வணக்கம் நண்பர்களே!
"இந்திய எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பை தருவதில்லை. தேர்தல் முடிவுகளில் தெளிவான தகவலை தருவதில்லை. சரிபார்ப்பு வசதியில்லை போன்ற குறைகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளில் நம்பகத்தன்மை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த வகை எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்புண்டு." - அமெரிக்கா
எல்லாத்துக்கும் அமெரிக்காவுக்கு ஆமாம் சாமி! போடும் இந்தியா இந்த குற்றச்சாட்டை மட்டும் மறுத்துள்ளது. ஏண்ணா உண்மை வெளிவந்த நம்ம அமைச்சர் ஒருத்தர் எப்புடி செயிச்சாருன்னு தெரிஞ்சிடும்ல.
-----------------
எலே திருநெல்வேலியில ஏட்டா இருக்குற சுந்தரம் கொழுந்தியாள தனக்கு ரெண்டாம் தாரமா கல்யாணம் செஞ்சி வைக்கலைன்னா ஆசிட் ஊத்தி புடுவேன்னு மாமனார் கிட்ட போய் மெரட்டியிருக்காரு. அவரோட பொண்டாட்டி ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இறந்து போய்ட்டாங்க. அதனால கொழுந்தியாள எப்புடியாவது கல்யாணம் செஞ்சிடனும்னு திரியுறாரு. இது குறிச்சி விசாரணை நடக்குதாம்.
-----------------
மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்கப்பா! இந்த தடவை புள்ளையாருக்கு பதிலா அம்மன். அட ஆமப்பா பூந்தமல்ல பகுதியில இருக்குற 3 அம்மன் கோவில்களில் அம்மன் பால் குடிக்குதாம். எலே எண்ணெயில ஊறிப்போன சிலையில பால் என்ன எத ஸ்பூன்ல கொடுத்தாலும் உறிஞ்சத்தான் செய்யும். எங்க அத சுத்தமா கழுவிட்டு அப்பறம் குடுத்துப் பாரு. இல்ல ஸ்பூனுக்கு பதிலா சொம்புல குடுத்துப் பாரு குடிக்குதான்னு பாப்பம். இன்னும் எவ்வளவு நாளைக்குத்தாண்டா ஏமாத்திக் கிட்டுத் திரிவீங்க.
-----------------
வந்துருச்சுப்பா வழக்கம் போல ஆகஸ்டு-15. நம்ம மக்களுக்கு வருசத்துல ரெண்டு நாள் மட்டும் தான் இந்த உணர்வே வருது. சட்டையில கொடிய குத்திக்கிறான். தேசியக் கொடிக்கு சல்யூட் அடிக்குறான். முட்டாய் வந்ததும் வாங்கி சாப்டுட்டு போய்க்கிட்டே இருக்கான். கேட்டா நாமதான் சுதந்திர நாட்டுல இருக்கோம்லன்னு சொல்றான். அந்த சுதந்திரம் நம்ம அரசியல்வியாதிகளாலயும், அமெரிக்கா காரனாலயும் பறிக்கப் பட்டுக் கிட்டு இருக்குன்னு சொன்னா அட போடா உனக்கு வேற வேலையே இல்லைன்னு சொல்லிட்டு டாஸ்மாக்க பாக்க போயிடுறான்.
வாழ்க இந்தியா!
-----------------
டௌ கெமிக்கல்ஸீக்கு எதிரா ஒரு பேரணி நடக்கப் போவுது. இதுக்கு பொது மக்கள் அனைவரையும் கூப்புட்டுருக்காங்க. மக்கா வந்துருங்க.
கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
ஆக்-15 முற்றுகை
ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,
பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.
பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.
அனைவரும் வருக.
-----------------
8 விவாதங்கள்:
டரியல் கலக்குகிறது...
ஆமா இன்னுமா நம்புறாங்க சிலை பால் குடிக்குதுன்னு...
puli.. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் நிச்சயம் மேனுயூபிலேட் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று நிருபிக்க படவில்லை. அதனால்.. ஒரு நல்ல கண்டுபிடிப்பை.. நாம் குறை சொல்ல வேண்டாமே? appadiye mudinja call pannunga..:)
பாஸ்.. இன்னொரு கோவில்ல அம்மன் நூடுல்ஸ் சாப்டுதாம்..தெரியுமா?
ஹ ஹ ஹ ...நல்ல டரியல் நண்பரே..
சூப்பர் டரியல் தல....
சூப்பர் டரியல் தல....
இன்றைய டரியல் வழமைபோல சிறப்பு நண்பரே . சுதந்திர தினம் பற்றிய உங்களின் கருத்து சிந்திக்க வைக்கிறது . உண்மை நிலையை மிகவும் எதார்த்தமாக சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி
டரியல் கலக்குகிறது.
//அந்த சுதந்திரம் நம்ம அரசியல்வியாதிகளாலயும், அமெரிக்கா காரனாலயும் பறிக்கப் பட்டுக் கிட்டு இருக்கு//
அட...நீங்க நம்மாளாய்யா? வாங்கய்யா வாங்க!
Post a Comment