நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
சென்ற வாரம் முழுதும் வலைச்சரத்தில் நிறைவு செய்தேன். என்னால் முடிந்த அளவுக்கு அங்கு நல்ல பதிவுகளையும், நல்ல பதிவர்களையும் அறிமுகப் படுத்தியிருக்கிறேன் என நம்புகிறேன். எனக்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பளித்த சீனா ஐயாவிற்கும், அங்கு வந்து ஆதரவளித்த நண்பர்களுக்கும் நன்றிகள்.
---------------------
அப்பறம் எந்திரன் பாடல்கள் வெளியாகி விட்டது. அடுத்த மாதம் படமும் வெளி வருகிறது. இன்னும் 2 மாசத்துக்கு பதிவுலகம் வேற எந்த செய்தியையும் முக்கியமா பவிக்கப் போறதில்லை. இதுக்கு தமிழிஷ் (இண்டலி)-ம் உடந்தையா இருக்கப் போவுது. காசு உள்ளவன் 150 கோடிஉ செலவு செஞ்சி எடுத்தா அவனுக்கு முழுக்க லாபம் கிடைக்கும் என்பது மட்டுமே நோக்கம். ஆனால் ரசிகர்கள் என்பவர்கள் லாபமின்றி அவரவர் காசுகளை செலவு செய்து கட்-அவுட், போஸ்டர்கள், ரசிகர் மன்ற டிக்கெட்டுகள் என அடுத்த மாதம் முழுதும் தண்ட செலவுகள் செய்யப் போவது உறுதி. பல தயாரிப்பு நிறுவனங்கள் அடைந்து வந்த லாபங்கள் எல்லாம் இன்று ஒரே இடத்தை சென்று சேர்கிறது. கொடுமைடா!!!!
---------------------
நாட்டுல தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கு. ஏன் தமிழ்நாட்டுல மட்டும் கூட எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு, மீனவன் செத்தா ஒரு கடிதம், இலங்கைத் தமிழன் செத்தா ஒரு கடிதம் என இயங்கிக் கொண்டிருக்கும் அவர் எந்திரன் ஆடியோ ரிலீசுக்காக பிரத்யேகமாக பேட்டியளித்திருக்கிறார். பேரன் லாபம் பார்ப்பதற்காக பேசியிருக்கிறார் என்பது மட்டுமே நிஜம். மக்களுக்காக எந்தக் குரலும் வருவதில்லை. ஆனால் தன் குடும்பத்திற்காக குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
வாழ்க தமிழ்நாடு!
---------------------
அண்ணன் ஜாக்கி சேகரின் பதிவு திருடப்பட்டு பாக்யா இதழில் வேறு பெயரில் வெளி வந்ததும், அதன் பின் அந்த நபர் அதற்கு விளக்கப் பதிவு போட்டதையும் படித்தேன்.
நண்பரே சி.பி.செந்தில்குமார்,
நீங்கள் கொடுத்த விளக்கங்கள் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும், ஒரு படைப்பாளியிடம் அனுமதி பெறாமல் அதை அவர் பெயரில் வெளியிட்டாலும் அது திருட்டுதான். அதனால் ஜாக்கி அண்ணன் திருடப்பட்ட பதிவு என்று சொன்னதில் எந்த தவறும் இல்லை. இனி நீங்கள் பதிவுகளை அனுப்பும் முன் சம்மந்த பட்டவர்களிடம் அனுமதி பெற்று அனுப்புங்கள். அது அந்தப் படைப்பாளிக்கு ஊக்கம் கொடுக்கும்.
---------------------
இந்த வாரப் பதிவர்: சவுக்கு
சவுக்கு என்ற இணையதளத்தின் மூலம் பலரது முகத்திரையைக் கிழித்துக் கொண்டிருக்கும் இவர்கள் தான் மீண்டும் தொடங்கியுள்ள டரியலின் இந்தவாரப் பதிவர். பலரது லஞ்சங்களை ஆதரத்துடன் எழுதி வருகிறார்கள். இதற்காக சமீபத்தில் போலியாக கைதும் செய்யப் பட்டார்கள். ஆனாலும் அஞ்சாமல் தொடர்ந்த அம்பலப் படுத்தி வரும் இவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நண்பர்கள் அனைவரும் இந்த சவுக்கு தளத்திற்கு ஆதரவளியுங்கள்.
---------------------
12 விவாதங்கள்:
அருமை நண்பரே..
மக்களுக்காக எந்தக் குரலும் வருவதில்லை. ஆனால் தன் குடும்பத்திற்காக குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். //
மக்களை கூட்டம் கூட்டமாய் கொன்று குவித்தாலும் கடிதம் தான் எழுதுவார்கள், ஆனால் எழுத படிக்க தெரியாத தன் மகனுக்கு அமைச்சர் பதவியில் ஏதாவது பிரச்னை என்றால் கால்நடையாக கூட செல்வார்கள் தலை நகரத்திற்கு..
பயனுள்ள பதிவு. தொடர்ந்து சமூகம் சார்ந்த பதிவுகளை வெளியிடும், ஊக்கப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வலைச்சரத்தில் தங்கள் பணி நிறைவாக இருந்தது நண்பா..
வாழ்த்துக்கள்.
டரியல் டரியல்:)
பயனுள்ள பதிவு.
nalla padhivu
டரியல் நல்ல காரம் புலவரே
டரியல் நல்ல காரம் புலவரே
அடுத்தவனை குறை சொல்வதை விட்டு உங்களின் வேலைகளை பார்க்கவும் , அவன் 150கோடியோ ,200கோடியோ போட்டு படம் எடுப்பான் , அதை பத்தி உனக்கு என்ன ? நீ எந்த தொழில் செய்தாலும் உன் பாட்டன் , அப்பா, மாமா உனக்காக வேலை செய்வார்கள் இல்லையா அதுபோல தான் இதுவும், ஒரு மனிதனையும்,ஒரு குடும்பத்தையும் பேச நாம் தகுதியானவர்களா ? என யோசியுங்கள் ......................நண்பரே
நானும் தமிழன் தான் ....................
ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டரியலா? வலைச்சரத்தில் 'எங்களை' அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.
மிக நல்லா பகிர்வு நண்பரே..
நன்றிகள் பல.
Post a Comment