கடவுளை மற..மனிதனை நினை..

24 July 2010

பதிவர்களின் உதவி தேவை

2:20:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 22 comments

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நான் உங்களிடம் கேட்கப் போவது பண உதவியோ, பொருளுதவியோ அல்ல. முற்றிலும் மனிதத்திற்கான உதவி. நான் மற்றும் சில நண்பர்கள் போபாலில் நடந்த அநீதி குறித்து எழுதிக் கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் பதிவேற்றுவதின் நோக்கம் விளம்பரமோ அல்லது பிரபலமடையவோ அல்ல. அங்கு நடந்த அநீதிகள் அனைத்து மக்களுக்கும் புரிய வைக்கப் பட வேண்டும் என்பதற்காக மட்டுமே.

நண்பர் வெண்ணிற இரவுகள் கார்த்தி சமீபத்தில் சில பதிவுலக நண்பர்களை போபால் குறித்து தொடர்பதிவு எழுதுமாறு கேட்டிருந்தார். ஆனால் அவர்களில் வால்பையனைத் தவிற வேறு யாரும் விருப்பம் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இந்த போபால் விட(ய)ம் முடிந்து போன ஒன்றல்ல. வெறும் ஆரம்பம் அவ்வளவுதான். இது நம் மக்களை அழிக்க உருவெடுத்திருக்கும் முதலாளித்துவத்தின் முதல்படி.

இதற்கே 23000 பேர் பலி என்றால் யோசித்துப் பாருங்கள். பின் வரும் காலங்களில் நாமோ அல்லது நம் உறவினர்களோ இது போன்ற பட்டியல்களில் இடம் பெறப் போவதாக ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறது இந்த போபால் பிரச்சினை. இப்போது பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதைத் தவறவிடுவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை.

அதற்கான முயற்சியாய் இந்த போபால் பிரச்சினைக்காக ஒரு புதிய வலைப்பூவை பதிவுலகின் குரலாய் ஆரம்பித்து வைக்கிறேன். இங்கு தினமும் பதிவர்கள் இந்த போபால் மற்றும் அதன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தினம் ஒரு பதிவாய் அவர்கள் விருப்பப்படி வெளியிடலாம்.

இந்த வலைப்பூவின் நோக்கம் இந்த போபால் போன்ற பிரச்சினைகள் குறித்து பதிவர்கள் மற்றும் வசகர்கள் கலந்துரையாடி ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே. இங்கு இந்த போபால் பிரச்சினைக் குறித்து பதிவர்கள் யார் வேண்டுமானாலும் பதிவுகளை எழுதலாம். நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம்

* உங்களுக்கு இந்த பிரச்சினை குறித்து குரல் கொடுக்கும் எண்ணம் இருந்தால் bhopal.public@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் கீழ்காணும் விபரங்களை அனுப்பி வையுங்கள்

பெயர், தொடர்பு எண்(விருப்பமிருந்தால்), மின்னஞ்சல், வலைப்பூ முகவரி -(இவை எதுவும் வெளியிடப் படா)

* நான் மற்றும் என் நண்பர்கள் இந்த விடயம் குறித்து உங்களுக்கு எடுத்துக் கூறி தெளிவு ஏற்படுத்த தயாராக இருக்கிறோம்.

* உங்களுக்கு ஒரு புரிதல் வந்ததும் அதைப் பற்றி எழுதுங்கள். அதை bhopal.public@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அது உங்கள் பெயருடன் (அ) புனைப்பெயரில் இந்த தளத்தில் வெளியிடப் படும். உங்களுக்கு விருப்பமிருப்பின் அந்தப் பதிவை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு இணைப்பு கொடுத்தால் உங்கள் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக இருக்கும்.

* நீங்கள் முன்னரே இந்த விடயம் குறித்து எழுதியிருந்தாலும் அதை அனுப்பி வைக்கலாம். அதை இங்கு வெளியிட்டு விவாதம் செய்வோம்.

* பதிவை எழுதியவர் மட்டும்தான் விவாதங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என எண்ணாமல் நண்பர்கள் அனைவரும் விவாதத்தில் ஈடுபட வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் ஒருங்கிணைந்து செயல் படுவோம். நாம் சினிமா, முரளிதரனின் 800 விக்கெட்டுகள் பற்றியெல்லாம் பதிவெழுதுகிறோம், அவைகளுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவிக்கிறோம். இது நமக்கான இடம். இங்கு நம் ஆதரவை ஒருமித்து வெளிப்படுத்துவோம்.

