இந்துக்களின் தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது. இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" என சொல்வார்கள். இது போன்ற கவிதான் பாடுமோ என ஒரு அச்சம் ஏற்படுகிறது. இலக்கிய நடையில் எழுதினால் ஆபாசம் கூட அற்புதமாகத் தெரியுமோ என்னவோ!
ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.
இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.
உதாரணத்திற்கு அந்நூலில் இருந்து ஒரு விளக்கம். இராமாயணத்தில் இது அமையப் பெற்ற இடத்தைப் பார்த்தால் காறித்துப்பத் தோன்றுகிறது. மன்மதக் காவியங்களில் கூட நாயகன் நாயகியைக் குறித்து இத்தனை ஆபாசமாக நண்பனிடம் கூற மாட்டான். இங்கு தெய்வமாக போற்றப் படும் இராமன் தன் மனையாட்டி சீதாவை கண்டறிய அனுமனுக்கு அடையாளம் கூறுகிறான்.
"செப்பென்பன் கலசம் என்பன்
செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்று திரள்சூ தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பன்
ஒப்பொன்றும் உலகின் காணேன்
பல நினைத்து உலைவன் இன்னும்."
அதாவது இராமன் கூறுகிறார் "என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன், ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலேயே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!" என சோகிக்கிறார். "செப்புக் கலசமோ!" "செவ்விளநீரோ!" என தன் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறார் அந்தக் கடவுள்(?).
அதிலும் இந்த உவமைகளை அவர் சொல்லுவது கட்ட பிரம்மச்சாரியாகக் கருதப்படும் அவரின் நண்பன் அனுமனிடம். இது போன்ற உவமைகள் நண்பனிடம் சொல்லப்படுவதாக காமம் சொட்டும் காம காவியங்களில் கூடப் படித்திருக்க முடியாது. ஆனால் இந்த கம்ப இராமாயணத்தில் படிக்கலாம்.
இது வெறும் சாம்பிள் மட்டும் தான். இதை விட கொடுமையான ஆபாச வர்ணனைகள் எல்லாம் நிரம்பி வழியும் காவியம் தான் இந்த "இராமாயணம்". அதிலும் அத்தகைய ஆபாசங்கள் வைக்கப் பட்ட இடங்கள் படிப்பவர்களை நிச்சயம் காறித் துப்ப வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அனைவரும் படித்துப் பாருங்கள் இந்தக் கம்பரசத்தை. புரிந்து கொள்ளுங்கள் இது கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? என்பதை.
20 விவாதங்கள்:
கம்பன் சொன்னதும் புரியல. நீங்க சொன்னதும் புரியல.
உங்களுக்கு... ஏன்... இன்று பலருக்கு உண்மையான இந்து மதம் பற்றியே தெரியவில்லை. அந்நியர் ஆதிக்கத்திலிருந்து நாங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்று புரிகிறது. செக்ஸ் என்பது மனித வாழ்க்கையின் ஒரு பகுதி, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதங்களில் ஒன்று இந்து மதம். கிறிஸ்தவம் போன்ற மதங்கள் தான் செக்ஸ் விடயத்தில் கட்டுப்பாடுகளை உருவாக்கியது - அதன் ஆதிக்கம் தான் இன்று இந்திய கலாசாரத்தில் ஊறிக்கிடக்கிறது.
கஜீராகோ கோவிலைப் பார்த்தீர்களா? உண்மையான எங்கள் முன்னோர்கள் வாழ்க்கையைச் சிறப்பாக, அழகாக வாழ்ந்திருக்கிறார்கள். செக்ஸ் என்பது ஏதோ செய்யப்கூடாத விஷயமோ, பஞ்சமாபாதகமோ அல்ல (நாம் அதை எமது துணையுடன் மட்டும் செய்யும் வரை) ஆகவே இதை ஆபாசம், அழுக்கு என்று கூறுவது மடமைத்தனமே அன்றி வேறெதுவுமில்லை.
செக்ஸை ஆதரிப்பதெல்லாம் இருக்கட்டும். செக்ஸ் கல்வி தேவை என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் இங்கு செக்ஸ் என்பது விடயமல்ல விலக்கப்பாடலைப் படித்தால் அது உங்களுக்கே புரியும். தன் மனைவியின் அந்தரங்கம் குறித்து நண்பணிடம் விளக்குவது போல் அமைந்தப் பாடல் அது. இது ஒன்று மட்டுமல்ல அண்ணா விளக்கியிருக்கும் பாடல்கள் அனைத்தும் இது போன்றவைதான். அனைத்தும் உங்கள் இராமாயணத்திலிருந்து எடுக்கப் பட்டதுதான்.
U have to learn more . . .
//மதார் says:
September 17, 2010 10:43 AM
U have to learn more . . .//
ada amaanga...I have to learn more.
சிறுபிள்ளைத் தனமான பதிவு புலிகேசி.
////
U have to learn more . . .///
One of the good comment for you pulikesi ...,pls read lot(TAMIL LITERATURE AND RUSSIAN LITERATURE ,GREEK Lot of things ) and then u criticize ...,
ரொம்ப நாள் கழிச்சு வந்தேன்.. புலிகேசி..
ஏதோ திராவிட தாக்கத்தில் இருக்குற மாதிரி தெரியுது..
நோ கமெண்ட்ஸ்
அதை சொல்ல என்னாத்துக்கு உமவை தேடினார் ராமன்!
ஒருவேளை அனுமார் முன்னப்பின்ன பார்த்ததீல்லையோ என்னவோ!
