கடவுளை மற..மனிதனை நினை..

01 October 2009

கடவுள் விளம்பரம் விரும்பியா??? - பகுதி-2

9:05:00 AM Posted by புலவன் புலிகேசி 45 comments
இந்த பதிவு விகடனின் நல்ல பதிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது..

இது யார் கடவுள்.........??? என்ற என்னுடய முந்தைய பதிவின் தொடர்ச்சி.....

ஒவ்வொரு மதத்திலும் பல்வேறு பட்ட வடிவங்களிலும், வடிவங்கள் இல்லாமலும் கடவுள் சித்தரிக்கப் பட்டுள்ளான். இவ்வாறு கடவுள் சித்தரிக்கப் பட்டிருப்பதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும்.


நிச்சயமாக அவன் இருக்கிறான் என்பதில்லை. இப்படி எல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக தான். (தசாவதாரத்தில் கமல் சொன்னது போல் "இருந்தால் நல்ல இருக்கும்").

கடவுளின் கதைகள் அனைத்திலும் "அதர்மத்தை அழிப்பவன் தான் கடவுள்" என்று சித்தரிக்கப் பட்டிருக்கும். அதர்மத்தை அளிக்கும் திறன் கடவுளுக்கு உண்டு என்றால் "அந்த அதர்மம் படைக்கப் படுவதை அவனால் தடுக்க முடியாதா???"

இதைப் படித்துவிட்டு சிலர் இப்படியும் சொல்லக் கூடும். அதர்மம் இல்லை என்றால் கடவுள் இருப்பதை அனைவரும் மறந்து விடுவோம் என்று. "அப்படியானால் கடவுள் விளம்பரம் விரும்பியா???"

தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தத்தான் அதர்மங்களை படைக்கிறான் என்றால் அவன் கடவுள் தானா?

கடவுள்தான் மனிதனை படைத்தான் என்றால் எதற்காக அவர்களுக்குள் பிரிவினை தோன்ற வேண்டும். மனிதனை சிந்திக்க வைத்தான் என்றால் நல்லதை மட்டும் சிந்திக்க வைத்திருக்கலாமே???

கடவுளின் கதைகள் உருவாக்கப் பட்டதன் நோக்கம் மனிதனை நெறிப் படுத்துவதற்காக. ஆனால் அதிலும் நமது திரைப்படங்கள் போல மசாலாக்கள் சேர்க்கப்பட்டு மனிதன் ஏமாற்றப் படுகிறான்.

நமது முன்னோர்கள் "கொள்கைப் பரப்பு செயலாளர்கள் போல" இதைப் பற்றி தனது சந்ததிகளிடம் பேசி பேசியே அவர்களை நம்ப வைத்திருக்கின்றனர். எந்த ஒரு மனிதனும் பிறந்தவுடன் தானாக கடவுளை கும்பிடுவதில்லை. தனது குடும்பத்தில் உள்ளவர்கள் சொல்வதாலேயே அவ்வாறு செயல்படுகின்றனர். பிறகு அந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.

உங்கள் கருத்துக்களுக்காகவும் வாக்குகளுக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் கடவுள் அல்லாத ஒரு மனிதன்...........


45 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

அம்மா தான் அப்பா யார் என்று காட்டுகிறாள் .தந்தை நல்ல பழக்கத்தை கற்று கொடுக்கிறார்.
எந்த தந்தையும் திருடு என்று சொல்வதில்லை.....யாரும் தனியாக குதித்து வந்து விடுவதில்லை.......விட்டில் சொல்லி வந்ததால் மூட நம்பிக்கை என்று சொல்ல முடியாது நண்பரே

புலவன் புலிகேசி said...

//அம்மா தான் அப்பா யார் என்று காட்டுகிறாள் .தந்தை நல்ல பழக்கத்தை கற்று கொடுக்கிறார்.//

நீங்கள் சொல்வது சரிதான்...பிறகு ஏன் கடவுளை வெளியில் தேட வேண்டும். உங்கள் தாய் தந்தயரையே கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள்......

