சச்சினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள் இப்போதாவது புரிந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை. "கிரிக்கெட் ஒரு மதம் என்றால் சச்சின் அங்கு கடவுளாம்". அதுவும் சரிதான் காசு இருந்தாதான் கடவுளையே தரிசிக்க முடியும்ங்கற காலம் தான் இது.
ஐ.பி.எல்லில் விளையாடிய கடவுள் தேச விளையாட்டிற்கு ஓய்வு கேட்கிறது. காசுக்காக விளையாடும் போது அந்த ஓய்வு தேவைப் படவில்லை. அதிலேயே தெரிகிறது அதன் லட்சணம். கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்தால் நாம் வல்லரசாகி விடுவோம் என போலிக் கனவில் வாழும் நம் மக்கள் இருக்கும் வரை இது போன்ற போலிக் கடவுள்களுக்கு பஞ்சமிருக்காது.
இன்றும் கூட இந்த மக்கள் சச்சினுக்கு வயதாகி விட்டது. அதனால் அவருக்கு ஓய்வு தேவைதான் என சொல்கிறது. தான் நினைத்த கடவுளை நியாயப் படுத்தும் முட்டாள் தனமான வேலையை செய்ய அது தயங்குவதுமில்லை.
கவாஸ்கர் போல் சிலருக்கு வந்திருக்கும் கோபம் கூட சச்சின் அடுத்து அடிக்கும் 50 அல்லது 100 களில் மறைந்து போகும். இல்லாத கடவுள் மீது இதே மக்களுக்கு அவ்வப்போது வந்து மறையும் கோபம் தான் அது. இவர்கள் இருக்கும் வரை சச்சின் போன்ற போலிக் கடவுள்கள் முளைக்கத்தான் செய்வார்கள்.
6 விவாதங்கள்:
உங்கள் கோபத்தில் இந்தியனின் உணர்வு தெரிகிறது...
good post
துட்டு... மாமே !! துட்டு...
தேசபக்தியா?? ஏதோ இவனுங்க விளையாடித்தான் சுதந்திரம் கெடச்சி மாதிரி.. ரொம்ப ஓவராத்தான் கொண்டாடுறோம்...
Indians will take decades to understand the reality.
துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...துட்டு...
நானாக இருந்தாலும் இதனைத்தான் செய்வேன்., காரணம் நான் நல்லவன் என்றழைப்பதன் மதீப்பீடு இன்றைய வாழ்விற்கு அவர்சியமற்றதாகிவிட்டது !
கண்றாவி
Post a Comment