சரி ராமன் இதை பத்தி மட்டும் தான் சொல்லி அனுப்பினானா, இல்லை வேற எதுவும் இருக்கா? ஃபுல் டீடெயில் கொடுங்க!
மதார், விக்னேஷ்வரி, பனங்காட்டு நரி!
புலிகேசி தனியா ஆராய்ச்சி பண்ணியா போஸ்ட் போட்டார், கம்பராமாயணத்தை ஏற்கனவே அலசி ஆராய்ந்த அண்ணாவின் கருத்துகளை தானே சொன்னார்!
நியாயமா நீங்க அண்ணாவுக்கு தானே அட்வைஸ் பண்ணனும்!
புலிகேசி சின்னபையன்னு மிரட்டுறீங்களா? :)
மீதம் இறக்கிறது வால் புல் டீடேய்லோட இரவு தருகிறேன்.
///// புலிகேசி தனியா ஆராய்ச்சி பண்ணியா போஸ்ட் போட்டார், கம்பராமாயணத்தை ஏற்கனவே அலசி ஆராய்ந்த அண்ணாவின் கருத்துகளை தானே சொன்னார்!
நியாயமா நீங்க அண்ணாவுக்கு தானே அட்வைஸ் பண்ணனும்! /////
வால் அண்ணே ,
மிகவும் சிம்பிள் நீங்கள் சொன்னது தான் ,எதையும் அவன் சொன்னான் ,இவன் சொன்னான் என்று ஆராயாமல் அவர் படித்து விமர்சித்திருந்தால் நான் அந்த கமெண்டை போடிருகவே மாட்டேன் ...,
//ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது//
புலி புலவரே, ஏன் கடவுள் காவியமா பார்க்குறீங்க, சாதா காவியமா பாருங்க/படிங்க, ஒரு படைப்பாளியின் அருமை தெரியும். கவிஞனுக்கு ஒரு விசயத்தை கொஞ்சம் (ஹி... ஹி ஹி.. இதுதான் உங்க ஊர்ல கொஞ்சமான்னு கேட்ட்கப்பிடாது) உயர்த்தி சொல்வது வழக்கு.
அட நான் கடவுள் காவியமா பாக்கலீங்க. அதக் கடவுள் காவியமா வச்சித்தானே கலவரம் பண்ணிட்டிருக்காங்க.
இதுக்கே பொங்கி எழுந்தா எப்பூடி? இன்னும் பரதன் படை ஆற்றைகடக்கும் படலத்தை பற்றி படித்தால் அம்புட்டுதேன்...
புலவரே நீங்க நடத்துங்க ஜூட் ;-)
இதில் அசிங்கம்னு சொல்ல என்னாத்தல இருக்கு...
உங்களுக்கு கோபம் ராமர் மேலயா? இல்ல கம்பர் மேலயா??? அதச்சொல்லுங்க முதல்ல அப்புறம்
விளக்கம் நான் சொல்றேன்...
===
புலிகேசி,
நீங்கள் பகுத்தறிவுவாதியா இருக்கலாம், முற்போக்கு சிந்தனை உடையவரா இருக்கலாம்...
அது எல்லாருக்கும் தெரியனும்றதுக்காக இதுபோன்ற பதிவுகள் போடுவதே அசிங்கத்தின் உச்சம்.
உங்கள் கருத்தைச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு, மற்றவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தற மாதிரி உங்கள் கருத்தை வெளியிடுவது ஏன்? 18+ னு தலைப்பு போட்டதிலிருந்தே தெரிகிறது உங்கள் உண்மையான நோக்கம் என்னன்னு.
காமத்தைப்பற்றி எழுதுதியதுனால் கம்பராமாயணம் கொச்சையானது அப்படின்னு சொல்வது உங்களின் அறியாமையையே காட்டுகிறது. பகுத்தறிவை நாகரிகமாக வெளிக்கொண்டு வாருங்கள்
இதுபோன்ற பதிவுகள் போடுவதால் பிரச்சனைகள் உருவாகும், மாற்றங்கள் அல்ல.
கம்பரசத்தை படிக்கும் முன் முடிந்தால் முதலில் மககாவி கம்பரைப் படியுங்கள், இதுபோன்ற பதிவுகள் எழுதவே தோணாது.
====
இதை எழுதும்போது ஒரு சிக்கன் சிக்கன் சான்ட்விச் ஆர்டர் கொடுத்தேன்...அது இதுவரைக்கும் வரல...
நாஞ்சில் ப்ரதாப் உங்களுக்கு பிடித்த கவி என்பதை எல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு அடுத்த பதிவையும் படித்துப் பாருங்கள் உண்மை புரியும்.
நல்ல கட்டுரை. பொருத்தமான தலைப்பு.எனது பாராட்டுகள்.
RAAMAN MANITHA VADIVIL BOOMIYIL AVATHARITHTHU MANITHANIN AASAA PAASANGKALUDAN VAAZHNTHU KAATTUKIRAAN. EPPADI SAKOTHARA PAASAM IRUKKA VAENDUM, EPPADI ORAE PENNUDAN VAAZA VAENDUM ENTRU VAAZNTHU MAKKALUKKU ARA NERIYAI POTHITHTHAAN! ATANAAL RAANANAI KDAVULAAKA MAKKAL POTRUKIRAARKAL. NALLA VISHAYANGKALAI KOORUVATHAAL RAAMAAYANAM ORU THEIVEEKA NOOL,.
Post a Comment