இந்தப் பதிவின் காரணம் புரிய இப்பதிவில் நடைபெற்ற விவாதங்களைப் பார்க்கவும்."பதிவரசியலில் ஒரு மனுஷியாக வெட்கப்படுகிறேன்.."
முகிலனுக்கும், அரவிந்துக்கும் ஆதரவு, நட்பு என்பதால் கலகலப்ரியா வினவு மற்றும் மாதவராஜின் கட்டுரைகளுக்கு எதிராக ஒரு பதிவெழுதியிருந்தார். சரி இந்த புனைவு பிரச்சினையில் இவரின் நிலைப்பாடும், கருத்தும் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் என அங்கு விவாதத்தைத் துவக்கினேன்.
அவர்கள் வினவில் சொல்லப்பட்ட துகிலுரித்தல், வன்புனர்வு வார்த்தைகளைப் படித்தார்களாம். ஆனால் அந்தப் புனைவைப் படிக்கவில்லையாம். பிரச்சினை அந்தப் புனைவு குறித்ததுதான். நான் அங்கு கேட்டது வேறு ஒன்றும் அல்ல.
"இந்தப் புனைவு குறித்த உங்களின் நேரடியான கருத்து என்ன?" என்பதை மூவரும் விளக்கவும். இறுதி வரை ப்ரியா சொன்னது போல் "சந்தைக்கு போவனும் ஆத்தா வையும் காசு குடு" ரேஞ்சுக்கு கேட்டுப் பாத்தாச்சு. திசைத் திருப்பும் வேலைதான் நடை பெற்றது.
நான் கேள்விப்படாத ஒரு நாவல் பெயர் சொல்லி அதில் வரும் கதாபாத்திரத்துக்கு நடைபெற்றது சரியா? தவறா? என எதிர் கேள்வி. இவர்கள் எல்லாம் மனசாட்சிக்கு நேர்மையாக எப்போது பதிலளிப்பார்கள் எனத் தெரியவில்லை.
இதில் ப்ரியாவிடம் அந்தப்புனைவைப் படித்துவிட்ட்டு அவரின் நிலைப்பாட்டை சொல்லுமாறு கேட்டால் அவர்ன் பதில் கீழே.
//இல்லை ... நான் படிக்கப் போறதில்லை.. இந்தப் ப்ரச்சன பற்றிய தெளிவு... எனக்கு இப்பவே இருக்கு...
முகிலன் மற்றும் அரவிந்த் போன்றவர்கள் மோசமானவர்கள் அல்ல...
சொல்லப் போனா உங்களை விடவும் அவர்கள் நாகரீகமானவர்கள்...
உங்களைப் போல அவங்களையும் எனக்கு இடுகை மூலமாதான் தெரியும்...
அதனால... அவங்க ஒரு பொம்பளை சேலையை உருவி இருக்க மாட்டாங்க...
வன்புணர்வு இல்லவே இல்லை...
அப்படி யாராவது சொன்னா அவங்க நாக்கைப் புடுங்கலாம்... //
படிக்க மாட்டாங்களாம். ஆனா அவங்க கட்சிக் காரர்கள்(அடச்சே எனக்கும் அவங்கள மாதிரியே வருதே) நல்லவங்கன்னு நம்பறாங்களாம். நான் கேட்டது நல்லவரா? கெட்டவரா? (நாயகன் கமல் இல்லப்பா) இல்லை. புனைவு சரியா? தப்பா?
எனக்கு இந்த மூனு பேரோட கருத்தை எதிர்கேள்விகள் வைத்து மழுப்பாமல், விலகிச்செல்லாமல், திசைத் திருப்பாமல் தெரிந்து கொள்ள ஆசை. இது நியாமான ஆசை என்றே கருதுகிறேன்.
அதனால எனக்கு இவங்க மூனு பேர் கிட்டருந்து காசு(கருத்து) வேணும். மனசட்சியுடன் நேர்மையாய் திரியும் இவர்கள் பதில் சொல்லலாம்.
