கடவுளை மற..மனிதனை நினை..

30 October 2009

எந்த குப்பனும் சுப்பனும் இதை செய்வான்

8:25:00 AM Posted by புலவன் புலிகேசி 16 comments

குப்பனும் சுப்பனும் பூஞ்சோலை கிராமத்தின் விவசாயிகள். அவர்களைப் போல் உழைப்பதற்கு எவனாலும் முடியாது என்பது அந்த ஊராரின் கருத்து. அதுவே அவனின் முதலாளி வெங்கடாச்சலத்தின் கருத்தும் கூட....

வெங்கடாச்சலம் ஆச்சாரம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டிருக்கும் குடும்பத்தை சேர்ந்தவன். குப்பனோ சுப்பனோ வயல் வேலைகளை முடித்து தண்ணீர் கேட்டு வந்தால் கூட அவர்களுக்கென்று ஒரு தேங்காய் கூட்டில் தான் தண்ணீர் ஊற்றுவார்.

பின்னர் அவர்கள் உட்கார்ந்த இடம் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்படும். வெங்கடாச்சலம் வீட்டு நாய்க்கு கூட குப்பனயோ சுப்பனையோ தொட அனுமதி இல்லை. நாய்க்கும் ஆச்சாரமாம்.?ஒரு நாள் குப்பனின் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது வழியில் வந்த வாகனத்தில் அடிப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. வெங்கடாச்சலத்திடம் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு சென்ற குப்பனிடம் இருந்த இரண்டு மாடுகளையும் வாங்கிக் கொண்டுதான் பணம் கொடுத்தான்.

குழந்தை உயிர்த் தப்பியது. வழக்கம் போல் குப்பனும் சுப்பனும் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். அப்போது வயலுக்கு வந்த வெங்கடாச்சலம் குப்பனிடம், "டேய் குப்பா நீ வாங்குனப் பணத்துக்கு அந்த ரெண்டு மாடும் பத்தாதுடா...அதனால இன்னும் ஒரு மாசத்துக்கு சம்பளம் வாங்காம வேல செய்யணும் என்ன?" என்றார். பதில் பேச முடியாமல் நின்றான் குப்பன்.

சொல்லி விட்டு அருகிலிருந்த மரப் பாலத்தின் வழியே செல்லும் பொழுது பாலம் இடிந்து விழுந்து தண்ணீரில் சிக்கிகொன்டான் வெங்கடாச்சலம். குப்பனும் சுப்பனும் பதறி அடித்துக் கொண்டு வெங்கடாச்சலத்தை கரைக்கு கொண்டு வந்து அவர்களுக்குத் தெரிந்த முதலுதவி செய்துக் காப்பாற்றினார்.வெங்கடாச்சலத்தை வண்டிக் கட்டி கொண்டு வீட்டில் கொண்டு சேர்த்து விட்டு வழக்கம் போல் வாசலில் நின்றனர் இருவரும். வண்டியிலிருந்து இறங்கிய வெங்கடாச்சலம் தன மனைவியிடம் "ஏ புள்ள செல்வி ஒரு அண்டால தண்ணி கொண்டு வாடி தீட்டாயிப் போச்சு" என்றதும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் சுரீர் என்றது.

இருக்கிறானா இல்லையா எனக் கூடத் தெரியாமல் கடவுளை நம்பும் இவர்களை விட உழைப்பையும் மனிதனையும் மட்டும் நம்பும் நம்மைப் போன்றவர்கள்தான் உண்மையில் உயர்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு வீடு திரும்பினர்.

பி.கு: உயிர் காக்க கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்டான் வெங்கடாச்சலம். தன உயிரைப் பொருட்படுத்தாமல் அவனைக் காப்பாற்றினர் குப்பனும் சுப்பனும்.

"அறிவியலில் சாதனைப் புரிந்து விட்டு எந்த குப்பனும் சுப்பனும் இத செய்ய முடியுமான்னு"

கேக்குறவன் இவுங்க செஞ்சத செய்ய மாட்டான். அறிவியல் கண்டுபிடிப்பை விட இந்த குப்பனும் சுப்பனும் தான் எனக்கு பெருசாத் தெரியுறாங்க.......

16 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

இவர்களை காப்பாற்றவே கூடாது

பிரபாகர் said...

நன்றாயிருக்கிறது புலிகேசி. ஆனாலும் சாதீய கொடுமைகள் குறைந்திருப்பதாகவே எண்ணுகிறேன்.