ஊடகன் said...

//தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தத்தான் அதர்மங்களை படைக்கிறான் என்றால் அவன் கடவுள் தானா?//

ஒவ்வொரு விசைக்கும் அதற்க்கு சமமான எதிர் விசை உண்டு என்பது அறிவியல்.
நான் நம்புகிறேன் நீங்கள் அறிவியலையாவுது நம்புவீர்கள் என்று....!

இன்பம் இருந்தால் அதற்க்கு சமமான எதிர்விசையான துன்பம் இருந்தேயாகும்... தர்மம் என்றால் அதர்மம் இருந்தே ஆகும். இதை எந்த மனித பிரவியாலும் மாற்ற முடியாது.

அந்த எதிர்விசையை சீராகுபவனே இறைவன்.

புலவன் புலிகேசி said...

//இன்பம் இருந்தால் அதற்க்கு சமமான எதிர்விசையான துன்பம் இருந்தேயாகும்... தர்மம் என்றால் அதர்மம் இருந்தே ஆகும். இதை எந்த மனித பிரவியாலும் மாற்ற முடியாது.//

மனிதப் பிறவியால் மாற்ற முடியாது. கடவுளால் முடியுமா?? அதர்மம் பிறக்காமல் தடுக்க வேண்டியதுதானே???

vasu balaji said...

விளக்கங்கள் பல இடங்களில் இருக்கிறது. ஆனால் உங்கள் பகிர்வு வித்தியாசம். தொடர்கிறேன்.

புலவன் புலிகேசி said...

//விளக்கங்கள் பல இடங்களில் இருக்கிறது. ஆனால் உங்கள் பகிர்வு வித்தியாசம். தொடர்கிறேன்//

நன்றி நண்பரே!!!!

ஈரோடு கதிர் said...

//கடவுள்தான் மனிதனை படைத்தான் என்றால் எதற்காக அவர்களுக்குள் பிரிவினை தோன்ற வேண்டும். மனிதனை சிந்திக்க வைத்தான் என்றால் நல்லதை மட்டும் சிந்திக்க வைத்திருக்கலாமே???//

கடவுள் என்பது
பயமா? பக்தியா?

சிந்தனைப் பதிவு

புலவன் புலிகேசி said...

//கடவுள் என்பது
பயமா? பக்தியா?சிந்தனைப் பதிவு//

நன்றி நண்பரே!!!!

Anonymous said...

"அதர்மம் இல்லை என்றால் கடவுள் இருப்பதை அனைவரும் மறந்து
விடுவோம்".

எந்த ஒரு செயலிலும் நன்மை தீமை உண்டு.

நம்மை மிஞ்சிய சக்தி உண்டு என்றாலாவது மனிதன் எண்ணினால் தான்
தவறு குறையும். அதனால் மனிதனே விளம்பரம் செய்கிறான்.
கடவுள் விருபவில்லை.

ஆன்மீகத்தில் நம்பிக்கைகள் இருந்தால் குன்றம் குறையும்.

க.பாலாசி said...

//கடவுளின் கதைகள் உருவாக்கப் பட்டதன் நோக்கம் மனிதனை நெறிப் படுத்துவதற்காக.//

உண்மையான வார்த்தைகள் நண்பரே...

//ஆனால் அதிலும் நமது திரைப்படங்கள் போல மசாலாக்கள் சேர்க்கப்பட்டு மனிதன் ஏமாற்றப் படுகிறான்.//

மசாலாக்கள் என்பதைவிட சில வக்கிரங்களே அதிகம் திணிக்கப்பட்டன என்று கூறலாம்.

நல்ல சிந்தனை இடுகை நண்பரே...

அன்புடன் மலிக்கா said...

