கடவுளை மற..மனிதனை நினை..

26 September 2009

யார் கடவுள்....? - பகுதி-1

9:34:00 AM Posted by புலவன் புலிகேசி 21 comments

கடவுள் இருக்கிறானா? இல்லையா?? இருக்கிறான் என்றால் அவன் யார்???

இது போன்ற கேள்விகள் மனிதர்களிடத்தில் இன்று வரை தெளிவு படாமல் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது.

இதைப் பற்றி விவாதிக்க இந்த ஒரு பதிவு போதாது என்பதால் தான் இதை ஒரு "தொடர்கதை" (TV mega Serial அல்ல...) போல் எழுதத் தொடங்கியுள்ளேன். இதன் முதல் பகுதியைப் பார்ப்போம்.

முதலில் கடவுள் எவ்வாறு படைக்கப் பட்டிருப்பான் எனப் பார்ப்போம்..

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு விதமான நம்பிக்கைகள் உள்ளன. அவை தன்னம்பிக்கை மற்றும் பிறர் மீது கொள்ளும் நம்பிக்கை.

எந்த ஒருவனுக்கு தன்னம்பிக்கை குறையத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் அவன் பிறர் மீது நம்பிக்கைக் கொள்ள கட்டாயம் ஏற்படுகிறது. நாம் பிறர் மீது கொள்ளும் நம்பிக்கை பெரும்பாலும் தோற்றுப் போகிறது (உதாரணம்: நமது அரசாங்கம்...).

"தன்னம்பிக்கை குறையும் பொழுது கடவுள் கருவில் வளரத் தொடங்குகிறான். எப்போது பிறர் மீது கொள்ளும் நம்பிக்கை குறையத் தொடங்குகிறதோ அப்போது அவன் வளரத் தொடங்குகிறான். அதே நம்பிக்கை பொய்க்கும் பொழுது பிறந்து விடுகிறான்."

இங்கு பிறப்பது வெறும் நம்பிக்கை மட்டுமே! கடவுள் அல்ல!!!

"மனிதனைப படைத்தது கடவுள் என்பதெல்லாம் சுத்தப் பொய்! உண்மையில் கடவுள் தான் மனிதனால் படைக்கப் படுகிறான். வெறும் நம்பிக்கையாக!!!"

இந்த நம்பிக்கை சிறிது சிறிதாக தவறான முறையில் வளர்ந்து இப்போது நம் மக்களிடம் மூடநம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.

"தன்னம்பிக்கை இழப்பவன் உண்மையில் ஒரு ஊனமுற்றவன். அவன் நடப்பதற்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. அந்த ஊன்றுகோல் சிலருக்கு மனிதர்களிடம் கிடைக்கிறது. மனிதர்களால் புறக்கணிக்கப் படுபவர்களுக்கு இல்லாத ஒரு ஊன்றுகோலாக கடவுள் தேவைப் படுகிறான்."

இந்த கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கையையும் பற்றி இனி வரும் பகுதிகளில் தெளிவாக விவாதிக்க விரும்புகிறேன்...

உங்கள் கருத்துக்களுக்காகவும் வாக்குகளுக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் கடவுள் அல்லாத ஒரு மனிதன்...............

21 விவாதங்கள்:

Anonymous said...

கடவுள் ஏன் படைக்கப்பட்டான் என்ற தலைப்பு பொருத்தமா எனத் தோன்றுகிறது...
கடவுள் படைக்கப் பட்டிருப்பின் அவனைப் படைத்தவன் அல்லவா கடவுள் (சக்தி மிக்கவன்) ???

புலவன் புலிகேசி said...

இங்கு நான் கடவுள் என்று சொல்லியிருப்பது வெறும் நம்பிக்கையை. இங்கு நம்பிக்கை தான் படைக்கப்பட்டிருக்கிறது...

ஆகீல் முசம்மில் said...

தலைப்பு தவறானது மாற்றி கொள்ளவும் இறைவனை யாராலும் படிக்க முடியாது

Anonymous said...

இதன் தொடர்ச்சியை அடுத்தடுத்து விரைவாக எதிர் பார்க்கிறேன். உங்கள் இணையப் பக்கத்தை புக் மார்க் செய்துள்ளேன். அடுத்த பகுதி என்று???

புலவன் புலிகேசி said...

