கடவுளை மற..மனிதனை நினை..

29 July 2010

வலைச்சரத்தில் மூன்று மற்றும் நான்காம் நாட்கள்

8:13:00 AM Posted by புலவன் புலிகேசி 3 comments
மூன்று

சமூகம் என்பது மக்கள் கூட்டமாக சேர்ந்து வாழும் பகுதி என்பதோடு நின்று போய் விட்டது. கூட்டமாக வாழுமிடத்தில் பிரிவினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் ஒரு பிரிவினருக்கு பிரச்சினை என்றால் மற்றப் பிரிவினர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்குத்தானே பிரச்சினை நமக்கு வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை மட்டுமே மக்களிடம் விஞ்சியிருக்கிறது.

சமூக அமைப்பு என்பது ஒன்று கூடி வாழ்தல் என்று வரும் போது, நம்மில் ஒருவர் பாதிக்கப் படும் போது ஒன்று கூடி குரல் கொடுக்கவும் வேண்டும். இன்றைய அளவில் இன்னொருவனது பிரச்சினையாகப் பார்க்க படுவது நாளை நமக்கும் வரும் என்பது தோன்றல் வேண்டும். இது தனிமனித பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல பொது பிரச்சினைகளுக்கும் பொருந்தும். பொதுவில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் நம்மில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் காரணமானவர்களாகவே இருக்கிறோம். ஆனால் அது புரியாமல் விலகிச் செல்கிறோம்.

சரி இன்றைய மூன்றாவது நாளில் சமூகத்தின் மீது அக்கரை கொண்ட பதிவுகளைப் பற்றி பேசலாம்.


நான்கு

இன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல தொன்றுதொட்டே கவிதை என்றதும் அடுத்து நினைவுக்கு வருவது காதல். இதுவரை எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகள் காதலை நோக்கியே பயனித்திருக்கின்றன. சமூகம் சார்ந்த கவிதைகளை அவர்களால் எழுத முடியாது என்பது அதற்கு காரணமில்லை. அவர்களுக்கு காதலில் உள்ள ஈடுபாட்டை விட சமூகத்தின் மீதான ஈடுபாடு குறைவாக உள்ளது. இதற்கு ஏதோ ஒன்று காரணம் என சொல்லி தப்பி விட முடியாது.

இவர்களை போன்றவர்களுக்கும் சமூகப் பொறுப்பும், அதன் மீது காதலும் இருக்கிறது. அவற்றை எப்படி கவிதையாக்கலாம் பலருக்கு சொல்லலாம் என்பதை ஆக்கப்பூர்வமாக யோசித்து செயல் பட்டால் நிச்சயம் சமூகத்திற்கான எழுத்தாய் அது மாற்றம் பெறும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம்.

கவிதைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் பலரது கவிதைகள் படிப்பவர்களுக்க்கு புரியாது. இங்கு நான் தொகுத்திருக்கும் கவிதைகள் அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இருக்கும்.3 விவாதங்கள்:

சே.குமார் said...

படிச்சு பின்னூட்டமும் இட்டாச்சு புலவரே.

Chitra said...

வலைச்சரத்தில், சமூக அக்கறையுள்ள பதிவுகளை தேர்ந்து எடுத்து அறிமுகப்படுத்தி வருகிறீர்கள். பாராட்டுக்கள்!

பின்னோக்கி said...

நல்ல தொகுப்பு.