பலவிதமான மக்களை படைத்து ஒரே இனமாக்கியது இறைவன்

அந்த ஒரே இனத்துக்கு பலவிதமான மனங்களைக்கொடுத்தும் இறைவன்

உலகவாழ்விற்கு படிப்பு அவசியமாகிறது அந்தபடிப்புக்கு தேர்வு மிகமிக அவசியமாகிறது
ஏன்?

படித்தோம் முடித்தோம் என விட்டுவிடலாமே எதற்காக பாடங்கள், தேர்வுகள்.


உலகத்தில் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்றிருந்தால்
நம்மை படைத்ததிற்கான காரணம் என்ன?

நம்மை படைத்து நமக்கு ஆறாவது அறிவையும் தந்து நல்லது கெட்டதை முடிவெடுக்கும் புத்தியையும் யுக்தியையும் தந்தது எதற்கு?
படைத்தவனையே பரிசோதிக்கவா

வாழ்க்கையில் நல்லதே நடந்தால் இறைவனை நினைக்கதவறிவிடுவோம் என்பதற்காகவேதான் அப்பப்ப சோதனைகளும் வேதனைகளும் தந்து நம்மை சோதிக்கிறான்

என் நிலையிலும் நான் படைத்தமனிதன் என்னை நினைக்கத்தவறுவதில்லை என்னை மறக்க அவன் துணிவதில்லை என்றெண்ணிய இறைவன்,
தவறுகள் புரியும்போது தண்டித்து நம்மையே உணரவைத்து மன்னிக்கவும், நல்லவைகள் செய்யும்போது அதற்கு இருமடங்காக நன்மைகளை அள்ளித்தந்து மகிழ்ச்சியில் நம்மை திழைக்கச்செய்கிறான் அவன்தான் இறைவன்

இது என்மனதுக்கு தோன்றியவைகள்

ஊடகன் said...

//மனிதப் பிறவியால் மாற்ற முடியாது. கடவுளால் முடியுமா?? அதர்மம் பிறக்காமல் தடுக்க வேண்டியதுதானே???//

அதர்மத்தை செய்பவன் மனிதன், இறைவனல்ல.......!
இறைவனை நம்புவோர்கள் இருப்பின், அதை மறுப்பவனும் உள்ளான்...!
உங்கள் விவாதத்தால் இறைவனே இல்லை என்று சொல்ல முடியாது.....!
எந்த விடயத்தையும் மேலோட்டமாக இல்லாமல், அதன் ஆழத்தை அறிந்தால் தெளிவடைவீர்கள்......
துன்பம், அதர்மம்,கொலை,கொள்ளை, இது போன்ற சமூகத்தில் மனிதன் செய்யும் இழிவான செயல்களை வைத்து , மனிதனியும் , இறைவனையும் சமப்படுதாதீர்கள்.....!

இன்பத்தை மட்டுமே அனுபவித்து கொண்டிருந்தாள் வாழ்க்கை கசந்து விடும், துன்பமும் வேண்டும் இன்பமும் வேண்டும்... அந்த துன்பமான நேரத்தில் நமக்கு மன அமைதி, ஒளி தருவது அந்த இறை சக்தியே..... இறை சக்தி என்பது ஒரு தியான நிலை.உங்கள் ஆழ்மனது தியான நிலை அடையும் போது இறைவனை காண்பீர்கள்.........!
முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள்........!

வால்பையன் said...

இந்த பதிவை அப்படியே வழிமொழிகிறேன்!

புலவன் புலிகேசி said...

//நம்மை மிஞ்சிய சக்தி உண்டு என்றாலாவது மனிதன் எண்ணினால் தான்
தவறு குறையும்.//

உண்மைதான் நண்பரே!!! கடவுள் என்று பூச்சாண்டி காட்டினால் பயப்படும் மனிதர்கள் இப்போது இல்லை. தவறு குறைவதற்கு மட்டும் அந்த கடவுள் என்னும் வார்த்தை உபயோகப்படுத்தப் பட்டால் நன்று. ஆனால் இன்று அந்த வார்த்தை மூட நம்பிக்கைகளுக்கு ஊன்றுகோல் அக இருப்பதுதான் தவறு.