16 விவாதங்கள்:
புனைவு சரியா தவறா என்று சொல்ல மறுப்பவர்கள் . வினவு தளத்தில் மாதர் பேர் எப்படி வந்தது என்ற
கேள்வி மட்டும் எழுப்புகிறார்கள் ???? படிக்காமலேயே ஆதரவு எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி இது தான் நட்பா
அட்றா சக்கை...பதிலு வந்தா சொல்லுங்கப்பு...நாங்களும் தெரிஞ்சுக்குறோம்... :))
பதில் சொல்லுவாங்களா...
அந்த காசு கிடைச்சா சொல்லிஅனுப்புங்க அப்பு.. நானும் வந்து தெரிஞ்சுக்கிறேன்.. :)
என்ன நண்பா எதிர் சைடில் இருந்து மூச்சு பேச்சு இல்ல
வன்புனர்வு, துகிலுரிதல் போன்ற வார்த்தைகள் தவறாக பயன்படுத்தியிருப்பது தவறாக தெரியும் போது, அந்த புனைவில் இருக்கும் தவறு தெரியவில்லை போல்.. :)
நோக்கம் நேர்மையாக இருந்தால், சொல்லும் செயலும் நேர்மையாக இருக்கும். அது அவர்களிடம் கிஞ்சித்தும் இல்லை. காண்டு மட்டுமே இருக்கிறது.
விடாதிங்க புலவரே.அப்துல்லா,வானம்பாடிகள்,கலகலபிரியா இவங்களோட நிறுத்தாம இன்னும் ஆசிப்மீரான்,பரிசல்காரன்,கேபிள்சங்கர்,ஆதி,உண்மைத்தமிழன் போன்ற மற்ற பதிவர்களையும் நாக்கப் புடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்டீங்கன்னா ( என்ன கேக்குறதா?? இதுவரைக்கும் என்னானு யோசிச்சா மத்தவங்களை கேள்வி கேட்டீங்க?? அதேமாதிரிதான்) உங்களுக்கு இன்னும் நிறைய விளம்பரம் கிடைக்கும்.விடாதிங்க.புரட்சி ஓங்குக.
// வினவு தளத்தில் மதார் பேர் எப்படி வந்தது என்ற
கேள்வி மட்டும் எழுப்புகிறார்கள் ???? //
தோழர் மதார் குறித்து நானும் வினவு தோழர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன் வினவு தளத்தில்(மட்டும்) . அவர்களின் பதிலுக்குப் பின்னர் அதிகம் பேசியதற்காய் வருந்தினேன்; நேர் வாக்கும் அளித்தேன். இது ஒரு தன்னிலை விளக்கம்; தவறாக நான் புரிந்துகொள்ளப் பட்டுவிடக் கூடாது என்பதற்காய்! என்ன இருந்தாலும் தோழர் மதார் பின்னர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரது கருத்தை தோழர்கள் பரிசீலித்திருக்க வேண்டும் என்பது வேறு விஷயம்!
புனைவு குறித்து எனது கருத்து ... நான் வினவில் கூறியபடியே ... தவறு மட்டுமல்ல கண்டனத்துக்குரியது... சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு/வருத்தம் தெரிவித்து (விட்டார்களா என எனக்குத் தெரியாது) நட்பார்ந்த இனிய சூழலை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும்.
புதுமுகம் நான் ...அதிகம் பேசியிருந்தால் ..அயம் சாரி தோழர்ஸ்!
//புலவரே.அப்துல்லா,வானம்பாடிகள்,கலகலபிரியா இவங்களோட நிறுத்தாம இன்னும் ஆசிப்மீரான்,பரிசல்காரன்,கேபிள்சங்கர்,ஆதி,உண்மைத்தமிழன் //
அய்யா அனானி அவர்களே...
