கடவுளை மற..மனிதனை நினை..

20 August 2010

நான் ஒன்றும் புரட்சிக்காரன் அல்ல!


நண்பர்களுக்கு வணக்கம்!

புரட்சி! இது வெறும் சொல் அல்ல. இது பல முறை பல துறைகளிலும், மனிதர்களிலும் நடந்ததால் தான் நாம் இன்று இப்படி இருக்கிறோம். புரட்சி என்பது நடக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் குரங்காகவே இருந்திருப்போம். புரட்சி என்பது ஒன்று இன்னொன்றாக மாறுவதுதான். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பரிணாமம் கூட ஒரு புரட்சியால் நடந்ததுதான்.

ஆனால் இந்த புரட்சிகள் எதுவும் உடனுக்குடன் நடந்து விடும் ஒரு சாதாரண விடயமல்ல. இதற்கு பல ஆண்டுகள் ஏன் பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்காக புரட்சி பிரயோசனமற்றது என நினைப்பது முட்டாள்த்தனம். நாம் அனைவரும் பிறந்தவுடன் சம்பாதித்து திருமனம் செய்து பிள்ளை பெற்று விட முடியுமா?

அதற்கென நாம் குறைந்த படசம் பதினெட்டு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். ஒரு தனி மனிதனின் வாழ்வியல் புரட்சிக்கே இத்தனை ஆண்டுகள் தேவைப்படும் போது சமூகத்தின் புரட்சிக்கு? ஆனால் இத்தகைய புரட்சிகள் ஒரு துறையிலோ அல்லது சமூகத்திலோ நடை பெறுவது அதை சார்ந்திருப்பவர்களின் ஒருமித்த புரிதலின் போதுதான் சாத்தியம். அதன் காலநிலையை நிர்ணயிப்பதும் அதுவே.

நமக்கு ஒரு அமைப்பு பிடிக்காவிட்டாலும் நாம் அதிலிருந்து கொண்டுதான் அதனை வெறுத்தொதுக்க முடியும். காரணம் நமது வாழ்வாதாரம் அந்த அமைப்பிற்குள் முடக்கப் பட்டிருக்கிறது. உதாரணமாக சொன்னால் நம்மை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை நம்மில் எத்தனை பேருக்கு பிடிக்கும்? இல்லை என்றாலும் அதற்குள் இருந்து கொண்டு தானே அதனை எதிர்க்கிறோம்.

அதை விடுத்து இதனை விமர்சனம் செய்ய நீ இந்த பணியில் இருக்க கூடாது, நடிகனை விமர்சணம் செய்யக் கூடாது என்றால் மக்கள் அந்த அரசியலை நிச்சயம் எதிர்த்து கேள்வி கேட்க போவதில்லை. பொழுதுபோக்கு ஊடகங்களின் பிடியில் சிக்கிக் கொண்டு நாட்டின் விலைவாசி ஏற்றத்தை பற்றிக்கூட கேள்வி எழுப்பாமல் மனதிற்குள் புழுங்கி விட்டு அடுத்த படத்திற்கு டிக்கெட் எடுக்க செல்லும் முட்டாள்களாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.

மானாட மயிலாட மாராட்டமும், மட்டைபந்து விளையாட்டும், எந்திரன் போன்ற படங்களும் முக்கியமாக படும் அளவிற்கு இந்த விலைவாசி ஏற்றமும், காமன்வெல்த் சுரண்டல்களும், அரசியல் ஊழல்களும், போபாலும் பெரிதாகப் படுவதில்லை நமக்கு. இவற்றைப் பற்றி எழுதியவர்கள் எத்தனை பேர்? இது போன்ற செயலகளை எதிர்த்து பதிவிட்டால் அவனுக்கு பெயர் புரட்சியாளன் அல்லது கம்யூனிஸ்ட்.

புரட்சி என்பது அவ்வளவு எளிதான வார்த்தையாகிப் போய் விட்டது. அதன் உள் அர்த்தம் சென்று பார்த்தால் அது எவ்வளவு பெரிய விடயம் என்பது புரியும். அதனால் நான் புரட்சி பேசுகிறேன் என யாரும் சொல்லி விடாதீர்கள். அதற்கு நான் தகுதியற்றவன். நான் எழுதுவதெல்லாம் என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் வெளிப்பாடு. நான் புரிந்து கொண்ட சிலவற்றை சிலருக்காவது எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம். அவ்வளவே!

இதற்கு பெயர்தன் புரட்சி என நீங்கள் கருதினால் அது முழுக்க முழுக்க உங்கள் முட்டாள்தனமே. அப்புறம் சிலர் கூறியது எழை கஷ்டபட்டு உழைத்து வந்து களைப்பை நீக்க எந்திரன் படம் பார்க்கின்றான். அந்த உரிமை கூட அவனுக்கில்லையா? என்று.