//தலைப்பு தவறானது மாற்றி கொள்ளவும் இறைவனை யாராலும் படிக்க முடியாது//

நான் சொல்வது நம்பிக்கையை.. தவறாக நினைக்க வேண்டாம்....

Anonymous : விரைவில்

க.பாலாஜி said...

மனிதனின் நம்பிக்கைக்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு உருவமாகத்தான் கடவுள் என்ற உவமை பயன்படுகிறது.இனிவரும் உங்களின் பதிவுகளில் இதற்கான முழுமையான தேடலை எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த தலைப்பை தாங்கள் தேர்ந்தெடுத்திருப்பது கத்திமேல் நடப்பதை போன்றது. ஆகையினால் கவனமாக செல்லவும்...வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

உங்களின் அன்பிற்கினங்க என்னுடய தலைப்பை கடவுள் ஏன் படைக்கப் பட்டான்??? - பகுதி-1 என்பதிலிருந்து யார் கடவுள்....? - பகுதி-1 என்று மாற்றியுள்ளேன்.....

வெண்ணிற இரவுகள்....! said...

"தன்னம்பிக்கை இழப்பவன் உண்மையில் ஒரு ஊனமுற்றவன். அவன் நடப்பதற்கு ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. அந்த ஊன்றுகோல் சிலருக்கு மனிதர்களிடம் கிடைக்கிறது. மனிதர்களால் புறக்கணிக்கப் படுபவர்களுக்கு இல்லாத ஒரு ஊன்றுகோலாக கடவுள் தேவைப் படுகிறான்."
நல்ல வரிகள்....................
ஆனால் மூடநம்பிக்கையாய் இருந்தால் கூட மனிதனுக்கு ஏதோ வடிகால் தேவை.....
கடவுள் உள்ளார் என்ற நம்பிக்கையில் தான் பல பேருக்கு பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது அரசு எதுவும் செய்யவில்லை என்றாலும் ஒட்டு போடிகிரோமே அதுவும்
மூடநம்பிக்கை தானே .................நம்பிக்கையில் தான் வாழ்வே உள்ளது .........................கடவுள்
இருந்துவிட்டு போகட்டும் இல்லை என்றால்....வாழ்வு வெறுமை ஆகி விடும்......சூனியம் நம்மை சூழும்...................இல்லை என்றால் உலகமே ஏர்வாடி ஆகி விடும்

புலவன் புலிகேசி said...

//ஆனால் மூடநம்பிக்கையாய் இருந்தால் கூட மனிதனுக்கு ஏதோ வடிகால் தேவை.....//

நண்பா நான் கடவுள் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை...மூடநம்பிக்கை வேண்டாம் என்றுதான் சொல்லப் போகிறேன்.

ஊடகன் said...

இறைவன் மனிதனால் படைக்கப்படவில்லை....
மனிதனின் ஒரு வகை உள்ளுணர்வே (ஆன்மீக உணர்வே) இறைவன்....
அதை ஆராய கூடாது அனுபவிக்க வேண்டும்...
மூடநம்பிக்கை வேறு, கடவுள் நம்பிக்கை வேறு........
ஆன்மீக உணர்வு என்பது தெளிந்த நீரோடை போன்று தூய்மையானது.....
அதில் விழுந்தவன் புத்துணர்ச்சி அடைவான்.....
இதை முழுமையாக சொல்ல , விரைவில் ஒரு பதிவு எழுத உள்ளேன்..... காத்திருங்கள்..........!

புலவன் புலிகேசி said...

//மனிதனின் ஒரு வகை உள்ளுணர்வே
(ஆன்மீக உணர்வே) இறைவன்....
அதை ஆராய கூடாது அனுபவிக்க வேண்டும்...//

எந்த ஒரு விசயத்தையும் ஆராய்ந்து பார்த்து தான் நம்ப வேண்டும். அப்படி ஆராயாமல் நம்புவதே மூட நம்பிக்கை.

கடவுள் மனிதனுக்குள் இருக்க வேண்டும். கோவில்களில் அல்ல....

ஹேமா said...

தொடங்குங்க புலிகேசி.எனக்கும் இந்தக் குழப்பம்.பார்க்கலாம் என்ன சொல்றீங்கன்னு.ஆனால் கடவுள் ஒன்று இல்லை அதன் பெயர் நம்பிக்கை என்றே தொடங்கியிருக்கிருக்கிறீங்க.

புலவன் புலிகேசி said...