புலவன் புலிகேசி said...

//துன்பம், அதர்மம்,கொலை,கொள்ளை, இது போன்ற சமூகத்தில் மனிதன் செய்யும் இழிவான செயல்களை வைத்து , மனிதனியும் , இறைவனையும் சமப்படுதாதீர்கள்.....!//

மனிதன் யாரால் இழிவான செயல் செய்யத் தூண்டப் படுகிறான்...அதை ஏன் அந்த கடவுளால் தடுக்க முடியவில்லை???

நிகழ்காலத்தில்... said...

புலவரே கடவுள் இருக்கிறான் என்கிறான் என்பதாக வைத்துக் கொண்டு நீங்கள் எழுப்புகிற கேள்விகள் சரியானவையே..:))

ஆனால் அது மேலும் கடவுள் இல்லை என்கிற வாதத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் தங்கள் கட்டுரை அமையாமல் குழப்புகிற மாதிரி எனக்குப் படுகிறது

மாறாக கடவுள் இல்லை, ஆனால் உருவ வழிபாடு ஏன், என்ன தொடர்பு என்று ஆராய்ந்தால் பயனாகலாம்

என்நிலை சுருக்கமாக கடவுள் என்று தனியாக எதுவுமோ/எவருமோ இல்லை

அனைத்துமே இறைசக்திதான், அதுவேறு, நாம் வேறு என்பதுதான் பல பிரச்சினைகளுக்கும் காரணம்

அதுவே நாம் என உணரும் நிலை வரவே சகல ஆன்மீகப் பயிற்சிகள்

தொடருங்கள்

வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

//மாலிக்கா!!! என் நிலையிலும் நான் படைத்தமனிதன் என்னை நினைக்கத்தவறுவதில்லை என்னை மறக்க அவன் துணிவதில்லை என்றெண்ணிய இறைவன்,
தவறுகள் புரியும்போது தண்டித்து நம்மையே உணரவைத்து மன்னிக்கவும், நல்லவைகள் செய்யும்போது அதற்கு இருமடங்காக நன்மைகளை அள்ளித்தந்து மகிழ்ச்சியில் நம்மை திழைக்கச்செய்கிறான் அவன்தான் இறைவன்
//

தவறுகள் செய்யும் அனைத்து மனிதனும் நீங்கள் சொல்லும் கடவுளால் தண்டிக்கப் படுகிறான் என்றால் இன்று தவறுகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால் மிக மிக அதிக அளவில் தவறுகள் இப்போதுதான் நடக்கிறது... அப்படி என்றால் கடவுளால் மனிதனைக் கட்டுப் படுத்த முடியாது என்பது தானே உண்மை........அப்படிக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவனிடம் என்ன சக்தி இருக்கிறது??

புலவன் புலிகேசி said...

//இந்த பதிவை அப்படியே வழிமொழிகிறேன்!//

நீங்க நம்மக் கட்சி தலைவா!!!!

புலவன் புலிகேசி said...

நிகழ்காலத்து நண்பரே!!!

//ஆனால் அது மேலும் கடவுள் இல்லை என்கிற வாதத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் தங்கள் கட்டுரை அமையாமல் குழப்புகிற மாதிரி எனக்குப் படுகிறது//

என்னைப் பொறுத்த வரையில் கடவுள் என்று ஒன்று கிடையாது. எனது நோக்கம் என்னவென்றால் கடவுளை நம்புபவனை விட அதன் மூட நம்பிக்கைகளை நம்புபவனாவது திருந்த வேண்டும் என்பதுதான். தங்களுக்கு குழப்பம் வேண்டாம்........

ஹேமா said...