நிச்சயம் இருக்கிறது. ஆனால் அந்த பொழுது போக்கில் அவன் மூழ்கி விடாமலிருக்க வேண்டும். அவனது களைப்பிற்கு அது ஒரு தற்காலிக ஆறுதல் தரலாம். அந்த தற்காலிக ஆறுதலானது அவனது நிரந்தர ஆறுதலைத் தடை செய்கிறது.

அந்த பொழுதுபோக்கை விடுத்து தனது இந்த நிலைக்கு என்ன காரணம் என அவன் சிந்திக்கத் தொடங்கினால் அது ஒரு வித புரட்சியாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நிரந்தரத் தீர்வும் கிட்டுவது நிச்சயம். ஆனால் அவற்றிற்கு தடைக்கல்லாக இருக்கும் பல விடயங்களில் இந்த சினிமாவும் ஒன்று என்பதை விட முக்கியமான் ஒன்று என சொல்லலாம்.

அப்புறம் "திரையுலகை எதிர்த்து கோசமிடும் நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளெல்லாம் நீங்கள் ஓட்டுப்போட்ட அரசியல்வாதிகளிடம்" என சில கருத்துரைகள் வந்திருந்தன.

"நீங்கள் ஓட்டு போட்ட" என்பதே சமூகத்தைதான் குறிக்கிறது. அந்த சமூகத்தில் சம்மந்தப்பட்ட கட்சிக்கு ஓட்டு போடவில்லையென்றாலும் நாமும் இருக்கிறோம். அது ஏன் "நீங்கள் ஏன் இதை பற்றி எழுதவில்லை?" என கேட்கிறீர்கள். நீங்களே எழுதலாமே!. ஊழல்களுக்கெதிராக கேள்வி கேட்க வேண்டியது பொது மக்களாகிய நாம் எனும் போது அது ஏன் இன்னொருவரைக் கேர்ட்கிறீர்கள்? நீங்களே செய்யலாமே.

காரணம் புரிகிறதா? உங்களையெல்லாம் கட்டிப்போட்டு வைத்திருப்பது இது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் தான். அலுவலில் அதிக நேரப் பணியா? யோகா செய் ஏன் அதிக நேரப்பணி என யோசிக்காதே! விலைவாசி ஏற்றமா? ஏன் என யோசிக்காதே மானாட மயிலாட பார். இத்தகைய கொள்கைகள் தான் நம் அனைவரையும் சிந்திக்க விடாமல் தடுத்து வைத்திருக்கிறது.

என்னை கம்யூனிஸ்ட் என்றோ புரட்சிக்காரன் என்றோ யாரும் சொல்ல வேண்டாம். அந்த வார்த்தைகளுக்கு இன்னும் கூட எனக்கு முழு அர்த்தம் தெரியாது. அப்படியெல்லாம் அழைப்பதற்கு நான் தகுதியற்றவன். என்னுடைய புரிதல்களும், நான் பிறந்த இந்த சமுதாயத்தின் அவலங்கள் குறித்தவை மட்டுமே என்னுடைய பதிவுகள்.

அனைவருக்கும் நன்றி!

11 விவாதங்கள்:

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// என்னை கம்யூனிஸ்ட் என்றோ புரட்சிக்காரன் என்றோ யாரும் சொல்ல வேண்டாம். அந்த வார்த்தைகளுக்கு இன்னும் கூட எனக்கு முழு அர்த்தம் தெரியாது. அப்படியெல்லாம் அழைப்பதற்கு நான் தகுதியற்றவன். என்னுடைய புரிதல்களும், நான் பிறந்த இந்த சமுதாயத்தின் அவலங்கள் குறித்தவை மட்டுமே என்னுடைய பதிவுகள்.////

உனக்கு ராயல் சலுட் வாத்தியாரே !!!!! இத தான் நானும் பல இடத்தில சொல்லி வருகிறேன் ....,

இனியாள் said...

நியாயமான விஷயங்கள் தான் சொல்றீங்க ஆனாலும் தொடர்ந்து குறைகளை பற்றியே எழுதும் பொது சலிப்புணர்ச்சி வந்து விடுகிறதே, அதுவே பல மாற்று கருத்துக்கு காரணம்.

podang_maan said...