பிரபாகர்.

ஊடகன் said...

நன்னா இருந்ததுனா........
பேஷா எழுறேல்நா..............

க.பாலாசி said...

// இருக்கிறானா இல்லையா எனக் கூடத் தெரியாமல் கடவுளை நம்பும் இவர்களை விட உழைப்பையும் மனிதனையும் மட்டும் நம்பும் நம்மைப் போன்றவர்கள்தான் உண்மையில் உயர்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு வீடு திரும்பினர்.//

நல்ல கருத்து. இதே எண்ணத்துடன் குப்பனும் சுப்பனும் மட்டுமல்ல கந்தசாமியும்...முனசாமியும் கூட இருக்கறார்கள்.

ஆனாலும் ஓரளவுக்கு இந்த கொடுமைகள் குறைந்துவிட்டதென்றே எண்ணுகிறேன்.

தாங்கள் எடுத்துக்கொண்ட விசயம் சிறப்பாக பதியப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே...

சி. கருணாகரசு said...

படமும் பதிவு மிக அருமை... பாராட்டுக்கள்.

கதிர் - ஈரோடு said...

இடுகையில் சொல்ல வந்த கருத்து அருமை

பி.கு-வில் சொன்ன கடைசி நான்கு வரிகள் எதற்காக என்று எனக்கு சரியாக புரியவில்லை புலிகேசி

வானம்பாடிகள் said...

நன்றாயிருக்கிறது. கதிர் சொன்னாற் போல் பி.கு. பிடிபடவில்லை

புலவன் புலிகேசி said...

நன்றி Blogger வெண்ணிற இரவுகள்....!,பிரபாகர்,ஊடகன்,க.பாலாசி,சி. கருணாகரசு,கதிர் - ஈரோடு,வானம்பாடிகள்

புலவன் புலிகேசி said...

//பி.கு-வில் சொன்ன கடைசி நான்கு வரிகள் எதற்காக என்று எனக்கு சரியாக புரியவில்லை புலிகேசி//

//கதிர் சொன்னாற் போல் பி.கு. பிடிபடவில்லை//

சமீபத்தில் வெளிவந்த "உன்னைப் போல் ஒருவன் படத்தில் கமல் கேட்பாரல்லவா எந்த குப்பனும் சுப்பனும் இதை செய்ய முடியுமா? " என்று...அது பார்த்தது முதல் இதைப் பற்றி சொல்ல வேண்டும் எனத் தோன்றியது....அதற்காகத் தான் நண்பரே........

இந்த குப்பனும் சுப்பனும் சாதனைகள் செய்ய வேண்டாம். இது போன்று மனிதத்துடன் இருந்தால் போதும்.

நன்றி வானம்பாடிகள் ஐயா மற்றும் கதிர்......

முனைவர்.இரா.குணசீலன் said...

இருக்கிறானா இல்லையா எனக் கூடத் தெரியாமல் கடவுளை நம்பும் இவர்களை விட உழைப்பையும் மனிதனையும் மட்டும் நம்பும் நம்மைப் போன்றவர்கள்தான் உண்மையில் உயர்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு வீடு திரும்பினர்.


கதை நன்றாகவுள்ளது...
நிகழ்கால உண்மையை எடுத்தியம்பும் திறன்
பொருத்தமான தலைப்பு...

சிந்திக்க வைக்கும் பாங்கு....

வாழ்த்துக்கள் நண்பரே...
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மருந்தைத் தேனில் குழைத்துக்கொடுப்பது போல
நல்ல கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
மகிழ்ச்சி........

முனைவர்.இரா.குணசீலன் said...

தொடர்ந்து இதுபோன்ற கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்..

ஹேமா said...

நல்ல விஷயம்.அருமையான சிந்தனை புலிகேசி.சில விஷயங்கள் மறைஞ்சிருக்கே தவிர யாரும் மறக்கல.

Mrs.Menagasathia said...

சபாஷ்!!நல்ல விஷயத்தை சொல்லிருக்கிங்க.வெங்கடாசலத்தை காப்பாத்தியிருக்ககூடாது...

ஈ ரா said...

indraikkum pala idangalil appaditthaan இருக்கிறது nilaimai....

தியாவின் பேனா said...

தூக்கலான படைப்பு வாழ்த்துக்கள்....

க.பாலாசி said...

ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் நண்பரே....வருக...என் பக்கம்...