பதிவு என் மனநிலைபோலவே இருக்கு.கடவுள் இருந்தால் என் நாட்டில் இத்தனை அட்டூழியங்கள் நடக்க வாய்ப்பு இல்லை.தர்மம் எங்கே ? அதர்மம் எங்கே ?

ஒருவேளை கடவுளும் எங்களைப்போல அகதித் தஞ்சம் கேட்டு எங்காவது போயிருக்கலாமோ !

புலவன் புலிகேசி said...

//ஹேமா said...
பதிவு என் மனநிலைபோலவே இருக்கு.கடவுள் இருந்தால் என் நாட்டில் இத்தனை அட்டூழியங்கள் நடக்க வாய்ப்பு இல்லை.தர்மம் எங்கே ? அதர்மம் எங்கே ?

ஒருவேளை கடவுளும் எங்களைப்போல அகதித் தஞ்சம் கேட்டு எங்காவது போயிருக்கலாமோ !//

ஹேமா இந்தக் கடவுளை விட்டு என்று மனிதன் மனிதன் மீது பற்று வைக்கத் தொடங்குகிறானோ அன்றுதான் இத்தகையக் கொடுமைகள் அழியக்கூடும்........

அன்புடன் மலிக்கா said...

//தவறுகள் செய்யும் அனைத்து மனிதனும் நீங்கள் சொல்லும் கடவுளால் தண்டிக்கப் படுகிறான் என்றால் இன்று தவறுகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால் மிக மிக அதிக அளவில் தவறுகள் இப்போதுதான் நடக்கிறது... அப்படி என்றால் கடவுளால் மனிதனைக் கட்டுப் படுத்த முடியாது என்பது தானே உண்மை........அப்படிக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அவனிடம் என்ன சக்தி இருக்கிறது//


மனிதனைப்போலவே இறைவனும் எடுத்தோம் கவுத்தோம் என்று நினைத்தால் பின்பு அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.

சட்டென்று எதுவும் ஒன்று நடக்கவேண்டும் எனவிரும்புகிறவன் மனிதன் அதில் நல்லதுண்டா கெட்டதுண்டா என நினைத்துப்பார்க்கும் அளவுக்கு அவனுக்கு தற்போது நேரமும்மில்லை
பொருமையும் இல்லை,

ஆனால்

அப்படியல்ல இறைவன் எதையும் ஆய்ந்து ஆராய்ந்து செயல்படுபவன்
எந்த ஓர் ஆன்மாவுக்கும் தீங்கிழைக்கக்கமாட்டான் இதை நம்உள்ளுணர்வோடு உணரப்படும்போது நமக்கே அதுபுரியும்

காரணங்களில்லாமல் எந்த ஒரு விசயத்தையும் நம்மைபடைத்தவன் செய்யமாட்டான் என நம்பவேண்டும்

நான் ஏற்க்கனவே சொன்னதுபோல் நம்பிக்கைதான் வாழ்க்கை

நம்தந்தையின் மூலம்தான்
நம்தாய்யின் கர்ப்பத்திலிருந்து வெளிவந்தோம் என்பதை எப்படி நாம் நம்புகிறோமோ அதன்படியேதான்
இறைவந்தான் நம்மை படைத்தான் அவந்தான் நம்மை காப்பாற்றுவான் என நம்பப்படும்போதுமட்டுமே அது நம்மை தெளிவாக்கும்

சக்தி இருப்பதால்தான் சகலத்தையும் ஆளுகிறான்,

மனிதனே தவறுசெய்யும் மனிதனை மன்னிக்கமறுக்கிறான்
ஆனால்
நம்மைபடைத்த இறைவன் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் மனிதன் செய்துவிடக்கூடாதே என மிகத்தெளிவாய் இருக்கிறான்.