நாம் அடிமையாகிக் கொண்டிருப்பதை அனைவருக்கும் புரிய வைப்போம்.


22 விவாதங்கள்:

Unknown said...

நல்ல முயற்சி... இதை பற்றி நான் எழுதிய பதிவை வாசிக்க கீழ உள்ள சுட்டியை சொடுக்கவும்.
http://adangatamizhan.blogspot.com/2010/06/blog-post_09.html
தோழமையுடன்,
மோகன்

புலவன் புலிகேசி said...

நன்றி தோழர் மோகன். விரைவில் உங்கள் பதிவு போபால் தளத்தில் வெளியிடப் படும்.

புலவன் புலிகேசி said...

இந்தத் தளத்தில் பதிவர்கள் அல்லாத வாசகர்களும் தங்களை இணைத்துக் கொண்டு எழுதுமாறு கோருகிறேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நம் நாட்டு மக்களுக்காக நிச்சயமாக இணைவோம் தோழரே..

Anonymous said...

Nalla puridhal nandri puli

Anonymous said...

Udhavi thevai board kidaikilliya poonai... Sorry ....... puli

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்ல விஷயம்...

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல முயற்சி புலிகேசி .
இங்கே அந்த PDF கொடுத்தால் நன்றாய் இருக்கும் என்று நினைக்கிறேன் .

Chitra said...

இந்த வலைப்பூவின் நோக்கம் இந்த போபால் போன்ற பிரச்சினைகள் குறித்து பதிவர்கள் மற்றும் வசகர்கள் கலந்துரையாடி ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே.

..... சமூக அக்கறையுடன் அனைவரும் பங்கு எடுத்துக் கொள்ள, நீங்கள் வழி செய்து தந்து இருப்பதற்கு நன்றி.

ஸ்ரீ.... said...

நல்ல முயற்சி. கட்டாயம் அனைத்துப் பதிவர்களின் ஆதரவு கிட்டும் என்று நம்புகிறேன். போபால் குறித்த எனது இடுகை. உங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்!
http://enthamizh.blogspot.com/2010/06/blog-post_10.html

ஸ்ரீ....

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

வரவேற்கத் தக்கது.
அரசும், மக்களும் ஏமாந்த கதையை எழுதி வலையுலம் மூலமாக நல்ல முடிவினை அளித்திட முனைந்திருக்கின்றீர்கள். என்னால் இயன்றது எதுவோ, அதைச் செம்மையாக செய்ய முயலுகின்றேன்.

- ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com

Jey said...

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே.

Sudhakar said...

உங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.........புலிகேசி

Sudhakar

Unknown said...

// Sudhakar said...
உங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.........புலிகேசி//
ரிப்பீட்டு

'பரிவை' சே.குமார் said...

சமூக அக்கறையுடன் அனைவரும் பங்கு எடுத்துக் கொள்ள, நீங்கள் வழி செய்து தந்து இருப்பதற்கு நன்றி.

சசிகுமார் said...

நண்பரே உங்கள் சிறந்த மனித நேயத்திற்கு பாராட்டுக்கள். உங்கள் பணி சிறக்க நானும் என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்கிறேன்

கண்ணகி said...

வாழ்த்துக்கள் புலிகேசி...

அன்புடன் அருணா said...

முயற்சிக்குப் பூங்கொத்து புலிகேசி!

ஜோதிஜி said...

மிக குறுகிய காலத்தில் உங்களின் நகர்வு அத்தனையையும் பிரமிப்பாய் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன்.

வலை சேவை இணைப்பு காலையில் இருந்து இங்கே படுத்தி எடுக்கிறது. எந்த வலைதள இணைப்பையும் முழுமையாக பார்க்க படிக்கக்கூட முடியவில்லை.

தொடர்கின்றேன். புரிதலை உருவாக்க முடியுமா என்று முயற்சிக்கின்றேன்.

வலைச்சரம் ஆசிரியர் என்று கேட்டதும் மனம் மகிழ்வாய் உணர்கிறது.

மிகச் சிறந்த வாய்ப்பு. மிகச் சரியான மனிதருக்கு.

Karthick Chidambaram said...

நல்ல முயற்சி

வால்பையன் said...

நடந்த செயலுக்கு நீதி கேட்கும் அதே நேரம் இனி அம்மாதிரி ஒரு செயல் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவும் நமது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும்!

GSV said...

வாழ்த்துக்கள், இதையும் பாருங்க...http://marudhang.blogspot.com/2010/07/blog-post_12.html

We can do.