறாள். வீட்டை இடித்து நொறுக்குவதன் மூலம் ஒருவனது வாழ்வை பாழ்படுத்துவதைப் போலவே அவனது மனைவியை சகோதரியை தாயை லர்ருறவுக்கு உட்படுத்துவதன் மூலம் பாழ்படுத்துவதாக நினைக்கும் பழைய சமூகத்தின் விழுமியம்தான் அது.

walajabalaji said...

அதாவது ஐயா, யாராவது ஒரு மனிதன் அப்படி உன்மயான பக்தனாக இருக்க மாட்டானா என்பது தான் எதிர்பார்ப்பு ! ஒருவன் உன்மயாக இருந்தால், பல ஆயிரம் பேர் பலன் அடயும் நோக்கில் ஏற்படுதபட்டது தான் மதம் மற்றும் கடவுள்.ஆனால் இந்த பாழய் போன யுகத்தில் அது சாத்தியபடாமலே போய்விட்டது. ஆனால் இன்னும் என்னை போன்று பல்லாயிரம் பேர் அந்த ஒருவருக்காக காத்துகொன்டுதான் இருக்கிரோம். நிச்சயாம் நல்லது நடக்கும்.