இறுதியாய் ஒன்று

இறைநம்பிக்கை என்பது மனநம்பிக்கையை பொருத்தது
இதை மனம் உணரும்போதுமட்டுமே
அதை ஏற்றுக்கொள்ளுவோம்

இவைகள் என்கருத்துக்கள்

புலவன் புலிகேசி said...

//காரணங்களில்லாமல் எந்த ஒரு விசயத்தையும் நம்மைபடைத்தவன் செய்யமாட்டான் என நம்பவேண்டும்//

உங்கள் நம்பிக்கையை குறைசொல்ல எனக்கு உரிமை இல்லை. எந்த ஒரு விசயத்தையும் ஆராய்ந்து நம்புவதே பகுத்தறிவு. இது என்னுடையக் கருத்து.

RJ Dyena said...

U have a different point of view...
all the best...
but pls correct

கடவுளின் கதைகள் அனைத்திலும் "அதர்மத்தை அளிப்பவன் தான் கடவுள்" என்று சித்தரிக்கப் பட்டிருக்கும்.

it shud be அழிப்பவன் not அளிப்பவன்

keep on writing..

Priyamudan
Dyena

புலவன் புலிகேசி said...

//கடவுளின் கதைகள் அனைத்திலும் "அதர்மத்தை அளிப்பவன் தான் கடவுள்" என்று சித்தரிக்கப் பட்டிருக்கும்.
//

நன்றி சிநேகிதியே!!! தவறைத் திருத்திக் கொள்கிறேன்.........

ISR Selvakumar said...

//தான் இருக்கிறேன் என்பதை உணர்த்தத்தான் அதர்மங்களை படைக்கிறான் என்றால் அவன் கடவுள் தானா?//

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.

யார் அல்லது எது கடவுள் என்பது முடிவற்ற விவாதத்தை உண்டாக்கும். ஆனாலும் அவ்வப்போது கிடைக்கும் பதில்கள் சுவாரசியம்தான்.

புலவன் புலிகேசி said...

//இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.//

நன்றி நண்பரே!!!!

ஊர்சுற்றி said...

//எந்த ஒரு மனிதனும் பிறந்தவுடன் தானாக கடவுளை கும்பிடுவதில்லை. தனது குடும்பத்தில் உள்ளவர்கள் சொல்வதாலேயே அவ்வாறு செயல்படுகின்றனர். பிறகு அந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.//

அதானே! சரியாச் சொன்னீங்க!

புலவன் புலிகேசி said...

//அதானே! சரியாச் சொன்னீங்க//

நன்றி நண்பரே!!!

Anonymous said...

உங்கள் கருத்துக்களுக்காகவும் வாக்குகளுக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் கடவுள் அல்லாத ஒரு மனிதன்...........

//

இந்த பதம் நீங்கள் கூறியுள்ள" கடவுள் அல்லாத மனிதன் " என்பது எனக்கு சரியாக விளங்கவில்லை . நீங்கள் மனிதன் என்பது சரி பிறரை கடவுள் என்று குறிக்க விரும்புகிரிகளா ?..

