கடவுளை மற..மனிதனை நினை..

23 July 2010

ஆந்திராவில் நடந்த பயங்கரவாதம்

9:49:00 AM Posted by புலவன் புலிகேசி , , , 6 comments



நிலங்களை அழித்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கலாச்சாரம் இப்போதெல்லாம் பெருகிப் போய் விட்டது. அணல் மின் நிலையங்கள் அமையுங்கள், அடுக்ககங்கள் அமையுங்கள் மக்கள் சந்தோஷமாக இருப்பார்களா? ஒரு வேலை உணவுக்கு கூட நாம் அனைவரும் அந்நிய நாட்டிடம் கையேந்தப் போவது உறுதி.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் "நாகர்ஜீனா கட்டுமான நிறுவனம்" என்ற தனியார் நிறுவனத்திற்கு 2,640 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையம் அமைக்க அனுமதி அளித்தது அரசு. இதற்காக அங்குள்ள நிலங்களை உப்யோகமற்ற நிலம் என பொய்யுரைத்து அவற்றை கையகப் படுத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

ஆனால் அந்த நிலங்கள் விவசாய நிலங்கள். அவர்கள கையகப் படுத்த எண்ணும் இடங்களை நம்பி வாழ்க்கை நடத்தும் குடும்பங்களின் எண்ணிக்கை 50,000க்கும் மேல். அவர்கள் செய்யும் தொழில் விவசாயம் மற்றும் மீன் பிடித்தல். எப்படி இவ்வளவு பேர் பயன் பெறும் இடங்களை உபயோகமற்றவை எனப் பொய்யுரைத்து தனியார் முதலாளிக்கு கொடி பிடிக்கிறார்கள்? இந்த அரசியல் வியாதிகள்.

32-கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், மீனவர்களும் இந்தத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். அடிக்கல் நாட்டு விழா அன்று குழுமிய இவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி நான்கு பேரைக் கொன்றது. செத்தவர்கள் என்ன தீவிரவாதிகளா? அவர்கள் என்ன அப்படி குற்றம் செய்து விட்டார்கள்? சுடும் அளவிற்கு.


செத்து போனவர்கள் ஏழை விவசாயிகளும், மீனவர்களும் தான். அவர்கள் எந்த தீவிரவாத அமைப்பினர்ரும் அல்ல. இந்த அணல் மின் நிலையம் அங்கு அமைக்கப் பட்டால் அந்த ஊர் முற்றிலும் அழிக்கப் படுவது உறுதி.

"இவர்கள் அமைக்கப் போகும் கோல்-ஃபயர் ப்ளான்ட் என்பது உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது என சுற்றுச்சூழல் அறிவியலாளர் பாபு ராவ் கூறியிருக்கிறார்."

இந்த பிரச்சினைக் குறித்து சட்டசபையில் பேசிய உள்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி "அந்தப் பகுதியில் 300 போலீசார் மட்டுமே இருந்தனர். அவர்களை எதிர்த்து பொது மக்கள் கோசமிட்டனர். திடீரென்று அவர்கள் மீது வெறித்தனமாகத் தாக்கினர். அதனால் போலீஸ் தற்காப்புக்காக தடியடி நடத்தியது. அதன் பின்னும் கூட்டம் கலையாததால் துப்பாக்கி சூடு நடத்ட்ட வேண்டியதாயிற்று" என்றார்.

என்ன ஒரு மனிதாபிமானமுள்ள பதில். பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர் குழு அங்கு சென்றிருக்க வேண்டும். பொது மக்களுக்கு விருப்பமில்லாமல் அங்கு அந்த நிலையம் அமைக்க அனுமதி வழங்கப் பட்டிருக்க கூடாது. அதுதானே ஜனநாயகம். ஆனால் காங்கிரஸ் அரசுக்குத்தான் அதெல்லாம் தெரியாதே தனியார் நிறுவனம் முதலாளிக்கு விசுவாசம் காட்டி அப்பாவி மக்கள் 4 பேரை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.

இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். பொது மக்களை விட தனியார் முதலாளிகளுக்கு இவ்வளவு பாதுகாப்பா? இப்பவும் உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோம் என்று. த்ண்டகாரண்யா பிரச்சினையும் இப்படி ஆரம்பித்த ஒன்றுதான் இன்று அந்த மக்களுக்கு பெயர் நக்சல் எனும் தீவிரவாதிகள்.

வாழ்க இந்த ஜன(பண)நாயகம்!


6 விவாதங்கள்:

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல பதிவு புலிகேசி ............

http://rkguru.blogspot.com/ said...

கொடுமையின் உச்சம்...

vasu balaji said...

இத்தனை சென்சிடிவான விஷயத்துக்கு 300 போலீஸ்காரர் மட்டுமே என்று சொல்லுவது கேவலம். போலீசுடன், லத்தியும், துப்பாக்கியும் இருந்ததை மறைத்து சமன்பாடு செய்வது அயோக்கியத்தனம். தனி நபர் தாக்குதலில் தற்காப்புப் போல் இதைச் சொல்லுவது அயோக்கியத்தனம். குட் போஸ்ட் புலிகேசி.அரசியல் வியாதிக்கு அரிசி கிடைக்காதபோதாவது உணருவான்.

Chitra said...

என்ன கொடுமை, சார் இது! ஜனநாயக நாட்டில் - Of the people, for the people, by the people என்று இருக்க வேண்டிய நாட்டில்..... மனிதனுக்கு உள்ள மதிப்பும் பாதுக்காப்பும் உரிமையும் இவ்வளவுதானா?

ஜீவன்பென்னி said...

வாழ்க இந்திய ஜனநாயகம்.

Anonymous said...

Nalla vishayam nandri puli