ஆசிப் மீரான் என்னய்யா தப்பு பண்ணாரு ...பாவம் அவரே
ஆடிக்கொருக்க அமாவாசைக்குகொருக்கத்தான் பதிவே போடுறாரு... மற்றவர்களிடம் கேட்பது பற்றி புலிகேசிகேசிதான் பதில் சொல்லனும்
ஆமா அவங்கல்லாம் யாரு....:)
// ஆசிப் மீரான் என்னய்யா தப்பு பண்ணாரு ...பாவம் அவரே
ஆடிக்கொருக்கஅமாவாசைக்குகொருக்கத்தான் பதிவே போடுறாரு
//
பிரபலப் பதிவர்களை கேள்வி கேட்டு விளம்பரம் தேட புலிகேசி நினைப்பது புரியவில்லையா உங்களுக்கு?? ஆசிப் அண்ணாச்சி ஒரு பிரபல பதிவர்னு அவரையும் கேள்வி கேக்கச் சொன்னேன்.ஆமா அப்துல்லா மட்டும் என்ன தினமுமா பதிவு போடுறாரு?? அவரும் ஆடிக்கொருக்கா அம்மாவாசைக்கு ஒருக்காதானே எழுதுறாரு??
டிஸ்கி : இந்த பின்னூட்டத்தை வெளியிடும் ஆண்மை உங்களுக்கு இருக்கா புலிகேசி??
//டிஸ்கி : இந்த பின்னூட்டத்தை வெளியிடும் ஆண்மை உங்களுக்கு இருக்கா புலிகேசி??
//
அந்த ஆண்மையெல்லாம் எங்களுக்கு இருக்கு. அனானியா இல்லாம சொந்த பேர்ல வந்து கேட்டிருக்கும் கேள்விக்கு மழுப்பாமல் பதில் சொல்லும் ஆண்மையோ அல்லது பெண்மையோ உங்களுக்கு இருக்கான்னு பாக்குறேன்
நான் படிச்சிட்டேன்,
எனக்கு அந்த வார்த்தைகள் உபயோகபடுத்துவதில் உடன்பாடில்லை!
நல்லா கருத்து சொல்ற படத்துல ஒரு ரேப் சீன் வப்பானுங்கல்ல, அது மாதிரி இருக்கு வார்த்தை பிரயோகம்!
இது என் கருத்து மட்டுமே!
அந்த பெண், அங்கே பெயர் இட்டதற்கே கண்டனம் தெரிவித்திருக்கிறார், நீங்கள் மறுபடி அதையே செய்திருக்கிறீர்கள்!
சாந்திக்கு ஏற்பட்ட மனநிலயை நீங்கள் அனைவருக்கும் ஏற்படுத்த பார்க்கிறீர்கள், மற்றவர்கள் விருப்பம் இல்லை என்று சொன்ன பின்னர் அவர்களது பெயரை பயன்படுத்துதல் நாகரிகமானதல்ல!
பிரச்சனையை ஆரம்பத்திலிருந்தே ஒரு நோக்கில் பார்த்து கொண்டிருபவர்களில் நீங்களும் ஒருவர் என்பது தெரிகிறது!
இது குறித்து பஸ்ஸில் ஓடிய விவாதத்தை படிக்க வேண்டுகிறேன்!
வால்ஸ் நான் இந்தப் பதிவ எழுதக் காரணமான மூலப்பதிவின் பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்கள். நிலைப்பாடு என்னன்னு கேட்டதுக்கு அவங்களோட பதில்களையும் பாருங்கள் புரியும். எனக்கு இவங்களத் தாக்கனுங்கற எண்ணம் இல்லை.
//நான் படிச்சிட்டேன்,
எனக்கு அந்த வார்த்தைகள் உபயோகபடுத்துவதில் உடன்பாடில்லை!
//
நானும் துகிலுரித்தால், வன்புணர்தல் போன்ற வார்த்தை பிரயோகங்கள் தவறு என அதே மூலப்பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன்.
Post a Comment