கடவுள், தர்மம், சாத்தான் ,அதர்மம் ,நெறிமுறை / மரபு ,கலாச்சராம் ,பாரம்பரியத்தை அனுசரிப்பது என்று எதுவேண்டுமானாலும் இருக்கட்டும் .இவை அனைத்தும் ஒற்றை குறிக்கோளை சுட்டி காட்டுவதற்கு என்பதுதான் அது நீங்கள் சொன்னதுபோல் நெறிப்படுத்த அவளவுதான் விசியம் . இதில் எங்கே மனிதன் எமற்றபடுவாதாக நீங்க நினைக்கிரிகள் ?... oru நெறிபடுத்தலை எமற்றுகொள்கையாக நீங்கள் சுட்டிக்காட்டுவது பகுத்தரிவி போல் தெரியவில்லை . இவை அனைத்தும் மொழி என்ற கற்ப்பிதம் கொண்டு வந்தது . அன்பும் குரோதமும் இல்லை என்றால் கடவுளுக்கு தேவை இல்லை . இவை அனைத்தும் தேவை எதக்கு என்றால் பரிணாம வளர்ச்சிக்கு . தன் இனம் வளர மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடுத்த கட்ட பரிணாமத்தின் தேவைக்கு இந்தகைய கர்ப்பிதங்கள் தேவை படுகிறது . ஒரு பொருளை அதன் இல்லாமைக்கு சான்றாக கூற முடியாது .இன்னமும் விளங்க வைக்க முடியாத கேள்விகள் உண்டு அதில் ஒன்று தான் கடவுள் என்ற கர்ப்பிதமும் . அந்த கர்ப்பிததிர்க்கு மசாலா தேவை படுகிறது அது தான் சாத்தான் போன்றவைகள் . நேரிடையாக ஒன்றி சொல்லி கொண்டே போனால் போர் அடித்து விடும் ஆகவேதான் இந்த மசாலா கலவைகள் . இல்லை என்றால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தொடரமுடியாது . பரினமத்தின் தேவையும் முடிவிற்கு வந்து இருக்கலாம் ஒரு வேலை . நன்றிவணக்கம்

Anonymous said...

மனிதனைப படைத்தது கடவுள் என்பதெல்லாம் சுத்தப் பொய்! உண்மையில் கடவுள் தான் மனிதனால் படைக்கப் படுகிறான். வெறும் நம்பிக்கையாக


//

இதைத்தான் நம்மாழ்வார் காலத்துலயே சொல்லிடன்களே இருக்கிறான் நான் இருக்கிறான் இல்லேன்னா இல்லைன்னு .உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்

புலவன் புலிகேசி said...

//இந்த பதம் நீங்கள் கூறியுள்ள" கடவுள் அல்லாத மனிதன் " என்பது எனக்கு சரியாக விளங்கவில்லை . நீங்கள் மனிதன் என்பது சரி பிறரை கடவுள் என்று குறிக்க விரும்புகிரிகளா ?..//

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே!!! நீங்களும் என்னைப் போலத்தான் சிந்தித்திருக்கிறீர்கள். நான் கடவுள் தேவை இல்லை என்று சொல்லவில்லை. அதனால் படைக்கப்படும் மூடநம்பிக்கைகள் தேவை இல்லை அல்லவா?? கடவுள் என்பது ஒரு நம்பிக்கையாக மட்டும் இருந்தால் போதும். அதற்கு உருவம் தீட்டி மதம் பிரித்து மனிதனுக்குள் பிரிவினை ஏற்படுத்துவதுதான் எதிர்க்கப் பட வேண்டும்.......

நிச்சயம் என்னுடய அடுத்தடுத்த பகுதிகளில் இதைப் பற்றி விளக்குகிறேன்..

ரவி said...

வாக்கை மட்டுமே போடமுடிந்த கடவுள் அல்லாத மனிதன்.......

கலக்கல் !!!!!!

புலவன் புலிகேசி said...

நன்றி நண்பரே!!

செல்வன் said...

மிகவும் தேவையான நல்ல பதிவு நண்பரே!
எமது பெற்றோர்களாலும் சுற்றத்தாலும் மிக மோசமாக மூளை சலவை செய்யப்பட்டு இன்று விசை,எதிர் விசை என்று அறிவியல் விடயங்களை கொண்டே கடவுளை பரப்பும் கொள்கைப் பரப்பு செயலாளராக மாறிவிட்டோம்.

புலவன் புலிகேசி said...

// செல்வன் said...
மிகவும் தேவையான நல்ல பதிவு நண்பரே!
எமது பெற்றோர்களாலும் சுற்றத்தாலும் மிக மோசமாக மூளை சலவை செய்யப்பட்டு இன்று விசை,எதிர் விசை என்று அறிவியல் விடயங்களை கொண்டே கடவுளை பரப்பும் கொள்கைப் பரப்பு செயலாளராக மாறிவிட்டோம்.//

சரியாக சொன்னீர்கள் நண்பரே!!!

