கடவுளை மற..மனிதனை நினை..

28 October 2009

தெய்வம் முதியோர் இல்லத்தில்........பகுத்தறிவு (பகுதி-2)

9:12:00 AM Posted by புலவன் புலிகேசி 20 comments
*வியாபார உலகில் பெரியவன். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கோவில் உண்டியலில் செலுத்தினான்.

பாதிக்கப் பட்டது ஏழை மக்கள்.



*தீமிதித் திருவிழாவில் மற்றவனைப் போல் ஓடத் தெரியாதவன் காலில் புண். 

தெய்வக்குத்தமாம்.....??

*பத்தாம் வகுப்புத் தேர்வுக்குப் படிக்காதவன் பிள்ளையார் கோவிலில் சென்று தேர்வு எண்ணை எழுதினான். 

தேர்விலும் அதை மட்டும் தான் எழுதினான்.

*எதிர் வீட்டுக் குழந்தை அடித்த பந்து மேலேப் பட்டதால் வெட்டுக்குத்து சண்டை. கோவிலில் நேர்த்திக்கடனாக தலையில் தேங்காய் உடைப்பு. 

குழந்தையும் தெய்வமும்..???


*வியாபாரத்தில் வெற்றி. கோவிலில் நேர்த்திக்கடன். 

தெய்வம் (தாய்) முதியோர் இல்லத்தில்......

20 விவாதங்கள்:

பிரபாகர் said...

//*வியாபாரத்தில் வெற்றி. கோவிலில் நேர்த்திக்கடன்.

தெய்வம் (தாய்) முதியோர் இல்லத்தில்......//

உங்கள் சிந்தனைகள் வித்தியாசமாயும், சுளீரேன்றும் இருக்கின்றன நண்பா...

வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

ரோஸ்விக் said...

நண்பா அனைத்து வரிகளும் சுருக். ஒரு வரிகளில் பலரைக் கொல்லும் ஆயுதமாய் அந்த சொற்கள். வாழ்த்துக்கள்.

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல வரிகள் ஆனால் மற்ற கருத்துக்கள் கருத்தில் இருந்து வெளியே செல்கின்றன

ஈ ரா said...

அசத்துறீங்க

புலவரே

க.பாலாசி said...

உங்களின் சிந்தனை நன்றாயிருக்கிறது. இதையே ஒரு கவிதைபோல வடித்திருக்கலாம். வார்த்தைகள் ஆங்காங்கே தொக்கி நிற்பதுபோல் தோன்றுகிறது.

நல்ல இடுகை....

முனைவர் இரா.குணசீலன் said...
This comment has been removed by the author.
முனைவர் இரா.குணசீலன் said...

ஒவ்வொன்றும் சவுக்கடிகள்...
மிகவும் நன்றாகவுள்ளது..

நாளை தேர்வு
மாணவன்
விடிய விடிய படித்தான்
“கந்தர் சஷ்டி கவசம்“

(எங்கோ படித்தது..)

முனைவர் இரா.குணசீலன் said...

வியாபாரத்தில் வெற்றி. கோவிலில் நேர்த்திக்கடன்.



தெய்வம் (தாய்) முதியோர் இல்லத்தில்......


நன்றாகவுள்ளது..


நான் பெற்றதோ
நான்கு சன்கள்
இன்று என்னைக் காப்பதோ
என் பென்சன் மட்டுமே!

“முதியோர் இல்லங்கள்“

மனிதக் காட்சி சாலை
இங்கு விலங்குள்
வந்து மனிதர்களைப்
பார்த்துப்போகும்

(எங்கோ படித்தது)

vasu balaji said...

அசத்தல் சவுக்கடி. சபாசு.

வினோத் கெளதம் said...

புலவேரே அசத்துறிங்க..அதுவும் அந்த "முதியோர் காப்பகம்" சவுக்கடி..

velji said...

definitely, sharp thoughts.it seems to be rehearsal for a big article.
all of us are expecting it!

thiyaa said...

வித்தியாசமா சிந்திக்கிறிங்க

புலவன் புலிகேசி said...

நன்றி பிரபாகர், ரோஸ்விக், வெண்ணிற இரவுகள்....!, ஈ ரா , க.பாலாசி,
முனைவர்.இரா.குணசீலன், வானம்பாடிகள், வினோத்கெளதம், velji, தியா

// seems to be rehearsal for a big article.all of us are expecting it!//

நிச்சயம்

அன்புடன் மலிக்கா said...

சிந்தனைகள் மாறுபட்டல்தான் சிந்தனைக்கே விளங்கும்..

அன்புடன் அருணா said...

பளாரென்று அறை வாங்கியது போலிருந்தது .....பூங்கொத்து!

புலவன் புலிகேசி said...

நன்றி அன்புடன் மலிக்கா, அன்புடன் அருணா

சத்ரியன் said...

//*வியாபாரத்தில் வெற்றி. கோவிலில் நேர்த்திக்கடன்.

தெய்வம் (தாய்) முதியோர் இல்லத்தில்......//

புலிகேசி,

நெஞ்சம் தொட்ட வரிகள்...!

சமூகம் ஒளிர... தொடருங்கள் சவுக்கடியை...!

Anonymous said...

ஆமாம் புலவரே, இந்த நெருப்பு மேல நடககுர ( நடக்க மாட்டானுங்க....ஓடுவானுங்க !!!!) பசங்கள , அப்படியே கொஞ்சம் நெருப்பு மேல புரள சொன்னா புரளுவாங்களா? சாமி காப்பாத்துமில்ல....? எதா பண்ணி காமிங்களேன் பார்க்கலாம்? எங்கனா வூடு பத்திகினா, இவ்வனுங்கள உள்ள அனுப்பனும்! பித்தலாட்டக்கார பசங்க! உடாதே இவனுங்கள!

balavasakan said...

ரொம்ப நல்லா இருக்கு .........
நம்ம சனம் ரொம்ப மோசம் ...

Unknown said...

Romba nalla irukkunga....