//நியாயமான விஷயங்கள் தான் சொல்றீங்க ஆனாலும் தொடர்ந்து குறைகளை பற்றியே எழுதும் பொது சலிப்புணர்ச்சி வந்து விடுகிறதே, அதுவே பல மாற்று கருத்துக்கு காரணம்.//

என்ன செய்வது இனியாள் பதிவுலகிலே கூட ஒரே சினிமா கழிசடைச் செய்தி, பெண்களின் உடல் அவயங்களை வைத்து கிளு கிளுப் பூட்டும் செய்திகளைத்தான் தொடர்ந்து எழுதுகிறார்கள். நாமெல்லாம் சலிப்புற்றோமா என்ன?

Anonymous said...

||மானாட மயிலாட மாராட்டமும், மட்டைபந்து விளையாட்டும், எந்திரன் போன்ற படங்களும் முக்கியமாக படும் அளவிற்கு இந்த விலைவாசி ஏற்றமும், காமன்வெல்த் சுரண்டல்களும், அரசியல் ஊழல்களும், போபாலும் பெரிதாகப் படுவதில்லை நமக்கு. இவற்றைப் பற்றி எழுதியவர்கள் எத்தனை பேர்? இது போன்ற செயலகளை எதிர்த்து பதிவிட்டால் அவனுக்கு பெயர் புரட்சியாளன் அல்லது கம்யூனிஸ்ட்.||


சச்சினின் 200க்கு எதிராக சாருவின் ரசிகன்
க.க.க.பொ: புலவன் புலிகேசி
இனைப்பு: சச்சின்

நேற்று நடந்தப் போட்டியில் சச்சின் 200 ரன்களைக்கடந்து உலக சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே. சச்சின் இந்த சாதனையைப் புரிவார் என நேற்று வரை யாரும் நினைக்கவில்லை. ஷேவக்கால் மட்டுமே இது முடியும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேலையில் சச்சின் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி இந்தியர்களை விளையாட்டுத்துறை மூலம் பெருமையடைய செய்திருக்கிறார்.

இதுவரை எந்தக் கிரிக்கெட் வீரரும் செய்திடா அளவு சாதனைகளை இவர் புரிந்திருக்கிறார்.இவரது இத்தகைய சாதனைகளின் காரணம் தன்னம்பிக்கையும், தேசப்பற்றுமே. சமீபத்தில் நடந்த பால்தாக்கரே பிரச்சினையின் போது கூட "நான் முதலில் இந்தியன்" எனப் பெருமிதக் குரல் கொடுத்தவர்.

ஆனால் இப்படிப்பட்ட மனிதனை வெறும் விளம்பரத்திற்காக விளையாடுவதாகவும், இந்த இரட்டை சதத்தால் ஜட்டி விளம்பரம் கிடைக்கும், வேறொன்றும் நிகழப்போவதில்லை என ஒரு "ப்ராபளப்" பதிவர் கூறியிருக்கிறார்.

நண்பரே பரபரப்பு ஏற்படுத்த எதை வேண்டுமானாலும் எழுதலாம். விளையாடுவது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. கிரிக்கெட்டிற்காக தன்னை வருத்திக் கொள்பவர் சச்சினைத் தவிற வேறு யாரும் இருக்க முடியாது. அந்த ஐந்து அடி உயர மனிதனின் உடலில் உள்ள தழும்புகள், வலிகள் மற்றும் காயங்கள் எண்ணிலடங்கா.

சம்பாதிப்பது மட்டும் நோக்கமாக இருந்திருந்தால் அவர் இவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டார். தன் துறையை முழுமையாக நேசிக்கிறார். அந்த நேசிப்புக்குக் கிடைத்த பரிசு இது. எந்த நோக்கமும் இல்லாமல், சம்பள உயர்வு இல்லாமல் பணி புரிய நீங்கள் தயாராக உள்ளீர்களா?

சச்சின் தன் பணியை சிறப்பாக செய்வதால் விளம்பரங்களும், பணமும் தேடி வருகின்றன. இப்படி குறை சொல்லி சொல்லியே திறமையான இந்திய வீரர்களை இழிவு படுத்த ஒரு கூட்டம் இருக்கிறது. கஜினிப் படத்தில் ஒரு வசனம் வரும்

"கஷ்டப் பட்டு உழைத்தால் ஜெயிக்க முடியாது.
இஷ்டப் பட்டு உழைத்தால் தான் ஜெயிக முடியும்"

நண்பரே ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள் "எந்த துறையிலும் சுலபமாக வெற்றியடைய முடியாது. அதற்கான ஆர்வமும், விருப்பமும் முழுமையாக இருக்க வேண்டும்". இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் கூட பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. அதற்காக கவலை மட்டுமே பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை.