Anonymous said...

கடவுள் என்பது ஒரு நம்பிக்கையாக மட்டும் இருந்தால் போதும். அதற்கு உருவம் தீட்டி மதம் பிரித்து மனிதனுக்குள் பிரிவினை ஏற்படுத்துவதுதான் எதிர்க்கப் பட வேண்டும்.......


//


கடவுள் என்பது ஒரு மாயையான கற்ப்பிதம் அது உங்களுக்கு நம்பிக்கை எனக்கு பொம்மை இன்னும் சிலருக்கு கேலிபொருள். இந்த பிரிவினை ஏற்றத்தாழ்வு உன் கடவுள் பெரியது என் கடவுள் பெரியது என்பது எல்லாம் இன வளர்ச்சிக்கு மொழி வளர்ச்சிக்கு உதவத்தான் . மனித இனம் தன்னை பாதுக்கக்க ஒரு சமுகமாக இணைந்து வாழ தொடங்கியது .அந்த சமுக குழுக்கள் தன் சமுகத்தை பாதுகாக்க தன் சமுகம் வளர ஒரு வித கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய கட்ட்டயத்தை பரிணாமம் உந்தி செலுத்தியது அது தான் இந்த மாயை. மதம் ஜாதி போன்ற பிரிவினைகள் இல்லமால் இருந்திருந்தால் இத்தகையா வளர்ச்சி சாத்தியம் இல்லாமல் போயிருக்கலாம் குரங்கு மனிதன் அழிந்தது போல் . ஆனால் அதன் வெறி புகுத்தியது சில நீங்கள் சொன்ன மனிதம் தான் அந்த வெறிகளை களைந்து பார்த்தால் அனைத்தும் நன்மைக்கே .வணக்கம் மேலும் தொடருங்கள்

வால்பையன் said...

//கடவுளின் கதைகள் அனைத்திலும் "அதர்மத்தை அளிப்பவன் தான் கடவுள்" என்று சித்தரிக்கப் பட்டிருக்கும்.

it shud be அழிப்பவன் not அளிப்பவன்//

எல்லாம் அவன் செயல் என்றால் “அதர்மத்தை அளிப்பதும்” அவன் செயல் தானே!

சரியாத்தானே சொல்லியிருக்கிறார்!

புலவன் புலிகேசி said...

//எல்லாம் அவன் செயல் என்றால் “அதர்மத்தை அளிப்பதும்” அவன் செயல் தானே!//

நான் தவறாக எழுதியது கூட சரியானப் பொருளைத் தந்துள்ளது. நன்றி நண்பா!!!

Anonymous said...

நல்லா எழுதறீங்க..ஆனா எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டுங்க:)



அன்புடன்,

அம்மு.

புலவன் புலிகேசி said...

//நல்லா எழுதறீங்க..ஆனா எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டுங்க:)
அன்புடன்,
அம்மு.//

நன்றி தோழி!!! அது நம்பிக்கையாக மட்டும் இருந்தால் சரி....மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.....

നിഷാർ ആലാട്ട് said...

dhayavu செய்து நல்ல தமிழ் font எது என்று solli tharavum (free edition only)

നിഷാർ ആലാട്ട് said...

மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.....



soopper !!!!!

புலவன் புலிகேசி said...

//dhayavu செய்து நல்ல தமிழ் font எது என்று solli tharavum (free edition only)//

நன்றி நண்பரே!!! "குறள்" என்ற font-ஐ உபயோகித்துப் பாருங்கள்.

கோவி.கண்ணன் said...

கடவுள் விளம்பர விரும்பி அல்ல, கடவுள் பிஸ்னஸ் செய்பவர்கள் கடவுளை வைத்து விளம்பரம் செய்கிறார்கள்