"பதிவர் சவுக்கு சங்கர் கைது" என்ற செய்தியை வினவு தளத்தில் படித்தேன். யார் இந்த சவுக்கு சங்கர்? எதற்காக கைது செய்யப் பட்டார்? எனப் பார்த்த போது அவரது வலைத்தளம் கண்டு வியந்தேன். எவ்வளவு ஊழல் விடயங்களை அம்பலப் படுத்தியிருக்கிறார். அதனால் அவர் மீது கடுப்பெடுத்த அரசியல் வியாதிகளால் பின்னப் பட்ட வலைதான் இந்தக் கைது நடவடிக்கை.
இந்த சங்கர் ஒரு நபரைத் தாக்கியதாக இவர் மீது குற்றச்சாட்டு சித்தரிக்கப் பட்டு சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார். ஆனால் இந்த நிலையிலும் சவுக்கு வலைத் தளத்தில் "ஊழலுக்கு எதிரான சவுக்கு தன் வேலையை நிறுத்தாது" என ஒரு பதிவிட்டு அவர்களது தைரியத்தை வெளிப் படுத்தியிருக்கிறார்கள்.
அதுவும் அனைத்து ஊழல்களுக்கும் ஆதரப்பூர்வமாக எழுதி வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இதை எழுதாமல் நிறுத்த லஞ்சம் கொடுக்கும் முயற்சி நடை பெற்றதாகவும், அவற்றை வாங்க மறுத்ததாலும் இத்தகைய வேலையை செய்திருக்கிறது காவல் துறை.
இப்படி உண்மைகளை அம்பலப் படுத்தி வந்த காரணத்தை மனதில் கொண்டு செய்யப்பட்ட இந்தக் கைது நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஒன்று கூடி கண்டணம் தெரிவிக்க வேண்டியத் தருணமிது. வாருங்கள் பதிவுலக தோழர், தோழிகளே நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.
சவுக்கில் எழுதப்பட்ட ஊழல் குறித்தக் கட்டுரைகள் வாசிக்க: சவுக்கு
4 விவாதங்கள்:
//உண்மைகளை அம்பலப் படுத்தி வந்த காரணத்தை மனதில் கொண்டு செய்யப்பட்ட இந்தக் கைது நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஒன்று கூடி கண்டணம் தெரிவிக்க வேண்டியத் தருணமிது. வாருங்கள் பதிவுலக தோழர், தோழிகளே நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.//
கண்டிப்பாக நண்பரே...
அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்.
Nalla kaidhu nandri puli
கண்டிப்பாக குரல் கொடுப்போம்
இவர் என்ன தியாகியா ? எவன் தவறாக பேசுகிறானோ அவர்களுக்கு சட்டம் தன் கடமையை செய்யும்
Post a Comment