கிரிக்கெட் பார்க்கும் போது கவலைப் படும் மனங்களில் ஒரு ஆறுதல் கிடைத்தால் அது அவன் கவலைகளை மறக்கடிக்கும் மருந்தாக இருக்கும். எந்நேரமும் பிரச்சினைகளை எண்ணி கவலை மட்டும் படுவதில் எந்த அர்த்தமும், பிரயோஜனமும் இல்லை. முதலில் இந்தப் புரிதலுக்கு வாங்க. இது போல் சாதனையாளர்களைத் தாக்கி எதிராக எழுதுவதை விடுத்து உங்களால் என்ன செய்ய முடியுமோ அந்த நல்ல காரியங்களை செய்யுங்கள் அது போதும்.

கிரிக்கெட் பார்ப்பதால் நாங்கள் மற்ற பிரசினைகளை கண்டு கொள்வதில்லை என அர்த்தமல்ல. நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுதானிருக்கிறோம்.


............... eppudi ippadi maaththi maaththi adikkire..

nijamaave nee enna comedy pieceaa?

unnai thiruththave mudiyaatha?

ithukkum sappa kattu kaatti rendu pathivu podu...

uruppatturm....

பனித்துளி சங்கர் said...

///////இனியாள் says:
August 20, 2010 10:12 AM
நியாயமான விஷயங்கள் தான் சொல்றீங்க ஆனாலும் தொடர்ந்து குறைகளை பற்றியே எழுதும் பொது சலிப்புணர்ச்சி வந்து விடுகிறதே, அதுவே பல மாற்று கருத்துக்கு காரணம்.
.///////////

நல்ல விசயங்கள் எப்பொழுதும் முதலில் அப்படிதான் தோன்றும் . இப்பொழுதும் மருந்து கசப்பதில்லையா ஆனால் இறுதியில் அதுதான் நம்மை காப்பாற்றும் மிகப்பெரிய சக்தி . புரிதலுக்கு நன்றி .

பனித்துளி சங்கர் said...

நண்பர் புலவனுக்கு வணக்கம் புரட்சி என்று ஆரம்பித்து சிறந்த கருத்தை முன் வைத்திருக்கிறிர்கள் சிந்திக்க வேண்டிய உண்மைகள்தான் . தொடர்ச்சியான சிறந்த பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

//............... eppudi ippadi maaththi maaththi adikkire..

nijamaave nee enna comedy pieceaa?

unnai thiruththave mudiyaatha?

ithukkum sappa kattu kaatti rendu pathivu podu...

uruppatturm....//

naan munnare sonnathu dan. enakku purithalkal erpada sila kaalam thevaip pattirukkirathu. antha purithalkal illaatha pothu eluthiya pathivu athu.

வால்பையன் said...

நமது உரிமைக்காக போராடுவது, சக மனிதனின் துன்பத்திற்காக குரல் கொடுப்பது மனிததன்மை, அதை எதாவது ஒரு இஷத்திற்குள் இருந்து தான் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை தோழரே!

நாம் மனிதர்களாகவே இருப்போம்!

'பரிவை' சே.குமார் said...

//என்னை கம்யூனிஸ்ட் என்றோ புரட்சிக்காரன் என்றோ யாரும் சொல்ல வேண்டாம். அந்த வார்த்தைகளுக்கு இன்னும் கூட எனக்கு முழு அர்த்தம் தெரியாது. அப்படியெல்லாம் அழைப்பதற்கு நான் தகுதியற்றவன். என்னுடைய புரிதல்களும், நான் பிறந்த இந்த சமுதாயத்தின் அவலங்கள் குறித்தவை மட்டுமே என்னுடைய பதிவுகள். //

இதுலயே எல்லாம் அடக்கம்.

நமக்கெல்லாம் பொது நலத்தில் எப்பொழுதும் அக்கறை கம்மி. ஆனா மானாட மயிலாடவும் எந்திரனும் மட்டுமே அக்கறையான விசயங்கள்.

எஸ் சம்பத் said...

நமது உரிமைக்காக போராடுவது, சக மனிதனின் துன்பத்திற்காக குரல் கொடுப்பது மனிததன்மை, அதை எதாவது ஒரு இஷத்திற்குள் இருந்து தான் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை தோழரே!

நாம் மனிதர்களாகவே இருப்போம்!

என்னுடைய கருத்தும் இதுதான்

ஒன்று சேர் said...

போற்றுவார் போற்றட்டும்...
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்...!
தொடர்ந்து செல்வேன்....
ஏற்றதொரு கருத்தை...
எனதுள்ளம் ஏற்றதால்..
எடுத்துரைப்பேன்....எவர்வரினும்....
நில்லேன்....! அஞ்சேன்...!

என தொடருங்கள் தோழரே