ஆமாம் நட்பே!!! வெறும் நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை இருக்கலாம் ஆனால் மூடநம்பிக்கை இருக்கக் கூடாது..

அன்புடன் மலிக்கா said...

நம்பிக்கைதானே வாழ்க்கை
நாம் எதை ஒன்றை தெளிவாய் நம்புகிறோமோ அதுவே நமது நம்பிக்கையின் பிரதிபளிப்பு

கடவுள் இருக்கிறார் என நம்பும்போது
நாம் மனிதம் கொண்ட மனிதராகிறோம்

kavi said...

உங்களைப்போலவே எனக்கும் இதுபற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. எப்படியுள்ளது என்று கூறுங்கள்:

http://muthalarumpu.blogspot.com/2009/08/blog-post_05.html

Mãstän said...

@புலிகேசி, கடவுள் கிடையாது என்று கூறும் நீங்கள், எதை வைத்து இல்லை என்கிறீர்கள்?

உங்கள் மனங்களில் கடவுளின் இல்லையெற்ற செயலே நிறைந்திருக்கிறது, மேலும் இவ்வாறு சொல்வதற்கு பணிக்கபடுகிறீர்கள்.

சரி, இந்த உலகம் தானக தோன்றியது என்று நினைக்கிறீர்களா? உலகத்தில் உள்ள அனைத்தும் பரினாமக் கொள்கையில் பால் உருவானதாக நினைக்கிறீர்களா?

ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள், ஒன்று இன்னொன்றாக மாறுகிறது அல்லவா? அதாவது Y -> Z உருவெடுக்கிறது... Y இருந்தால் மட்டும் Z மாற முடியும் இல்லையா இதுதானே அறிவியல். இப்போது, நாம் Y நூல் பிடித்து ஆரம்ப நிலைக்கு சென்றாலும் A எப்படி தோன்றிருக்கும்??? தானகவா? ஏன் இதுவறை அப்படி எதுவும் தானக தோன்றவில்லை?

pathanjali yoga kendhram said...

வெளித்திரியும் புலன்களை அடக்கி , ஓடும் மனத்தை பழக்கத்தால் ஒரு நிலைக்கு கொண்டு வந்து தவத்தில் ஒரு நினைவாய் ஆண்டுகள் பல அமர்ந்திருந்தால் அல்லது புலன்களை வெல்வதன் மூலம் புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவான கடவுளை அறியலாம். இறைவன் என்பது தனி ஒரு உருவம் அல்ல. இந்த பிரபஞ்சம் எந்த ஒரு அறிவால் இயக்கபடுகிறதோ எது ஒன்றால் படைக்கபட்டுள்ளதோ அதுவே கடவுள்.

புலன் , அறிவு இரண்டிற்கும் அப்பாற்பட்ட இறைவனை யாரும் கண்முன் கொண்டு வந்து மெய்ப்பிக்க முடியாது. பழத்தின் சுவை போல அதை உண்டால் அதாவது மனம் ஒருமை அடைந்தால் அவனை உணர முடியும்.

புலவன் புலிகேசி said...

//@புலிகேசி, கடவுள் கிடையாது என்று கூறும் நீங்கள், எதை வைத்து இல்லை என்கிறீர்கள்? //

//பழத்தின் சுவை போல அதை உண்டால் அதாவது மனம் ஒருமை அடைந்தால் அவனை உணர முடியும்.//

நான் கடவுள் இல்லை என்று சொல்லவே இல்லை. நம்பிக்கை தான் கடவுள் என்று சொல்லியுள்ளேன். அந்த நம்பிக்கை இசுலாம்,இந்து,கிறிஸ்த்தவன் என வேறு வேறு கோணங்களில் வளர்ந்துள்ளது.

என்னுடய விவாதம் முழுதும் மூடநம்பிக்கைகளை பற்றிதான் இருக்கப் போகிறது. நன்றி நண்பர்களே.........

வால்பையன் said...

தல இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கிங்களா?

சீக்கிரம் வாங்க நாங்க வெயிட் பண்றோம்!
நிறைய பேரை திருத்த வேண்டியிருக்கு!

புலவன் புலிகேசி said...

நிச்சயம் தலைவா!!!

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. சிறப்பான சிந்தனைகள் படைத்த உங்கள் ஆசிர்வாதம் உங்கள் எண்ணங்களைப்போல ஏற்றத்தின் வாயிலாக எடுத்துக்கொள்கின்றேன். நன்றி.